DMKSocial

The Feed, page 54

Showing 1,061–1,080 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Education

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வைத்ததில்...

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வைத்ததில் பெருமையடைகிறேன்! தொடங்கி வைத்தபோது பேசிய மாணவர்கள், “தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்தக் கல்வி நிறுவனத்தில் பத்து மடங்குக்கும் குறைவாகவே செலவாகும்” என்று குறிப்பிட்டுப் பேசியது மகிழ்ச்சியளித்தது! மக்களாட்சியைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகப் பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் நமது அரசு செய்துள்ள இந்தப் பங்களிப்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இணைந்துள்ள மாணவர்கள், தங்களது கல்வியைச் சிறப்புற நிறைவு செய்திட வாழ்த்துகிறேன்! எங்களது அழைப்பை ஏற்று வருகை தந்த முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி! #சென்னை_இதழியல்_கல்வி_நிறுவனம் #ChennaiInstituteOfJournalism

Education
𝕏 X
1 yr ago
1897
81
33,090 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Health

Tamil Nadu has shown how sustained investments and social responsibility can make public healthcare accessible to all. From reducing malnutrition...

Tamil Nadu has shown how sustained investments and social responsibility can make public healthcare accessible to all. From reducing malnutrition to pioneering schemes like #MakkalaiThediMaruthuvam and leading India in transplants, our model is admired nationwide. Yet, the Union BJP govt’s attempt to centralise health and medical education threatens to undo these gains. My article in @timesofindia lays out why the #DravidianModel must be defended. 🔗: https://t.co/AT1qkK0Vjf

Health
𝕏 X
1 yr ago
2038
88
63,646 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Culture & Heritage

தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன்...

தியாகத் தலைவர்களைத் தந்த ஈரோட்டு மண்ணின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், ஈரோட்டில், விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த திருப்பூர் குமரன் மற்றும் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, இந்தத் தலைவர்களின் புகழைப் போற்றினேன்!

Culture & Heritage
𝕏 X
1 yr ago
1678
72
34,126 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Governance & Administration

Hon'ble Thiru. Sudershan Reddy, who has spent five decades defending the Constitution and human rights, is the right choice for #VicePresident....

Hon'ble Thiru. Sudershan Reddy, who has spent five decades defending the Constitution and human rights, is the right choice for #VicePresident. From Osmania University to the Supreme Court, his life reflects integrity, #SocialJustice, and the core ideals of India such as secularism and unity in diversity. I extend my wishes and solidarity, and call upon all who value democracy to support Thiru. #SudershanReddy in this crucial election.

Governance & Administration
𝕏 X
1 yr ago
4302
99
49,125 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Party & Elections

இந்த ஆண்டு #முப்பெரும்_விழா கரூரில் நடைபெறவுள்ளது! கருப்பு - சிவப்புப் பாதையில் கொள்கை நடைபோடும் தீரர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது தலைமைக்...

இந்த ஆண்டு #முப்பெரும்_விழா கரூரில் நடைபெறவுள்ளது! கருப்பு - சிவப்புப் பாதையில் கொள்கை நடைபோடும் தீரர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது தலைமைக் கழகம். விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! #MupperumVizha

Party & Elections
𝕏 X
1 yr ago
1725
113
45,158 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Welfare Schemes

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக்...

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்! வரும் 26-08-2025 அன்று நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் #CMBreakfastScheme விரிவாக்கம் செய்கிறோம். நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும்! தமிழ்நாடு நாளும் உயரும்! #LetterToBrethren

Welfare Schemes
𝕏 X
1 yr ago
2527
135
57,600 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Health

ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன. முதல் வாரம் ( ஆகஸ்ட் 2)...

ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன. முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள் இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள், மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம்! #DravidianModel

Health
𝕏 X
1 yr ago
2705
168
90,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Federalism & Centre–State Relations

அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் வீக்கமாகுமே தவிர, அது வலிமையாகவோ வளர்ச்சியாகவோ ஆகாது! அதுவும் ஒரு துணைக்கண்டத்துக்குரிய வேற்றுமைகளோடு...

அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் வீக்கமாகுமே தவிர, அது வலிமையாகவோ வளர்ச்சியாகவோ ஆகாது! அதுவும் ஒரு துணைக்கண்டத்துக்குரிய வேற்றுமைகளோடு பரந்துபட்டுள்ள இந்தியா போன்ற ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சியும் மாநில சுயாட்சியும் அடிப்படையாகவே இருக்க வேண்டும்! இதை உணர்ந்துதான் தி.மு.க.வின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே அரசியலமைப்பில் திருத்தம் கோரியதில் இருந்து, ஆட்சியில் இருந்த காலத்தில் இராஜமன்னார் குழு, மாநில சுயாட்சித் தீர்மானம் என நாம் தொடர்ந்து அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தி வருகிறோம்! #DravidianModel அரசு சார்பில், மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. குரியன் ஜோசப் தலைமையில் நாம் அமைத்துள்ள உயர்நிலைக் குழு இனி இந்தியா செல்ல வேண்டிய பாதையைக் கோடிட்டுக் காட்டும்! தமிழ்நாடு காட்டும் வழியை ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றும்! #தமிழ்நாடு_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் #NationalSeminarOnUnionStateRelations

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
2285
138
35,673 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Education

மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே பகுத்தறிவும் - சமூகநீதிப் பார்வையும் - அனைவரையும் சமமாக நடத்தும் பண்பும் பெற்றுவிட்டால், தமிழ்நாட்டை இப்போதுபோலவே...

மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே பகுத்தறிவும் - சமூகநீதிப் பார்வையும் - அனைவரையும் சமமாக நடத்தும் பண்பும் பெற்றுவிட்டால், தமிழ்நாட்டை இப்போதுபோலவே எப்போதும் வெறுப்புணர்வு சக்திகளால் ஆட்கொள்ள முடியாது! அதேபோல, நீங்கள் reel-இல் பார்ப்பதெல்லாம் real இல்லை, கல்வி தரும் பெருமை எதிலும் இல்லை என்பதை உணர்ந்து உயர்கல்வியிலும் சாதித்துக் காட்டுங்கள்! #GoodShepherdSchoolCentenary

Education
𝕏 X
1 yr ago
2343
130
34,469 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌟 MRB & TNPSC மூலமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🌟 MRB & TNPSC மூலமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 644 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல், 🌟 @tnhrcedept சார்பில் 17 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 9 திருக்கோயில்களைப் புனரமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்து, 14 முடிவுற்ற கட்டுமானப் பணிகளைத் திறந்து வைத்தல், 🌟 ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, 818 சாலை ஆய்வாளர்கள் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்குதல் மற்றும் 🌟 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 5 வட்டச் செயல்முறைக் கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்குதல்...

Governance & Administration
𝕏 X
1 yr ago
2034
98
28,222 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Law & Order / Justice

Tamil Nadu stands at the forefront of India’s war on drugs. Attempts to malign the State collapse under the weight of the facts. Massive seizures...

Tamil Nadu stands at the forefront of India’s war on drugs. Attempts to malign the State collapse under the weight of the facts. Massive seizures and crackdowns speak for themselves. Conviction rates under NDPS rose from 80 percent in 2022 to 88 percent by June 2025, with 3,493 offenders convicted from 4,889 cases, the highest ever. Read this insightful article by Tamil Nadu DGP Thiru. Shankar Jiwal in @the_hindu, packed with data and evidence:

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
1824
101
63,165 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Party & Elections

கழகம் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்ட காலத்தில், சட்டமன்றத்தில் இடிமுழக்கமாக - மக்கள் மன்றத்தில் வெடிமுழக்கமாக ஒலித்து அரணாக இருந்தவர் அண்ணன்...

கழகம் நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்ட காலத்தில், சட்டமன்றத்தில் இடிமுழக்கமாக - மக்கள் மன்றத்தில் வெடிமுழக்கமாக ஒலித்து அரணாக இருந்தவர் அண்ணன் இரகுமான் கான் அவர்கள்! கருப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து, நாட்டை ஜனநாயகப் பாதையிலிருந்து திசைதிருப்பிட ஒன்றிய பா.ஜ.க. அரசு முயலும் காலத்தில், அண்ணன் இரகுமான் கான் போன்ற கொள்கைத் தீரமிக்க இளைஞர் பட்டாளத்தை உருவாக்கிடுவோம்! தன்மானமிக்க தமிழ்நாட்டைக் காத்திடுவோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
2272
143
39,131 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Federalism & Centre–State Relations

The 130th Constitutional Amendment is not reform — this is a Black Day and this is a Black Bill. 30-day arrest = Removal of an elected CM. No...

The 130th Constitutional Amendment is not reform — this is a Black Day and this is a Black Bill. 30-day arrest = Removal of an elected CM. No trial, no conviction — just BJP’s DIKTAT. This is how DICTATORSHIPS begin: Steal votes, Silence rivals and Crush States. I strongly condemn this Bill, which strikes at the very root of democracy, and I call upon all the democratic forces to unite against this attempt to turn India into a dictatorship. The Union BJP Government has decided to defile the Constitution and its democratic foundations by turning India into a dictatorship under the Prime Minister. After the expose of #VoteTheft, the very mandate on which the Union BJP Government was formed is in serious question. Its legitimacy is doubtful. Having stolen the mandate of the people through fraud, the BJP is now desperate to distract public attention from this exposé. To do that, they have brought in the #130thConstitutionalAmendmentBill. The plan of this Bill is clear. It allows the BJP to foist false cases against political opponents in power across States and remove them by misusing provisions that treat even a 30-day arrest as a ground for removal of an elected leader, without any conviction or trial. This unconstitutional amendment will certainly be struck down by the courts because guilt is decided only after trial, not by the mere registration of a case. This is a sinister attempt to intimidate regional parties in the NDA, whose leaders are CMs or Ministers in various States — “stick with us or else…” The first move of any emerging dictator is to give himself the power to arrest and remove rivals from office. That is exactly what this Bill seeks to do. #VoteChori #VoteAdhikarYatra #BlackBill #BlackDay

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
12841
989
631,446 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Governance & Administration

I strongly condemn the action of the Assam Police in issuing summons to senior journalists @SVaradarajan and #KaranThapar of @thewire_in. The...

I strongly condemn the action of the Assam Police in issuing summons to senior journalists @SVaradarajan and #KaranThapar of @thewire_in. The summons have been issued despite the Supreme Court granting protection in a related matter only days earlier. No copy of the FIR and no particulars of the case have been furnished, leaving only the threat of arrest. Section 152 of the BNS is being misused as a substitute for the repealed sedition law to suppress independent journalism. A democracy cannot survive if asking questions is treated as sedition.

Governance & Administration
𝕏 X
1 yr ago
9680
557
403,436 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 👨🏽‍💻வேளாண்மை – உழவர் நலத் துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 👨🏽‍💻வேளாண்மை – உழவர் நலத் துறை, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும் 🎞️ தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்காகத் தயாரிக்கப்பட்டு, #NationalAward வென்ற #TimelessTamilNadu படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தல்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
1142
42
23,665 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Governance & Administration

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்....

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர் ஆவார். நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், திரு. சுதர்சன் ரெட்டி அவர்களை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது. சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை! நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரசாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத இந்தி & சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது. மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.கழகக் கூட்டணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கே வாக்களித்துள்ளனர். எனவே, திரு. சுதர்சன் ரெட்டி அவர்களை ஆதரிப்பதுதான் அவர்களது முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்! அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி, மொழியுரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப்பளிக்க கூடியவராக, திரு. சுதர்சன் ரெட்டி அவர்கள் திகழ்கிறார். கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக திரு. சுதர்சன் ரெட்டி அவர்கள் மிகச் சரியான தேர்வு! #VicePresident #VicePresidentElection

Governance & Administration
𝕏 X
1 yr ago
2803
158
84,156 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Governance & Administration

I wholeheartedly congratulate Thiru B. Sudershan Reddy on being chosen as the Vice Presidential candidate of the Opposition #INDIA Bloc. A jurist...

I wholeheartedly congratulate Thiru B. Sudershan Reddy on being chosen as the Vice Presidential candidate of the Opposition #INDIA Bloc. A jurist of integrity, independence, and a champion of civil liberties and social justice, he has upheld constitutional values throughout his career. At a time when our institutions are under strain, his candidature strengthens our collective resolve to safeguard democracy and protect the spirit of the Constitution. All the independent institutions that were meant to safeguard Indian democracy have been turned into subsidiary bodies of the ruling party, and the very Constitution itself is in danger. In such a situation, the responsibility before us is to support only one who believes in India’s fundamental ideals of secularism, federalism, social justice, and unity in diversity. The Union BJP government has been continuously inflicting injustice on Tamil Nadu — refusing to accept the state’s rightful demands such as exemption from NEET, recognition of Keezhadi’s antiquity, fairness in fund devolution, not halting education funds, and more. Through Governors, it has been running a parallel government and blocking the functioning of State governments, while also engaging in efforts to weaken institutions of higher education. The DMK has been consistently and vociferously raising its voice in Parliament against the unconstitutional denial of State rights, the centralization of power in the Union, the rising tide of hate propaganda, and the relentless imposition of Hindi and Sanskrit — all of which dig a grave for the Constitution and attempt to bury it. The secular-spirited people of Tamil Nadu have, in successive elections, overwhelmingly voted for the MPs and MLAs of the DMK alliance to defend the rights of the State and safeguard the Constitution. This decision stands as both a reaffirmation of the people’s faith and a mark of respect for their mandate and sentiment. As someone who can create space for constructive debates in Parliament, conduct the House giving rightful place to the voice of the opposition, and as a democrat who has faith in the Constitution and in the principles of federalism, pluralism, social justice, and linguistic rights — Mr. Sudershan Reddy stands. As the opposite of anti-federalism, authoritarianism, and the trend of spreading hatred — Mr. Sudershan Reddy stands. #VicePresident #VicePresidentElection

Governance & Administration
𝕏 X
1 yr ago
9761
265
211,141 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Water Resources

குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்....

குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன். #Colachel #ColachelHarbourExpansion

Water Resources
𝕏 X
1 yr ago
1123
45
35,152 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Welfare Schemes

தம்முயிரையே பணயம் வைத்து ஒவ்வோர் இந்தியர் உயிரையும் காக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் தொழில் தொடங்க 30%...

தம்முயிரையே பணயம் வைத்து ஒவ்வோர் இந்தியர் உயிரையும் காக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் தொழில் தொடங்க 30% மூலதன மானியத்துடன், ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கும் #காக்கும்_கரங்கள் திட்டத்தினைக் கடந்த #IndependenceDay2024 உரையில் அறிவித்திருந்தேன். அத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை இன்று வழங்கினேன்! நன்றி மறப்பது நன்றன்று!

Welfare Schemes
𝕏 X
1 yr ago
1329
60
19,873 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Party & Elections

The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc. The following questions...

The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc. The following questions arise: https://t.co/yN3OFgzEbk can there be so many deletions of eligible voters when house-to-house enumeration was undertaken? 2.The enrolment of new voters is abnormally low. Were these young voters enumerated? Has any database been compiled to show how many youngsters who turned 18 on the qualifying date were included? 3.The procedure for enquiry and two appeals, along with their timelines as contemplated under the Registration of Electors Rules, 1960, may exclude a huge number of voters in the forthcoming elections in Bihar. Is the ECI going to address this issue? 4.Will the #ECI take these practical difficulties into account while conducting #SIR in other States? 5.On 17/07/2025, we requested the ECI to delete the names of deceased voters from the rolls by undertaking the exercise contemplated in its 01/05/2025 notification. When will this be done? 6.What prevents the ECI from enlisting Aadhaar as one of the acceptable documents to prove a voter’s claim? 7.If “Fair Elections” is truly the aim of the ECI, why can’t it be more transparent and voter-friendly? #VoteTheft இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு. பின்வரும் கேள்விகள் எழுகின்றன: 1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? 2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? 3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது? 4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா? 5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்? 6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது? 7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?

Party & Elections
𝕏 X
1 yr ago
7733
392
177,859 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41