DMKSocial

The Feed, page 44

Showing 861–880 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Agriculture & Farmer Welfare

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும்...

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின. உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள். நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என திரு. பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்? கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று திரு. பழனிசாமி நினைக்கிறாரா? மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த திரு. பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா? உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!

Agriculture & Farmer Welfare
𝕏 X
10 mo ago
0
326
96,347 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Transport & Infrastructure

Tamil Nadu’s growth needs fair treatment by the Union government! Hon’ble Prime Minister Thiru. @narendramodi, I have repeatedly sought...

Tamil Nadu’s growth needs fair treatment by the Union government! Hon’ble Prime Minister Thiru. @narendramodi, I have repeatedly sought #MetroRail for #Coimbatore and #Madurai in every memorandum and my meeting with you. As one of the strongest contributors to our nation’s growth, the people of Tamil Nadu are deeply disappointed by the rejection of these proposals. These are vital infrastructure projects for our State’s growth engines. And Tamil Nadu’s development is India’s development. We look forward to objectivity and fair treatment in contributing to it. I stand ready to meet you with my team to explain their critical importance. தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி! அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்! அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்! @MoHUA_India @PMOIndia

Transport & Infrastructure
𝕏 X
10 mo ago
0
376
181,013 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Federalism & Centre–State Relations

#AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம்...

#AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்... அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!

Federalism & Centre–State Relations
𝕏 X
10 mo ago
0
257
157,478 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Welfare Schemes

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் #உலக_மீனவர்_நாள் வாழ்த்துகள்! மீனவர் நல மாநாடு, மீன்பிடித் தடைக்கால நிவாரணம்...

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் #உலக_மீனவர்_நாள் வாழ்த்துகள்! மீனவர் நல மாநாடு, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவிகள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், தூண்டில் வளைவுகள் என உங்கள் கோரிக்கைகள் அத்தனையையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக என்றும் நமது #DravidianModel அரசு தொடரும்! #WorldFisheriesDay

Welfare Schemes
𝕏 X
10 mo ago
0
95
48,553 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Federalism & Centre–State Relations

☀️ மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்! ☀️ சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக்...

☀️ மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்! ☀️ சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்! குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால், * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. * அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது! * சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை. * மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம். -என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது. *காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம், *சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம். அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும். தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்! #StateRights #TrueFederalism #SupremeCourt #Constitution

Federalism & Centre–State Relations
𝕏 X
10 mo ago
0
324
94,887 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Federalism & Centre–State Relations

☀️ Our fight for State rights and true federalism will continue! ☀️ No rest until amending the Constitution to fix timelines for Governors...

☀️ Our fight for State rights and true federalism will continue! ☀️ No rest until amending the Constitution to fix timelines for Governors to clear Bills! The Supreme Court’s opinion in its answer to the Presidential Reference will have no impact on the April 8, 2025 judgment in the case of State of Tamil Nadu v. Governor of Tamil Nadu. In fact, the Bench tendering the advisory opinion has reaffirmed that: 1️⃣ The elected government should be in the driver’s seat, and there cannot be two executive power centres in the State. 2️⃣ Constitutional functionaries must act within the constitutional framework — never above it. 3️⃣ The Governor has no fourth option to kill the Bill or exercise a pocket veto (as was done by the TN Governor). He has no option to withhold the Bill simpliciter. 4️⃣ The Governor cannot indefinitely delay acting on Bills. In cases of prolonged, unexplained, and indefinite delay by the Governor in considering a Bill, States can approach the Constitutional Courts and hold Governors accountable for their deliberate inactions. The 9-Judge Bench in Ahmedabad St. Xavier’s College Society v. State of Gujarat (1974) 1 SCC 717 (Para 109) clearly held: “Advisory opinion of the Court would have no more effect than the opinion of the law officers.” The Supreme Court’s opinion yesterday has again rejected the Tamil Nadu Governor’s (a) theory of pocket veto, (b) assertion that Bills can be killed or buried by the Raj Bhavan. Through our legal battle, we have now compelled Governors, including the Tamil Nadu Governor, who are at odds with the elected government across the country, to work in line with the elected government and be accountable for their deliberate inaction in response to the people’s will through legislation. It has also empowered Constitutional Courts to review their actions if they obstruct the passage of Bills indefinitely, and they cannot hide behind Article 361. I believe that no constitutional authority can claim to be above the Constitution. When even a high Constitutional Authority breaches the Constitution, the Constitutional Courts are the only remedy, and the doors of the Court must not be closed. This would undermine the rule of law in our constitutional democracy and encourage breaches of the Constitution by Governors acting with political intent. I have promises to keep, and until our people’s will in Tamil Nadu is fulfilled through legislation, we will ensure that every constitutional apparatus functions in this country in accordance with the Constitution. #StateRights #TrueFederalism #SupremeCourt #Constitution

Federalism & Centre–State Relations
𝕏 X
10 mo ago
0
476
328,965 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Education

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🎖 தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், மரபுத் தமிழ்ப் பிரிவில் முனைவர் தெ. ஞானசுந்தரம் ஆய்வுத் தமிழ்ப் பிரிவில்...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், 🎖 தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், மரபுத் தமிழ்ப் பிரிவில் முனைவர் தெ. ஞானசுந்தரம் ஆய்வுத் தமிழ்ப் பிரிவில் முனைவர் இரா. காமராசு படைப்புத்தமிழ்ப் பிரிவில் ‘கலாப்ரியா’ (எ) திரு. க. சோமசுந்தரம் ஆகியோருக்கு #இலக்கிய_மாமணி விருதுகள் வழங்குதல், 👨🏾‍🏭 உயர்கல்வித்துறை சார்பில், #4IR-க்கு நம் இளைஞர்களை ஆயத்தப்படுத்தும் வகையில் டாடா நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 44 Polytechnic-களைத் திறன்மிகு மையங்களாக (Centres of Excellence) உயர்த்த MoU, 🏫 கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் திறப்பு, பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும், 🎗 @CMDA_Official சார்பில் ஆவடி, அன்னனூர், கோணாம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள், புழல் - மேட்டுப்பாளையத்தில் மேம்படுத்தப்பட்ட கால்பந்து மைதானம் மற்றும் சேத்துப்பட்டில் மேம்படுத்தப்பட்ட சிறிய கால்பந்து மைதானம் என 4 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல்.

Education
𝕏 X
10 mo ago
0
57
20,543 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! ...

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! 🗡️ கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, 🗡️ #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, 🗡️ மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, 🗡️ நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, 🗡️ தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு 🛡️ என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

Federalism & Centre–State Relations
𝕏 X
10 mo ago
0
145
41,936 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Agriculture & Farmer Welfare

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு...

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
10 mo ago
0
522
193,305 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Social Justice & Reservation

நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை...

நம் உரிமைக்குரலின் உதயம்! இந்த மண்ணின் மைந்தர்களுக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அதிகாரத்தில் உரிய பங்கைப் பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்டியே தீருவது என்ற #NonBrahminManifesto-வைச் செயல்படுத்திக் காட்ட, நம் தாய் அமைப்பான நீதிக்கட்சி தலைதூக்கிய நாள் இன்று. நீதிக்கட்சியின் நீட்சியே நம் #DravidianModel ஆட்சி எனத் தொடர்ந்து மெய்ப்பிப்போம்! சூழும் ஆரிய சூழ்ச்சிகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிவோம்! #JusticeParty

Social Justice & Reservation
𝕏 X
10 mo ago
0
158
141,708 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Nov
Other

🖤❤️

🖤❤️ https://t.co/KGkIWaj3yR

Other
𝕏 X
10 mo ago
0
223
80,556 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Nov
Transport & Infrastructure

'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும்...

'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்! #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும் The Union BJP government has denied Metro Rail for ‘Temple City’ Madurai and for ‘South India’s Manchester’, Coimbatore, on flimsy grounds. A government exists to serve people without bias. Yet the Union #BJP treats #TamilNadu’s democratic choice as a reason to take revenge. Pushing such a political custom, in which BJP ruled states get Metros for smaller Tier II cities while opposition ruled States are deprived, is a disgraceful approach. Tamil Nadu, the land of #SelfRespect, will never accept such a distortion of federal principles. They attempted to stall the #Chennai Metro, and we overcame those malicious attempts and kept the project progressing. With the same determination, we will secure the #MetroRail that #Madurai and #Coimbatore need for their future growth. Tamil Nadu will fight! Tamil Nadu will win!

Transport & Infrastructure
𝕏 X
10 mo ago
0
1063
1,188,004 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Agriculture & Farmer Welfare

கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள் Hon'ble Prime Minister Thiru. @narendramodi, Tamil...

கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள் Hon'ble Prime Minister Thiru. @narendramodi, Tamil Nadu has recorded a bumper harvest this year and in view of the #NorthEastMonsoon, I am making following urgent requests to you. I hope you will consider them favourably ahead of your visit to Coimbatore. 1️⃣ Necessary orders may be issued to allow Tamil Nadu to revise the target of 16 Lakh MT of rice for current Kharif 2025-2026 season to the actual production and procurement levels for the (Kharif) season. 2️⃣ After the central teams came to Tamil Nadu for assessing the moisture content on 25.10.2025, orders have not yet been issued by the DFPD, GoI for relaxing the moisture content from 17 % to 22%. This needs to be done urgently. 3️⃣ The existing packing size of 25 kg of Fortified Rice Kernels may be permitted to be increased to 50 kg, and the sample lot size may be increased from 10 MT to 25 MT. These requests are urgent in nature and are placed in the interest of the paddy #farmers of Tamil Nadu.

Agriculture & Farmer Welfare
𝕏 X
10 mo ago
2808
384
341,211 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Culture & Heritage

திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்... 🔷 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது! 🔷 வ.உ.சி. பெயரில் 5 லட்ச...

திராவிட மாடல் அரசும் வ.உ.சிதம்பரனாரும்... 🔷 கப்பலோட்டிய தமிழரின் 150-ஆவது பிறந்தநாள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது! 🔷 வ.உ.சி. பெயரில் 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையுடன் சிறப்பு விருது அறிவிப்பு! 🔷 கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வ.உ.சி. அவர்களின் சிலை திறப்பு & அவர் சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டது! 🔷 கோவை வ.உ.சி. பூங்காவில் திருவுருவச் சிலை திறப்பு! 🔷 வ.உ.சி. அவர்களின் 150-ஆவது ஆண்டில் நெல்லை, தூத்துக்குடியில் உருவாகும் அனைத்துக் கட்டடங்களுக்கும் அவரது பெயர் சூட்டல்! 🔷 வ.உ.சி. அவர்களின் 85-ஆவது நினைவு நாள் 'தியாகத் திருநாள்'! 🔷 தூத்துக்குடி மேற்கு பெரிய காட்டன் சாலை வ.உ.சி. சாலை எனப் பெயர் மாற்றம்! 🔷 வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நகரும் புகைப்படக் கண்காட்சி! 🔷 வ.உ.சி. பன்னூல் திரட்டு, வ.உ.சி. திருக்குறள் உரை, வ.உ.சி. 150 சிறப்பு மலர் & மடிப்பேடு வெளியீடு! 🔷 வ.உ.சி. அவர்கள் எழுதிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு சிறப்பு இணையப் பக்கம் உருவாக்கம்! 🔷 1908 திருநெல்வேலி எழுச்சி-க்கு நினைவுச் சின்னம் அறிவிப்பு! - எனத் தம் உயிரையும் உணர்வையும் தமிழுக்காகவும் இந்திய விடுதலைக்காகவும் அளித்த தியாகத் திருவுருவான #வஉசி அவர்களின் பெருமையை அனைத்து வகையிலும் போற்றி வரும் நமது #DravidianModel அரசின் சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கிப் போற்றுகிறேன்! வாழ்க வ.உ.சி.! #VOC #VOChidambaranar #சிதம்பரனார்

Culture & Heritage
𝕏 X
10 mo ago
1503
88
35,476 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Party & Elections

When leaders learn, generations dream bigger! என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி...

When leaders learn, generations dream bigger! என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி @Anbil_Mahesh-க்கு வாழ்த்துகள்! கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும் - குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ். மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை - வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் 'Role Model' ஆகிவிட்டார்!

Party & Elections
𝕏 X
10 mo ago
1947
113
132,736 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Transport & Infrastructure

இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! 🗞️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில்...

இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! 🗞️ இந்தச் செய்தியைக் காலையில் தினத்தந்தியில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன். ☀️ நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். 🤝 மாலை, மாண்புமிகு அமைச்சர் @evvelu அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது #DravidianModel அரசு துணை நிற்கும்!

Transport & Infrastructure
𝕏 X
10 mo ago
4732
216
267,881 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Social Justice & Reservation

நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை...

நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மாண்புமிகு @Subramanian_Ma அவர்களுக்கு வாழ்த்துகள்! நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! @Govichezhian

Social Justice & Reservation
𝕏 X
10 mo ago
1534
71
33,110 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Disaster Response & Relief

#திமுக75_அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்! வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம்,...

#திமுக75_அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்! வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது. குறிப்பாக, 'Carry on, but remember' எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன். வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள திரு. @Udhaystalin மற்றும் அவரது @dmk_youthwing தம்பிமார்களுக்கு மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!

Disaster Response & Relief
𝕏 X
10 mo ago
1694
101
31,900 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Welfare Schemes

In any democracy, institutions may be bent or captured by those in power, but the press must remain the force that keeps democracy alive. On...

In any democracy, institutions may be bent or captured by those in power, but the press must remain the force that keeps democracy alive. On #NationalPressDay, I commend every journalist who refuses to bow to the authoritarianism of the Union BJP government and continues to expose its failures, its acts of corruption and its deceit with courage.

Welfare Schemes
𝕏 X
10 mo ago
2100
243
192,304 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Nov
Transport & Infrastructure

🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும்...

🍲 இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்! 🚻 சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும்! 🤝 தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே என் கனவு. அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும். 🧹 மக்களும் Self Discipline கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். நமக்காக உழைக்கும் #SanitaryWorkers-க்கு அதுதான் நாம் செலுத்தும் மிகப்பெரும் நன்றிக்கடன்!

Transport & Infrastructure
𝕏 X
10 mo ago
3039
283
84,680 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41