DMKSocial

The Feed, page 60

Showing 1,181–1,200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Disaster Response & Relief

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த...

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் @MRKPanneer மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
1652
109
83,801 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Welfare Schemes

விழுப்புரம், திருப்பூர், சேலம், தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகள்...

விழுப்புரம், திருப்பூர், சேலம், தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகள் திறப்பு வருவாய்த் துறை சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம், 4 வட்டாட்சியர் மற்றும் 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் திறப்பு சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறும் திட்டத்தால் பயன்பெற்ற மக்களுக்குக் கட்டுமான அனுமதி வழங்குதல் என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு…

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1523
75
24,569 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Urban Development

அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்புக் கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச் சாளர...

அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்புக் கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதிகளைப் பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தைக் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தேன்! ஒரு இலட்சம் நடுத்தரக் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ள இத்திட்டம் ஒரு #gamechanger என #CREDAI தமிழ்நாடு தெரிவித்துள்ள பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது! மக்களை மையப்படுத்தியே நமது #DravidianModel ஆட்சி நிர்வாகம் இயங்கும்!

Urban Development
𝕏 X
1 yr ago
1595
48
38,538 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Governance & Administration

நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம்...

நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன். அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! "அதுதான் #DravidianModel" என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்!

Governance & Administration
𝕏 X
1 yr ago
2359
148
76,717 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Social Justice & Reservation

கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம் - நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான...

கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம் - நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார் அவர்கள்! அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்! அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தினைத் திறந்து வைத்து, இரட்டைமலையாரைக் கொண்டாடிய நமது #DravidianModel அரசு என்றும் அவர் ஏற்றிய உரிமைச் சுடரை அணையாமல் பாதுகாக்கும்! #RettaimalaiSrinivasan

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1612
72
30,418 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Social Justice & Reservation

பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...

பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்! #SocialJustice #DravidianModel

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
3499
365
231,782 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Federalism & Centre–State Relations

இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக்...

இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் #UddhavThackeray அவர்கள் தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது. "உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் திரு. #RajThackeray அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல! இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்! ஒன்றிணைவோம் வா! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
5306
462
293,912 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Culture & Heritage

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் காலந்தொட்டே சமூக நல்லிணக்கத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வரும் சிந்தனையாளர் - இந்திய...

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் காலந்தொட்டே சமூக நல்லிணக்கத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வரும் சிந்தனையாளர் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் - பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான #தகைசால்_தமிழர் விருதினை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது நம் #DravidianModel அரசு!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2039
121
48,163 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Environment & Climate

#GreenTNMission மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 இலட்சம் அலையாத்தித் தாவரங்களை நட்டு 707 ஹெக்டேர் அலையாத்திப் பரப்பை மீட்டுள்ளோம்! திருவாரூர்...

#GreenTNMission மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 இலட்சம் அலையாத்தித் தாவரங்களை நட்டு 707 ஹெக்டேர் அலையாத்திப் பரப்பை மீட்டுள்ளோம்! திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது நமது #DravidianModel அரசு... அதன் எழில்கொஞ்சும் பசுமைக் காட்சிகள் இதோ!

Environment & Climate
𝕏 X
1 yr ago
3032
106
76,064 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Urban Development

#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை...

#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள #CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான - சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்!

Urban Development
𝕏 X
1 yr ago
2108
124
56,187 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Agriculture & Farmer Welfare

ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தையும் பெருக்கும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்,...

ஊட்டச்சத்து வழங்கும் விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, உழவர்களின் வருமானத்தையும் பெருக்கும் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம், பயனாளிகளுக்கு விதைத் தொகுப்புகள் வழங்குதல், 52 வேளாண் கட்டடங்கள் திறப்பு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 52 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியைத் திறந்து வைத்து, இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் பணியாளர்கள் 6 பேருக்குப் அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு ஆணைகள் வழங்குதல், கால்நடைப் பராமரிப்புத் துறைக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல், என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு… @MRKPanneer @PKSekarbabu @ARROffice

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1468
77
26,966 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Party & Elections

தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத்...

தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் @tup_dineshkumar அவர்கள், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, “தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, #DravidianModel ஆட்சி தொடர்ந்திட வேண்டும்” என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்! தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!

Party & Elections
𝕏 X
1 yr ago
4172
498
260,387 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Culture & Heritage

முத்தமிழறிஞர் கலைஞரின் அரசு அளித்த இடத்தில் 5 இலட்சம் அரிய ஆவணங்களுடன் செயல்பட்டு வரும் @rmrlchennai பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து...

முத்தமிழறிஞர் கலைஞரின் அரசு அளித்த இடத்தில் 5 இலட்சம் அரிய ஆவணங்களுடன் செயல்பட்டு வரும் @rmrlchennai பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து பார்போற்றும் பங்களிப்பினைத் தமிழ் அறிவுலகத்துக்குச் செய்து வருகிறது. இது மேலும் சிறப்புற, நமது #DravidianModel அரசால் 30 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டு, தரமணியில் 40 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினேன். பெயருக்கேற்ற பெரும்பணியை இவ்வளாகம் ஆற்றும்; தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றின் அறிவுக்களஞ்சியமாகத் திகழும்! #TamilKnowledgeCampus

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1690
75
33,296 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Health

📃 7.5.2022 அன்று சட்டமன்றத்தில், 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றேன். 🏥...

📃 7.5.2022 அன்று சட்டமன்றத்தில், 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றேன். 🏥 6.6.2023 அன்று, முதற்கட்டமாக, 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. இன்று இரண்டாம்கட்டமாக, 🩺 ரூ.52 கோடி செலவில் புதியதாக 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ⛑ ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 28 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 22 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறந்து வைத்தேன். 🎯 பத்தாண்டுகளில் அனைவருக்கும் உயர்தரக் கல்வி & உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கில் வெற்றி நிச்சயம்! #DravidianModel @Subramanian_ma @KN_NEHRU

Health
𝕏 X
1 yr ago
1561
85
29,355 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Party & Elections

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச்...

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, சாதி - மதம் - அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்! #OraniyilTamilNadu

Party & Elections
𝕏 X
1 yr ago
2807
368
71,741 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Education

#ZeroDropouts - 100% #GER-ஐ நோக்கி... #DravidianModel

#ZeroDropouts - 100% #GER-ஐ நோக்கி... #DravidianModel

Education
𝕏 X
1 yr ago
2502
90
81,506 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Culture & Heritage

நமது #DravidianModel ஆட்சியில் @tnhrcedept சார்பில் செய்யப்பட்ட குடமுழுக்குகள், மீட்கப்பட்ட கோயில் சொத்துகள், சீரமைக்கப்பட்ட பழங்காலக் கோயில்கள்,...

நமது #DravidianModel ஆட்சியில் @tnhrcedept சார்பில் செய்யப்பட்ட குடமுழுக்குகள், மீட்கப்பட்ட கோயில் சொத்துகள், சீரமைக்கப்பட்ட பழங்காலக் கோயில்கள், நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள் என எல்லாமே ஆயிரங்களில்தான் இருக்கும்! அந்த வரிசையில் இன்று மட்டுமே 576 இணையர்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மொத்தம் 2,376 திருமணங்களை நடத்தி, பக்தர்கள் போற்றும் அரசை நடத்தி வருகிறோம்! @PKSekarbabu

Culture & Heritage
𝕏 X
1 yr ago
2053
122
44,956 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Law & Order / Justice

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது....

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை #CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். #CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்! “Justice must not only be done, but must also be seen to be done”

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
5216
464
423,882 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Law & Order / Justice

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு...

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு! கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! https://t.co/YhECfZx6v9

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
5736
636
1,065,927 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Employment & Skill Development

#Success = #NaanMudhalvan இதன் அடுத்த பாய்ச்சலான, #வெற்றி_நிச்சயம் திட்டத்தால், வாய்ப்புகளை இழந்த 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களின்...

#Success = #NaanMudhalvan இதன் அடுத்த பாய்ச்சலான, #வெற்றி_நிச்சயம் திட்டத்தால், வாய்ப்புகளை இழந்த 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான கதவுகளைத் திறக்கிறோம்! “#நான்_முதல்வன்” என்று நீங்கள் ஆளுமைகளாக அமரும் ஒவ்வொரு தருணத்திலும், நான் முதல்வராக என் மக்களுக்கு இந்தத் திட்டத்தை உருவாக்கினேன் எனப் பெருமை கொள்கிறேன்! @naan_mudhalvan @Udhaystalin

Employment & Skill Development
𝕏 X
1 yr ago
1959
127
51,974 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41