
#பொருநை_தமிழர்_பெருமை! அனைவரும் வருக… பெருமிதம் கொள்க! #PorunaiMuseum
#பொருநை_தமிழர்_பெருமை! அனைவரும் வருக… பெருமிதம் கொள்க! #PorunaiMuseum https://t.co/21RuY8KmGF
All
Showing 801–820 of 9,209 posts

#பொருநை_தமிழர்_பெருமை! அனைவரும் வருக… பெருமிதம் கொள்க! #PorunaiMuseum https://t.co/21RuY8KmGF

கொளத்தூர் தொகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்களது இல்லத் திருமண நிகழ்வுகளை நடத்திக்கொள்ள, அனைத்து வசதிகளும் கொண்ட 'பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை'யைத் திறந்து வைத்து, 15 இணைகளுக்குத் திருமணம் நடத்தியும் வைத்தேன்! மேலும், GKM காலனியில் புதிய #ModelSchool கட்டுவதற்கும், பெரியார் நகரில் #அமுதம் அங்காடி கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினேன். உயர்தர மருத்துவமனை, பூங்கா, #முதல்வர்_படைப்பகம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், தரமான மாநகராட்சிப் பள்ளிகள் என அனைத்திலும் BEST-ஆகக் கொளத்தூரை உயர்த்தி இருக்கிறோம்! 234 தொகுதிகளையும் இதேபோல உயர்த்திட உழைத்து வருகிறோம்! #KolathurVisit

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி! #VBGRAMG திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்பது ஏமாற்று வேலையே! 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே, பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது. தற்போது, ஒன்றிய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது. திட்டச் செலவில் 40% தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, #GST வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை! கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த #MGNREGA திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் திருவாளர் பழனிசாமி அவர்கள் வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்!


Hon'ble PM Thiru. @NarendraModi, Tamil Nadu is the backbone of India’s export economy. Punitive US tariffs are hitting this bedrock hard, disrupting production, orders and livelihoods across our industrial regions. Urging immediate bilateral resolution to protect Tamil Nadu’s exporters and India’s global manufacturing strength.



#ClimateChange: Policy, Action – இரண்டிலும் நாட்டுக்கு வழிகாட்டும் தமிழ்நாடு! துறையின் பெயரிலேயே காலநிலை மாற்றத்தைச் சேர்த்தது தொடங்கி, முன்னெப்போதும் இல்லாத அளவில் 500 கோடி ரூபாயை ஒதுக்கிப் பல இயக்கங்களைச் செயல்படுத்துவது வரை #DravidianModel அரசின் #ClimateChange செயல்பாடுகள்தான் இந்தியாவுக்கு Blueprint! 2070-க்கு முன்னரே #NetZeroEmission இலக்கை அடைய வேண்டும் என அனைத்து நிலைகளிலும் உழைத்து வருகிறோம்! அதனால்தான் ஐ.நா.வே நம்மைப் பாராட்டியுள்ளது! இது ஒரு நீண்டகாலப் பயணம் என்றபோதிலும், நமது முயற்சிகளின் விளைவாகப் பல உடனடிப் பயன்கள் மூன்றாண்டுகளாகக் கிடைத்து வருகின்றன. எதிர்காலச் சந்ததியினர் வாழப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்ய, தமிழ்நாடு காலநிலை மாற்ற ஆட்சி மன்றக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் நமது அரசு உறுதியாக உள்ளது! @TThenarasu @SupriyaSahuIAS #TamilNaduGoverningCouncilonClimateChange

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? #ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி? #MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ADMK எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, “அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்!


In the National Herald case, the judiciary has once again exposed the Union BJP government’s misuse of central agencies to target opposition leaders. Without any legal basis, such cases are pushed only to harass and malign political rivals. With truth on their side and no fear, CPP Chairperson Respected Tmt. Sonia Gandhi and Hon'ble LoP, my brother Thiru. @RahulGandhi stand vindicated, even as the BJP remains hell bent on hounding the Gandhi family for standing firm on secularism and constitutional values which it cannot tolerate. Time and again, this vendetta driven approach is tarnishing the credibility of premier investigative institutions and reducing them to just being instruments of political intimidation.


தமிழ்நாடு ஹஜ் இல்லம் - மார்ச் 3 அன்று அறிவித்தேன்; இன்று அடிக்கல் நாட்டியிருக்கிறேன்! விரைந்து பணிகளை முடித்துத் திறந்து வைப்போம்! #HajjTN https://t.co/lAFTN7FNRv



முத்தமிழ்ப் பேரவை -2025 விருதாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! கலை என்பது சமூக மேன்மைக்கே! அத்தகைய கலைப்பணியை மேலும் சிறப்பாகத் தொடரும் ஊக்கத்தை இந்த விருதுகள் உங்களுக்கு வழங்கிட விழைகிறேன்! முத்தமிழிலும் மூழ்கி முத்தெடுத்து, சமூகத்தைச் செப்பனிட்ட தலைவர் கலைஞரின் வழியிலான #DravidianModel அரசு என்றும் கலைஞர்களைப் போற்றிப் பாதுகாக்கும்!



மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! 🔨 தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்! 🔨100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்! 🔨 இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்! 🔨 பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! #ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!


#Mission2026: #DravidianModel2Point0 https://t.co/BAwjqLf1BR

இது தமிழ்நாடு! எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே… #Youth4DMK2026 https://t.co/AyB0eVgbT8

Mass காட்டிய இளைஞரணி! #DravidianModel 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியது! எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் கழகத்தின் இளம் கொள்கைப் பட்டாளமே புறப்படு! ஓய்வென்பதை மறந்து உழைத்திடு! 2026-இல் கழகத்தின் வெற்றிச் செய்தியை அளித்திடு! @UdhayStalin @dmk_youthwing #Youth4DMK2026

மலை நகரில் மாலை சந்திப்போம்! Young Dravidians! Prepare for Glory! #Youth4DMK2026 https://t.co/Pq7bwKOzhQ

#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்! #DravidianModel https://t.co/bP51FIkzkW

தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, “I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். நாளை திருவண்ணாமலைக்கு வரும் @dmk_youthwing வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome! #Youth4DMK2026 @Udhaystalin

வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! 🌄 பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும் GSDP வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் #DravidianModel! 🌄 கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான்! சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி! 🌄 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம்! மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி! 🌄 நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்! 🌄 தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி! 🌄 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்! இது உறுதி!


திராவிட மாடலால் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்: மெய்சிலிர்க்க வைத்த மேடை பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் முன்னிற்பது, பேருந்துகளை இயக்குவது, #ISRO-வில் செயற்கைக்கோளை ஏவுவது, மருத்துவமனைகளில் உயிர்காப்பது, கல்வியிலும் விளையாட்டிலும் சாதிப்பது, அரசின் உயர் பொறுப்புகளை நிர்வகிப்பது என எங்கும் நீக்கமற நிறைந்து, தமிழ்நாடு எனும் சக்கரத்தைச் சுழல வைப்பது பெண் எனும் பேராற்றலே! #DravidianModelEra என்பது மகளிர் முன்னேற்றத்தின் Golden Era என வரலாறு பதிவு செய்யும்! என் சகோதரிகளுக்கான எனது திட்டங்கள் #DravidianModel 2.0-விலும் தொடரும்! #WomenEmpowerment #GirlPower


"திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்; தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்! நமது #DravidianModel அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம். பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே #புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம். பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!


சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது! காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக @UNEP அமைப்பின் #ChampionsOfTheEarth விருதினை வென்றுள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் & வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு @supriyasahuias அவர்களுக்கு எனது பாராட்டுகள்! ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், Plastic பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். #ClimateChange @UN #GreenTamilNaduMission #TNGCC
