DMKSocial

The Feed, page 45

Showing 881–900 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Women & Child Welfare

#BiharElection2025: Lessons for everyone I congratulate veteran leader Thiru. @NitishKumar for his decisive victory and wish him well in...

#BiharElection2025: Lessons for everyone I congratulate veteran leader Thiru. @NitishKumar for his decisive victory and wish him well in fulfilling the expectations of the people of #Bihar. I also appreciate young leader Thiru. @yadavtejashwi for his tireless campaign. Election outcomes reflect welfare delivery, social and ideological coalitions, clear political messaging, and dedicated management until the last vote is polled. The leaders of the #INDIA bloc are seasoned politicians capable of reading the message and planning strategically to address emerging challenges. The result of this election does not whitewash the misdeeds and reckless actions of the ECI. The reputation of the #ECI is at its lowest point. The citizens of this country deserve a stronger and more impartial Election Commission, whose conduct of polls should inspire confidence even among those who do not win.

Women & Child Welfare
𝕏 X
10 mo ago
6836
446
992,515 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Industry & Investment

💻 கொளத்தூர் ஜெகந்நாதன் தெரு மற்றும் தங்கச் சாலையில் திறந்து வைத்துள்ள #முதல்வர்_படைப்பகம்-களுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர், அதிலும் குறிப்பாகப்...

💻 கொளத்தூர் ஜெகந்நாதன் தெரு மற்றும் தங்கச் சாலையில் திறந்து வைத்துள்ள #முதல்வர்_படைப்பகம்-களுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர், அதிலும் குறிப்பாகப் பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, @CMDA_Official சார்பில், 30 முதல்வர் படைப்பகங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 🏢 அதில் ஒன்றாக, #வடசென்னை_வளர்ச்சித்_திட்டம்-கீழ் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை இன்றைய #KolathurVisit-இல் திறந்து வைத்தேன்! 🚨 மேலும், பெரியார் நகர் அரசு மருத்துவமனை வளாகத்தினுள் புதிதாக K5 – பெரவள்ளூர் புறக் காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 🏣 பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து, 🏗 கொளத்தூர் காவல் துணை ஆணையர் அலுவலகம், இரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையக் கட்டுமானப் பணிகளையும் ஆய்வுசெய்தேன்!

Industry & Investment
𝕏 X
10 mo ago
1501
99
30,329 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Nov
Women & Child Welfare

🤰தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, 👩‍🍼பிறந்ததும் வளமாக வளர #ஊட்டச்சத்தை_உறுதிசெய், 🍛 வளர்ந்து பள்ளிக்குச் செல்லும்...

🤰தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி, 👩‍🍼பிறந்ததும் வளமாக வளர #ஊட்டச்சத்தை_உறுதிசெய், 🍛 வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும் சத்தான உணவைப் பெறக் #காலை_உணவுத்_திட்டம், 🤝 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு #அன்புக்கரங்கள், 🎓 உயர்கல்விக்கு உதவ #நான்_முதல்வன், #புதுமைப்பெண், #தமிழ்ப்புதல்வன், ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் #DravidianModel அரசின் சார்பில் எனது #ChildrensDay நல்வாழ்த்துகள்! உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்!

Women & Child Welfare
𝕏 X
10 mo ago
2531
134
82,311 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Women & Child Welfare

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 👩🏾‍✈ பணிக்குச் செல்லும் நம் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர்,...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 👩🏾‍✈ பணிக்குச் செல்லும் நம் பெண்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிகள், 👱🏽‍♂ கோவை - “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்குக் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, 🚼 சென்னை, இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தல் - 👗 திருவாரூர் மாவட்டத்தில் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் SCM Garments (தி சென்னை சில்க்ஸ் குழுமம்) ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான MoU - 🏬 காஞ்சிபுரத்தில் புனரமைக்கப்பட்டுள்ள அண்ணா பட்டு விற்பனை வளாகத்தைத் திறந்து வைத்தல் மற்றும் 💊 மருத்துவத்துறையில் பணியாற்றத் தேர்வானவர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல். @Subramanian_ma @geethajeevandmk @R_Gandhi_MLA @TRBRajaa

Women & Child Welfare
𝕏 X
10 mo ago
1288
75
26,022 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Nov
Health

மகளிர் நலமே சமூக நலம்! இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை...

மகளிர் நலமே சமூக நலம்! இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கான புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய நோய்கள் பரிசோதனை செய்யத் தொடங்கி வைத்துள்ள, மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவைத் திட்டத்தைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காஞ்சியில் தொடங்கும் இந்தத் திட்டம், மகளிரிடம் இருந்து பெறப்படும் ஆலோசனைகளுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் விரிவுபடுத்தப்படும். மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய் முதலியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து நம் பெண்களின் நலனைக் காக்கும் இந்தத் திட்டத்தை இந்தியா மொத்தமும் பின்பற்றத்தக்க வகையில் செயல்படுத்திக் காட்டுவோம்! #Women_Wellness_on_Wheels @Subramanian_Ma

Health
𝕏 X
10 mo ago
1713
112
32,885 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Law & Order / Justice

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🚓 இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைக்குச் செல்லும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் அவர்களின்...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🚓 இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் உயர்கல்வி பயின்று, வேலைக்குச் செல்லும் மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக 80 #PinkPatrol வாகனங்களின் சேவை தொடக்கம் - 🛣 விருதுநகர் மாவட்டம் சாட்சியாபுரத்தில் 61.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தைத் திறந்து வைத்து, நம் தாய்நிலம் தமிழ்நாடு என்ற பெயரைப் பெற உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த விருதுநகர் வீரத்தியாகி சங்கரலிங்கனாரின் திருப்பெயரினைச் சூட்டி; நெடுஞ்சாலைத்துறையில் #TNPSC மூலம் இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல் – 💰 தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 525 கலைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் 🏠 அர்ச்சகர்கள் மற்றும் @tnhrcedept திருக்கோயில் பணியாளர்களுக்குக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்!

Law & Order / Justice
𝕏 X
10 mo ago
1448
85
27,833 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Governance & Administration

#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு...

#SIR-ஐத் தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை! 💪 ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் #SIR எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - களப் போராட்டம் - 🛡 மறுபுறம், தொடங்கப்பட்டுவிட்ட #SIR பணிகளில் குளறுபடிகளைத் தடுத்திட #WarRoom #Helpline - களப் போராட்டத்தில், இன்று தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும் - கண்டன முழக்கங்களை எழுப்பியும் #SIR எனும் பேராபத்துக்கு எதிராகக் கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்! தொடர்ந்து செயலாற்றுவோம்! நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்!

Governance & Administration
𝕏 X
10 mo ago
3269
380
91,087 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Welfare Schemes

முதுமையில் தனிமை கூடாதென, கூடி மகிழ்ந்து நலம்பெற #அன்புச்சோலை! https://t.co/cNOEmZx9Ul

முதுமையில் தனிமை கூடாதென, கூடி மகிழ்ந்து நலம்பெற #அன்புச்சோலை! https://t.co/cNOEmZx9Ul

Welfare Schemes
𝕏 X
10 mo ago
3222
137
112,805 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Urban Development

Neo #TIDEL பூங்கா, கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமரவாதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட ஆறு புதிய அறிவிப்புகளுடன், 766 கோடி...

Neo #TIDEL பூங்கா, கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமரவாதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட ஆறு புதிய அறிவிப்புகளுடன், 766 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்குப் புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் மக்கள் அளித்த வரவேற்பால் பூரித்துப் போனேன்! இந்திய மாநிலங்களைக் கடந்து, உலக அளவிலும் அங்கீகாரம் பெறும் #DravidianModel அரசின் மக்கள் நலத் திட்டங்கள் 2026 தேர்தல் வெற்றியுடன் இன்னும் வீரியத்துடன் தொடரும். ஆனால், அதற்கு முன்பாக நம்முன் உள்ள பணி: #SIR-இல் இருந்து நம் வாக்குரிமையைப் பாதுகாப்பதே! இதுகுறித்து தொடர்ந்து பேசவேண்டும், விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், விழிப்போடு இருக்க வேண்டும்!

Urban Development
𝕏 X
10 mo ago
1778
81
47,961 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Transport & Infrastructure

A city’s living standards are reflected in the reliability and quality of its public transport. இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து...

A city’s living standards are reflected in the reliability and quality of its public transport. இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள @MtcChennai-க்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு @sivasankar1ss அவர்களுக்கும் பாராட்டுகள்! #LastMileConnectivity, நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!

Transport & Infrastructure
𝕏 X
10 mo ago
2471
80
69,584 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Governance & Administration

S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? #SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்! S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்:...

S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? #SIR குறித்து எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்குப் பதில்! S.I.R குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உதவி எண்: 08065420020 #தமிழ்நாடு_தலைகுனியாது #தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லும் https://t.co/LPjsNsHJqv

Governance & Administration
𝕏 X
11 mo ago
5122
462
188,760 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Governance & Administration

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள #SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர்...

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள #SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் #SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும், இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன். சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது! அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்!

Governance & Administration
𝕏 X
11 mo ago
1802
93
45,780 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Culture & Heritage

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு அறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும் தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது! கருப்பும் - சிவப்பும் - நீலமும் ஒன்றிணைந்து நிற்கும்போது எப்படிப்பட்ட எதிரியும் இங்கு வாலாட்ட முடியாது என உணர்த்தும் கொள்கை மேடையாக #திமுக75_அறிவுத்திருவிழா-வை ஏற்பாடு செய்த @dmk_youthwing செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கும், துணைநின்ற இளைஞரணியின் தம்பிமார்களுக்கும் என் பாராட்டுகள்! திராவிடம் வெல்லும், மீண்டும் மீண்டும் வெல்லும்! அதைக் காலம் சொல்லும்!

Culture & Heritage
𝕏 X
11 mo ago
1651
116
31,367 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Employment & Skill Development

"என்ன செய்துவிட்டது #நான்_முதல்வன்?" 👇🏾 Watch: #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு https://t.co/BtLHdHARtt

"என்ன செய்துவிட்டது #நான்_முதல்வன்?" 👇🏾 Watch: #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு https://t.co/BtLHdHARtt

Employment & Skill Development
𝕏 X
11 mo ago
2225
142
42,756 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Party & Elections

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! அண்மைக்காலமாக பா.ஜ.க. பெற்று வரும் தேர்தல் வெற்றிகளின் உண்மைத்தன்மை குறித்து மீண்டுமொரு முறை பெரும் ஐயம் எழுகிறது. ஹரியானாவில் நடைபெற்றுள்ள வாக்குத் திருட்டு குறித்து எனது சகோதரரும், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. @RahulGandhi அவர்கள் வெளியிட்டுள்ள 'பச்சையான ஆதாரங்கள்' அதிர்ச்சியூட்டுகின்றன. வெறுப்பினை மூட்டி, பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆகையால் தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. இதன் அடுத்தகட்டம்தான் #SIR என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும், இன்று வெளியாகியுள்ள #HaryanaFiles-உமே சான்று! இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் மன்றத்தில் உரிய பதில் சொல்லி, இந்தியாவில் மக்களாட்சி முழுவதும் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என நம்பிக்கையைத் துளிர்க்க வைக்குமா? #VoteTheft #HaryanaFiles

Party & Elections
𝕏 X
11 mo ago
5713
260
130,902 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Governance & Administration

The horror of #HaryanaFiles: people’s mandate being stolen by BJP Once again, serious doubts are being raised over the authenticity of the BJP’s...

The horror of #HaryanaFiles: people’s mandate being stolen by BJP Once again, serious doubts are being raised over the authenticity of the BJP’s recent election victories. The strong evidence released by my brother and Hon’ble LoP Thiru. @RahulGandhi on #VoteTheft in #Haryana is shocking. The BJP came to power in 2014 by thriving on hate propaganda and false promises. Since then, people have stopped believing in its divisive politics. Now, going beyond electoral malpractice, they are tampering with electoral rolls and stealing the mandate of the people, as has come to light. What follows next is even more alarming, the organised disenfranchisement of citizens under the guise of #SIR. Bihar stands as proof, and so do the explosive #HaryanaFiles revealed today. It is painful that the #ECI, which is supposed to be an independent body and functioning with the hard-earned money paid as taxes by the people of this country, has offered no explanation to citizens despite such a huge amount of evidence released so far. Will it answer to the people and revive the faith that democracy in India has not yet been fully buried?

Governance & Administration
𝕏 X
11 mo ago
13830
415
249,438 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Sports

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏑 #HeroAsianChampionsTrophy2023-ஐ வெற்றிகரமாக நடத்திக் காட்டிய @SportsTN_, அடுத்ததாக 24 நாடுகள் பங்குபெறும் FIH...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🏑 #HeroAsianChampionsTrophy2023-ஐ வெற்றிகரமாக நடத்திக் காட்டிய @SportsTN_, அடுத்ததாக 24 நாடுகள் பங்குபெறும் FIH ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பையைச் சென்னை & மதுரையில் நடத்தப்போகிறது. இதற்கான FIH Hockey Men’s Junior World Cup 2025 வெற்றிக்கோப்பையினை அறிமுகம் செய்துவைத்தல் - 🌇 அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் சமவாய்ப்பை ஏற்படுத்திடும் நமது முயற்சிகளின் தொடர்ச்சியாக வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் Mini #TIDEL பூங்காக்களைத் திறந்து வைத்தல் – 🏥 மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையைத் திறந்து வைத்தல் மற்றும், 💵 @TNHRCEDept திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பெறும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகைக்கான வரைவோலைகள் வழங்குதல்! @UdhayStalin @Subramanian_Ma @TRBRajaa @PKSekarBabu

Sports
𝕏 X
11 mo ago
1792
79
30,144 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Law & Order / Justice

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட...

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்!

Law & Order / Justice
𝕏 X
11 mo ago
3547
421
302,322 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Education

ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன்...

ஆயிரம் கோடியைத் தொட்டது #நம்மஸ்கூல்_நம்மஊருபள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி! இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது #DravidianModel அரசு. அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான #STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்! நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள். இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள மாண்புமிகு @Anbil_Mahesh மற்றும் #NSNOP அறக்கட்டளைத் தலைவர் திரு. வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள். We rise higher only when we reach back and lift someone else with us.

Education
𝕏 X
11 mo ago
2083
113
88,986 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Industry & Investment

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்களது இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்‌ஷா இணையரை...

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்களது இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் பிரகதீஸ்வரன் - மது பிரதிக்‌ஷா இணையரை வாழ்த்தினேன்! பின்னர், தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள #SIPCOT-ஐ டிசம்பர் மாதத்தில் திறக்கும்படி விரைந்து பணிகளை முடித்திட அறிவுறுத்தியதோடு, தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வுசெய்தேன்.

Industry & Investment
𝕏 X
11 mo ago
1616
86
33,426 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41