
திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு...
திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்! எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை! தமிழ்நாடெங்கும் நடைபெற்ற #தமிழ்வாரவிழா-வில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே… பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்! இது போதுமா? நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும்! தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக! தமிழர் வெல்க!

