DMKSocial

The Feed, page 64

Showing 1,261–1,280 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Party & Elections

தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை #ஓரணியில்_தமிழ்நாடு...

தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை #ஓரணியில்_தமிழ்நாடு என @arivalayam-இல் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்! #களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்! #OraniyilTamilNadu

Party & Elections
𝕏 X
1 yr ago
2282
169
56,902 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Social Justice & Reservation

உள்ளம் உவகையில் நிறைகிறது💕💕💕 தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப்...

உள்ளம் உவகையில் நிறைகிறது💕💕💕 தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் - அதன் செயலாளர் @nrelango_dmk அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2652
45
65,018 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Federalism & Centre–State Relations

🛑 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே...

🛑 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. 🛑 ஒன்றிய பா.ஜ.க. அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. 🛑 அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. 🛑 இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களும், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது. 🛑 1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். 🛑 தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே! 🛑 பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். 🛑 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். 🛑 அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் #ஓரணியில்_தமிழ்நாடு அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
808
53
28,556 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Federalism & Centre–State Relations

The #Census delay is no accident. The #delimitation plan is no coincidence. The danger I warned of is at our doorstep. #FairDelimitation...

The #Census delay is no accident. The #delimitation plan is no coincidence. The danger I warned of is at our doorstep. #FairDelimitation #OraniyilTamilNadu 🛑 There is a sinister design in how the BJP-led Union Government is implementing the national Census and the subsequent #delimitation. Developed states, especially in the non-Hindi speaking South, which followed population control norms, will now be punished. 🛑 Meanwhile, states that disregarded population control for decades are set to gain more seats in Parliament. This unfair shift skews the federal balance and rewards irresponsibility. 🛑 I had already warned about this design. Thiru @PChidambaram_IN has now explained in detail how this sleight of hand is unfolding. Time has come not just to be vigilant but to craft counter-strategies to safeguard the South’s voice. 🛑 The 2027 Census will form the basis for the next delimitation, replacing the 1971 data. This gives the Union BJP Government the means to restructure parliamentary representation to its advantage, at the cost of the southern states. 🛑 The Ministry of Home Affairs claims that the concerns of affected states will be addressed. But these are vague remarks. What is needed is a clear parliamentary commitment and a suitable constitutional amendment. 🛑 Just look at what happened after Article 370 was abrogated. The Union Government spoke of restoring statehood to Jammu and Kashmir. Elections were held. Assurances were given in the Supreme Court. Yet, Jammu and Kashmir remains a Union Territory. This is the track record of BJP we are dealing with. 🛑 If the Union Government proceeds with delimitation based on 2027 census, the democratic power of peninsular India will be reduced to irrelevance. 🛑 Even if betrayers like the ADMK choose to kneel before the BJP for their political survival, the people of Tamil Nadu led by the DMK will never allow our state to be punished for its progress. Tamil Nadu will fight! Tamil Nadu will win!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3696
192
97,231 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Environment & Climate

#WorldEnvironmentDay-ல் கிண்டியில் @Tnpcbofficial R&D மையத்திற்கு அடிக்கல் நாட்டி, 14 கடலோர மாவட்டங்களில் பயன்பாடற்ற மீன்பிடி வலை சேகரிப்பு மையம்...

#WorldEnvironmentDay-ல் கிண்டியில் @Tnpcbofficial R&D மையத்திற்கு அடிக்கல் நாட்டி, 14 கடலோர மாவட்டங்களில் பயன்பாடற்ற மீன்பிடி வலை சேகரிப்பு மையம் மற்றும் தனுஷ்கோடியில் #GreaterFlamingo பறவைகள் சரணாலயம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினேன்! Our #DravidianModel government's goal is not merely a #TrillionDollarEconomy but a green, sustainable one that future generations can thrive in.

Environment & Climate
𝕏 X
1 yr ago
1590
67
28,151 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Education

தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute! அவரது...

தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute! அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் #IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்.

Education
𝕏 X
1 yr ago
4079
127
93,542 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Culture & Heritage

#DravidianModel ஆட்சிப் பொறுப்பேற்று 1491 நாட்களில், தமிழ்நாட்டிலுள்ள 3000 திருக்கோயில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள்! #எல்லோருக்கும்_எல்லாம்...

#DravidianModel ஆட்சிப் பொறுப்பேற்று 1491 நாட்களில், தமிழ்நாட்டிலுள்ள 3000 திருக்கோயில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள்! #எல்லோருக்கும்_எல்லாம் எனும் நம் ஆட்சியை, பக்தர்கள் போற்றுகிறார்கள்! அற்பர்கள் கதறுகிறார்கள்! வாழ்த்துகள் @PKSekarbabu & @TNHRCEDept Team! https://t.co/CDZD1SQFKb

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1618
99
40,376 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Culture & Heritage

எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப்...

எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் - இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர் - தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர் - தலைவர் கலைஞரின்மீது அன்பைப் பொழிந்தவர் - 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணைநின்றவர் - நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள்! திரு. #காயிதே_மில்லத் அவர்கள் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1931
69
44,524 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Federalism & Centre–State Relations

The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making...

The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation. I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination. The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government. 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்! #OraniyilTamilNadu #FairDelimitation #JusticeForTamilNadu

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5381
549
246,360 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Environment & Climate

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பூங்காவாக, செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உருவாகிறது எழில்கொஞ்சும் பல்லுயிர்ப் பூங்கா! இன்றைய பார்வையில், சங்க...

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பூங்காவாக, செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உருவாகிறது எழில்கொஞ்சும் பல்லுயிர்ப் பூங்கா! இன்றைய பார்வையில், சங்க இலக்கியங்கள் சொல்லும் ஐந்திணைப் பூங்கா! இன்று நான் VR-இல் கண்டவற்றை, தமிழ்நாட்டு மக்கள் நேரில் காண விரைந்து உருவாக்கிடுங்கள் @RRajakannappan @TThenarasu @supriyasahuias! #BiodiversityPark

Environment & Climate
𝕏 X
1 yr ago
2377
83
90,883 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Industry & Investment

Inaugurated Agile Robots SE’s AI-driven robotics plant at Irungattukottai SIPCOT and SOL’s air separation facility at Ranipet SIPCOT today,...

Inaugurated Agile Robots SE’s AI-driven robotics plant at Irungattukottai SIPCOT and SOL’s air separation facility at Ranipet SIPCOT today, attracting Rs. 475 crore investment and creating jobs for our youth. Tamil Nadu is the only state where manufacturing contributes 25% to GSDP. The #DravidianModel is where political will meets focused execution, propelling manufacturing-led growth. Even national editorials now urge others to look up to Tamil Nadu. (https://t.co/12fVQonD9D) @timesofindia @TRBRajaa @Guidance_TN

Industry & Investment
𝕏 X
1 yr ago
1820
85
48,991 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Culture & Heritage

ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம்...

ஸ்பெயின் மண்ணில், “இந்தியாவின் தேசிய மொழி #UnityInDiversity” என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை @KanimozhiDMK MP அவர்களை வாழ்த்தினேன்! இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
4609
162
144,182 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Party & Elections

பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது #திமுகபொதுக்குழு2025! #கலைஞர்102-ஐச் #செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து,...

பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது #திமுகபொதுக்குழு2025! #கலைஞர்102-ஐச் #செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, #ஓரணியில்_தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்! தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! #களம்2026-இல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
1 yr ago
1844
117
44,974 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Urban Development

ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது! யாரோ...

ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது! யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது. விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!

Urban Development
𝕏 X
1 yr ago
2130
94
60,595 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jun
Law & Order / Justice

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை! விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய...

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை! விசாரணையின் போது, உயர்நீதிமன்றமே பாராட்டிய வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்தே மாதத்தில் நடத்தி முடித்து, குற்றவாளிக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறோம். தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக மகளிர் நீதிமன்றமும் முன்வந்து பாராட்டி இருக்கிறது. இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் நாம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்துக்கு ஏற்ப, இவ்வழக்கில் remission உள்ளிட்ட எந்தச் சலுகையும் இல்லாமல் கடுங்காவல் தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றிகூறி வரவேற்கிறேன்.

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
2711
264
167,860 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Party & Elections

#திமுகபொதுக்குழு2025-இல், கழக நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டவை: 💪 இனமான உணர்வு கொண்ட தன்னலமற்ற தொண்டர்களால் உருவான இயக்கம், திராவிட முன்னேற்றக்...

#திமுகபொதுக்குழு2025-இல், கழக நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டவை: 💪 இனமான உணர்வு கொண்ட தன்னலமற்ற தொண்டர்களால் உருவான இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம்! 🛡️ கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று தமிழ்நாட்டைக் காத்து - வளர்த்தெடுப்பதால்தான் மக்களின் பேராதரவோடு நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடுகிறோம்! 🤝 #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கழகப் பட்டாளத்தில் இளரத்தம் பாய்ச்சி, கழக உறுப்பினர்களைப் பன்மடங்காக்குவோம்! ❌ பதவி வெறியில் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக்கொடுத்து, சொந்தக் கட்சியை பா.ஜ.க.,விடம் அடமானம் வைத்துவிட்ட திரு.பழனிசாமி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அடமானம் வைக்கத் துடிக்கிறார்! 🌅 எல்லோர்க்கும் எல்லாம் எனப் பார்த்துப் பார்த்துத் திட்டங்கள் தீட்டி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் #DravidianModel அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்த்து, #களம்2026-இல் வெற்றி காண்போம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2644
130
42,933 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Party & Elections

#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை🖤♥️ https://t.co/nMkKzVkCGN

#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை🖤♥️ https://t.co/nMkKzVkCGN

Party & Elections
𝕏 X
1 yr ago
3126
231
91,585 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Federalism & Centre–State Relations

Glad to note that @FinMinIndia has responded to the concerns raised by me in my letter to the Hon'ble Union Finance Minister regarding @RBI’s...

Glad to note that @FinMinIndia has responded to the concerns raised by me in my letter to the Hon'ble Union Finance Minister regarding @RBI’s draft guidelines on gold loans. Protecting the interests of small borrowers, especially those seeking loans below Rs. 2 lakh such as farmers and daily earners and ensuring timely and accessible credit has been my consistent demand. While appreciating the positive consideration given to this issue, we emphasize that such policies having significant impact on poor should be arrived after due prior consultation with States.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1608
70
65,891 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Party & Elections

பொதுக்குழு உறுப்பினர்களின் மனந்திறந்த கருத்துகள், இந்திய அரசியலையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் தீர்மானங்கள் எனப் பல சீரிய...

பொதுக்குழு உறுப்பினர்களின் மனந்திறந்த கருத்துகள், இந்திய அரசியலையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் தீர்மானங்கள் எனப் பல சீரிய நிகழ்வுகளோடு கழகப் பொதுக்குழு கூடல் மாநகரில் கூடவுள்ளது. நாம் என்ன செய்ய வேண்டும்? நம் கடமை என்ன? நம் இலக்கு எது? என்பதை இறுதிசெய்வோம்! 2026-இல் கழகத்தின் வெற்றியை, தமிழ்நாட்டில் #DravidianModel நல்லாட்சி தொடர்வதை உறுதிசெய்வோம்! மதுரையில் சந்திப்போம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
1 yr ago
2023
180
45,507 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Culture & Heritage

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி!...

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி! தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் - இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ்வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்! @mp_saminathan

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1517
64
24,364 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41