DMKSocial

The Feed, page 95

Showing 1,881–1,900 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Transport & Infrastructure

Thank you, Hon'ble PM @narendramodi, for accepting our request during my last meeting with you and approving the second phase of the Chennai...

Thank you, Hon'ble PM @narendramodi, for accepting our request during my last meeting with you and approving the second phase of the Chennai Metro Rail Project. This long pending demand of the people of Tamil Nadu having been addressed now, we are confident of completing the project at the earliest ! #CMRL

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
6701
347
530,429 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Culture & Heritage

இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான...

இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களது நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1793
122
43,438 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Oct
Culture & Heritage

அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த...

அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2295
106
46,262 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Sept
Party & Elections

செப்டம்பர் மாதம் முழுவதையும் #திராவிட_மாதம் எனக் கொண்டாடிய @DMKITWing-இன் பணிகள் பாராட்டுக்குரியது! கழக வரலாறு - கொள்கை - அடைய வேண்டிய...

செப்டம்பர் மாதம் முழுவதையும் #திராவிட_மாதம் எனக் கொண்டாடிய @DMKITWing-இன் பணிகள் பாராட்டுக்குரியது! கழக வரலாறு - கொள்கை - அடைய வேண்டிய இலட்சியங்கள் ஆகியவற்றையும் #DravidianModel அரசின் சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் சிறப்பான முன்னெடுப்புகளால், அணிக்குப் பெருமை சேர்க்கும் அருமைத் தம்பி மாண்புமிகு @TRBRajaa அவர்களுக்கும், மாநிலம் முதல் கிளைக் கழகங்கள் வரை அவருக்குத் துணை நிற்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள்! சாதனைகள் செய்யப்படுவது முறியடிக்கப்படுவதற்கே! நீங்கள் செய்யும் சாதனைகளை நீங்களே முறியடிக்கும் வகையில் உங்களின் அடுத்தடுத்த பணிகள் அமைய வாழ்த்துகிறேன் @DMKITWing!

Party & Elections
𝕏 X
2 yr ago
1418
82
60,743 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Sept
Disaster Response & Relief

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த திட்டமிடலோடு, #NorthEastMonsoon-ஐ எதிர்கொண்டு மக்களைக்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த திட்டமிடலோடு, #NorthEastMonsoon-ஐ எதிர்கொண்டு மக்களைக் காப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினேன். https://t.co/FSEXexvLcm

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2297
91
51,054 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Governance & Administration

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்படும் திரு. @Udhaystalin அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு...

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்படும் திரு. @Udhaystalin அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்குத் துணையாக அல்ல; நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்! அமைச்சரவையில் இணைந்துள்ள @V_Senthilbalaji, @GChezhiaan, @SalemRRajendran, @Avadi_Nasar ஆகியோருக்கும் வாழ்த்துகள்! மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்!

Governance & Administration
𝕏 X
2 yr ago
2923
194
146,053 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Sept
Federalism & Centre–State Relations

பவள விழாவைக் கண்டுவிட்டோம்; நூற்றாண்டைக் காண்பதற்குள் மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்! #DMK75 https://t.co/9v54of0YYY

பவள விழாவைக் கண்டுவிட்டோம்; நூற்றாண்டைக் காண்பதற்குள் மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்! #DMK75 https://t.co/9v54of0YYY

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3629
167
95,559 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Party & Elections

சூழும் பகைதனைச் சுக்குநூறாக்கத் துணை நிற்கும் தோழமை இயக்கங்களின் வாழ்த்துகள், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் ஒலிக்க, கழகப் பவள விழா...

சூழும் பகைதனைச் சுக்குநூறாக்கத் துணை நிற்கும் தோழமை இயக்கங்களின் வாழ்த்துகள், பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் ஒலிக்க, கழகப் பவள விழா நடந்தேறியது! கொள்கைப் பகைவர் எங்கோ மறைய ஒன்றாகும் தோழமை இயக்கத்தினர் அனைவர்க்கும் நவில்கிறேன் நன்றியை என்றென்றும் இனமானம் காக்கும் உறுதியோடு! #DMK75

Party & Elections
𝕏 X
2 yr ago
2184
110
52,253 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Party & Elections

#Live: கழகப் பவள விழாப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/elpFP5VaNr

#Live: கழகப் பவள விழாப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/elpFP5VaNr

Party & Elections
𝕏 X
2 yr ago
676
48
30,381 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Culture & Heritage

உலகெங்கும் வாழும் தமிழர்களே… #கீழடி-க்கு வருக… நம் வரலாற்றைப் பருக…!

உலகெங்கும் வாழும் தமிழர்களே… #கீழடி-க்கு வருக… நம் வரலாற்றைப் பருக…!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
3111
86
81,544 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Industry & Investment

I can proudly say that Tamil Nadu leads India in both automobile production and #EV manufacturing. With a 35% share of the nation’s total...

I can proudly say that Tamil Nadu leads India in both automobile production and #EV manufacturing. With a 35% share of the nation’s total automobile output and 40% of all EVs sold, we are pivotal in shaping India’s mobility future. @TataMotors, along with industry giants like Hyundai, Ford, Renault, Nissan, and VinFast, strengthens our path towards the ambitious goal of a $1 trillion economy. Our strong partnership with Tata will continue to drive Tamil Nadu’s growth, as we proudly remain the first port of call for global investors. #InvestInTN #ThriveInTN #LeadWithTN @TRBRajaa @Guidance_TN @TNIndMin

Industry & Investment
𝕏 X
2 yr ago
4326
104
105,886 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Industry & Investment

I had the privilege of hosting the esteemed Chairman of the Tata Group, Mr. Chandrasekaran, on the occasion of the ground-breaking ceremony of...

I had the privilege of hosting the esteemed Chairman of the Tata Group, Mr. Chandrasekaran, on the occasion of the ground-breaking ceremony of @TataMotors Manufacturing Unit at #SIPCOT, Ranipet. Rising from humble beginnings, he has ascended to being one of the most respected leaders in corporate India, serving as an inspiration to many. Under his leadership, the Tata Group has witnessed remarkable growth and transformation. We engaged in productive discussions, during which I warmly solicited him to consider further investments in Tamil Nadu. I deeply appreciate Mr. Chandrasekaran for highlighting Tata Group’s rapid expansion in Tamil Nadu over the past three years and for recognising our #DravidianModel Government's speed, accessibility and agility. I assure him that we will continue to be fully responsive to all the needs of the group companies, working closely to empower our youth and women in every possible way. My best wishes for the success of this project and sincere gratitude for his continued support in fostering Tamil Nadu’s growth. #InvestInTN #ThriveInTN #LeadWithTN @TRBRajaa @Guidance_TN

Industry & Investment
𝕏 X
2 yr ago
4497
108
91,842 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Sept
Industry & Investment

#Live: இராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/QzV1AsxrhD

#Live: இராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்புரை https://t.co/QzV1AsxrhD

Industry & Investment
𝕏 X
2 yr ago
845
39
26,989 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Party & Elections

கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு. பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில்...

கழக முன்னோடியும் - கடந்த 17-ஆம் நாள் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவருமான திருமிகு. பாப்பம்மாள் அவர்கள் 108 அகவையில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மீதும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் அவர். 1959-ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமிகு. பாப்பம்மாள் அவர்கள், 1964-இல் காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினராகவும், பின்னர் தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று பணியாற்றினார். 1970-ஆம் ஆண்டு தொடங்கி 45 ஆண்டுகாலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக உழவர் விவாதக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார். 1965-ஆம் ஆண்டிலேயே மாதர் சங்கத் தலைவராகச் செயல்பட்டு, கிராமப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சமூகப் பணிகளை மேற்கொண்டார். தனது இறுதிமூச்சு வரையில், சுறுசுறுப்பாக வயலில் இறங்கி வேளாண் பணிகள் செய்து வந்தவர் திருமிகு. பாப்பம்மாள் அவர்கள். திருமிகு. பாப்பம்மாள் அவர்களின் வாழ்வையும் தொண்டையும் போற்றும் வகையில் ஒன்றிய அரசு சார்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. அப்போது, “உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி!" என்று அவரை வாழ்த்தினேன். கழக முப்பெரும் விழாவில், “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் அடையாளம்" என அவரை மனம் நெகிழப் பாராட்டி மகிழ்ந்திருந்தேன். ஆனால் இன்று சொல்லொணாத் துயரத்தில் நம்மையெல்லாம் ஆழ்த்தி விட்டு அவர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்திலும், எனது இல்லத்திலும் திருமிகு. பாப்பம்மாள் அவர்களைச் சந்தித்து உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் பசுமையாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். திருமிகு. பாப்பம்மாள் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Party & Elections
𝕏 X
2 yr ago
2975
153
64,367 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Industry & Investment

Go bullish on Tamil Nadu! With the #DravidianModel driving inclusive growth, innovation, and global partnerships, our state is ready to lead...

Go bullish on Tamil Nadu! With the #DravidianModel driving inclusive growth, innovation, and global partnerships, our state is ready to lead India’s industrial and economic future. Invest in a state that’s powering progress for all. #InvestInTN #ThriveInTN #LeadWithTN @TRBRajaa @Guidance_TN Here’s my op-ed published in today's @the_hindu. https://t.co/oeyXZdHhil

Industry & Investment
𝕏 X
2 yr ago
1919
82
79,434 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Federalism & Centre–State Relations

Had a cordial meeting with Hon’ble Prime Minister Thiru. @narendramodi, where I discussed key issues concerning Tamil Nadu: 🚆 Requested the...

Had a cordial meeting with Hon’ble Prime Minister Thiru. @narendramodi, where I discussed key issues concerning Tamil Nadu: 🚆 Requested the release of the Union Government’s share for Phase 2 of the jointly implemented Chennai Metro, noting that several states which initiated their metro projects after Tamil Nadu have already received their funds. 📖 Urged the immediate release of Samagra Shiksha funds, currently withheld due to the non-implementation of the #NEP. Tamil Nadu has long upheld a two-language policy, reflecting the will of our people. 🛶 Called for urgent intervention regarding the repeated arrests of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy. Looking forward to swift and positive action from the Prime Minister on these important matters for the benefit of Tamil Nadu.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
5242
200
574,078 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Sept
Federalism & Centre–State Relations

#Live: டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/O4g4Q14Ciy

#Live: டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/O4g4Q14Ciy

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
680
45
28,142 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Sept
Law & Order / Justice

ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல்...

ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
6386
1073
1,030,413 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Culture & Heritage

பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப்...

பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். #SPB @charanproducer

Culture & Heritage
𝕏 X
2 yr ago
5290
171
130,319 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Sept
Party & Elections

காஞ்சித் தலைவனின் மண்ணில் கொள்கை உறவுகளுடன் கழகத்தின் பவள விழா! இந்தியா முழுமைக்கும் கழகத்தின் வலிமையும், நம் தோழமைகளுடனான நட்பும் வெளிப்பட...

காஞ்சித் தலைவனின் மண்ணில் கொள்கை உறவுகளுடன் கழகத்தின் பவள விழா! இந்தியா முழுமைக்கும் கழகத்தின் வலிமையும், நம் தோழமைகளுடனான நட்பும் வெளிப்பட அணிவகுப்போம்! #LetterToBrethren https://t.co/TOM2Vn30Lf

Party & Elections
𝕏 X
2 yr ago
1250
47
35,685 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41