DMKSocial

The Feed, page 57

Showing 1,121–1,140 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Health

உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு! அதனால்தான், துணை முதலமைச்சராக...

உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு! அதனால்தான், துணை முதலமைச்சராக இருந்தபோது, எனது உடலுறுப்புகளைக் கொடையளித்தேன்; முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், உடலுறுப்புகளைக் கொடையளிப்போருக்கு அரசு மரியாதையுடன் விடை கொடுக்கப்படும் என்று அறிவித்தேன். 2023 செப்டம்பர் 23-இல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது முதல், இதுவரையில் 479 பேர் (கடந்த ஆண்டு மட்டும் 268 பேர்) தங்களது உடலுறுப்புகளை ஈந்து, பல நூறு உயிர்களை வாழ வைத்திருக்கிறார்கள்! அவர்களுக்கு எனது வணக்கம்! #OrganDonation-இல் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு!

Health
𝕏 X
1 yr ago
3246
143
112,070 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Governance & Administration

#உங்களுடன்_ஸ்டாலின் #UngaludanStalin

#உங்களுடன்_ஸ்டாலின் #UngaludanStalin

Governance & Administration
𝕏 X
1 yr ago
1824
121
75,805 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

சாலை விபத்தில் இறக்கும் கழக உறுப்பினர்களது வாரிசுகளுக்கு 21 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்...

சாலை விபத்தில் இறக்கும் கழக உறுப்பினர்களது வாரிசுகளுக்கு 21 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர்களது குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக் கழகப் பொதுக்குழுவில் (01-06-2025) அறிவித்தோம். அதன்படி, திண்டிவனம் - இறையனூர் திருமிகு. சரிதா அவர்களது குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கினோம். சாலைகளில் பயணிக்கும்போது, சாலை விதிகளை மதித்து, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து உங்களது உயிரை - குடும்பத்தின் எதிர்காலத்தையும் காக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!

Party & Elections
𝕏 X
1 yr ago
1534
66
27,229 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Party & Elections

தமிழ்நாட்டின் வலிமையாக - கழகத்தின் தூணாக - எனக்குத் துணையாகக் களம் நிற்கும் கழக நிர்வாகிகளுடன் #உடன்பிறப்பே_வா எனக் கலந்தாலோசித்தேன்!...

தமிழ்நாட்டின் வலிமையாக - கழகத்தின் தூணாக - எனக்குத் துணையாகக் களம் நிற்கும் கழக நிர்வாகிகளுடன் #உடன்பிறப்பே_வா எனக் கலந்தாலோசித்தேன்! https://t.co/VwveyhDb96

Party & Elections
𝕏 X
1 yr ago
2637
83
35,130 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Health

அறிவை வளமாக்கும் கல்வியும் - உடலை நலமாக்கும் மருத்துவத்தையும் இருகண்களெனப் பார்த்துப் பார்த்து, திட்டங்கள் செய்து தருகிறோம்! இன்று உதித்துள்ள...

அறிவை வளமாக்கும் கல்வியும் - உடலை நலமாக்கும் மருத்துவத்தையும் இருகண்களெனப் பார்த்துப் பார்த்து, திட்டங்கள் செய்து தருகிறோம்! இன்று உதித்துள்ள #நலம்_காக்கும்_ஸ்டாலின் திட்ட முகாம்களில் உங்கள் உடல்நலனைப் பரிசோதித்து, தரமான மருத்துவத்தால் நலமாக வாழ விழைகிறேன்! https://t.co/2eDTDeMICE

Health
𝕏 X
1 yr ago
2828
338
63,053 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Health

#நலம்_காக்கும்_ஸ்டாலின் https://t.co/TVwSObYpfU

#நலம்_காக்கும்_ஸ்டாலின் https://t.co/TVwSObYpfU

Health
𝕏 X
1 yr ago
2099
122
40,749 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Social Justice & Reservation

From humble beginnings to India’s premier institutions, Tamil Nadu’s students stand as compelling proof that #SocialJustice in education...

From humble beginnings to India’s premier institutions, Tamil Nadu’s students stand as compelling proof that #SocialJustice in education transforms futures. Read about the journey behind this quiet revolution here: #DravidianModel 🔗: https://t.co/vhK12l6bRO https://t.co/fzpEvcpK4Y

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1551
73
54,670 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Urban Development

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌆 திருவண்ணாமலையில் IT வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 'Mini #TIDEL Park' அமைக்க...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌆 திருவண்ணாமலையில் IT வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 'Mini #TIDEL Park' அமைக்க அடிக்கல், 🏖️ குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை #HotelTamilNadu வளாகம் ஆகியவற்றில் முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 புதிய நிருவாகக் கட்டடம் திறப்பு, 🏞️ #CMDA சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 #முதல்வர்_படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல், 🏭 தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளனத்தின் விருதுபெற்ற தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வாழ்த்து மற்றும் கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாபப் பங்கீட்டு ஈவுத்தொகையாக ரூ. 22.60 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்குதல், மற்றும் ♻️ திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடத் #தூய்மை_தமிழ்நாடு நிறுவனம் - IIT(M) இடையே MoU. @Udhaystalin @TRBRajaa @PKSekarbabu @SalemRRajendran @Avadi_Nasar

Urban Development
𝕏 X
1 yr ago
1602
100
30,988 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
International & Diaspora

அயலகத்தில் கிளை பரப்பிருந்தாலும், தாய்மண்ணில் தம் #வேர்களைத்_தேடி பயணிக்கும் 99 இளைஞர்களும் தமிழ்நாட்டின் #CulturalAmbassadors-ஆக நீங்கள் வாழும்...

அயலகத்தில் கிளை பரப்பிருந்தாலும், தாய்மண்ணில் தம் #வேர்களைத்_தேடி பயணிக்கும் 99 இளைஞர்களும் தமிழ்நாட்டின் #CulturalAmbassadors-ஆக நீங்கள் வாழும் நாட்டுக்குத் திரும்ப வாழ்த்துகிறேன்! https://t.co/rktEVUixTg

International & Diaspora
𝕏 X
1 yr ago
1838
75
43,271 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Health

#நலம்_காக்கும்_ஸ்டாலின் 🩺ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள...

#நலம்_காக்கும்_ஸ்டாலின் 🩺ஆகஸ்ட் 2 சென்னையில் தொடங்கி வைக்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் கலந்துகொள்ள வேண்டுகிறேன். 🏥 தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன... வாரந்தோறும் சனிக்கிழமைகளில்! 💉 முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள் SMS வாயிலாகப் பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும். 🩸🩻 Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனை முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளும் (Folders) வழங்கப்படும். 🤝 உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு!

Health
𝕏 X
1 yr ago
3323
268
230,779 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Law & Order / Justice

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 🚓 காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில்...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 🚓 காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள போதை மருந்து ஆய்வுப் பிரிவுகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தல், ⛓️‍💥 ரூ. 229.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மதுரை மத்திய சிறைச்சாலைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ⚧ திருநர்களின் உரிமைகள், பாதுகாப்பு & வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வடிவமைத்துள்ள 'தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025' வெளியிடுதல், 📜 வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தினைப் பிரித்துப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தல் மற்றும் 📃 மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டோருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல்.

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1378
64
21,072 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Social Justice & Reservation

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று...

நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய - துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் - கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன். கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித் தரும் என உயர்படிப்புகளுக்குச் சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்! இப்படி கல்வியால் - உழைப்பால் முன்னேறிச் சாதனை படைப்பவர்களைத்தான் தமிழ்ச்சமூகம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
3400
158
55,945 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Social Justice & Reservation

20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான்...

20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்! சமூகநீதிக்கான இந்த அரசியலையும் - போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்! #ReservationIsOurRight

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
1898
140
76,445 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Environment & Climate

On #InternationalTigerDay, Tamil Nadu roars with pride. With 306 tigers as per NTCA, this success rests on the shoulders of our forest staff and...

On #InternationalTigerDay, Tamil Nadu roars with pride. With 306 tigers as per NTCA, this success rests on the shoulders of our forest staff and anti-poaching teams who guard critical habitats across tough terrains. To boost forest conservation, 1947 field posts have been filled, forces are being upgraded with modern gear, technology, and dedicated veterinarians. Habitats are being revived by removing invasives and improving forest health. The Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau (#TNWFCCB), a specialised unit, has been formed to curb organised wildlife crime. In saving our tigers, we are protecting the soul of our forests.

Environment & Climate
𝕏 X
1 yr ago
1987
74
64,794 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jul
Culture & Heritage

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள்...

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும் - பேரறிஞர் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் நானும் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னது இதனால்தான்! தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்கள் வலுவாகக் காலூன்ற - உழைப்பாளர்களின் உரிமைகள் நிலைபெற்றிடச் செந்நீர் சிந்தி உழைத்த - பொதுவுடைமைக் கருத்தியலை விதைத்த 100 போராளிகளை இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ளக் “#காலம்தோறும்_கம்யூனிஸ்டுகள்” நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் ஜீவபாரதி! ஆதிக்கமும் - சுரண்டலும் ஒழியப் போராடிய தியாக வரலாற்றை நீங்கள் அனைவரும் உள்வாங்கிட இந்த நூல் துணையாக இருக்கும்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1839
81
35,845 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jul
Social Justice & Reservation

Deeply disturbing to see Kerala's Catholic nuns subjected to harassment and false accusations by Bajrang Dal in Chhattisgarh. This targeted mob...

Deeply disturbing to see Kerala's Catholic nuns subjected to harassment and false accusations by Bajrang Dal in Chhattisgarh. This targeted mob action reflects a dangerous pattern of communal vigilantism enabled by state inaction. India’s minorities deserve dignity and equal rights, not fear. #NunsArrest

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
5062
317
222,407 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத்...

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1777
108
47,559 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Party & Elections

கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!...

கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!

Party & Elections
𝕏 X
1 yr ago
3890
266
155,842 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Federalism & Centre–State Relations

மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக்...

மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மாண்புமிகு @TThenarasu அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார். https://t.co/Nf9494NR2m

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
3944
275
207,846 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jul
Party & Elections

The Special Intensive Revision (#SIR) is being misused to quietly erase voters from disadvantaged and dissenting communities, tilting the balance...

The Special Intensive Revision (#SIR) is being misused to quietly erase voters from disadvantaged and dissenting communities, tilting the balance in favour of the BJP. This is not about reform. It is about engineering outcomes. What happened in Bihar says it all: the Delhi regime knows the same electorate that once voted for it will now vote it out. That is why it is trying to stop them from voting altogether. If you cannot defeat us, you seek to delete us. Don’t play with fire. Any threat to our democracy will be met with firm resistance. Tamil Nadu will raise its voice with full force. We will fight this injustice with every democratic weapon at our disposal. To every citizen who believes in the Constitution: this is not just about one state, this is about the very foundation of our Republic. Democracy belongs to the people. It will not be stolen. #BiharSIR #QuitSIR

Party & Elections
𝕏 X
1 yr ago
6720
584
278,295 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41