DMKSocial

The Feed, page 352

Showing 7,021–7,040 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Party & Elections

இன்று சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழகம்...

இன்று சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழகம் முழுவதும் கழக செயல் வீரர்கள் அனைவரும், தொடர்ந்து நடைபெறும் கிராமசபை கூட்டம் மற்றும் சிறப்பு முகாம்களில் முழுக்கவனம் செலுத்திட வேண்டும்! https://t.co/eTEDLfapt8

Party & Elections
𝕏 X
8 yr ago
1617
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Education

“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்”என தமிழக ஆளுநர் அவர்களே பொதுமேடையில் குற்றம்சாட்டியிருக்கிறார்....

“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்”என தமிழக ஆளுநர் அவர்களே பொதுமேடையில் குற்றம்சாட்டியிருக்கிறார். இப்போது வாய்திறக்கும் ஆளுநர்,கடந்த ஒருவருட காலத்தில் திமுக ஆதாரத்தோடு புகாரளித்தும் ஊழல் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?

Education
𝕏 X
8 yr ago
2302
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Governance & Administration

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர், இப்படி ஊழல்பற்றி பொதுமேடைகளில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது! ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக...

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர், இப்படி ஊழல்பற்றி பொதுமேடைகளில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது! ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திவரும் முதல்வர் - துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
1645
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Social Justice & Reservation

‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில்...

‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்! https://t.co/DQb7MpFhGZ

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
10650
297
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Disaster Response & Relief

தமிழகத்திற்கு #RedAlert விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமல், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும்...

தமிழகத்திற்கு #RedAlert விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமல், முதலமைச்சரும் - துணை முதலமைச்சரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருப்பது, மக்களை காக்காமல் அவர்களை உதாசீனப்படுத்துவதற்கு சமம்!

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
2298
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Disaster Response & Relief

இப்படி பொறுப்பற்று செயல்பட்டதால் தான், 2015 டிசம்பர் வெள்ளம் - வர்தா புயல் - ஓகி புயலில் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளானார்கள். அதனை CAG...

இப்படி பொறுப்பற்று செயல்பட்டதால் தான், 2015 டிசம்பர் வெள்ளம் - வர்தா புயல் - ஓகி புயலில் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளானார்கள். அதனை CAG அறிக்கையே தெளிவுபடுத்தியுள்ளது. இவர்களை இனியும் நம்பாமல், கழகத் தோழர்கள் அனைவரும் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயாராக வேண்டும்!

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1312
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Employment & Skill Development

போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிற...

போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிற போதெல்லாம் கைது செய்வதை மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

Employment & Skill Development
𝕏 X
8 yr ago
1641
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Governance & Administration

மக்களின் உரிமைகளை பறித்து தமிழகத்தையே போராட்டக்களமாக மாற்ற முயற்சிக்கும் முதல்வர், "அதிமுக அரசு அணையப்போகும் தீபம்" என்பதை உணர வேண்டும்! இனியும்,...

மக்களின் உரிமைகளை பறித்து தமிழகத்தையே போராட்டக்களமாக மாற்ற முயற்சிக்கும் முதல்வர், "அதிமுக அரசு அணையப்போகும் தீபம்" என்பதை உணர வேண்டும்! இனியும், போராடுபவர்களை விரட்டி அடிக்காமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
1121
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Education

நீட் தேர்வில் மாநில மொழிகளிடம் பாஜக அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையால் தாய்மொழியில் தேர்வெழுதும் மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோவதை ஏற்க...

நீட் தேர்வில் மாநில மொழிகளிடம் பாஜக அரசு காட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையால் தாய்மொழியில் தேர்வெழுதும் மாணவர்களின் மருத்துவக் கனவு பறிபோவதை ஏற்க இயலாது! தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாக்களுக்கு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் உடனே ஒப்புதல்பெற வேண்டும்

Education
𝕏 X
8 yr ago
1166
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Education

2017 நீட் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர்கள் - 90.75% பேர்! 2018 இல் - 91.02% பேர்! ஆனால், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில்...

2017 நீட் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர்கள் - 90.75% பேர்! 2018 இல் - 91.02% பேர்! ஆனால், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் எழுதியவர்களின் சதவீதம் 2017 இல் 9.25% லிருந்து, 2018 இல் 8.98% ஆக குறைந்திருப்பது மாநில மொழி உரிமைக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆபத்து! https://t.co/I4fAVRp2gb

Education
𝕏 X
8 yr ago
1805
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Environment & Climate

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில், #Hydrocarbon எடுக்க மீண்டும் அனுமதி வழங்கி காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும்...

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கில், #Hydrocarbon எடுக்க மீண்டும் அனுமதி வழங்கி காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்க முயற்சிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து, திருவாரூர் - தஞ்சை - நாகை மாவட்டக் கழகங்களின் சார்பில் திருவாரூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்!

Environment & Climate
𝕏 X
8 yr ago
2972
186
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Governance & Administration

எதிர்க்கட்சிகளை அடக்கி, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தை முழுவதுமாக முடக்கி வரும் அரசியல் சட்ட விரோத அ.தி.மு.க அரசு...

எதிர்க்கட்சிகளை அடக்கி, சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து கருத்துச் சுதந்திரத்தை முழுவதுமாக முடக்கி வரும் அரசியல் சட்ட விரோத அ.தி.மு.க அரசு இனியும் நீடிப்பது நல்லதல்ல. முற்றிலும் சீரழிந்துவிட்ட அரசு நிர்வாகத்தை மீட்க மாண்புமிகு குடியரசுத் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Governance & Administration
𝕏 X
8 yr ago
1171
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Governance & Administration

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு நோட்டீஸ் கொடுக்க...

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு சட்டப்பேரவைத் தலைவரையும் பயன்படுத்தும் தரம்தாழ்ந்த செயல் அரசியல் சட்டத்துக்கு எதிரானது!

Governance & Administration
𝕏 X
8 yr ago
1728
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Oct
Governance & Administration

தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வரும் சாஸ்திரா பல்கலை.க்கு...

தஞ்சாவூரில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட 58.17 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வரும் சாஸ்திரா பல்கலை.க்கு முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் துணைபோவது கடும் கண்டனத்துக்குரியது! எவ்வித திரைமறைவு அழுத்தத்திற்கும் அஞ்சாமல் நிலத்தை கைப்பற்ற வேண்டும்

Governance & Administration
𝕏 X
8 yr ago
2176
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Oct
Governance & Administration

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி அக்.03ம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை தமிழக அரசு உறுதி செய்ய...

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி அக்.03ம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதலில் காவல்துறை துணைகொண்டு ஆர்வம் காட்டிய அரசு, இதில் கண்மூடி மவுனம் சாதிப்பது ஏன்?

Governance & Administration
𝕏 X
8 yr ago
1265
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Sept
Health

தமிழகத்தில் #AIIMS அமைய மத்திய அரசு 2000 கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டுமென்றனர்...

தமிழகத்தில் #AIIMS அமைய மத்திய அரசு 2000 கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டுமென்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள்! ஆனால், RTI தகவல் இவையனைத்தும் பொய் என்பதை உறுதிபடுத்தியுள்ளது! பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு! https://t.co/yUVai7BkZ4

Health
𝕏 X
8 yr ago
2112
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Culture & Heritage

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது தலைவர் கலைஞர் - எம்.ஜி.ஆர் அவர்களின் நட்பு! இதனை அரசியலாக்காமல், மக்கள் வரிப்பணத்தையும் வீணடிக்காமல் நாளை...

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டது தலைவர் கலைஞர் - எம்.ஜி.ஆர் அவர்களின் நட்பு! இதனை அரசியலாக்காமல், மக்கள் வரிப்பணத்தையும் வீணடிக்காமல் நாளை நடைபெறும் நிகழ்ச்சியிலாவது எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பாடும் நூற்றாண்டைக் கொண்டாட வேண்டுமென அரசினரை வலியுறுத்துகிறேன்!

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1338
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Culture & Heritage

மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையெங்கும் பேனர்கள் வைத்தும், எதிர்க்கட்சிகளை வசைபாடும்...

மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையெங்கும் பேனர்கள் வைத்தும், எதிர்க்கட்சிகளை வசைபாடும் விழாவாக அரசின் பெயரில் அரசியல் லாபத்துக்காக நடைபெற்று வரும் ‘எம்.ஜி.ஆர்’ நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை!

Culture & Heritage
𝕏 X
8 yr ago
2324
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Governance & Administration

தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை: 2017-2018 - 40, 530கோடி, 2018- 2019 - 44, 481கோடி. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவில் வருவாய் பற்றாக்குறை - 17,491...

தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை: 2017-2018 - 40, 530கோடி, 2018- 2019 - 44, 481கோடி. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவில் வருவாய் பற்றாக்குறை - 17,491 கோடி! இவை எல்லாவற்றையும்விட கடன் நிலுவைத் தொகை மட்டும் 3.55லட்சம் கோடி என்று ஒட்டுமொத்த மாநில நிதி நிர்வாகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. https://t.co/GrbUhD5j0P

Governance & Administration
𝕏 X
8 yr ago
1184
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Industry & Investment

தேர்தல் விளம்பரத்துக்காக முதலீட்டாளர் மாநாடு நடத்தும் முதலமைச்சர், முதல் மாநாட்டில் போடப்பட்ட 98 ஒப்பந்தங்களின் நிலை என்ன என்பதை மக்களுக்கு...

தேர்தல் விளம்பரத்துக்காக முதலீட்டாளர் மாநாடு நடத்தும் முதலமைச்சர், முதல் மாநாட்டில் போடப்பட்ட 98 ஒப்பந்தங்களின் நிலை என்ன என்பதை மக்களுக்கு தெரிவிப்பதோடு, ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதையும் விளக்க வேண்டும்!

Industry & Investment
𝕏 X
8 yr ago
1096
31
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41