DMKSocial

The Feed, page 93

Showing 1,841–1,860 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Culture & Heritage

#Live: மாண்புமிகு திரு. பொன்முடி அவர்களின் ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில் உரை https://t.co/aHbzyFVRXD

#Live: மாண்புமிகு திரு. பொன்முடி அவர்களின் ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில் உரை https://t.co/aHbzyFVRXD

Culture & Heritage
𝕏 X
1 yr ago
785
46
22,422 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Governance & Administration

நமது #DravidianModel-இன் திறனைப் பாராட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தேன்! நமது அரசு நிறைவேற்றி வரும்...

நமது #DravidianModel-இன் திறனைப் பாராட்டும் விதமாக நாமக்கல் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்தேன்! நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன். கள ஆய்வுகள் நிறைவுற்றதும் கழகப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளேன்… #LetterToBrethren

Governance & Administration
𝕏 X
1 yr ago
1450
86
29,867 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Sports

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் பல லட்சம் பேர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி! 🗓️ 15 நாட்கள் 🏐 36 விளையாட்டுகள் ⛹️‍♀️ 11,56,566 வீரர் - வீராங்கனைகள்...

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் பல லட்சம் பேர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி! 🗓️ 15 நாட்கள் 🏐 36 விளையாட்டுகள் ⛹️‍♀️ 11,56,566 வீரர் - வீராங்கனைகள் 🏸 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடுவர்கள் - பயிற்சியாளர்கள் - பணியாளர்கள் 🏆 37 கோடி ரூபாய்க்குப் பரிசுத்தொகை இத்தனை சிறப்பாக #CMTrophy2024-ஐ நடத்திக்காட்டிய துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான தம்பி @Udhaystalin அவர்களுக்கும் - துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்! தமிழ்நாட்டு இளைஞர்கள் விளையாட்டை ‘Career’-ஆகத் தேர்ந்தெடுக்க நமது #DravidianModel துணை நிற்கும்! Chase your passion and success will follow you!

Sports
𝕏 X
1 yr ago
3031
110
59,697 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Sports

#Live: #CMTrophy2024 நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/QOf43mazUR

#Live: #CMTrophy2024 நிறைவு விழாவில் சிறப்புரை https://t.co/QOf43mazUR

Sports
𝕏 X
1 yr ago
553
59
23,075 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Employment & Skill Development

#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு… நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த...

#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு… நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த @TataTech_News உடன் கைகோத்து பயணத்தைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு நானும் டாடா குழுமத் தலைவரும் இதற்கான இத்திட்டத்தைத் தொடங்கினோம். இன்று, தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்தியத் தொழிற் தேர்வுகளில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 29 மாணவ - மாணவியரையும் ஒரு பயிற்றுநரையும் பார்த்தபோது பெருமிதத்தால் பூரித்துப் போனேன். அதிலும் கூடுதல் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்றால், இதில் பெரும்பாலானோர் மாணவிகள்! கீழுள்ள புகைப்படங்களே திராவிட மாடலைக் கேள்வியெழுப்பும் அந்த வீணர்களுக்கான பதிலடி…! @cvganesan1

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1611
107
41,539 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Governance & Administration

நாமக்கல் மாவட்டத்தில், 🏫 298 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 134 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 🏗 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான...

நாமக்கல் மாவட்டத்தில், 🏫 298 கோடியே 2 இலட்சம் ரூபாய் செலவில் 134 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 🏗 365 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 140 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 🧑‍🧑‍🧒‍🧒 16,031 பயனாளிகளுக்கு 146 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்! திராவிட முன்னேற்றக் கழக அரசின் மதிப்பு என்ன என்பதை, வழிநெடுக வரவேற்று, அவர்களில் ஒருவனாக என்னை அரவணைத்துக் கொண்ட #நாமக்கல் மக்கள் எடுத்துக் காட்டினர். மக்களால் ஓரங்கப்பட்டவர்களுக்கு இதைவிட வேறு விளக்கம் தேவையா!

Governance & Administration
𝕏 X
1 yr ago
1965
160
46,800 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Governance & Administration

#Live: நாமக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/5Z7WLFgl3e

#Live: நாமக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/5Z7WLFgl3e

Governance & Administration
𝕏 X
1 yr ago
674
46
21,950 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Culture & Heritage

எங்கும் நிறைந்து - நிலைத்து நிற்கும் தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை நாமக்கல் மாநகரில்! https://t.co/HK0L0ip3CV

எங்கும் நிறைந்து - நிலைத்து நிற்கும் தமிழினத் தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை நாமக்கல் மாநகரில்! https://t.co/HK0L0ip3CV

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1941
101
40,813 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Culture & Heritage

பத்திரிகையாளர் - திரைப்படத் தயாரிப்பாளர் - எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகள் கொண்ட திரு. முரசொலி செல்வம் அவர்களுடைய படத்திறப்பும் புகழஞ்சலியும்...

பத்திரிகையாளர் - திரைப்படத் தயாரிப்பாளர் - எழுத்தாளர் எனப் பன்முகத் திறமைகள் கொண்ட திரு. முரசொலி செல்வம் அவர்களுடைய படத்திறப்பும் புகழஞ்சலியும் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நடைபெற்றது. விரைவில் அவரது பெயரால் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் - படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் #முப்பெரும்_விழா-வில் விருது வழங்கப்படும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1880
109
48,507 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Welfare Schemes

எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’...

எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற #Dravidian_Model-இன் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை! நாள்தோறும் நலப்பணிகள் என நாடு போற்றும் இந்தத் துறையின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 379 இணையர்களுக்கு வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, 31 இணையர்களை நேரில் வாழ்த்தி அகம் மகிழ்ந்தேன்! @tnhrcedept @PKSekarbabu

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1816
90
33,654 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Oct
Education

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின்...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது #DravidianModel அரசின் சிறப்பான முன்னெடுப்பு! இந்தப் பதிவு குறித்து நான் தம்பி @Anbil_Mahesh அவர்களிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது! இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் மாண்புமிகு @Anbil_Mahesh அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்!

Education
𝕏 X
1 yr ago
1626
91
61,723 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Law & Order / Justice

Honoured to inaugurate the Southern States DsGP Coordination Conference 2024. I am confident that this meeting will strengthen inter-state...

Honoured to inaugurate the Southern States DsGP Coordination Conference 2024. I am confident that this meeting will strengthen inter-state cooperation to combat illicit liquor, drugs, banned tobacco, cybercrime, inter-state gangs, and misinformation. Through collaboration, we can ensure public peace, internal security, and safety for all.

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1827
109
44,356 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Federalism & Centre–State Relations

இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல்...

இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு ஆளுநருக்குச் சில கேள்விகள்: ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? ‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா? 'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! 'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா? "தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்" என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா? 'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது? தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா? தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது? பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி – எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான். ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்? சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்? உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள். நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6064
672
615,127 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Federalism & Centre–State Relations

ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி...

ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6954
777
488,218 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Federalism & Centre–State Relations

I strongly condemn the celebration of Hindi Month valedictory function along with the Golden Jubilee celebrations of Chennai Doordarshan. Hon’ble...

I strongly condemn the celebration of Hindi Month valedictory function along with the Golden Jubilee celebrations of Chennai Doordarshan. Hon’ble @PMOIndia, The Constitution of India does not grant national language status to any language. In a multilingual nation, celebrating Hindi Month in non-Hindi speaking states is seen as an attempt to belittle other languages. Therefore, I suggest that holding such Hindi-oriented events in non-Hindi speaking states could be avoided, and instead, the celebration of the local language month in the respective states should be encouraged. சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு @PMOIndia, நாட்டின் தேசிய மொழி என்று அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் வரையறுக்கவில்லை. பன்மொழிகள் நிறைந்த இந்திய நாட்டில், இந்திக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அதனை மட்டும் கொண்டாடுவது பிற மொழிகளைச் சிறுமைப்படுத்துவதாகும். இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும்; நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்! #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
14139
1868
1,126,547 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Disaster Response & Relief

கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான...

கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்! #NorthEastMonsoon #ChennaiRains #TNRains

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2598
166
64,792 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Federalism & Centre–State Relations

My hearty congratulations to Hon’ble @OmarAbdullah on assuming office as the Chief Minister of Jammu and Kashmir! Although I received an...

My hearty congratulations to Hon’ble @OmarAbdullah on assuming office as the Chief Minister of Jammu and Kashmir! Although I received an invitation from @JKNC_ President, Respected Farooq Abdullah, to attend the swearing-in ceremony, due to the ongoing heavy rains in Tamil Nadu and my responsibility to oversee the relief efforts, I have deputed my sister, @KanimozhiDMK, leader of the DMK Parliamentary Party, to extend my best wishes on behalf of myself and the DMK. Let Tamil Nadu, at the southern tip, and Jammu and Kashmir, at the northernmost point of the Indian subcontinent, move forward together in the democratic struggle to secure state rights. Together, we shall achieve victory! ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு @OmarAbdullah அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. பரூக் அப்துல்லா அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை @KanimozhiDMK அவர்களை என் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5260
99
85,161 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Disaster Response & Relief

நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். #NorthEastMonsoon #ChennaiRains @chennaicorp

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
2014
110
74,174 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Party & Elections

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட -...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘War Room’-ஐப் பார்வையிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட - பகுதி - வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரைத் தொடர்புகொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்வதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைச் செய்துகொடுத்து, நிவாரணப் பணிகளில் அரசு இயந்திரத்துக்குத் துணை நிற்குமாறு கேட்டுக் கொண்டேன். இரவு முழுதும் விழிப்புடன் பணியாற்றி, கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு உதவிடுமாறு கழக நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள War Room எண்: 08069446900 @arivalayam @DMKITwing @TRBRajaa #NorthEastMonsoon #ChennaiRains #TNRains

Party & Elections
𝕏 X
1 yr ago
2104
89
53,110 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Disaster Response & Relief

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்தேன். நிவாரண முகாம்களில்...

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்தேன். நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கான உணவு - தங்குமிட வசதிகள் போன்றவை குறித்துக் கேட்டறிந்தேன். கனமழை நிற்கும் வரையில், அதிகாரிகள் விழிப்புடன் செயலாற்றி, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு உத்தரவிட்டுள்ளேன். #NorthEastMonsoon #ChennaiRains #TNRains

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1524
72
37,877 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41