DMKSocial

The Feed, page 85

Showing 1,681–1,700 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Governance & Administration

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு...

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் @isro-வில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. #Chandrayaan2, #Chandrayaan3, #AdityaL1, #Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் #Narayanan அவர்களின் தலைமையில் #ISRO உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!

Governance & Administration
𝕏 X
1 yr ago
4200
137
86,869 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Party & Elections

ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எண்ணிலடங்காச் சிறப்புத் திட்டங்களைத் தந்தவர் டாக்டர் #ManmohanSingh அவர்கள். தமிழுக்கு ஒன்றிய...

ஆட்சியில் இருந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எண்ணிலடங்காச் சிறப்புத் திட்டங்களைத் தந்தவர் டாக்டர் #ManmohanSingh அவர்கள். தமிழுக்கு ஒன்றிய அரசின் செம்மொழித் தகுதியை அறிவித்து நம் நூறாண்டுக் கனவை நிறைவேற்றியவர். 21 தமிழர்கள் அவரது அமைச்சரவையில் முக்கியத்துறைகளில் அமைச்சர்களாக இடம்பெற்றது வரலாறு! தமிழ்நாட்டின்மீது தனிப்பாசம் கொண்ட அவருக்கு நன்றியோடு என் புகழஞ்சலிகள்! நீண்ட அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்து, இறுதிமூச்சு வரையில் அரசியலில் இரண்டறக் கலந்து பயணித்தவர் @INCTamilNadu முன்னாள் தலைவர் & முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். அவரது மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையிலும் தாங்கிக் கொள்ள இயலாத இழப்பு. அவருக்கும் எனது அஞ்சலிகள்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2192
100
34,108 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Federalism & Centre–State Relations

The new UGC regulations granting Governors broader control over VC appointments and allowing non-academics to hold these posts are a direct...

The new UGC regulations granting Governors broader control over VC appointments and allowing non-academics to hold these posts are a direct assault on federalism and state rights. This authoritarian move by the Union BJP government seeks to centralise power and undermine democratically elected state governments. Education must remain in the hands of those chosen by the people, not dictated by Governors acting at the BJP government’s behest. Tamil Nadu, which leads the nation with the highest number of top-ranking HEIs, will not stay silent as our institutions are stripped of autonomy. Education is a subject under the Concurrent List in our Constitution, and hence we consider that the move of the UGC to issue this notification unilaterally as unconstitutional. This overreach is unacceptable, and Tamil Nadu will fight it legally and politically.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3019
161
149,328 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Federalism & Centre–State Relations

அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார்...

அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் @rajbhavan_TN. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4770
389
320,940 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Party & Elections

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தோழர்களுக்காகவும் உழைத்த அவருக்கு கடந்த ஆண்டு அண்ணல் அம்பேத்கர் விருதை கழக அரசு வழங்கியது. அத்தகைய சிறப்புக்குரிய தோழர் சண்முகம் @tncpim புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், கழகக் கூட்டணியின் அனைத்து வெற்றிகளுக்கும் எந்நாளும் உழைத்த தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடைபெற்றிருந்தாலும் மக்கள் பணிக்கு விடைகொடுக்காமல் நாளும் உழைப்பவர் தோழர் @kbcpim என்பதை நாடறியும். இரு தோழர்களும் தங்கள் பணியைத் தொய்வின்றித் தொடர வாழ்த்துகிறேன்.

Party & Elections
𝕏 X
1 yr ago
3214
104
99,069 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Culture & Heritage

தமிழின் தொன்மை தொடர்பான தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கும் முப்பெரும் அறிவிப்புகளை #DiscoveryOfIndusCivilisationCentenary...

தமிழின் தொன்மை தொடர்பான தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கும் முப்பெரும் அறிவிப்புகளை #DiscoveryOfIndusCivilisationCentenary பன்னாட்டுக் கருத்தரங்கில் வெளியிட்டுள்ளேன். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும்! பொய்ப்புனைவுகளை உடைப்போம்! மெய்ப்பொருள் காண்போம்! ஜான் மார்ஷல் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை நாம் நிறைவுசெய்வோம்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2032
118
39,809 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Culture & Heritage

#Live: சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவுக் கருத்தரங்கில் விழாப் பேருரை https://t.co/m9CFXtpPU7

#Live: சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவுக் கருத்தரங்கில் விழாப் பேருரை https://t.co/m9CFXtpPU7

Culture & Heritage
𝕏 X
1 yr ago
942
38
22,849 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jan
Social Justice & Reservation

மாற்றுத்திறனாளி ஆசிரியை அனுசுயா அவர்களைப் போன்றோர் நிமிர்ந்து நிற்பதில்தான் #DravidianModel அரசின் பெருமை குடிகொண்டுள்ளது! https://t.co/WJKgIOK92j

மாற்றுத்திறனாளி ஆசிரியை அனுசுயா அவர்களைப் போன்றோர் நிமிர்ந்து நிற்பதில்தான் #DravidianModel அரசின் பெருமை குடிகொண்டுள்ளது! https://t.co/WJKgIOK92j

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
6462
188
156,050 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Agriculture & Farmer Welfare

செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு நான்காவது மலர்க்காட்சி! வாய்ப்புள்ள அனைவரும் கண்டுமகிழ வேண்டும்! #ChennaiFlowerShow2025...

செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு நான்காவது மலர்க்காட்சி! வாய்ப்புள்ள அனைவரும் கண்டுமகிழ வேண்டும்! #ChennaiFlowerShow2025 @tnhorticulture @MRKPanneer https://t.co/ObLy57rRJE

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
2265
106
36,860 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Women & Child Welfare

ஆட்சிப் பொறுப்பின் வழியாகவும், கழகத்தின் செயல்பாடுகள் வழியாகவும் மக்கள் பணி ஆற்றுகிறோம்! அந்த வகையில் மாண்புமிகு @Subramanian_ma அவர்களது...

ஆட்சிப் பொறுப்பின் வழியாகவும், கழகத்தின் செயல்பாடுகள் வழியாகவும் மக்கள் பணி ஆற்றுகிறோம்! அந்த வகையில் மாண்புமிகு @Subramanian_ma அவர்களது முன்னெடுப்பில், சைதை பகுதி பெண்களின் வாழ்வினை வளம்பெறச் செய்யும் ‘கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம்’ உருவாகியுள்ளது! https://t.co/z6A2o7DEdR

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
2142
138
54,023 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
Culture & Heritage

வள்ளுவம் போற்றுதும் #பேரறிவுச்சிலை-யின் வெள்ளிவிழாவின் மூலம் குறளின் பெருமையையும் குறள்நெறியையும் பரப்பிடும் வாய்ப்பு நமது #DravidianModel அரசில்...

வள்ளுவம் போற்றுதும் #பேரறிவுச்சிலை-யின் வெள்ளிவிழாவின் மூலம் குறளின் பெருமையையும் குறள்நெறியையும் பரப்பிடும் வாய்ப்பு நமது #DravidianModel அரசில் அமைந்தது நான் பெறும் பெருமை! குறள் புகழ் பரப்பிட 17 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்ட பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்குச் சிறப்பு செய்தேன்! நமது தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் அய்யன் வள்ளுவரையும் - திருக்குறளையும் இன்னும் இன்னும் மக்களிடம் கொண்டு சேர்த்திட வேண்டும்! பள்ளி - கல்லூரி - அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! #StatueOfWisdom

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2755
126
50,373 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
Culture & Heritage

வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழாவில் ‘வள்ளுவமாலை’ படைத்திட்ட கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கும் இசைப்புயல் @arrahman அவர்களுக்கும் நன்றியும்;...

வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழாவில் ‘வள்ளுவமாலை’ படைத்திட்ட கலைஞானி @ikamalhaasan அவர்களுக்கும் இசைப்புயல் @arrahman அவர்களுக்கும் நன்றியும்; வாழ்த்துகளும்! #பேரறிவுச்சிலை #StatueOfWisdom https://t.co/5gA2N8U0BZ

Culture & Heritage
𝕏 X
1 yr ago
4759
128
308,337 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Dec
Culture & Heritage

#Live: #பேரறிவுச்சிலை-யின் வெள்ளிவிழா (#StatueOfWisdom) https://t.co/tAjuuNZ1kW

#Live: #பேரறிவுச்சிலை-யின் வெள்ளிவிழா (#StatueOfWisdom) https://t.co/tAjuuNZ1kW

Culture & Heritage
𝕏 X
1 yr ago
729
41
21,308 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Culture & Heritage

அய்யன் வள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கக் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, பல்வேறு வகைகளிலும் குறள்நெறி...

அய்யன் வள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கக் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திறப்பு, பல்வேறு வகைகளிலும் குறள்நெறி பரப்பும் தகைமையாளர்களுக்குச் சிறப்பு, அறிவார்ந்தோரின் கருத்துச் செறிவுமிக்க பேச்சில் வள்ளுவத்தின் பயன் குறித்த பட்டிமன்றம் - என “வள்ளுவம் போற்றுதும்” முதல் நாள் நிகழ்வுகள் நடந்தேறின! வள்ளுவத்தை விதைப்போம்! வையத்தில் உயர்ந்து நிற்போம்! #StatueOfWisdom

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3512
143
90,439 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Education

பெண் கல்வி என்பது ஒரு தலைமுறையையே முன்னேற்றக்கூடிய சமூகப் புரட்சி! 601 கோடி ரூபாய் மதிப்பில் 5 லட்சத்துக்கும் அதிகமான நமது மகள்கள் #புதுமைப்பெண்...

பெண் கல்வி என்பது ஒரு தலைமுறையையே முன்னேற்றக்கூடிய சமூகப் புரட்சி! 601 கோடி ரூபாய் மதிப்பில் 5 லட்சத்துக்கும் அதிகமான நமது மகள்கள் #புதுமைப்பெண் திட்டத்தால் பயனடைகின்றனர். எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும், கல்விக்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்! #PuthumaiPenn #DravidianModel @geethajeevandmk @KanimozhiDMK @Anbil_Mahesh

Education
𝕏 X
1 yr ago
2832
191
47,385 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Culture & Heritage

வள்ளுவ முனை நோக்கிப் புறப்படுகிறேன்… வள்ளுவம் போற்றுதும்! #StatueOfWisdom https://t.co/3X1aH48iQn

வள்ளுவ முனை நோக்கிப் புறப்படுகிறேன்… வள்ளுவம் போற்றுதும்! #StatueOfWisdom https://t.co/3X1aH48iQn

Culture & Heritage
𝕏 X
1 yr ago
6419
205
121,650 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Education

#Live: #PuthumaiPenn திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/pZvFU5ynKP

#Live: #PuthumaiPenn திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சிறப்புரை https://t.co/pZvFU5ynKP

Education
𝕏 X
1 yr ago
828
167
25,012 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Education

முன்னேற்றத்துக்கான முகவரியாக விளங்கும் படிப்பகங்களில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களைச் சந்தித்துப் பேசினேன். https://t.co/8lbz5PfNkI

முன்னேற்றத்துக்கான முகவரியாக விளங்கும் படிப்பகங்களில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களைச் சந்தித்துப் பேசினேன். https://t.co/8lbz5PfNkI

Education
𝕏 X
1 yr ago
3407
128
54,500 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Party & Elections

வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் #களம்2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்!...

வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் #களம்2026-இல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதியேற்றோம்! தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

Party & Elections
𝕏 X
1 yr ago
1713
113
34,701 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Industry & Investment

The first TIDEL Park in South Tamil Nadu, at Thoothukudi, marks a new chapter of opportunity, creating a pathway for young talent. With the...

The first TIDEL Park in South Tamil Nadu, at Thoothukudi, marks a new chapter of opportunity, creating a pathway for young talent. With the Pattabiram #TIDELPark and TIDEL Neo projects in Villupuram, Thanjavur, Salem, and Thoothukudi, Tamil Nadu's growth story continues. #TIDEL Parks across the state are generating thousands of jobs, driving inclusive and equitable progress under the #DravidianModel. Upcoming TIDEL Parks in Vellore, Tiruppur, and Karaikudi will further expand these opportunities. @TRBRajaa @TNIndMin @Guidance_TN

Industry & Investment
𝕏 X
1 yr ago
3002
87
70,688 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41