DMKSocial

The Feed, page 47

Showing 921–940 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Disaster Response & Relief

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி...

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! #NorthEastMonsoon #ChennaiRains

Disaster Response & Relief
𝕏 X
11 mo ago
1676
120
49,274 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Disaster Response & Relief

#NorthEastMonsoon தொடங்கி, தமிழ்நாடெங்கும் பரவலாக மழை பெய்து வருவதால், மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்...

#NorthEastMonsoon தொடங்கி, தமிழ்நாடெங்கும் பரவலாக மழை பெய்து வருவதால், மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். பாதுகாப்பாகத் தங்குவதற்கு முகாம்கள், குடிநீர், உணவு, மருந்து ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருப்பதோடு, திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தியுள்ளேன். விழிப்புணர்வோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம்! பருவமழைக் காலத்தைப் பாதிப்புகளின்றிக் கடப்போம்!

Disaster Response & Relief
𝕏 X
11 mo ago
1855
163
105,380 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Culture & Heritage

தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் “பெரியார்...

தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு @AsiriyarKV அவர்களிடம் வழங்கினேன்! பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!

Culture & Heritage
𝕏 X
11 mo ago
1838
137
51,994 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Federalism & Centre–State Relations

மாண்புமிகு நிதி அமைச்சர் @TThenarasu அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை...

மாண்புமிகு நிதி அமைச்சர் @TThenarasu அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்: ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி? நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்? இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்? கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்? இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?

Federalism & Centre–State Relations
𝕏 X
11 mo ago
3150
450
171,125 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Oct
Law & Order / Justice

அறிவை மறைக்கும் சாதிய ஆதிக்க எண்ணத்தால் நிகழும் சில படுகொலைகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. எனவே, சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான...

அறிவை மறைக்கும் சாதிய ஆதிக்க எண்ணத்தால் நிகழும் சில படுகொலைகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. எனவே, சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி #KNBasha அவர்கள் தலைமையிலான ஆணையத்தை நமது #DravidianModel அரசு அமைக்கும்! https://t.co/YsZdZoKGFT

Law & Order / Justice
𝕏 X
11 mo ago
2720
208
60,223 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Education

யோகேஸ்வரி போன்றோரின் வெற்றி, ஒரு தனிநபரின் வெற்றி அல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! கல்விதான் எங்கள் அடையாளம் எனப் பறைசாற்றும் பண்பட்ட...

யோகேஸ்வரி போன்றோரின் வெற்றி, ஒரு தனிநபரின் வெற்றி அல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! கல்விதான் எங்கள் அடையாளம் எனப் பறைசாற்றும் பண்பட்ட சமூகத்தின் வெற்றி! https://t.co/XPcg3kKHxy

Education
𝕏 X
11 mo ago
3108
108
61,318 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Governance & Administration

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்! தமிழ்நாடு சித்த மருத்துவப்...

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்! தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது.

Governance & Administration
𝕏 X
11 mo ago
2426
105
58,522 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Federalism & Centre–State Relations

இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் * கச்சத்தீவு மீட்பு * இந்திய மீனவர்கள் மற்றும்...

இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் * கச்சத்தீவு மீட்பு * இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல் * மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல் * பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு * கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை, மாண்புமிகு @PMOIndia திரு. @NarendraModi அவர்கள் எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன். I have written to the Hon'ble Prime Minister Thiru. @NarendraModi reiterating our key demands to be raised with the Hon'ble PM of Sri Lanka during her visit to India, to find an early and lasting solution for the distress of Tamil Nadu fishermen.

Federalism & Centre–State Relations
𝕏 X
11 mo ago
1547
147
45,695 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Energy

#KolathurVisit: கணேஷ் நகரில் 110.92 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையத்தைத் திறந்து வைத்தேன். https://t.co/Y2icFJRhFP

#KolathurVisit: கணேஷ் நகரில் 110.92 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையத்தைத் திறந்து வைத்தேன். https://t.co/Y2icFJRhFP

Energy
𝕏 X
11 mo ago
1613
61
31,839 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Industry & Investment

#Fortune500 giants are not just investing in Tamil Nadu, they are reinvesting and expanding! #Hitachi Energy’s next phase in Chennai brings Rs....

#Fortune500 giants are not just investing in Tamil Nadu, they are reinvesting and expanding! #Hitachi Energy’s next phase in Chennai brings Rs. 2000 crore and 3000 high-value jobs, a strong vote for our business climate, governance and talent. Each reinvestment shows Tamil Nadu is India’s industrial leader and a trusted global partner for innovation and growth. #InvestInTN #EaseOfDoingBusiness #TNMeansBusiness #DravidianModel

Industry & Investment
𝕏 X
11 mo ago
2198
117
106,129 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Disaster Response & Relief

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது...

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது. இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! #KarurStampede #KarurTragedy

Disaster Response & Relief
𝕏 X
11 mo ago
5818
539
300,451 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Education

எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் -...

எப்படிப்பட்ட தடையையும் கல்வியைக் கொண்டு கடந்திடலாம், வாழ்வில் உயர்ந்திடலாம் என்று வாழ்ந்து காட்டிய அறிவியல் மேதை - முன்னாள் குடியரசுத் தலைவர் - பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்! உயர்கல்விக்காக நமது #DravidianModel அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் தன்னிறைவுக்கும் உழைத்தால், அதுதான் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்குச் செலுத்தும் மிகச்சிறந்த நன்றிக்கடன். #AbdulKalam

Education
𝕏 X
11 mo ago
2184
106
45,344 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Sports

🏆 12 லட்சம் பேரின் பங்கேற்பே சொல்கிறது #CMTrophy2025 பெற்றுள்ள வெற்றியை! 💫 சுறுசுறுப்பான செயல்பாடுகளால், விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டின்...

🏆 12 லட்சம் பேரின் பங்கேற்பே சொல்கிறது #CMTrophy2025 பெற்றுள்ள வெற்றியை! 💫 சுறுசுறுப்பான செயல்பாடுகளால், விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டின் பொற்காலமாக #DravidianModel ஆட்சிக்காலத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @UdhayStalin அவர்கள் நிலைநிறுத்தி வருவதை இன்றைய நிறைவுவிழா உணர்த்திவிட்டது. ⚽ பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் திறமையாளர்களுக்கு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் சரியான #LaunchPad-ஆக அமையட்டும்! 🏅 உடலினை உறுதி செய்து, உலக அளவில் நமது இளைஞர்களின் பதக்க வேட்டை தொடரட்டும்! Sport is life, life is sport!

Sports
𝕏 X
11 mo ago
1944
81
36,239 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Oct
Industry & Investment

This is the #DravidianModel in action. Thank you @HonHai_Foxconn for choosing Tamil Nadu and shaping the future with us. This marks another...

This is the #DravidianModel in action. Thank you @HonHai_Foxconn for choosing Tamil Nadu and shaping the future with us. This marks another milestone in our journey to make Tamil Nadu the manufacturing and innovation hub of South Asia.

Industry & Investment
𝕏 X
11 mo ago
3258
178
243,951 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Oct
Governance & Administration

🪹 திருநங்கையர்கள் பாதுகாப்பாகத் தங்கி, கல்வியைத் தொடர உதவும் ”அரண்” இல்லங்களைச் சென்னை – செனாய் நகர், மதுரை – அண்ணா நகரில் சமூகநலத்துறை சார்பில்...

🪹 திருநங்கையர்கள் பாதுகாப்பாகத் தங்கி, கல்வியைத் தொடர உதவும் ”அரண்” இல்லங்களைச் சென்னை – செனாய் நகர், மதுரை – அண்ணா நகரில் சமூகநலத்துறை சார்பில் திறந்து வைத்தல் - 👩🏽‍🍼 தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் இந்தியாவிலேயே அதிக அளவாக 43% கொண்டுள்ள நம் தமிழ்நாட்டின் 16 #SIPCOT-களில் குழந்தைகள் காப்பகங்கள், திண்டிவனம் & தேனியில் மெகா உணவுப் பூங்காக்கள் ஆகியவற்றை @TNIndMin சார்பில் திறந்து வைத்தல் - 🌟 @tnhrcedept சார்பில் திருச்செந்தூர், திருவரங்கம், திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட திருக்கோயில்களில் 27 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, மருதமலை உள்ளிட்ட 4 திருக்கோயில்களில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிநியமன ஆணைகள் வழங்குதல் – 👩🏽‍⚖ சட்டத்துறை சார்பில் மதுரை & வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான புதிய கட்டடங்கள் திறந்து வைத்தல் – 🏞 சுற்றுலாத் துறை சார்பில் சவ்வாதுமலை, கொல்லிமலை, பொன்னணியாறு அணை உள்ளிட்ட இடங்களில் முடிவுற்ற மேம்பாட்டுப் பணிகளைத் திறந்து வைத்து, மேலும் 5 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் – என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு! @regupathymla @geethajeevandmk @PKSekarbabu @TRBRajaa @SalemRRajendran

Governance & Administration
𝕏 X
11 mo ago
2101
70
41,777 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Oct
Culture & Heritage

விடுதலைப் போராட்ட வீரர் - தமிழ்நாடு என்ற பெயரை நம் மாநிலம் பெறுவதற்காக 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த வீரத்தியாகி #சங்கரலிங்கனார்...

விடுதலைப் போராட்ட வீரர் - தமிழ்நாடு என்ற பெயரை நம் மாநிலம் பெறுவதற்காக 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்த வீரத்தியாகி #சங்கரலிங்கனார் நினைவுநாள்! அவர் உறுதியாகப் போராடி உயிர்துறந்தும் நிறைவேறாத தமிழினத்தின் பெருங்கனவு, பேரறிஞர் அண்ணா தலைமையிலான கழக ஆட்சி அமைந்த பின்னரே நனவானது. தமிழ்நாடு எனும் பெயர் இம்மண்ணில் நிலைத்திருக்கும் வரை சங்கரலிங்கனாரும் நன்றியோடு நினைவுகூரப்படுவார்!

Culture & Heritage
𝕏 X
11 mo ago
1786
157
56,612 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Welfare Schemes

Watch this video as @TheWeekLive follows the women who feed lakhs of children before the first bell and step inside the kitchens that power the...

Watch this video as @TheWeekLive follows the women who feed lakhs of children before the first bell and step inside the kitchens that power the #TNCMBreakfastScheme. https://t.co/IUxBlTXR0P

Welfare Schemes
𝕏 X
11 mo ago
1370
70
94,470 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Urban Development

சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான்! ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வண்ணமீன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்; 2021-22-ஆம்...

சென்னையில் வண்ணமீன்கள் விற்பனை என்றாலே, அது கொளத்தூர்தான்! ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வண்ணமீன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர்; 2021-22-ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தேன்; நேற்று - வில்லிவாக்கம் சிவசக்தி நகரில், இந்தியாவிலேயே முதன்முறையாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள “கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மைய”த்தைத் திறந்து வைத்தேன்! #KolathurOrnamentalFishTradeCentre #KolathurVisit @CMDA_Official

Urban Development
𝕏 X
11 mo ago
2109
91
66,016 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Urban Development

வில்லிவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள “கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மையம்!” #KolathurFishMarket #KolathurVisit @CMDA_Official https://t.co/1XjzEPRQ9K

வில்லிவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள “கொளத்தூர் வண்ணமீன் வர்த்தக மையம்!” #KolathurFishMarket #KolathurVisit @CMDA_Official https://t.co/1XjzEPRQ9K

Urban Development
𝕏 X
11 mo ago
1692
62
31,592 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Culture & Heritage

கலைஞர்களின் கலைத்தொண்டைப் பாராட்டித் தமிழ்நாடே வழங்கும் அங்கீகாரம்தான், #கலைமாமணி விருதுகள்! முத்தமிழை வளர்க்கும் கலைகளை மூச்செனக் காப்போம்!...

கலைஞர்களின் கலைத்தொண்டைப் பாராட்டித் தமிழ்நாடே வழங்கும் அங்கீகாரம்தான், #கலைமாமணி விருதுகள்! முத்தமிழை வளர்க்கும் கலைகளை மூச்செனக் காப்போம்! அதன்வழியே தமிழர் எனும் நம் இன அடையாளத்தையும், சுயமரியாதையையும் காப்போம்! #KalaiMamaniAwards https://t.co/NUmfet8C0S

Culture & Heritage
𝕏 X
11 mo ago
2576
72
59,563 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41