DMKSocial

The Feed, page 46

Showing 901–920 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Governance & Administration

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து...

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை! வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை #ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் #SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். #TamilNaduSaysNoToSIR

Governance & Administration
𝕏 X
11 mo ago
1971
154
74,867 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏞 கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளைச்...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏞 கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளைச் சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிடுதல் - 🛣 நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஈரோடு, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருநெல்வேலி, அரியலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ. 1177.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலைப்பணிகள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் ரூ. 71.09 கோடி செலவில் இரயில்வே கடவுகளுக்கு மாற்றாகக் கட்டப்பட்டுள்ள இரண்டு சாலை மேம்பாலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறப்பு - 🚑 மருத்துவத் துறை சார்பில் 87 புதிய '108' ஆம்புலன்ஸ்களின் சேவையைத் தொடங்கி வைத்தல் - ☀ கிறித்தவர்கள், இசுலாமியர்களுக்கான பொதுக் கல்லறைத் தோட்டங்கள் மற்றும் கபர்ஸ்தான்கள் அமைக்க நிலம் ஒதுக்கி, உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்திடுவதற்கான ஆணைகள் வழங்குதல் மற்றும் 📜 #TNHB & நகர் ஊரமைப்பு இயக்ககத்துக்கு TNPSC மூலமாகத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல்.

Governance & Administration
𝕏 X
11 mo ago
1542
89
27,821 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Culture & Heritage

இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய...

இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு #எல்லைப்போராட்டத்_தியாகிகள்_நாள்-இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்

Culture & Heritage
𝕏 X
11 mo ago
1295
76
92,652 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Party & Elections

முரசொலியில் வந்துள்ள அறிவிப்பு! 'முரசொலி' பாசறைப் பக்கம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், முத்தமிழறிஞர் பதிப்பகம், இளம்பேச்சாளர்களைத்...

முரசொலியில் வந்துள்ள அறிவிப்பு! 'முரசொலி' பாசறைப் பக்கம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், முத்தமிழறிஞர் பதிப்பகம், இளம்பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி என @dmk_youthwing-இன் கொள்கை விதைக்கும் பணியில் அடுத்த முயற்சி! வாழ்த்துகள் @UdhayStalin 🖤♥ இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியமைத்த வரலாற்றைப் படைத்து, பவள விழா கடந்து நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம் இயக்கம், அரசியல் - சமூகம் - பொருளாதாரம் - பண்பாட்டுத் தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து பல்துறை அறிஞர்கள் 80 பேரின் எண்ணங்களைக் கட்டுரைகளாகப் பெற்று @MuthamilArignar உருவாக்கியுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு #திமுக75” எனும் அறிவுக் கருவூலத்தைக் கழகத்தினரும் - இளைஞர்களும் படித்து பயனுற வேண்டும்! கழகத் தோழர்களே… இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்! அனைவரது சிந்தனையிலும் கருப்பு சிவப்புக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றட்டும்! #அறிவுத்திருவிழா

Party & Elections
𝕏 X
11 mo ago
2696
207
130,541 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Industry & Investment

Ford returns to Tamil Nadu with full throttle! A powerful comeback that renews a long and trusted partnership, as #Ford invests Rs. 3,250 crore...

Ford returns to Tamil Nadu with full throttle! A powerful comeback that renews a long and trusted partnership, as #Ford invests Rs. 3,250 crore in Tamil Nadu to set up a Next Gen Engine Manufacturing Unit at its plant at Maraimalai Nagar. This major investment will create 600 direct jobs and build on Tamil Nadu’s robust automobile ancillary ecosystem. Ford’s decision to choose India’s automobile capital for production of such futuristic engines is another testimony for Tamil Nadu’s industrial prowess and its indispensable position in the global manufacturing supply chain! Welcome back ! முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்! ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது! தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!

Industry & Investment
𝕏 X
11 mo ago
3403
117
246,724 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Federalism & Centre–State Relations

இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற...

இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
11 mo ago
6408
1024
767,524 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Sports

Tamil Nadu’s 35th #Grandmaster Ilamparthi makes our reign on the 64 squares shine brighter! ♟️ He battles through brilliance to script history,...

Tamil Nadu’s 35th #Grandmaster Ilamparthi makes our reign on the 64 squares shine brighter! ♟️ He battles through brilliance to script history, earning his title and adding another jewel to Tamil Nadu’s crown of champions. As the sun rises higher on Tamil Nadu chess, the #DravidianModel will keep turning every promising move into a masterstroke. More TN GMs in the making!

Sports
𝕏 X
11 mo ago
2113
64
55,916 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Culture & Heritage

அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர்...

அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன்.

Culture & Heritage
𝕏 X
11 mo ago
2154
141
67,868 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Governance & Administration

நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. @CPR_VP அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன்....

நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. @CPR_VP அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! Met our Hon’ble Vice-President, Thiru @CPR_VP, on the historic soil of Madurai. A proud son of Tamil Nadu who has risen to one of the highest offices of our Republic, his wisdom and sense of duty will continue to bring honour to both Tamil Nadu and India!

Governance & Administration
𝕏 X
11 mo ago
2879
148
139,773 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Welfare Schemes

மலைச்சாரலால் குளிர்ந்த தென்காசி மாவட்ட மக்களின் மனம் குளிர்விக்கும் பத்து முத்தான அறிவிப்புகளை வெளியிட்டு, 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட...

மலைச்சாரலால் குளிர்ந்த தென்காசி மாவட்ட மக்களின் மனம் குளிர்விக்கும் பத்து முத்தான அறிவிப்புகளை வெளியிட்டு, 1,020 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். தென்காசி மாவட்டத்தில் நமது #DravidianModel அரசின் திட்டங்களில் இடம்பெறாத ஊரே இல்லை எனுமளவுக்கு நாம் செய்து வரும் சாதனைகளைப் பட்டியலிட்டேன். குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் இலக்கை அடையத் தொடங்கிய, #கலைஞரின்_கனவு_இல்லம் திட்டத்தின் ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டை அளித்த மகிழ்ச்சியோடு தென்மாவட்டப் பயணத்தைத் தொடர்கிறேன்...

Welfare Schemes
𝕏 X
11 mo ago
1574
105
30,702 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Welfare Schemes

நெடுநாள் கனவாக இருந்து, இப்போது நனவாகிவரும் சகோதரி பிரேமா அவர்களது இல்லத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். கல்வி கொடுத்த உயர்வில்...

நெடுநாள் கனவாக இருந்து, இப்போது நனவாகிவரும் சகோதரி பிரேமா அவர்களது இல்லத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். கல்வி கொடுத்த உயர்வில் பிறந்துள்ள இந்த மகிழ்ச்சி, இவர்களின் கனவு இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க வேண்டும்! #கலைஞரின்_கனவு_இல்லம் #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு https://t.co/Zdo2Rl5JxN

Welfare Schemes
𝕏 X
11 mo ago
3889
250
148,335 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Sports

கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, #AsianYouthGames2025-இல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை...

கோவில்பட்டி என்றால் இனிப்பு, ஹாக்கி மட்டுமல்ல, பளு தூக்குதலும் இனி நம் நினைவுக்கு வரும்படி, #AsianYouthGames2025-இல் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள தம்பி மகாராஜன் ஆறுமுகப்பாண்டியன் அவர்களுக்கு என் பாராட்டுகள்! முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைக்க, கோவில்பட்டிக்கு நான் வந்திருக்கும் வேளையில், இந்த இனிய செய்தியைப் பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், பயிற்சிக்கும் நமது #DravidianModel அரசு துணைநிற்கும்!

Sports
𝕏 X
11 mo ago
2385
56
57,055 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Party & Elections

🌄 களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது... 🌄 இன்று நாம் வகுத்த திட்டத்தையும், நிர்ணயித்துள்ள...

🌄 களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது... 🌄 இன்று நாம் வகுத்த திட்டத்தையும், நிர்ணயித்துள்ள இலக்கையும், எனது message-ஐயும் தமிழ்நாடெங்கும் உள்ள நமது கட்சியினரிடம் சென்று சொல்லுங்கள். ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என நம் ஒவ்வொருவரின் வாக்குச்சாவடியிலும் வெல்வோம்! ஏழாவது முறை வாகை சூடி வரலாறு படைப்போம்!

Party & Elections
𝕏 X
11 mo ago
2513
523
149,085 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Governance & Administration

#SIR in Tamil Nadu: We will resist disenfranchisement and defeat #VoteTheft. To carry out Special Intensive Revision just months before the...

#SIR in Tamil Nadu: We will resist disenfranchisement and defeat #VoteTheft. To carry out Special Intensive Revision just months before the election, and especially during the monsoon months of November and December, brings serious practical difficulties. To conduct SIR in a hasty and opaque manner is nothing but a conspiracy by the ECI to rob citizens of their rights and help the BJP. In Bihar, large numbers of women, minorities and people from SC and ST communities were removed from the electoral rolls, and the absence of transparency has fuelled serious suspicion in the public mind. Now the ECI has announced that #SIR will begin in Tamil Nadu from next week. Following the announcement, we held discussions with our alliance partners, and on that basis an all party meeting will be convened on 2 November to decide the next course of action. The right to vote is the foundation of democracy. Tamil Nadu will fight against any attempt to murder it, and Tamil Nadu will win. தமிழ்நாட்டிலும் #SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!

Governance & Administration
𝕏 X
11 mo ago
4903
356
358,149 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Health

On #WorldOccupationalTherapyDay, we salute the therapists who empower people to live with dignity and independence. Our #DravidianModel...

On #WorldOccupationalTherapyDay, we salute the therapists who empower people to live with dignity and independence. Our #DravidianModel Government furthers this mission through Vizhuthugal - One Stop Centre for differently abled persons, and the Centre for Excellence for Persons with ASD. Together, we are building a Tamil Nadu where care, inclusion, and opportunity reach every individual.

Health
𝕏 X
11 mo ago
1105
56
32,774 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Education

பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை...

பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரம்! அவர்களது எதிர்காலத்திற்கான திறவுகோல்! புதிய வாய்ப்புகளை உருவாக்கிடும் தொழில்முனைவோர்களாக உயர்ந்தும், பல்வேறு இந்திய நிறுவனங்களிலும் - பன்னாட்டு நிறுவனங்களிலும் CEO உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் அமர்ந்தும், நமக்குப் பெருமை தேடித்தரவுள்ள பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின் மாணவர்களை வாழ்த்திப் பட்டங்களை வழங்கினேன்! கல்வியால் தலைசிறந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் உலகளவில் உயர் பொறுப்புகளில் நிறைந்திட வேண்டும்! இன்னும் பல சாதனையாளர்கள் நம் மண்ணில் உருவாகிட எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திட வேண்டும்! @BIMTrichy

Education
𝕏 X
11 mo ago
1982
79
55,719 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Sports

#AsianYouthGames2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! 🥇🥇 பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில்...

#AsianYouthGames2025: தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு! 🥇🥇 பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன். கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்சினைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார். கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம். நேற்று நான் #BisonKaalamaadan-இல் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது. @SportsTN_ @Udhaystalin

Sports
𝕏 X
11 mo ago
2703
126
74,935 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Party & Elections

🛑 #SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில்...

🛑 #SIR எனும் சதிவலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்க பா.ஜ.க. ஆயத்தமாகிவிட்டது. மக்களின் வாக்குரிமையையே பறிக்கும் இந்த அநியாயம் ஏற்கெனவே பீகாரில் அரங்கேற்றப்பட்டதைப் பார்த்தோம். விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் இது. 🗳️ இதற்காக, வரும் 28-10-2025 மாமல்லபுரத்தில் நடைபெறும் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டத்தில் உடன்பிறப்புகளைச் சந்திக்க வருகிறேன். 🌄 ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நாம் உழைப்பை விதைத்தால்தான், மாநில அளவிலான வெற்றியை அறுவடை செய்ய முடியும்! வார்டு நிர்வாகி முதல் மாநில நிர்வாகி வரை ஒவ்வொருவரும் அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற உழைப்போம், ஏழாவது முறையும் கழக ஆட்சியை அமைப்போம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
11 mo ago
2581
280
79,247 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் ஆய்வுமேற்கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: அடையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் ஆய்வுமேற்கொண்டு தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்குதல், தமிழினத் தலைவர் கலைஞரின் பன்முக ஆளுமை குறித்த 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'A Sun from the South' வெளியீடு மற்றும் மருத்துவத் துறையின் #DPHPM இயக்கக அலுவலர்களின் பயன்பாட்டுக்காகப் புதிய வாகனங்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தல். @Anbil_Mahesh @Subramanian_ma

Governance & Administration
𝕏 X
11 mo ago
1620
99
28,825 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Environment & Climate

மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தொல்காப்பியப்...

மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவுக்கு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்திருக்கிறது நமது #DravidianModel அரசு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் இத்தகைய பசும் போர்வைகளால் சென்னையை அலங்கரிப்போம்! #TholkappiyaPoonga

Environment & Climate
𝕏 X
11 mo ago
1930
98
37,711 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41