DMKSocial

The Feed, page 40

Showing 781–800 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Agriculture & Farmer Welfare

#TiruvannamalaiAgriExpo: உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி! மண்ணுக்கேற்ற பயிர்கள், துல்லியமான பாசன முறைகள், நவீன...

#TiruvannamalaiAgriExpo: உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி! மண்ணுக்கேற்ற பயிர்கள், துல்லியமான பாசன முறைகள், நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை நமது உழவர் பெருமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான கண்காட்சிதான் இது! உழவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, விளைச்சலிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேற்றம் காண வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அண்மையில் பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை எடுத்துச் சொல்லி, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன். #DravidianModel

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 mo ago
0
80
18,865 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Culture & Heritage

குறள்நெறி காட்டிய வள்ளுவருக்கும், குறளோவியம் தீட்டிய கலைஞருக்கும் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன்!

குறள்நெறி காட்டிய வள்ளுவருக்கும், குறளோவியம் தீட்டிய கலைஞருக்கும் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தேன்! https://t.co/CqEbtgXUiF

Culture & Heritage
𝕏 X
9 mo ago
0
104
21,208 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Party & Elections

தமிழ்நாடு எனும் தனிக்காட்டு ராஜா! இங்க பா.ஜ.க.வும் அடிமைகளும் எத்தனை அந்தர் பல்டி அடிச்சாலும், அவங்க பாச்சா பலிக்காது! #DravidianModel

தமிழ்நாடு எனும் தனிக்காட்டு ராஜா! இங்க பா.ஜ.க.வும் அடிமைகளும் எத்தனை அந்தர் பல்டி அடிச்சாலும், அவங்க பாச்சா பலிக்காது! #DravidianModel https://t.co/rBLmmUI7YH

Party & Elections
𝕏 X
9 mo ago
0
167
36,180 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Rural Development

#DravidianModel உருவாக்கிடும் வாய்ப்புகளால் வளர்ச்சிப் பாதையில் கள்ளக்குறிச்சி! புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையங்கள்,...

#DravidianModel உருவாக்கிடும் வாய்ப்புகளால் வளர்ச்சிப் பாதையில் கள்ளக்குறிச்சி! புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையங்கள், தரமுயரும் மருத்துவமனைகள், விளையாட்டு வளாகம், உளுந்தூர்பேட்டையில் விறுவிறுவென எழுந்து வரும் #SIPCOT எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேவைகள் கடந்த நான்காண்டுகளில் அக்கறையோடு தீர்க்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் இன்றைய அரசு விழாவில் நான் திறந்து வைத்த பணிகளும், வழங்கிய நலத்திட்ட உதவிகளும், புதிய அறிவிப்புகளுமே அதற்குச் சான்று! அடுத்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மேலும் காணவுள்ள முன்னேற்றம் என்பது #DravidianModel-இன் சமத்துவ வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று உறுதியளிக்கிறேன்.

Rural Development
𝕏 X
9 mo ago
0
50
18,867 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Industry & Investment

Visited the upcoming High Glory Footwear facility by Pou Chen at SIPCOT Ulundurpet today. #PouChen is one of the world’s largest branded...

Visited the upcoming High Glory Footwear facility by Pou Chen at SIPCOT Ulundurpet today. #PouChen is one of the world’s largest branded footwear manufacturers, producing for global names like Nike. Despite global tariff pressures and uncertain trade conditions, they have remained committed to Tamil Nadu. Tamil Nadu will continue to stand shoulder to shoulder with tariff-affected industries. Pou Chen has signed an MoU with the Government of Tamil Nadu to invest Rs.2,302 crore in Kallakurichi, creating 20,000 jobs, a major boost to local employment. I had the honour of laying the foundation stone for this project during the Tamil Nadu Global Investors Meet in January 2024. Today’s walkthrough was a chance to see their vision take shape. The event was joined by Nike India Directors Udai Singh Mehta and Samy Vaikundaman. I also had the pleasure of handing over job offer letters to five new recruits. Every investment we bring translates into opportunities for our people. #InvestInTN #JobsForTN @Guidance_TN @TNIndMin @TRBRajaa

Industry & Investment
𝕏 X
9 mo ago
0
66
131,291 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Employment & Skill Development

நானே ஜெயித்ததுபோல இருக்கிறது! #NaanMudhalvan 💓

நானே ஜெயித்ததுபோல இருக்கிறது! #NaanMudhalvan 💓

Employment & Skill Development
𝕏 X
9 mo ago
0
418
601,412 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Law & Order / Justice

The true strength and character of a majority lie in ensuring that minorities live without fear. When a few right-wing violent groups,...

The true strength and character of a majority lie in ensuring that minorities live without fear. When a few right-wing violent groups, acting in the name of the majority, indulge in attacks and riots, even as the Hon’ble Prime Minister participates in Christmas celebrations, it sends a disturbing message to the nation. After Manipur, reports of attacks on minorities in Jabalpur, Raipur, and elsewhere are unacceptable to anyone who values harmony. A reported 74 per cent rise in hate speech against minorities since the Union BJP government assumed office signals grave danger ahead. Curbing riotous groups that divide society is therefore a shared and urgent duty, to be enforced with firm resolve. சிறுபான்மையினர் அச்சமின்றி வாழத் துணையிருப்பதில்தான் பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது! பெரும்பான்மை என்ற பெயரில் சில வலதுசாரி வன்முறைக் கும்பல்கள் தாக்குதல்களிலும் கலவரங்களிலும் ஈடுபடுவது, அதுவும் - மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே ஈடுபடுவது, நாட்டு மக்களுக்குத் தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களைத் தொடர்ந்து, இப்போது ஜபல்பூர் - ராய்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 74% அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டுமக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டியது நம் அனைவரது பொறுப்பும் கடமையுமாகும்!

Law & Order / Justice
𝕏 X
9 mo ago
0
276
232,475 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Transport & Infrastructure

பொன்விழா காணும் போக்குவரத்துக் கழகம்; புத்தம் புதிய அரசுப் பேருந்துகள்! மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் செல்லலாம் எனப்...

பொன்விழா காணும் போக்குவரத்துக் கழகம்; புத்தம் புதிய அரசுப் பேருந்துகள்! மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் செல்லலாம் எனப் பயணிகளின் நம்பிக்கையைப் பெற்ற பொதுப் போக்குவரத்து அமைப்பு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு. தொடர்ந்து பேருந்துகளை நவீனப்படுத்தி, மேலும் வசதிகளை அளித்து வரும் நமது #DravidianModel அரசின் அடுத்த முயற்சியாக, 20 Multi-Axle A/C பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன். @sivasankar1ss

Transport & Infrastructure
𝕏 X
9 mo ago
0
98
26,489 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Federalism & Centre–State Relations

#MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில்...

#MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்! இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்! #SaveMGNREGA #RevokeVBGRAMG

Federalism & Centre–State Relations
𝕏 X
9 mo ago
0
84
38,156 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Culture & Heritage

#VictoriaPublicHall: சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர்! நாடு போற்றும் நமது #DravidianModel-இன் ஆதிவிதையான #JusticeParty...

#VictoriaPublicHall: சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர்! நாடு போற்றும் நமது #DravidianModel-இன் ஆதிவிதையான #JusticeParty தொடக்கம், சென்னையில் முதல் திரைப்படத் திரையிடல், தேசியத் தலைவர்களின் உரைகள் ஒலித்தது என எத்தனையோ பெருமைகளைக் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தைத் தொன்மை மாறாமல் புதுப்பித்துத் திறந்து வைத்துள்ளோம்! சென்னை நகரின் பல நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து நம் கண்முன் நிறுத்தும் கண்காட்சியும் சிந்தையைக் கவர்ந்தது! மேலும், ரிப்பன் மாளிகை வளாகத்தில் கட்டப்படவுள்ள @ChennaiCorp-இன் புதிய மன்றக்கூடத்திற்கும் அடிக்கல் நாட்டினேன்.

Culture & Heritage
𝕏 X
9 mo ago
0
75
27,936 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Culture & Heritage

வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள்...

வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்த தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்! தமிழர்கள் தலைகுனியாமல் - ஆதிக்கத்துக்கு அடிபணியாமல் - பகுத்தறிவுச் சிந்தனையோடு சக மனிதரை நேசித்துச் சமத்துவத்தைப் பேணுவதே, இனமானமே பெரிதென அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி! பெரியார் எனும் பெருஞ்சூரியனைத் திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு #ஓரணியில்_தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே! #Periyar

Culture & Heritage
𝕏 X
9 mo ago
0
177
46,770 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Employment & Skill Development

#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக்...

#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? #MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது. மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம். வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்.

Employment & Skill Development
𝕏 X
9 mo ago
0
129
41,265 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Agriculture & Farmer Welfare

உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை...

உழவே தலை! உலகத்தவரின் பசிப்பிணி போக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கு #NationalFarmersDay வாழ்த்துகள்! வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, வேளாண் வணிகத் திருவிழா, வேளாண் கண்காட்சி, உழவன் செயலி, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இலவச மின்சார இணைப்புகள் என உழவர்களுக்காக நமது #DravidianModel அரசின் முயற்சிகளால் வேளாண் உற்பத்தியில் தொடர்ந்து சாதனை புரிகிறது தமிழ்நாடு. உழவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும் போராடி, உழவர் நலனைப் பாதுகாக்கிறோம். #MGNREGA திட்டத்தைக் குலைத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. உழவர் நலனைக் காக்கும் #DravidianModel-இன் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 mo ago
0
92
18,713 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Party & Elections

📘 தீரர்கள் கோட்டம் தி.மு.க. 📗 திராவிட அரசியல் - திராவிட அரசு இயல் 📕 முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் - ஆகிய மூன்று அறிவாயுதங்களை...

📘 தீரர்கள் கோட்டம் தி.மு.க. 📗 திராவிட அரசியல் - திராவிட அரசு இயல் 📕 முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர் - ஆகிய மூன்று அறிவாயுதங்களை நமக்குப் படைக்கலனாக வழங்கியிருக்கிறார் ஊடகவியலாளர் திரு. ப. திருமாவேலன். இவற்றைக் கொண்டு நமது கொள்கைகளுக்கும் - கருத்துகளுக்கும் - படைப்புகளுக்கும் வலுசேர்த்து, #DravidianModel-இன் வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!

Party & Elections
𝕏 X
9 mo ago
0
162
22,363 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Governance & Administration

🚓 காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் புதிய கட்டடங்கள், காவல் நிலையங்களைத்...

🚓 காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் புதிய கட்டடங்கள், காவல் நிலையங்களைத் திறந்து வைத்து, 🏫 பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து, மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்துக்குப் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டினேன். @TThenarasu @Anbil_Mahesh

Governance & Administration
𝕏 X
9 mo ago
0
63
28,802 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Culture & Heritage

தமிழர் திருநாளுக்குத் தயாராவோம்! நமது பண்பாட்டைப் பறைசாற்றும் #சென்னை_சங்கமம் #நம்ம_ஊரு_நம்ம_திருவிழா கலைநிகழ்ச்சிகளை வரும் ஜனவரி 14-ஆம்...

தமிழர் திருநாளுக்குத் தயாராவோம்! நமது பண்பாட்டைப் பறைசாற்றும் #சென்னை_சங்கமம் #நம்ம_ஊரு_நம்ம_திருவிழா கலைநிகழ்ச்சிகளை வரும் ஜனவரி 14-ஆம் நாள் தொடங்கி வைக்கிறேன். சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஜன.15 முதல் 18 வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு மகிழும் வகையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

Culture & Heritage
𝕏 X
9 mo ago
0
54
19,378 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Party & Elections

காலை திருநெல்வேலியில் அரசுப் பணி; மாலை சென்னையில் கழகப் பணி! #SIR-க்குப் பிறகு ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமையும் உறுதிசெய்யப்பட்டிருப்பதை...

காலை திருநெல்வேலியில் அரசுப் பணி; மாலை சென்னையில் கழகப் பணி! #SIR-க்குப் பிறகு ஒவ்வொரு வாக்காளரின் வாக்குரிமையும் உறுதிசெய்யப்பட்டிருப்பதை மைக்ரோ-லெவலில் கண்காணிப்போம்; ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழக வெற்றியை உறுதிசெய்வோம்! https://t.co/G2UE3gonbb

Party & Elections
𝕏 X
9 mo ago
0
78
38,909 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Party & Elections

தமிழர் பெருமை: #DravidianModel-இன் கடமை!

தமிழர் பெருமை: #DravidianModel-இன் கடமை!

Party & Elections
𝕏 X
9 mo ago
0
42
39,918 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Welfare Schemes

பொருநை தாலாட்டும் நெல்லையின் நெஞ்சை நிறைக்கும் நலத்திட்டங்கள்! நெல்லை மக்களின் அறிவுப்பசியைத் தீர்க்கவுள்ள கண்ணியத்தென்றல் காயிதே மில்லத்...

பொருநை தாலாட்டும் நெல்லையின் நெஞ்சை நிறைக்கும் நலத்திட்டங்கள்! நெல்லை மக்களின் அறிவுப்பசியைத் தீர்க்கவுள்ள கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் அவர்கள் பெயரிலான நூலகத்துக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நீர்ப்பாசன - கூட்டுக்குடிநீர்த் திட்டங்களையும் அறிவித்தேன்! நெல்லையப்பர் திருக்கோயிலின் வெள்ளித்தேர் வரும் ஜனவரியில் ஓடவுள்ளது என்ற அறிவிப்பையும் மகிழ்ச்சியோடு வெளியிட்டேன். #Christmas கொண்டாட்டம், #PorunaiMuseum திறப்பு, நலத்திட்ட உதவிகள், புதிய அறிவிப்புகள் எனத் தென்னகப் பயணத்தின் இனிய நினைவுகளைச் சுமந்து சென்னை திரும்புகிறேன்...

Welfare Schemes
𝕏 X
9 mo ago
0
81
30,187 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Culture & Heritage

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை #பொருநை அருங்காட்சியகம்! காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம்...

தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை #பொருநை அருங்காட்சியகம்! காண்போரின் விழிகள் விரிகின்றன; தமிழர்தம் நாகரிக உச்சம் பார்த்து மனம் எழுச்சி கொள்கிறது... மரபும் புதுமையும் சந்தித்துக் கைக்குலுக்கிக் கொள்ளும் வரலாற்று மாளிகையாக நம் #DravidianModel அரசு கட்டியுள்ள #Porunai அருங்காட்சியகம் - உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்! வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும். பழம்பெருமையில் தேங்கிடாமல் இன்னும் உயர்ந்து 'முன் செல்லடா...' என நம்மை உந்தித் தள்ளும் ஊக்க மருந்தாக #PorunaiMuseum அமையும் என நம்பித் தமிழ்நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன். @TThenarasu @KanimozhiDMK #பொருநை_தமிழர்_பெருமை

Culture & Heritage
𝕏 X
9 mo ago
0
67
31,002 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41