DMKSocial

The Feed, page 371

Showing 7,401–7,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Agriculture & Farmer Welfare

தமிழ்நாட்டையும், தமிழக விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம்...

தமிழ்நாட்டையும், தமிழக  விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்க முயற்சித்தால் மீண்டும் ஒரு போராட்டக் களத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
817
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Environment & Climate

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய...

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு,தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு காவிரிப்படுகை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் அனுமதியளிக்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது https://t.co/9sg46ezSM5

Environment & Climate
𝕏 X
8 yr ago
1368
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Law & Order / Justice

மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாளே கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அஸ்வினியின் புகார் மீது காவல்துறை அப்போதே...

மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாளே கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அஸ்வினியின் புகார் மீது காவல்துறை அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், படுகொலையை தடுத்திருக்க முடியும். அதன் ரத்த சாட்சிதான் அஸ்வினியின் கொலைசெய்யப்பட்ட உடல். #AswiniMurder https://t.co/gQXvOptwwQ

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1012
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Law & Order / Justice

இனியாவது தமிழக அரசு விழித்தெழுந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு பாதுகாப்பை அதிகரிப்பதோடு, காவலர்கள் மத்தியில் பெருகிவரும்...

இனியாவது தமிழக அரசு விழித்தெழுந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு பாதுகாப்பை அதிகரிப்பதோடு, காவலர்கள் மத்தியில் பெருகிவரும் தற்கொலைகளை தடுக்க, குறைதீர்ப்பு முகாம்கள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
683
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Water Resources

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், அரசியல் ரீதியாக அழுத்தம்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், அரசியல் ரீதியாக அழுத்தம் தருவதற்கு தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பே கூட்டிட வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
1886
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Water Resources

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட்டு,...

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட்டு, #CauveryManagementBoard அமைப்பதில் காலதாமதம் மற்றும் குழப்பம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
1784
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
International & Diaspora

சிரியாவில் அப்பாவி மக்களும் ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலமுனைத்...

சிரியாவில் அப்பாவி மக்களும் ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலமுனைத் தாக்குதலில் பொதுமக்களின் உயிர்ப் பறிக்கப்படுவதை ஐ.நா.மன்றம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். #SaveSyria https://t.co/ZWPmNjokRn

International & Diaspora
𝕏 X
8 yr ago
2048
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Agriculture & Farmer Welfare

நெல் விளையும் நிலத்தில் புல் விளையக்கூட நீரில்லாத நிலையில், இன்றைய அரசின் அலட்சியத்தால் நம் டெல்டா நிலம் “கொலை விளையும் நிலம்” எனும் அவலத்திற்கு...

நெல் விளையும் நிலத்தில் புல் விளையக்கூட நீரில்லாத நிலையில், இன்றைய அரசின் அலட்சியத்தால் நம் டெல்டா நிலம் “கொலை விளையும் நிலம்” எனும் அவலத்திற்கு உள்ளாகியிருப்பதை இரத்தமும் சதையுமான உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தியுள்ள இளைஞர்களை வாழ்த்துகிறேன். https://t.co/YTAhYN01V2

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
1649
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Water Resources

அக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இடைக்கால ஏற்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும்...

அக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இடைக்கால ஏற்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி சமாதானம் செய்துகொள்ள முயற்சிக்க கூடாது என்பதையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
540
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Water Resources

நாளை டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் குழு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட,...

நாளை டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் குழு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். #CauveryManagementBoard https://t.co/bQ7J9ohUeh

Water Resources
𝕏 X
8 yr ago
950
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Law & Order / Justice

திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற...

திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2902
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Women & Child Welfare

மகளிர் முன்னேற்றமும், பாதுகாப்பும் எதிர்பார்த்த அளவிலும் வேகத்திலும் வெற்றிபெறாத நிலையில் நிருபயா நிதியை முழுவீச்சில் செலவிடவும், மகளிர் சுய...

மகளிர் முன்னேற்றமும், பாதுகாப்பும் எதிர்பார்த்த அளவிலும் வேகத்திலும் வெற்றிபெறாத நிலையில் நிருபயா நிதியை முழுவீச்சில் செலவிடவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் திறம்பட செயல்படவும், மகளிருக்கு பாராளுமன்றம் & சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு விரைவில் கிடைப்பதற்கும் உறுதியெடுப்போம்.

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
635
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Culture & Heritage

திராவிடத்தையும், திராவிட உணர்வுகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு இன்றளவும் சிம்மசொப்பனமாக பெரியார் இருக்கின்றார் என்பதை இந்த மண் மீண்டும் மறக்க...

திராவிடத்தையும், திராவிட உணர்வுகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு இன்றளவும் சிம்மசொப்பனமாக பெரியார் இருக்கின்றார் என்பதை இந்த மண் மீண்டும் மறக்க முடியாத வரலாற்றுப் பாடமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. கற்பனையிலும், கனவிலும் கூட இனி பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்ற எண்ணம் வரக்கூடாது.

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1716
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Culture & Heritage

தன்மான தமிழினத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தைப் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று வக்கிரமாக கொக்கரித்தவர்கள் தமிழ்ச் சமுதாயத்திடம் எதிர்ப்பை...

தன்மான தமிழினத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தைப் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று வக்கிரமாக கொக்கரித்தவர்கள் தமிழ்ச் சமுதாயத்திடம் எதிர்ப்பை சம்பாதித்து வாய்ப்பொத்தி மூலையில் முடங்கி இருக்கிறார்கள். இன்னும் எவரேனும் இதே எண்ணத்தோடு இருந்தால், நாம் யார் என்பதை காட்டும் காலம் வரும்!

Culture & Heritage
𝕏 X
8 yr ago
4113
234
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Water Resources

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழக முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் மூலம்,...

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழக முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் மூலம், இதுபோன்று அதிகாரிகள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை தடுத்து நிறுத்திடுமாறு வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

Water Resources
𝕏 X
8 yr ago
539
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Water Resources

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் அல்லது மறுசீராய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் அல்லது மறுசீராய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் @timesofindia பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் இதுபோன்ற செயல்களை பாஜக அரசு அனுமதிக்க கூடாது https://t.co/e88MaTIUZs

Water Resources
𝕏 X
8 yr ago
921
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Women & Child Welfare

மார்ச் 8 உலக மகளிர் தினமாக இருந்தாலும் முன்கூட்டியே மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கு அனைத்து உரிமைகளையும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மார்ச் 8 உலக மகளிர் தினமாக இருந்தாலும் முன்கூட்டியே மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கு அனைத்து உரிமைகளையும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணியின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு, கழகம் செயல்படுத்திய மகளிர் நலன் திட்டங்களை பட்டியலிட்டேன். https://t.co/tr4ngsE15j

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
1608
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Women & Child Welfare

பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து மகளிர் உரிமைகளை பற்றிப் பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்...

பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து மகளிர் உரிமைகளை பற்றிப் பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சட்டமன்ற நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை, நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிற நேரத்தில் நிறைவேற்ற முன்வருவாரா?

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
975
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Water Resources

அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ள அவமானம்....

அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ள அவமானம். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காத பட்சத்தில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு தி.மு.க துணை நிற்கும்.

Water Resources
𝕏 X
8 yr ago
951
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Water Resources

இன்று தலைமைச் செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்றேன். அதில்,காவிரி...

இன்று தலைமைச் செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்றேன். அதில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினேன் https://t.co/z4RbdFj48r

Water Resources
𝕏 X
8 yr ago
2226
128
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41