DMKSocial

The Feed, page 94

Showing 1,861–1,880 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Industry & Investment

சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில்...

சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு இணக்கமானதொரு தீர்வு காணப்பட்டதில் மகிழ்ச்சி! இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த C.I.T.U. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்கள் அனைவருக்கும், சாம்சங் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றியும்! பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, நல்ல முடிவுக்குக் கொண்டுவர, சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு அமைச்சர்கள் @evvelu @thamoanbarasan @cvganesan1 @TRBRajaa ஆகியோருக்கும் எனது பாராட்டுகள்! நன்றி! திராவிட முன்னேற்றக் கழக அரசானது என்றும் தொழிலாளர் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசு! அந்த நிலைப்பாட்டில் இருந்து அது என்றும் மாறாது; தொடர்ந்து செயலாற்றும். 'நடந்தவற்றை நம்மைக் கடந்தனவாகக்' கருதி, அவற்றை நாம் பின்தள்ளி, ஒரு புதிய துவக்கத்திற்காக, வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல, சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டு அன்போடு அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

Industry & Investment
𝕏 X
1 yr ago
3211
133
167,248 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Disaster Response & Relief

களத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன்… #NorthEastMonsoon #ChennaiRains https://t.co/BOUiruoC9m

களத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன்… #NorthEastMonsoon #ChennaiRains https://t.co/BOUiruoC9m

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
5065
301
181,232 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Disaster Response & Relief

கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப்...

கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன். #NorthEastMonsoon #ChennaiRains

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2930
150
126,857 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Education

கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்த நமது...

கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் #AbdulKalam அவர்களின் பிறந்தநாள் இன்று! நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் பயின்று - பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம். அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபடும் தமிழர்களுக்கு, ஆண்டுதோறும் விடுதலை நாளில் “Dr. A.P.J. அப்துல் கலாம் விருது” வழங்கி வருகிறோம். நமது இளைஞர்கள் காணும் கனவுகள் மெய்ப்படத்தான் #நான்_முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை நமது #DravidianModel அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வியின் துணைக்கொண்டு - அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும்!

Education
𝕏 X
1 yr ago
2362
117
46,927 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Industry & Investment

Thank you, Hon’ble @PiyushGoyal, for fully accepting my demands by banning single-use plastic cigarette lighters under ₹20 and now restricting...

Thank you, Hon’ble @PiyushGoyal, for fully accepting my demands by banning single-use plastic cigarette lighters under ₹20 and now restricting the import of parts for cigarette lighters. This welcome move strengthens Tamil Nadu’s matchbox manufacturers, safeguarding over a lakh jobs and reducing harmful plastic waste. எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய - 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தமிழ்நாட்டின் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலுப்பெறுவதுடன், சுமார் ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குறையும்.

Industry & Investment
𝕏 X
1 yr ago
1569
59
65,420 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Disaster Response & Relief

#NorthEastMonsoon-ஐப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும்...

#NorthEastMonsoon-ஐப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ளுங்கள்.

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2113
132
64,326 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Disaster Response & Relief

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர்...

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தகவல் கிடைக்கப்பெற்றவுடன், மாண்புமிகு அமைச்சர் @Avadi_Nasar அவர்களையும் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் விபத்து நடந்த இடத்திற்குச் செல்ல உத்தரவிட்டேன். மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் அரசு துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மற்ற பயணிகளுக்குத் தேவையான உணவு, அவர்கள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கெனத் தனியே ஒரு குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. விபத்துக்குள்ளான இரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். #Kavaraipettai #TrainAccident #MysuruDarbhangaExpress

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2237
125
115,919 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Disaster Response & Relief

I am heartened to hear that the #AirIndiaExpress flight has landed safely. Upon receiving news of the landing gear issue, I immediately...

I am heartened to hear that the #AirIndiaExpress flight has landed safely. Upon receiving news of the landing gear issue, I immediately coordinated an emergency meeting with officials over the phone and instructed them to implement all necessary safety measures, including deploying fire engines, ambulances, and medical assistance. I have also now directed the District Collector to ensure the continued safety of all the passengers and to provide further assistance. My compliments to the Captain and crew for the safe landing.

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
9664
342
591,317 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Social Justice & Reservation

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு நாட்டு விடுதலைக்காகச் சிறை ஏகியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இரட்டைக்குவளை எதிர்ப்பு...

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு நாட்டு விடுதலைக்காகச் சிறை ஏகியவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இரட்டைக்குவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாள்! கடந்த ஆண்டு, அவரது நூற்றாண்டை முன்னிட்டு, இம்மானுவேல் சேகரனார் நல்லடக்கம் செய்யப்பட்ட பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது நமது #DravidianModel அரசு! அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1475
59
69,157 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Federalism & Centre–State Relations

Congratulations to the JKNC-INC alliance and the people of Jammu & Kashmir on the stupendous victory! This is more than just a win for #INDIA and...

Congratulations to the JKNC-INC alliance and the people of Jammu & Kashmir on the stupendous victory! This is more than just a win for #INDIA and democracy—it's a mandate to fulfil the aspirations of restoring the dignity and statehood of Jammu and Kashmir that the Union BJP Government unjustly stripped away. This moment marks the beginning of a just and inclusive future that honours the hopes of every Kashmiri. @OmarAbdullah @JKNC_ @INCJammuKashmir

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
19797
648
778,820 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Oct
Industry & Investment

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள்,...

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், மின்னணுப் பொருட்கள், பாதுகாப்பு, மருத்துவம், தோல் அல்லாத காலணிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், தொலைத்தொடர்பு எனப் பல்வேறு துறைகளில் பரவலாக 12 மாவட்டங்களில், 👷 46,931 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 💵 ரூ.38,698.8 கோடி மதிப்பிலான 🏭 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Industry & Investment
𝕏 X
1 yr ago
2410
94
70,823 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Environment & Climate

🏞️பள்ளிக்கரணை சதுப்புநிலச் சூழலியல் பூங்கா, 🌳செனாய் நகரில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்கா, 🏃‍➡️கிண்டி சிறுவர் இயற்கைப் பூங்கா எனச்...

🏞️பள்ளிக்கரணை சதுப்புநிலச் சூழலியல் பூங்கா, 🌳செனாய் நகரில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்கா, 🏃‍➡️கிண்டி சிறுவர் இயற்கைப் பூங்கா எனச் சென்னையின் நுரையீரலுக்குப் புத்துணர்ச்சியூட்டி வரும் நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளுக்கு மகுடமாக #KalaignarCentenaryPark அமைந்துள்ளது! தலைநகரின் பெருகும் தேவைகளை உணர்ந்து அரசு உருவாக்கியுள்ள உலகத்தரத்திலான இப்பசுமைப் போர்வையினைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மக்கள் உதவ வேண்டும்! #கலைஞர்_நூற்றாண்டுப்_பூங்கா

Environment & Climate
𝕏 X
1 yr ago
2353
121
71,932 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Law & Order / Justice

காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான குடியிருப்புக் கட்டடங்கள், தஞ்சையில் வட்டாரத் தடய அறிவியல் ஆய்வகம் முதலிய காவலர் நலன் காக்கும் முடிவுற்ற...

காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான குடியிருப்புக் கட்டடங்கள், தஞ்சையில் வட்டாரத் தடய அறிவியல் ஆய்வகம் முதலிய காவலர் நலன் காக்கும் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தேன். https://t.co/k31Ok48aAj

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1616
67
45,030 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Health

Delighted to announce that #MakkalaiThediMaruthuvam, our #DravidianModel Government's pioneering healthcare scheme for the Indian subcontinent,...

Delighted to announce that #MakkalaiThediMaruthuvam, our #DravidianModel Government's pioneering healthcare scheme for the Indian subcontinent, has earned the prestigious @UN-AITF Award. With over 1.80 crore beneficiaries, this game-changing initiative is transforming lives by delivering essential healthcare services directly to the people's doorsteps. The 2024 @un_ncd Award is a testament to the scheme's profound impact. I congratulate Hon'ble Health Minister @Subramanian_ma for his dedication in successfully implementing this scheme, and the @TNHealthDept secretary, doctors, nurses, and staff for their tireless efforts leading to this global recognition. Let’s continue to enhance the scheme and ensure more and more people benefit in the future. இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது #DravidianModel அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள #மக்களைத்தேடிமருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது! ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் அடையாளம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award விருது! சிறப்பான முறையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி - கண்காணித்து - மேம்படுத்தி வரும் மாண்புமிகு @Subramanian_ma அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறைச் செயலாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்! https://t.co/Xi12Gqe2Rq

Health
𝕏 X
1 yr ago
2864
168
80,607 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Disaster Response & Relief

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காணவந்து, கடும் வெயில் மற்றும் மருத்துவக் காரணங்களால் ஐவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையையும்...

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காணவந்து, கடும் வெயில் மற்றும் மருத்துவக் காரணங்களால் ஐவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உற்றாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2925
464
263,409 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Culture & Heritage

மானமிகு திராவிட மாணவர் படை தமிழ்மானம் காக்கத் துடித்தெழுந்து அரசியல் தலைமையேற்ற புரட்சிகர வரலாற்றின் அடையாளம் என் தோழன் @tiruchisiva அவர்கள்!...

மானமிகு திராவிட மாணவர் படை தமிழ்மானம் காக்கத் துடித்தெழுந்து அரசியல் தலைமையேற்ற புரட்சிகர வரலாற்றின் அடையாளம் என் தோழன் @tiruchisiva அவர்கள்! அவரது போராட்ட வாழ்வையும் - சொற்களாக விளைந்த சிந்தனைகளையும் நூல்களாக்கி வழங்கியிருக்கிறார். இனப்பகைவர்களை வீழ்த்த - இனமானம் காக்க இன்னும் பல சிவாக்கள் உருவாக இந்த நூல்களைப் போல் ஏராளமான நூல்கள் படைக்கப்பட வேண்டும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2983
137
77,901 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Culture & Heritage

#Live: @tiruchisiva MP அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்புரை https://t.co/pVpe5wQPq5

#Live: @tiruchisiva MP அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்புரை https://t.co/pVpe5wQPq5

Culture & Heritage
𝕏 X
2 yr ago
797
63
31,945 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Culture & Heritage

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!...

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று! "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்! @PKSekarbabu @tnhrcedept

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2510
157
66,431 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Governance & Administration

🌊 நீர்வளத்துறை சார்பில் புதிய தடுப்பணைகள், 👩‍💻 @tnhrcedept சார்பில் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, 👩‍🏫 நல்லாசிரியர்களுக்கு...

🌊 நீர்வளத்துறை சார்பில் புதிய தடுப்பணைகள், 👩‍💻 @tnhrcedept சார்பில் அர்ச்சகர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, 👩‍🏫 நல்லாசிரியர்களுக்கு நேரில் வாழ்த்து என இன்றைய நிகழ்ச்சிகளின் தொகுப்பு… https://t.co/9Vkhsd5hE2

Governance & Administration
𝕏 X
2 yr ago
1629
77
39,325 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Culture & Heritage

தனது திரைவசனங்கள் மூலமாகத் தமிழ்ச் சமூகத்துடன் உரையாடல் நிகழ்த்தி மாற்றங்களுக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்! அவரது பெயரில் ‘கலைஞர் நினைவு...

தனது திரைவசனங்கள் மூலமாகத் தமிழ்ச் சமூகத்துடன் உரையாடல் நிகழ்த்தி மாற்றங்களுக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்! அவரது பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்’ வழங்கப்படுகின்றன. தன் மயக்கும் குரலால் பல லட்சம் இரசிகர்களின் மனங்களில் குடியேறிவிட்ட ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ பி.சுசீலா அவர்களுக்கும் - வளமான எழுத்துகளால் கோக்கப்பட்ட வைரமாலையெனக் கவிதைகள் படைத்திட்ட கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கி நிரம்ப மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன். #Susheela #MuMetha

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2594
89
51,625 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41