DMKSocial

The Feed, page 51

Showing 1,001–1,020 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Agriculture & Farmer Welfare

Hon’ble PM Thiru @narendramodi , despite increased paddy coverage, Tamil Nadu has received only 57 percent of its allocated fertilizers. I...

Hon’ble PM Thiru @narendramodi , despite increased paddy coverage, Tamil Nadu has received only 57 percent of its allocated fertilizers. I request your urgent intervention to supply the shortfall and to allot additional quantities for September to avoid disruption to farmers, ensuring that the momentum of a good monsoon is not lost. @JPNadda @fertmin_india மாண்புமிகு @PMOIndia அவர்களே, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில், மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட உர அளவில் 57% விழுக்காடு மட்டுமே உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாகத் தாங்கள் இதில் தலையிட்டு, மீதமுள்ள உர அளவைத் தமிழ்நாட்டுக்கு வழங்கிட ஒன்றிய இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்துக்கு அறிவுறுத்திடக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், செப்டம்பர் மாதத்திற்கான உரங்களைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, உழவர்களுக்குத் தங்குதடையின்றிக் கிடைக்கச் செய்து, பருவமழையின் பயன் முழுவதுமாக அறுவடை செய்யப்பட உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
1 yr ago
1333
50
43,406 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Industry & Investment

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 🌄 #SIDCO சார்பில் 4 புதிய தொழிற்பேட்டைகள், 2 தனியார் தொழிற்பேட்டைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பொது வசதி...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 🌄 #SIDCO சார்பில் 4 புதிய தொழிற்பேட்டைகள், 2 தனியார் தொழிற்பேட்டைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பொது வசதி மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, தொழிலாளர்கள் தங்கும் விடுதி, வேளாண் பொருட்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள், 18 தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, சிட்கோ உதவி மேலாளர் பணிக்குத் தேர்வானவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்குதல் – 🌄 பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர, வக்பு வாரியத்தின் சார்பில் உதவித்தொகை வழங்குதல் - 🌄 வாழும் கைவினைப் பொக்கிஷம் மற்றும் பூம்புகார் மாநில விருதுகளைச் சிறந்த கைவினைஞர்களுக்கு வழங்குதல் – மற்றும், 🌄 பிரான்சு நாட்டின் Centre – Val De Loire மாகாணத்துடன் பண்பாட்டுப் பரிமாற்றம் & சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான MoU!

Industry & Investment
𝕏 X
1 yr ago
1115
60
24,967 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Women & Child Welfare

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் - பெற்றோரில் ஒருவரை இழந்து ஆதரவற்று இருக்கும் குழந்தைகளுக்கும் #அன்புக்கரம் நீட்ட நமது #DravidianModel அரசு...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் - பெற்றோரில் ஒருவரை இழந்து ஆதரவற்று இருக்கும் குழந்தைகளுக்கும் #அன்புக்கரம் நீட்ட நமது #DravidianModel அரசு இருக்கிறது! https://t.co/OIl6plyHVJ

Women & Child Welfare
𝕏 X
1 yr ago
2086
109
48,174 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Law & Order / Justice

தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத்...

தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை 2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை 3) ‘வக்பு பயனர்’ என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து) 4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும். ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது. இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. Today, in the DMK's petition and other writ petitions challenging the amendments to the #WaqfAct, the Hon'ble Supreme Court of India has stayed the following key provisions of the BJP Government’s amendments: i) The mandatory 5-year practice requirement before dedicating a Waqf ii) The power to divest Waqf properties on mere allegation of being government property pending report of a designated officer or decision of Government iii) The Collector’s power to denotify ‘Waqf by user’ (property treated as Waqf after long period of religious use) iv) Inclusion of more than 4 non-Muslim members in the Central Waqf Board and more than 3 in the State Waqf Boards, thereby ensuring Muslim majority in these Boards This order is a major step towards undoing the unconstitutional and illegal amendments made by the BJP Government. The DMK has consistently opposed these amendments from the time the Bill was introduced in Parliament. After it became an Act, the DMK challenged it in the Supreme Court and succeeded, alongside others. The DMK Government also passed an assembly resolution urging the Union Government to withdraw the #WaqfAmendment Bill, countering the BJP’s attempt to misuse governmental power. Today’s order strengthens the hope and trust that people place in the Hon'ble Supreme Court to safeguard the religious rights of the Muslim minority community and to uphold the Constitution. #WaqfAmendmentAct

Law & Order / Justice
𝕏 X
1 yr ago
2748
92
119,403 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Party & Elections

பேரறிஞர் அண்ணா தலைநிமிர்த்திய “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதியேற்றோம்! தமிழ்நாட்டிலுள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...

பேரறிஞர் அண்ணா தலைநிமிர்த்திய “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதியேற்றோம்! தமிழ்நாட்டிலுள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளிலும் கழக உடன்பிறப்புகள் உறுதியேற்றனர்! #ஓரணியில்தமிழ்நாடு #ஓரணியில்_தமிழ்நாடு #RememberingAnna #AnnaForever https://t.co/Mv4dv6Cg2C

Party & Elections
𝕏 X
1 yr ago
3663
813
97,439 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Culture & Heritage

தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥ தலைமகன் நிமிர்த்திய...

தமிழன்னை தந்திட்ட தலைமகன்! திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா 🖤♥ தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்! #ஓரணியில்தமிழ்நாடு #RememberingAnna https://t.co/gIPWj2qnqv

Culture & Heritage
𝕏 X
1 yr ago
6925
1133
174,704 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Sept
Governance & Administration

சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், #DravidianModel! இன்று கிருஷ்ணகிரியில் - ☀️ ரூ.2884.93 கோடி...

சொல்லும் நல்லெண்ணமும் செயலாகி - அதன் பயன் ஒவ்வொருவரையும் சென்றடைகிறது. இதுதான், #DravidianModel! இன்று கிருஷ்ணகிரியில் - ☀️ ரூ.2884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ☀️ 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ☀️ 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். அவதூறுகளால் களங்கம் விளைவித்திட முடியுமா - பொய்களால் காரிருளை விளைவித்திட முடியுமா - தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்க முடியுமா என்றெண்ணும் கூட்டத்தின் மலிவான அரசியலை எப்போதும்போல் 2026-லும் வீழ்த்துவோம்! நம்பர் 1 தமிழ்நாடு எனத் தலைநிமிர்வோம்!

Governance & Administration
𝕏 X
1 yr ago
2032
125
94,385 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Party & Elections

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! இயக்கத்தை இதுநாள்...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரு. மு.வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசன் அவர்களுக்கு நன்றி! ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
1693
76
61,957 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Governance & Administration

மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப்...

மக்களின் குறைகளைக் களைந்து - அவர்களது தேவைகளை விரைந்து நிறைவேற்றித் தர உருவான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் பொதுமக்களான உங்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்திட - இன்னும் விரைவாகத் தீர்வுகளை அளித்திட, துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். இந்தத் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு நல்லதொரு தீர்வை நல்கிடும் பணியை அரசு ஊழியர்கள் தொடர்ந்து செய்திட அறிவுறுத்தியுள்ளேன்.

Governance & Administration
𝕏 X
1 yr ago
2185
169
44,851 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Party & Elections

75 ஆண்டுகாலம் தமிழினத்தின் தனித்த அடையாளத்தைக் கட்டிக்காத்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பிய நம் கழகத்தின் #முப்பெரும்_விழா தந்தை பெரியாரின்...

75 ஆண்டுகாலம் தமிழினத்தின் தனித்த அடையாளத்தைக் கட்டிக்காத்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டியெழுப்பிய நம் கழகத்தின் #முப்பெரும்_விழா தந்தை பெரியாரின் பிறந்தநாளில் செப்டம்பர் 17 அன்று கரூரில்! #களம்2026-இல் வென்று வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் இந்த விழா. இருவண்ணக் கொடியேந்திக் கொள்கைக் குடும்பமாக அணிதிரள்வோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
1 yr ago
2032
153
84,292 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Federalism & Centre–State Relations

Hon'ble Prime Minister Thiru. @NarendraModi, the Office Memorandum exempting atomic and rare earth mineral mining projects from public...

Hon'ble Prime Minister Thiru. @NarendraModi, the Office Memorandum exempting atomic and rare earth mineral mining projects from public consultation is unacceptable. Public hearings are a mandatory safeguard for ecology, livelihoods and democracy. I urge you to roll back this memorandum and ensure that such important policy decisions are first discussed in Parliament and with the States. @moefcc @byadavbjp

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
1678
81
59,161 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Party & Elections

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! #ஓரணியில்_தமிழ்நாடு...

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் ஆகியவற்றை எந்நாளும் காப்பேன்! ஆதிக்கச் சக்திகளின் முன் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! #ஓரணியில்_தமிழ்நாடு https://t.co/Qw24YAPaZB

Party & Elections
𝕏 X
1 yr ago
2746
416
114,421 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Transport & Infrastructure

சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் கலைஞர்...

சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான். அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது #மாணவர்_மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது #DravidianModel ஆட்சியில் இயக்கி வருகிறோம். மாண்புமிகு @sivasankar1ss அவர்களும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Transport & Infrastructure
𝕏 X
1 yr ago
2324
97
92,622 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Industry & Investment

From #Hosur to the world, Tamil Nadu is marching forward with unshakable resolve. No force can halt our journey. Our goal is firm, our rise...

From #Hosur to the world, Tamil Nadu is marching forward with unshakable resolve. No force can halt our journey. Our goal is firm, our rise unstoppable. To every investor I say, travel with Tamil Nadu and your success is guaranteed. Tamil Nadu will keep on rising. @TRBRajaa @Guidance_TN @TNIndMin #BullishonTN #InvestInTN #JobsforTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
1 yr ago
2277
95
63,257 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Industry & Investment

#Hosur's next era of growth is here! 📝 At #TNRising Investors Conclave in Hosur, 92 MoUs were signed across large industries and MSMEs, with...

#Hosur's next era of growth is here! 📝 At #TNRising Investors Conclave in Hosur, 92 MoUs were signed across large industries and MSMEs, with investments totalling Rs. 24,307 crore and employment opportunities for 49,353 people. 🏗️ Construction commencement ceremony was held for the second unit of Ascent Circuits at the ELCOT SEZ. ⚡ Groundbreaking ceremonies were held for Delta Electronics’ new manufacturing units, along with the inauguration of its cutting-edge Smart Manufacturing Line. 🚀 Four ambitious projects were inaugurated — Kaynes Circuits, Shoolagiri Future Mobility Park, SNS Clothing (Gokaldas Exports), and the Tamil Nadu Innovation Board. 🧱 Foundation stones were laid for Kauvery Hospital, RICO Auto, Aspire Footwear, and Versatile Bonds. 👩‍💼 Job orders were handed over to newly recruited employees at Tata Electronics, Kaynes Circuits, HL Mando, and First Steps Babywear. Just four days after returning from the #TNRising in UK and Germany, we are in Hosur posting bigger numbers in investments. We are breaking our own records! @TRBRajaa @Guidance_TN @TNIndMin #BullishonTN #InvestInTN #JobsforTN #DravidianModel

Industry & Investment
𝕏 X
1 yr ago
1802
63
82,146 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Social Justice & Reservation

தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி...

தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்! அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே... ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது. அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம்!

Social Justice & Reservation
𝕏 X
1 yr ago
2747
110
91,518 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Party & Elections

#ஓரணியில்_தமிழ்நாடு தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது #OraniyilTamilNadu இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்....

#ஓரணியில்_தமிழ்நாடு தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது #OraniyilTamilNadu இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:

Party & Elections
𝕏 X
1 yr ago
2946
454
183,070 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Governance & Administration

I warmly congratulate Hon'ble Thiru. #CPRadhakrishnan on his election as the #VicePresident of India and hope that he will discharge his duties...

I warmly congratulate Hon'ble Thiru. #CPRadhakrishnan on his election as the #VicePresident of India and hope that he will discharge his duties with steadfast resolve to the constitutional framework and the democratic ideals of our nation. I also commend Thiru. Sudershan Reddy for his determined fight that upheld the spirit of #INDIA's democracy and reflected the principles we stand for. @CPRGuv

Governance & Administration
𝕏 X
1 yr ago
4086
129
161,987 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Party & Elections

“தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல”-னு தமிழ்நாடே சொல்லும்! நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள்...

“தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல”-னு தமிழ்நாடே சொல்லும்! நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் '#ஓரணியில்_தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன. வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த இக்குடும்பங்கள் கூடி உறுதிமொழி ஏற்பது என்றும், 20-ஆம் நாளன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாபெரும் கூட்டங்கள் நடத்தி உறுதிமொழி ஏற்பது என்றும் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கழகத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் #முப்பெரும்_விழா-வுக்கு உங்கள் எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். செப் 17 அன்று கரூரில் திரள்வோம்! கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!

Party & Elections
𝕏 X
1 yr ago
3264
247
96,543 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Industry & Investment

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து #TNRising பயணம் மாபெரும் வெற்றியையும் மனநிறைவையும் தந்தது! இந்தப் பயணத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தம்பி @TRBRajaa...

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து #TNRising பயணம் மாபெரும் வெற்றியையும் மனநிறைவையும் தந்தது! இந்தப் பயணத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தம்பி @TRBRajaa அவர்களுக்கும், தொழிற்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்! இந்தப் பயணங்கள் தொடரும்… வரும் 11-ஆம் நாள் ஓசூரில் அடுத்த முதலீட்டாளர் மாநாடு! @TNIndMin @Guidance_TN

Industry & Investment
𝕏 X
1 yr ago
3146
833
79,833 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41