DMKSocial

The Feed, page 65

Showing 1,281–1,300 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Governance & Administration

🏢 பெருகி வரும் சென்னையின் தேவைகளைக் கருத்திற்கொண்டு முட்டுக்காட்டில் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ அமைக்க அடிக்கல் 🌾 ‘உழவரைத் தேடி – வேளாண்மை...

🏢 பெருகி வரும் சென்னையின் தேவைகளைக் கருத்திற்கொண்டு முட்டுக்காட்டில் ‘கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்’ அமைக்க அடிக்கல் 🌾 ‘உழவரைத் தேடி – வேளாண்மை உழவர் நலத்துறை’ திட்டம் தொடக்கம் 👩🏾‍🎓 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை & பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல் 🧱 நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 49 முடிவுற்ற பணிகள் தொடக்கம் மற்றும் 16 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் 🛣 நெடுஞ்சாலைகள் துறை சார்பில் 4-வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலை 🌉 பழங்காநத்தத்தில் இரயில்வே கடவிற்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் 🏡 இராணிப்பேட்டை மாவட்டம் மேல்பாக்கத்தில் பழங்குடியினருக்காகக் 41 குடியிருப்புகள் திறப்பு என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Governance & Administration
𝕏 X
1 yr ago
1835
79
29,108 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Governance & Administration

"அரசு சேவைகளைப் பெறுவது இனி இவ்வளவு Easy-யா?" எனப் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் வியக்கும் அளவுக்குப் புரட்சியை நிகழ்த்தப் போகிறது...

"அரசு சேவைகளைப் பெறுவது இனி இவ்வளவு Easy-யா?" எனப் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் வியக்கும் அளவுக்குப் புரட்சியை நிகழ்த்தப் போகிறது #எளிமை_ஆளுமை திட்டம்! இதுகுறித்த வீடியாவைப் பகிர்கிறேன். இதில் உள்ளவை மட்டுமல்லாது, இந்தத் திட்டத்தின் பயன் இன்னும் இன்னும் விரிவடையப் போகிறது. மக்களின் அலைச்சலுக்கும் விடியல் பிறக்கப் போகிறது. @ptrmadurai @TNeGA_Official

Governance & Administration
𝕏 X
1 yr ago
2734
148
182,358 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Agriculture & Farmer Welfare

🐟 இந்தியாவிலேயே முதன்முறையாகச் சூரை மீன் பிடிப்பதற்கெனப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்! 🐟 272.70 கோடி...

🐟 இந்தியாவிலேயே முதன்முறையாகச் சூரை மீன் பிடிப்பதற்கெனப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்! 🐟 272.70 கோடி ரூபாயில் பல்வேறு வசதிகளுடன் ஆண்டுக்கு 7000 டன் அளவுக்கு மீன்களைக் கையாளும் வகையிலும், 6,250 மீனவர்கள் நேரடியாகப் பயன்பெறும் வகையிலும் இதனை உருவாக்கியுள்ளோம். 🐟 அதுமட்டுமல்ல, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் எனத் தமிழ்நாடு முழுவதும் மீனவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்துப் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். சிறப்புத் திட்டங்களையும் கடனுதவிகளையும் வழங்கினேன். 🐟 வேறு எந்த மாநிலத்திலும் மீனவர்களுக்காக இப்படி இத்தனை திட்டங்கள் இல்லை என மீனவத் தோழர்களிடம் பெருமிதம் பொங்கச் சொல்லிவிட்டு வந்தேன்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1839
88
29,506 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Federalism & Centre–State Relations

Our people are simple, dignified, and resilient. Even when all they have is half a rupee, they save it carefully, adding to it bit by bit, until...

Our people are simple, dignified, and resilient. Even when all they have is half a rupee, they save it carefully, adding to it bit by bit, until they can buy a single gold bead. Not for show. Not for luxury. But for emergencies—moments when there is no one else to turn to. This is not ornamental gold. It is their shield against life’s uncertainties. Today, the RBI has proposed needless restrictions on gold loans, making it harder for poor and middle-class families to access credit with self-respect. This is not merely a regulation. It is a blow to their dignity and survival. At a time when many are already caught in the cruel grip of #LoanSharks and forced into #LoanApps during times of desperation, is it fair to push them further into those traps instead of protecting them? I respectfully urge Hon’ble @nsitharaman and the @RBI Governor to ease the rules on #GoldLoan. Let our people pledge their hard-earned gold with dignity. கையில் இருப்பது அரையணா காசாக இருந்தாலும், அதைச் சேர்த்து வைத்து, குண்டுமணி தங்கமாவது வாங்குவது நம் மக்களின் இயல்பு! இந்தத் தங்கம் ஆடம்பரத்துக்கான தங்கமல்ல; ஆத்திர அவசரத்திற்கான தங்கம்! தங்கநகைகளை வங்கிகளில் வைத்து கண்ணியமான முறையில் கடன் பெறுவதற்கு இடையூறாக, தேவையற்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருப்பது, நம் நாட்டின் ஏழை - எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரத்திற்கும் கண்ணியத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால்! ஏற்கெனவே அநியாய வட்டிக்குக் கடன் வாங்கி #LoanSharks-இடம் அவதியுறுவதும் - அவசரத் தேவைகளுக்காக #LoanApps-களில் கடன் பெற்றுச் சொல்லொணாத் துயருக்கும் ஆளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்றச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அந்தக் கொடூர வட்டி வலையில் சிக்க வைத்திடும் செயல்களைச் செய்வது ஏற்புடையதல்ல! எனவே, தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி, ஏழை - எளிய, நடுத்தர மக்கள் கண்ணியத்துடன் வாழ உடனே நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாண்புமிகு @nsitharaman அவர்களையும் @RBI ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1702
64
45,734 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Law & Order / Justice

சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை...

சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி! காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”. குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
3249
413
374,730 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
Welfare Schemes

இன்றைய #KolathurVisit-இல், காலை முதல் பிற்பகல் வரை – 👵 @tnhrcedept சார்பில் சென்னை, பழனி, திருநெல்வேலியில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள்...

இன்றைய #KolathurVisit-இல், காலை முதல் பிற்பகல் வரை – 👵 @tnhrcedept சார்பில் சென்னை, பழனி, திருநெல்வேலியில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் 👩‍💻 #AnithaAchieversAcademy மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மடிக்கணினிகள் 👓 #கலைஞர்100 கண் மருத்துவமனை பயனாளிகளுக்குக் கண்ணாடிகள் மாணவ, மாணவியர்களுக்குக் கல்வி உபகரணங்கள் 🔷 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கல் 🔷 மேம்படுத்தப்பட்ட தணிகாசலம் நகர் கால்வாய் திறப்பு - எனத் தொடர் நலத்திட்டங்கள் - தொடர் மக்கள் சந்திப்பு ஆகியவற்றால் தொடரும் மகிழ்ச்சி!

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1939
131
38,106 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 May
Education

மார்ச் மாதம்தான் #TNBudget2025-இல் அறிவித்தோம்! சற்றும் தாமதியாமல் இந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை...

மார்ச் மாதம்தான் #TNBudget2025-இல் அறிவித்தோம்! சற்றும் தாமதியாமல் இந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் இருந்தே செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகளையும் தொடங்கிவிட்டோம்! https://t.co/v4MfSPL56f

Education
𝕏 X
1 yr ago
2325
112
48,062 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 May
Employment & Skill Development

Our #DravidianModel Government's #MudhalvarPadaippagam initiative is democratising access to professional environments. For first-generation...

Our #DravidianModel Government's #MudhalvarPadaippagam initiative is democratising access to professional environments. For first-generation graduates, freelancers and the underprivileged, this is not just a space. It is #SocialJustice in action. We will soon open more Mudhalvar Padaippagams across Chennai and Tamil Nadu. https://t.co/fSBEFufoFI @htTweets @divyadcb

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1724
74
64,585 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 May
Employment & Skill Development

#நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன். #UPSC...

#நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன். #UPSC குடிமைப் பணித் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்கமாக @naan_mudhalvan அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது. கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகத் தயாராகி, எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள். @Udhaystalin

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
2058
104
38,054 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 May
Urban Development

பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின்...

பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. இதனால் கடனுக்கான வட்டி செலுத்துவது குறைந்து, மழைநீர் வடிகால் உள்ளிட்ட இன்றியமையாத உட்கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி திரட்டப்படும்! மாநகராட்சியின் நிதிநிலை மேம்படும்! Tamil Nadu under the #DravidianModel continues to redefine responsible financial governance. The listing of Greater Chennai Corporation bonds on the NSE is a strategic step to fund vital stormwater drain infrastructure, strengthen urban finances and reduce the fiscal burden through transparent and innovative financial management. @chennaicorp @NSEIndia @kgbias

Urban Development
𝕏 X
1 yr ago
2172
106
49,100 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Federalism & Centre–State Relations

டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்! ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று...

டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்! ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை! டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது! #NITIAayog #LetterToBrethren (1/2)

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4060
459
372,632 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Party & Elections

#PahalgamTerroristAttack-இன் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்! நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல...

#PahalgamTerroristAttack-இன் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்! நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என #NITIAayog கூட்டத்தில் உரையாற்றினேன்! தமிழ்நாட்டின் நலன் காத்திடவும் - மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் #களம்2026-க்கு ஆயத்தமாக ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களைச் சந்திக்க நான் ரெடியாகிவிட்டேன்… நீங்கள்? #LetterToBrethren (2/2)

Party & Elections
𝕏 X
1 yr ago
869
50
43,797 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Governance & Administration

What does a day in my life look like? @TheWeekLive came along to find out. @LakhiNathan Watch here: https://t.co/II18bgL0CN

What does a day in my life look like? @TheWeekLive came along to find out. @LakhiNathan Watch here: https://t.co/II18bgL0CN

Governance & Administration
𝕏 X
1 yr ago
1830
110
88,522 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Federalism & Centre–State Relations

During the #NITIAayog meeting, met our Hon’ble Prime Minister @narendramodi and submitted a memorandum detailing key priorities for Tamil Nadu’s...

During the #NITIAayog meeting, met our Hon’ble Prime Minister @narendramodi and submitted a memorandum detailing key priorities for Tamil Nadu’s development and social justice: 🚇 Approval for Coimbatore & Madurai #Metro 🚉 Transfer of Chennai #MRTS to @cmrlofficial 🛣️ Upgrade NH32 (Chengalpattu–Tindivanam) to 6/8 lanes ✈️ Expansion of Coimbatore & Madurai Airports 🏥 Establishment of an #AIIMS in Coimbatore 👩‍🏫 Release of funds under #SSA 📝 Change in nomenclature of certain communities in SC/ST List (‘N’/‘A’ to ‘R’) 🔷 Inclusion of SC-converted Christians in SC list ⚓ Safeguarding fishermen’s rights & expediting release of detainees We hope the Hon’ble Prime Minister will consider these proposals with due urgency, in the true spirit of cooperative federalism.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3246
178
144,693 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Federalism & Centre–State Relations

💷 At the #NITIAayog meeting, I demanded a rightful 50 percent share for States in central taxes. We currently receive only 33.16 percent against...

💷 At the #NITIAayog meeting, I demanded a rightful 50 percent share for States in central taxes. We currently receive only 33.16 percent against the promised 41. 🌆 On the lines of #AMRUT 2.0, I stressed the need for a dedicated urban transformation mission, as Tamil Nadu is the most urbanised state in India. ♒ I also urged a #CleanGanga-style project for Cauvery, Vaigai and Thamirabarani, with names in English for national coherence and regional pride.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2728
173
122,783 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Party & Elections

There’s a special warmth in every meeting with Madam Tmt. Sonia Gandhi and dear brother @RahulGandhi at their Delhi residence. It never feels...

There’s a special warmth in every meeting with Madam Tmt. Sonia Gandhi and dear brother @RahulGandhi at their Delhi residence. It never feels like a visit; it truly feels like being with family. @INCIndia https://t.co/ezjes3iyhm

Party & Elections
𝕏 X
1 yr ago
6391
239
110,994 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Education

கல்வியே காவல் என மாணவர்களைக் கல்லூரிகளுக்கு அழைத்துவர முயற்சிக்கும் காவல்துறையினருக்குப் பாராட்டுகள்!

கல்வியே காவல் என மாணவர்களைக் கல்லூரிகளுக்கு அழைத்துவர முயற்சிக்கும் காவல்துறையினருக்குப் பாராட்டுகள்!

Education
𝕏 X
1 yr ago
3409
97
83,030 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Federalism & Centre–State Relations

Dear brother, appreciate your voice in defending the rights of States and the federal spirit of our #INDIA.

Dear brother, appreciate your voice in defending the rights of States and the federal spirit of our #INDIA.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
8233
164
156,024 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Women & Child Welfare

பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலையில் புதிய தோழி விடுதிக் கட்டடங்கள் திறப்பு, சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர்,...

பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலையில் புதிய தோழி விடுதிக் கட்டடங்கள் திறப்பு, சென்னை – தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய 14 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட அடிக்கல், பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல் -என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
1738
99
36,187 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்! சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள்...

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்! சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? "பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்! இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5680
812
542,375 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41