DMKSocial

The Feed, page 86

Showing 1,701–1,720 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Culture & Heritage

புத்தாண்டு 2025-இல் #StatueOfWisdom எனப் பெயர் பெற்றுத் திகழும் வள்ளுவர் சிலை அதனை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போல உயர்ந்து...

புத்தாண்டு 2025-இல் #StatueOfWisdom எனப் பெயர் பெற்றுத் திகழும் வள்ளுவர் சிலை அதனை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் போல உயர்ந்து நிற்கிறது! ஆழிப்பேரலையை எதிர்கொண்டு வெள்ளிவிழா காணும் அய்யன் வள்ளுவரின் பேரறிவுச் சிலை போல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும்! பேரறிவுச் சிலையைக் கொண்டாட அனைவரும் வருக! #LetterToBrethren

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1686
100
36,311 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Federalism & Centre–State Relations

The BJP government’s decision to deny Dr. #ManmohanSingh’s family the right to perform his last rites at a befitting site for his memorial is a...

The BJP government’s decision to deny Dr. #ManmohanSingh’s family the right to perform his last rites at a befitting site for his memorial is a direct insult to his towering legacy and the Sikh community. Refusing the family’s request and relegating a two-term Prime Minister to Nigambodh Ghat reeks of arrogance, bias and a deliberate attempt to erase his immense contributions from public memory. Dr. Manmohan Singh’s leadership transformed India’s economy and lifted millions out of poverty. To disrespect a statesman of his stature is to disrespect India’s progress itself. The stain of dishonouring great leaders never fades from history! https://t.co/Msj5XdHR2v

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
10456
546
362,469 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Governance & Administration

Paid my respects to one of the greatest sons of India, Dr. Manmohan Singh. History will not only be kind to him; it will etch his name among the...

Paid my respects to one of the greatest sons of India, Dr. Manmohan Singh. History will not only be kind to him; it will etch his name among the rarest of leaders whose vision reshaped a nation, whose humility inspired millions, and whose legacy will forever serve as a beacon of hope and progress for generations to come. @INCIndia #ManmohanSingh

Governance & Administration
𝕏 X
1 yr ago
11341
138
115,723 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Federalism & Centre–State Relations

Deeply saddened by the passing of former Prime Minister Dr. Manmohan Singh, a statesman whose intellect and leadership steered India’s economic...

Deeply saddened by the passing of former Prime Minister Dr. Manmohan Singh, a statesman whose intellect and leadership steered India’s economic transformation. His tenure marked an era of steady growth, social progress, and reforms that improved the lives of millions. Dr. Manmohan Singh’s partnership with Thalaivar Kalaignar was instrumental in advancing Tamil Nadu’s development. Their mutual respect and collaboration brought vital projects and strengthened the state’s progress across various sectors. Dr. Manmohan Singh valued Tamil Nadu’s aspirations, ensuring that the voices of the South resonated in national policies. Even during turbulent times, Dr. #ManmohanSingh and Thalaivar Kalaignar stood together, exemplifying the strength of coalition politics built on trust and respect for regional identities. His calm, thoughtful leadership reflected a rare quality — a leader who spoke less but achieved more, driven by action rather than rhetoric. To the people of Tamil Nadu, Dr. Manmohan Singh was not only a Prime Minister but a friend of the state. His ability to understand and address our needs helped strengthen Tamil Nadu’s role in India’s growth story. His modesty, despite his vast knowledge and stature, left a lasting impression on all who had the privilege of working alongside him. On behalf of the people of Tamil Nadu and the DMK, I extend my deepest condolences to his family, friends, and the entire @INCIndia party. Dr. Manmohan Singh’s legacy of wisdom, humility, and service will continue to guide and inspire future generations. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது. தலைவர் கலைஞர் அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார். நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப்பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார். பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திரு. மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
20524
383
206,183 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Culture & Heritage

தமிழ்நாட்டில், நாள் முழுவதும் அன்னதானம் - 11 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானம் - 760 திருக்கோயில்களிலும் செயல்படுத்தி, ஆண்டொன்றுக்கு சுமார்...

தமிழ்நாட்டில், நாள் முழுவதும் அன்னதானம் - 11 திருக்கோயில்களிலும், ஒருவேளை அன்னதானம் - 760 திருக்கோயில்களிலும் செயல்படுத்தி, ஆண்டொன்றுக்கு சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்களின் பசியாற்றி வருகிறோம். இன்று, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களிலும் விரிவுபடுத்தியுள்ளோம்! அதோடு, 5,775 மாணவர்கள் பயன்பெறும் வகையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம். அறம் செய்வோம்! அரண் செய்வோம்! @pksekarbabu @tnhrcedept

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2090
278
89,010 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Party & Elections

போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் #நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்! எளிமையான...

போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் #நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்! எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களும் நூற்றாண்டு காண்கிறார்! இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம்! தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது! தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
3499
167
68,616 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Culture & Heritage

கழகத்தின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்! தலைவர் கலைஞரின் நண்பரும் -...

கழகத்தின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்! தலைவர் கலைஞரின் நண்பரும் - ஆருயிர்ச் சகோதரருமான “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்! #நாகூர்ஹனிபா100 #Hanifa100

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3915
150
88,764 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Federalism & Centre–State Relations

On the 100th birth anniversary of Atal Bihari Vajpayee, we remember his contributions to Tamil Nadu’s infrastructure and his camaraderie with our...

On the 100th birth anniversary of Atal Bihari Vajpayee, we remember his contributions to Tamil Nadu’s infrastructure and his camaraderie with our leader, Kalaignar. As Prime Minister, despite his rightist ideology, he upheld the secular fabric of our country. His legacy endures. முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4472
219
224,440 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Culture & Heritage

வள்ளுவ முனைதனில் வானுயர நிற்கும் பேரறிவுச் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் இளைய தலைமுறை, அய்யன் வள்ளுவர்...

வள்ளுவ முனைதனில் வானுயர நிற்கும் பேரறிவுச் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் இளைய தலைமுறை, அய்யன் வள்ளுவர் வகுத்துள்ள தமிழ் வாழ்வியல் நெறியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறேன்! வள்ளுவம் போற்றுதும்! #StatueOfWisdom https://t.co/cUgHSu2s8q

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1944
123
41,987 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை -...

ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை - இனத்தை என்றும் காக்கும்! அந்தக் கைத்தடியை எனக்குப் பரிசாக அளித்து நெகிழச் செய்துவிட்டார் மானமிகு @AsiriyarKV அவர்கள்! பெரியாரியப் பெருந்தொண்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மானமிகு ஆசிரியர் அவர்கள், பகுத்தறிவுச் சுடரை ஏந்திப் புத்தொளிப் பாய்ச்சும் பணியில் நாளும் ஈடுபட்டு வருகிறார். 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட @viduthalainews ஏட்டின் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களைத் தாங்கி திராவிட இயக்க அறிவுக் களஞ்சியமாக உருவாகியுள்ளது, https://t.co/JNushfkrEF பெரியாரியக் கருத்துகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் அறிவுப் பணியைத் தொடர்வோம்! எங்கும் பகுத்தறிவுத் #தீ_பரவட்டும்! #PeriyarForever @AsiriyarKV

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2494
138
41,815 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

தந்தை பெரியார் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு 51 ஆண்டுகளாகின்றன; நாம் அவரது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்! #PeriyarForever...

தந்தை பெரியார் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு 51 ஆண்டுகளாகின்றன; நாம் அவரது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்! #PeriyarForever https://t.co/YAA4rmrZ7y

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
6083
322
93,858 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Education

உள்ளத்தில் எழுந்த உணர்வுகளுக்கு உருக்கொடுத்து “அப்பா” என்று உறவாடிய, “அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி” மாணவர்களின் அன்பில்...

உள்ளத்தில் எழுந்த உணர்வுகளுக்கு உருக்கொடுத்து “அப்பா” என்று உறவாடிய, “அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி” மாணவர்களின் அன்பில் நெக்குருகிப் போனேன். கொளத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டு, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த, இந்தக் கல்லூரிக்கான கட்டடக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தேன். கல்விப் பணியிலும் ஈடுபட்டு ஏழை - எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் @tnhrcedept-இன் பணி வாழி! @pksekarbabu @GoviChezhian

Education
𝕏 X
1 yr ago
2744
139
54,745 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Rural Development

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைநேய வகுப்பறைக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 95 புதிய...

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைநேய வகுப்பறைக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 95 புதிய வாகனங்கள்… வீட்டு வசதி வாரிய நில எடுப்பில் இருந்து நிலங்களை விடுவித்து 40 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டமைக்காக நன்றி தெரிவிக்க வந்த பயனாளிகள்… குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து… என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Rural Development
𝕏 X
1 yr ago
1309
50
23,466 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Sports

திறமைமிகு தமிழ்நாட்டின் இளைஞர்களே… மாணவர்களே… விளையாட்டு வீரர்களே… களம் காணுங்கள்; உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்; நம் மாநிலத்துக்கும்...

திறமைமிகு தமிழ்நாட்டின் இளைஞர்களே… மாணவர்களே… விளையாட்டு வீரர்களே… களம் காணுங்கள்; உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்; நம் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேருங்கள்! உங்கள் வாழ்க்கையை அக்கறையோடு கவனித்துக் கொள்ள நமது #DravidianModel அரசு இருக்கிறது! #களம்_நமதே! @Udhaystalin @SportsTN_

Sports
𝕏 X
1 yr ago
1880
78
26,807 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Governance & Administration

Democracy is facing its gravest threat under the BJP-led Union Government with the reckless amendment of Section 93(2)(a) of the Conduct of...

Democracy is facing its gravest threat under the BJP-led Union Government with the reckless amendment of Section 93(2)(a) of the Conduct of Election Rules, to kill the transparency in election. Consequent on the direction of the Punjab and Haryana High Court to furnish the CCTV footage of an election booth, the Union Government brought this amendment to prevent public inspection of election documents including CCTV footage and thus destroyed one of the basic features of the Constitution. The BJP-led Union Government's fear extends beyond Haryana, reflecting anxiety over Maharashtra, where their orchestrated and unholy victory in the recent assembly election has raised serious concerns. It is shocking that the Election Commission of India, instead of fighting for institutional integrity, has willingly succumbed to the pressure of Prime Minister Modi’s Government and happily involved in defacing its own child - the free and fair election! I appeal to all political parties, including those participating in the Union Government, to come forward and counter this undemocratic assault on the free and fair elections of our Nation. @ECISVEEP #UniteForDemocracy #SaveDemocracy #FreeAndFairElections வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது. தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
3419
124
98,312 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Agriculture & Farmer Welfare

உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்! இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என...

உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்! இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது #DravidianModel அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும்! உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
2030
86
35,354 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Party & Elections

கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக்...

கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம்! 75 ஆண்டுகளாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க! செயற்குழுவில் பெற்ற கருத்துகள், வகுத்த வியூகங்களுடன் 2026-இல் நம் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்! வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!

Party & Elections
𝕏 X
1 yr ago
2405
187
49,997 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Culture & Heritage

இசைமுரசு நாகூர் ஹனிபா என்றாலே - "அழைக்கின்றார் அண்ணா" "ஓடிவருகிறான் உதயசூரியன்" - "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" முதலான பாடல்கள்தான் நம்...

இசைமுரசு நாகூர் ஹனிபா என்றாலே - "அழைக்கின்றார் அண்ணா" "ஓடிவருகிறான் உதயசூரியன்" - "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" முதலான பாடல்கள்தான் நம் நெஞ்சில் ஒலிக்கும்! அவரது நூற்றாண்டைச் சிறப்பிக்க - 🔹நாகை நகராட்சியில் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா தெரு” என்றும், 🔹சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்கா “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயர் சூட்டியுள்ளோம்! #நாகூர்ஹனிபா100-இல் அவரது வாழ்வையும் தொண்டையும் போற்றுவது நம் கடமை!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3317
166
152,687 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Federalism & Centre–State Relations

உங்கள் M.P.களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டவர்களை வாயடைக்கச் செய்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசியலமைப்பின் 75-ஆவது ஆண்டை முன்னிட்ட...

உங்கள் M.P.களால் என்ன செய்துவிட முடியும் என்று கேட்டவர்களை வாயடைக்கச் செய்த நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசியலமைப்பின் 75-ஆவது ஆண்டை முன்னிட்ட விவாதத்தில் ஆழ்ந்த கருத்துகள் - மாநில உரிமை - மணிப்பூர் வன்முறை - சிறுபான்மை நலன் - ஜனநாயகத்துக்கு எதிரான #ONOE மற்றும் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதற்கு எதிர்ப்பு, நிதிக்கோரிக்கை என உரக்கப் பேசியிருக்கிறோம்! கழகத் தலைவராகப் பெருமை கொள்கிறேன்! ஒன்றிய அரசு மவுனம் கலைத்து தமிழ்நாட்டு மக்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்! #ParliamentWinterSession

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2303
99
38,150 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Culture & Heritage

சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!...

சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25! மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்! https://t.co/AdaRK3UZrT

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3588
224
92,275 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41