DMKSocial

The Feed, page 48

Showing 941–960 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Rural Development

இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில்,...

இந்திய நாட்டின் அடித்தளமாக விளங்கும் ஊராட்சிகளின் #கிராம_சபை கூட்டத்தை, வரலாறு காணாத வகையில் சிறப்புற நடத்தியுள்ளோம்! இன்றைய கிராம சபையில், மக்களின் முதன்மைத் தொண்டனாகப் பெருமையோடு பங்கேற்று, அனைத்துக் கிராமங்களின் முதன்மையான 3 தேவைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும், #நம்மஊர்_நம்மஅரசு திட்டத்தை அறிவித்தேன்! தன்னிறைவடைந்த, இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளால் உலகத்தோடு இணைந்த கிராமங்களை வளர்த்தெடுப்பதே நமது #DravidianModel அரசின் இலக்கு!

Rural Development
𝕏 X
11 mo ago
1700
181
90,399 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Transport & Infrastructure

சாலைப் பாதுகாப்பு! உயிர்ப் பாதுகாப்பு! “உயிர்” அமைப்பின் வழியாக இதனை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்திடும் கோவை கங்கா...

சாலைப் பாதுகாப்பு! உயிர்ப் பாதுகாப்பு! “உயிர்” அமைப்பின் வழியாக இதனை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்திடும் கோவை கங்கா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் திரு. இராஜசேகரன் அவர்களது முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. சட்டதிட்டங்களை மதித்து - #RoadSafety-க்கும் முக்கியத்துவம் கொடுக்க அனைவரும் உறுதியெடுக்க வேண்டும்! இதற்கான விழிப்புணர்வை நாம் அனைவரும் ஏற்படுத்திட வேண்டும்!

Transport & Infrastructure
𝕏 X
12 mo ago
1516
81
44,765 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Industry & Investment

கோவை குறிச்சி #SIDCO தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 5 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன்! தங்க நகைப் பூங்கா,...

கோவை குறிச்சி #SIDCO தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 5 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன்! தங்க நகைப் பூங்கா, பெரியார் நூலகம், செம்மொழிப் பூங்கா, கிரிக்கெட் மைதானம் என #DravidianModel ஆட்சியில் கோவையின் உட்கட்டமைப்பு வேகமாக வளர்கிறது! https://t.co/HTwKv6QDrB

Industry & Investment
𝕏 X
12 mo ago
2275
99
50,024 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Transport & Infrastructure

கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தமிழ்நாட்டின் மிக நீளமான 4-வழித்தட உயர்மட்ட மேம்பாலமான #GDNaiduFlyover... தென்னிந்திய மான்செஸ்டரின்...

கோயம்புத்தூரில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தமிழ்நாட்டின் மிக நீளமான 4-வழித்தட உயர்மட்ட மேம்பாலமான #GDNaiduFlyover... தென்னிந்திய மான்செஸ்டரின் நுழைவுவாயிலாம் அவினாசி சாலையில் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்திருக்கும் #DravidianModel! https://t.co/oPlv7x9KzR

Transport & Infrastructure
𝕏 X
12 mo ago
3000
287
93,834 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Industry & Investment

#StartUp-இலும் சமூகநீதி என்பதுதான் #DravidianModel! பெண்கள், பட்டியல் - பழங்குடியினத்தவர், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் என அனைவரையும்...

#StartUp-இலும் சமூகநீதி என்பதுதான் #DravidianModel! பெண்கள், பட்டியல் - பழங்குடியினத்தவர், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் என அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்செல்லும் நமது புத்தொழில் பாய்ச்சலை உலகத்தோடு இணைக்கும் பாலம்தான் கோவையில் தொடங்கியுள்ள #GlobalStartUpSummit2025! பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்தொழில்கள் மட்டுமல்லாது; #MSME, #StartUp-களும் இணைந்ததே நமது #TrillionDollarEconomy கனவு!

Industry & Investment
𝕏 X
12 mo ago
1745
74
34,696 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Social Justice & Reservation

ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்....

ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என நமது #DravidianModel அரசின் சார்பில் அவரது நூற்றாண்டையொட்டி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டுமுதல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற நமது அரசின் மற்றொரு அறிவிப்பும் செயல்வடிவம் பெற்று, இம்மாத இறுதிக்குள் முழுமையடையத் தயாராக உள்ளது. எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத்துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும்!

Social Justice & Reservation
𝕏 X
12 mo ago
2069
90
56,604 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Oct
International & Diaspora

காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது!...

காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்! @tncpim #Gaza

International & Diaspora
𝕏 X
12 mo ago
4222
393
243,818 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Industry & Investment

Inaugurated the #AeroDefCon2025, a global confluence of 300+ enterprises, 1000+ delegates and 8000+ B2B meetings. With the Tamil Nadu Defence...

Inaugurated the #AeroDefCon2025, a global confluence of 300+ enterprises, 1000+ delegates and 8000+ B2B meetings. With the Tamil Nadu Defence Industrial Corridor, Rs. 23,000 crore investments, advanced UAV systems, frontier aerospace research and strong integration into global supply chains, Tamil Nadu is taking flight as the aerospace, space and defence innovation hub of India. #TNRising #DravidianModel

Industry & Investment
𝕏 X
12 mo ago
1971
143
63,572 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Oct
Transport & Infrastructure

2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று,...

2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது. கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் #GDNaidu அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்.

Transport & Infrastructure
𝕏 X
12 mo ago
4090
354
202,179 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Social Justice & Reservation

இன்றைய நிகழ்வுகளில், 🏫 ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 20 சமூகநீதி விடுதிகள், அறிவுசார்...

இன்றைய நிகழ்வுகளில், 🏫 ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 20 சமூகநீதி விடுதிகள், அறிவுசார் மையங்கள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்து, 📖 @tnschoolsedu சார்பில், திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய Journey of a Civilization: Indus to Vaigai நூலின் இந்தி மொழிபெயர்ப்பினை வெளியிட்டு, 🐘 ஆனைமலை புலிகள் காப்பத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பாகர் கிராமத்தைத் திறந்து வைத்து, 🏥 மருத்துவத்துறை சார்பில் மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 💷 @tnhrcedept திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கினேன்.

Social Justice & Reservation
𝕏 X
12 mo ago
1777
87
38,742 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Law & Order / Justice

The shameful act against Hon’ble CJI Thiru. B. R. Gavai inside the #SupremeCourt is an attack on the highest judicial office of our democracy and...

The shameful act against Hon’ble CJI Thiru. B. R. Gavai inside the #SupremeCourt is an attack on the highest judicial office of our democracy and deserves the strongest condemnation. The manner in which the Hon'ble CJI responded with grace, calm and magnanimity shows the strength of the institution, but that cannot make us take the incident lightly. The reason revealed by the attacker for his act shows how deeply the oppressive and hierarchical mindset still lingers in our society. We must nurture a culture that respects and protects our institutions and demonstrates maturity in our conduct.

Law & Order / Justice
𝕏 X
12 mo ago
10822
422
420,136 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Oct
Women & Child Welfare

கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே #அன்புக்கரங்கள்! இத்தகைய மகிழ்ச்சியை மற்ற குழந்தைகளுக்கும்...

கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே #அன்புக்கரங்கள்! இத்தகைய மகிழ்ச்சியை மற்ற குழந்தைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கிட வேண்டும்! “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!” @Subramanian_ma https://t.co/iskCJqcvo7

Women & Child Welfare
𝕏 X
12 mo ago
2006
126
47,400 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Federalism & Centre–State Relations

"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு...

"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்… இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்! அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்! உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்! ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்! தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்! ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்! உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்! #Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்! ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்! நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்! நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்! இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
1 yr ago
9595
866
674,521 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Oct
Party & Elections

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்!...

தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்! தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #சுயமரியாதை100 #PeriyarForever https://t.co/FM6WAAVyMR

Party & Elections
𝕏 X
1 yr ago
3292
330
89,569 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Party & Elections

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும்...

நமது ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் ஒற்றைச் சொல்லில் அடையாளப்படுத்த வேண்டும் என்றால், அதுதான் #சுயமரியாதை! அந்த உணர்வை நம்முள் விதைத்து, மானமும் அறிவும் உள்ள மக்களாக நம்மை மாற்றிய தந்தை பெரியாருக்காகத் திருச்சி சிறுகனூரில் அமையும் பெரியார் உலகத்துக்குத் தி.மு.க.வின் அனைத்து MLA, MP-களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவோம்! மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களே... உங்கள் பணிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்! திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான #DravidianModel தொடரும்! @AsiriyarKV #சுயமரியாதை100 #PeriyarForever

Party & Elections
𝕏 X
1 yr ago
2454
123
75,201 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Oct
Disaster Response & Relief

கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு...

கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்! #KarurTragedy

Disaster Response & Relief
𝕏 X
1 yr ago
5575
590
462,402 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Culture & Heritage

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! 👥 திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது #கீழடி அருங்காட்சியகம். 🌎...

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! 👥 திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது #கீழடி அருங்காட்சியகம். 🌎 வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன். 🖼️ கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. 🖼️ பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. 👑 கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது. 🪼பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது #DravidianModel அரசு! @TThenarasu #KeeladiMuseum

Culture & Heritage
𝕏 X
1 yr ago
3642
156
103,381 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Party & Elections

தவறு செய்தவர்கள் தவழ்ந்து சென்று தஞ்சமடையும் Washing Machine-தான் பா.ஜ.க. அங்கு சரணாகதி அடைந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களுக்குத்...

தவறு செய்தவர்கள் தவழ்ந்து சென்று தஞ்சமடையும் Washing Machine-தான் பா.ஜ.க. அங்கு சரணாகதி அடைந்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களுக்குத் துணைபோகும் கொள்கையற்ற கூட்டத்தைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, நாட்டுக்கே வழிகாட்டும் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நம்முடைய #DravidianModel ஆட்சி தொடரத் துணைநிற்கும் உங்கள் அனைவரின் உறுதியை, இராமநாதபுரம் மக்களிடம் கண்டேன்! #RamanathapuramVisit

Party & Elections
𝕏 X
1 yr ago
4329
373
178,683 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Party & Elections

மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில்...

மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்! அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள். எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்!

Party & Elections
𝕏 X
1 yr ago
6453
538
520,361 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Oct
Industry & Investment

புதிய சிந்தனைகளும் – புதிய முயற்சிகளும் வேர்விட்டு, உயரும் நம் தமிழ்நாடு! 🗞️ A startup revolution is taking shape in Tamil Nadu — where...

புதிய சிந்தனைகளும் – புதிய முயற்சிகளும் வேர்விட்டு, உயரும் நம் தமிழ்நாடு! 🗞️ A startup revolution is taking shape in Tamil Nadu — where entrepreneurs are no longer petitioners for opportunity, but partners of the State. Here’s my article in @the_hindu. Read how we are building the ‘innovation capital’. 🔗 https://t.co/HnghpJzC9H #DravidianModel

Industry & Investment
𝕏 X
1 yr ago
2201
113
56,645 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41