வளம் கொழித்து வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு செழிக்க - 🌾 இந்த ஆண்டு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு 82 கோடியே 77 லட்சம் ரூபாய்...
வளம் கொழித்து வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு செழிக்க -
🌾 இந்த ஆண்டு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு 82 கோடியே 77 லட்சம் ரூபாய் மற்றும் -
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக டெல்டா அல்லாத மற்ற மாவட்ட உழவர் பெருமக்களும் பயனடைய 132 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கார் - குறுவை - சொர்ணவாரி பருவத்துக்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளேன்.
அதோடு,
🔹325 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் 2461 முடிவுற்ற பணிகள் திறப்பு,
🔷 309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்,
🔷 2,25,383 பயனாளிகளுக்கு 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என,
தஞ்சை மக்களின் மனம் நிறைய அமைந்தது டெல்டா பயணம்!