DMKSocial

The Feed, page 61

Showing 1,201–1,220 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Health

எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள்...

எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் #NationalDoctorsDay2025 வாழ்த்துகள்! தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கி மகிழ்கிறோம்!

Health
𝕏 X
1 yr ago
1750
131
59,161 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Governance & Administration

🚓 காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று...

🚓 காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்தபடி, முதல்நிலைக் காவலர்களுக்குத் தலைமைக் காவலர்களாகப் பதவிநிலை உயர்வு ஆணைகளை வழங்கி வாழ்த்தினேன். 🏥 நாட்டிலேயே சித்தா, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவப் பிரிவுகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு! இப்பணிகள் தொய்வின்றி நடைபெற, MRB மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்த உதவி மருத்துவ உதவி அலுவலர்கள் உள்ளிட்டோருக்குப் பணியாணைகளை வழங்கினேன்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
1485
117
36,062 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Law & Order / Justice

குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான...

குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் #DravidianModel அரசு திகழ்ந்து வருகிறது. "போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
3651
630
249,991 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Transport & Infrastructure

தமிழ்நாட்டில் முதன்முறையாக, 📱அனைத்து இருக்கைகளிலும் #SeatBelt & Mobile Charging Unit 🚍 மழைக்காலத்தில் பேருந்தினுள் நீர் புகாத அமைப்பு ♿...

தமிழ்நாட்டில் முதன்முறையாக, 📱அனைத்து இருக்கைகளிலும் #SeatBelt & Mobile Charging Unit 🚍 மழைக்காலத்தில் பேருந்தினுள் நீர் புகாத அமைப்பு ♿ மாற்றுத்திறனாளிகளுக்காகத் தரைவரை கீழிறங்கும் படிக்கட்டுகள் 🚏 LED திரை, தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட பல வசதிகளுடன் இன்று முதல் சென்னை சாலைகளில் வலம் வரவுள்ள @MtcChennai-இன் புதிய மின் பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்! #DravidianModel @sivasankar1ss

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
3750
227
113,715 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Culture & Heritage

The way of life detailed in Sangam literature now stands scientifically validated through the findings at #Keeladi. Thanks to @timesofindia for...

The way of life detailed in Sangam literature now stands scientifically validated through the findings at #Keeladi. Thanks to @timesofindia for this extensive coverage on #Keezhadi. சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் #கீழடி-யில்! @toi_Arunram

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3591
159
125,522 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Federalism & Centre–State Relations

🛑 நாளும் இந்திமொழித் திணிப்பு 🙅🏾‍♂ 🛑 கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு 🙅🏾‍♂ 🛑 தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு 🙅🏾‍♂ 🛑 #NEET...

🛑 நாளும் இந்திமொழித் திணிப்பு 🙅🏾‍♂ 🛑 கீழடியில் தமிழர் தொன்மை மறைப்பு 🙅🏾‍♂ 🛑 தமிழ்நாட்டுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நிதி மறுப்பு 🙅🏾‍♂ 🛑 #NEET எனும் பலிபீடம் கொண்டு மாணவர்கள் உயிர் பறிப்பு 🙅🏾‍♂ 🛑 #Delimitation மூலம் தமிழ்நாட்டின் அரசியல் வலிமை குறைப்பு 🙅🏾‍♂ இப்படி தமிழர்களைத் தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் தமிழினப் பகைவர்களுக்கும், துணைபோகும் துரோகிகளுக்கும் எதிராக #ஓரணியில்_தமிழ்நாடு! ஜூலை 1 முதல் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் நம் மண், மொழி, மானம் காக்க ஒன்றிணைக்கும் #OraniyilTamilNadu முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிடக் கழகத்தினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கினேன். இது வெறுமனே உறுப்பினர் சேர்க்கைப் பணி அல்ல, நம் உரிமைகளுக்கான ஒன்றுதிரட்டல்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
4106
381
128,248 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Party & Elections

முதலமைச்சராக மக்களைச் சந்திப்பதைப் போலவே, கழகத் தலைவராக #உடன்பிறப்பே_வா எனத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறேன். அதைக்கூட சில ஏடுகளால்...

முதலமைச்சராக மக்களைச் சந்திப்பதைப் போலவே, கழகத் தலைவராக #உடன்பிறப்பே_வா எனத் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கிறேன். அதைக்கூட சில ஏடுகளால் பொறுத்துக்கொள்ள இயலாமல் பெருங்குற்றம் போல சித்தரிக்கின்றனர். இத்தகைய அவதூறுகளை எல்லாம் கடந்துதானே 75 ஆண்டுகளாக இத்தனை சாதனைகளைப் படைத்திருக்கிறோம்! அதுதான் சிலரது காழ்ப்புணர்வுக்குக் காரணமாகி இருக்கிறது. அதனைப் புறந்தள்ளி நமது பணியைத் தொடர்வோம்! தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைத்துச் செல்லும் கழகத்தின் பாதை தெளிவானது. உடன்பிறப்பே வா! உன்னால் உருவாகும் #ஓரணியில்_தமிழ்நாடு! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
1 yr ago
2032
169
44,466 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Education

கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் @tnhrcedept சார்பில்...

கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் @tnhrcedept சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட பணிகளைத் திறந்து வைத்தேன். முதல்வரின் கல்விச்சோலை வகுப்பறைகள், #SmartClasrooms, ஆய்வகங்களையும் பார்வையிட்டு மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். கல்விக்கூடங்களை அறிவுக்கோயில்கள் எனப் போற்றி மேம்படுத்துவோம்! @PKSekarbabu

Education
𝕏 X
1 yr ago
1803
90
31,748 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Culture & Heritage

புதினம் - நாடகம் - சிறுகதை - திரைக்கதை - வசனம் - தொல்காப்பியப் பூங்கா - குறளுரை - சங்கத்தமிழ் - உரைநடை - கடிதம் - தன்வரலாறு என இலக்கியத்தின்...

புதினம் - நாடகம் - சிறுகதை - திரைக்கதை - வசனம் - தொல்காப்பியப் பூங்கா - குறளுரை - சங்கத்தமிழ் - உரைநடை - கடிதம் - தன்வரலாறு என இலக்கியத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வெற்றி கண்ட முத்தமிழ் வித்தகர், தலைவர் கலைஞர்! கலைஞர் நூற்றாண்டையொட்டி, @sahityaakademi - #JNU தமிழ்த்துறை இணைந்து நடத்தும் இருநாள் கருத்தரங்கம், கலைஞரின் இலக்கிய நுட்பத்தையும் அதில் பொதிந்துள்ள அரசியலின் ஆழத்தையும் இளம்தலைமுறையினருக்கு வெளிச்சமிட்டுக் காட்டட்டும்! #கலைஞர்100 #Kalaignar100

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1776
132
30,407 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Governance & Administration

517 கோடி ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளைத் திறந்து, 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு...

517 கோடி ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளைத் திறந்து, 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தீரா மகிழ்ச்சியுடன் திருப்பத்தூரில் இருந்து திரும்புகிறேன்… #MissedCall உறுப்பினர் சேர்க்கை நடத்தியும் வார்டுக்கு ஒத்த ஓட்டு என ஆபத்தில் தத்தளிக்கும் கட்சியினர், மதத்துக்கு ஆபத்து என மரு ஒட்டிக்கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா? 3000 கோயில்களுக்குக் குடமுழுக்கு, 7000 கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்பு, தேவாலயங்கள் – மசூதிகள் புனரமைப்பு என அனைத்து பக்தர்களிடமும் score செய்துள்ளது #DravidianModel ஆட்சி! பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் தமிழர்விரோதக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது.

Governance & Administration
𝕏 X
1 yr ago
2287
149
48,800 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Rural Development

கனவுகளை நனவாக்கி, எல்லோருக்கும் எல்லாம் என எல்லோரது மனங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதே #DravidianModel! #கலைஞர்_கனவு_இல்லம்💗 https://t.co/avS8XSh7GD

கனவுகளை நனவாக்கி, எல்லோருக்கும் எல்லாம் என எல்லோரது மனங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதே #DravidianModel! #கலைஞர்_கனவு_இல்லம்💗 https://t.co/avS8XSh7GD

Rural Development
𝕏 X
1 yr ago
2642
137
62,251 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Welfare Schemes

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 21,766 பேருக்கு வீட்டுமனைப் பட்டா...

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் 21,766 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்! வேலூர் மாவட்டத்தின் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்திடும் வகையில், அடிக்கல் நாட்டிய இரண்டாண்டுகளுக்குள் கட்டப்பட்டு, தற்போது புறநோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு, விரைவில் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை முழுமையாகச் செயல்படவுள்ளது. மேலும், 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளேன்.

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1618
59
26,786 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Transport & Infrastructure

இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில்...

இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது. மாண்புமிகு பிரதமர் @narendramodi மற்றும் மாண்புமிகு @AshwiniVaishnaw அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! The Indian Railway isn’t just a service - it’s family! #RailFareHike

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
3267
266
217,000 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Social Justice & Reservation

Let us remember and revere Thiru. #VPSingh, the sentinel of #SocialJustice, who dared to raise its radiant light against the entrenched darkness...

Let us remember and revere Thiru. #VPSingh, the sentinel of #SocialJustice, who dared to raise its radiant light against the entrenched darkness of caste tyranny across Indian soil. His legacy is our mandate. Remember this, young minds: to twist the history of resistance is to invite servitude once again. இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! #HBDVPSINGH

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
3379
100
58,146 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Agriculture & Farmer Welfare

🥭 மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் - 🥭...

🥭 மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் - 🥭 மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட #FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிடவும் - 🥭 மாம்பழக் கூழுக்கான #GST-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும் - 🥭 பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்தவும் வலியுறுத்தி - மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi மற்றும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. @ChouhanShivraj ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
2601
188
156,503 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Federalism & Centre–State Relations

Sanskrit gets the crores; Tamil and other South Indian languages get nothing but crocodile tears. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம்...

Sanskrit gets the crores; Tamil and other South Indian languages get nothing but crocodile tears. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
6944
746
822,857 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Education

Yet another case that proves NEET isn’t about merit; it’s only about the market. That’s why we’re saying it loud and clear, #NEETisnotNEAT, and...

Yet another case that proves NEET isn’t about merit; it’s only about the market. That’s why we’re saying it loud and clear, #NEETisnotNEAT, and we have every reason to. தரம், தரம் என்றார்கள்! #NEET தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS - BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!

Education
𝕏 X
1 yr ago
3967
212
197,392 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jun
Governance & Administration

அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் இவர்கள் கனிவுடன் மக்களை அணுகிச் சேவையாற்றிட வாழ்த்துகிறேன்! https://t.co/zNLB1cxtkj

அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் இவர்கள் கனிவுடன் மக்களை அணுகிச் சேவையாற்றிட வாழ்த்துகிறேன்! https://t.co/zNLB1cxtkj

Governance & Administration
𝕏 X
1 yr ago
2584
95
38,823 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jun
Education

வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும்...

வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!

Education
𝕏 X
1 yr ago
2307
71
65,462 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jun
Culture & Heritage

பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! "சமத்துவம் மட்டுமே இங்கு ஆகமம்" என...

பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! "சமத்துவம் மட்டுமே இங்கு ஆகமம்" என முத்தமிழிறிஞர் கட்டுவித்த கலைக்கோயிலில், அவர் தனது சொந்தப் பிள்ளைகளாகக் கருதிய மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகள் பொழிந்த அன்பால் நெகிழ்ந்தது மனம்...

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3042
126
48,607 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41