DMKSocial

The Feed, page 37

Showing 721–740 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Federalism & Centre–State Relations

First Tamil Nadu. Then Kerala. Now Karnataka. The pattern is clear and deliberate. Governors refusing to read the speech prepared by state...

First Tamil Nadu. Then Kerala. Now Karnataka. The pattern is clear and deliberate. Governors refusing to read the speech prepared by state governments and behaving like party agents, undermining duly elected state governments. As I stated earlier, the only solution now is to end the practice of commencing the first annual Assembly session with the #Governor’s address. #DMK will consult like-minded opposition parties across India and pursue a constitutional amendment in the very next parliamentary session to abolish this obsolete and irrelevant practice.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
294
455,180 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Federalism & Centre–State Relations

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: தமிழ் 'இன - மொழி' எதிரிகளின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்போம்! தமிழுடல்கள்...

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: தமிழ் 'இன - மொழி' எதிரிகளின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்போம்! தமிழுடல்கள் எரிந்து, தமிழுயிர்கள் பலியாகிப் பெற்றுத் தந்ததுதான் இன்று இந்தியா முழுவதும் இந்திபேசாத மாநிலங்கள் வாழும் வாழ்வு! "வந்த வழி மறப்பவர்கள் அல்லர் நாம்" எனக் காட்ட மட்டுமா இந்தப் பொதுக்கூட்டங்கள்? நம் மொழியுரிமையைப் பறிக்க நினைத்தால் வெகுண்டெழ இனியும் இன்பத் திராவிடத்தின் சேனை உண்டு என எதிரிகளை எச்சரிக்கவும்தான்... தந்தை பெரியாரின் தளபதியாய்க் களம் கண்டு கட்டாய இந்தியை விரட்டி, இருமொழிக் கொள்கையை இம்மண்ணில் நிலைநாட்டிய தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சியில் நான் ஜனவரி 25 உரையாற்றுகிறேன். காஞ்சித் தலைவனின் வழித்தோன்றல்களே, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே... தியாகிகளை வணங்கி முன்செல்வோம்! திராவிட மாடல் 2.0 அமையப் பாடுபடுவோம்! #தீ_பரவட்டும் #வெல்வோம்_ஒன்றாக #LetterToBrethren

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
175
42,844 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Urban Development

வடசென்னை வளர்ச்சித் திட்டம்: எளிய மக்களின் ஏற்றம்! சாலையோரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் வசித்து வந்த மக்களுக்கு நிலையான குடியிருப்பை...

வடசென்னை வளர்ச்சித் திட்டம்: எளிய மக்களின் ஏற்றம்! சாலையோரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் வசித்து வந்த மக்களுக்கு நிலையான குடியிருப்பை அளிக்க 776 #முதல்வர்_நகர்ப்புறக்_குடியிருப்புகள்-ஐத் திறந்து வைத்தேன். வளாகத்திலேயே #முதல்வர்_படைப்பகம், நூலகம், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம், CCTV கண்காணிப்பு எனத் தரமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தக் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளது நமது #DravidianModel அரசு. வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் மேலும் 144 புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தேன். #NorthChennaiDevelopmentScheme

Urban Development
𝕏 X
8 mo ago
0
117
40,999 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Party & Elections

ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு! அடுத்த 3 மாதங்களும் அமைச்சர் முதல் கிளைக் கழக நிர்வாகி வரை கண்துஞ்சாது களத்தில்...

ஓய்வை மறந்திடு; முழுமையான வெற்றி கைவசமாகும் வரை உழைத்திடு! அடுத்த 3 மாதங்களும் அமைச்சர் முதல் கிளைக் கழக நிர்வாகி வரை கண்துஞ்சாது களத்தில் சுழல வேண்டும்! இளைஞரணி நிர்வாகிகள் மாநாடுகள், #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் மாநாடுகள், மண்டல அளவிலான 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பயிற்சிக் கூட்டங்கள், திருச்சியில் மாபெரும் மாநில மாநாடு என இனி ஒவ்வொரு நாளும் நமது செயல்பாடுகளும் பரப்புரைகளும் தமிழ்நாட்டை நிறைக்கப் போகின்றன. #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
8 mo ago
0
137
38,407 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Federalism & Centre–State Relations

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்! அரசு...

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என #ConstitutionalAmendment கோருவோம்! அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், #DravidianModel அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது. அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கும் தமிழ்நாடு ஆளுநரை 'Recalcitrant Governor' என @The_Hindu தலையங்கத்தில் நேற்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது இன்றைய செயல்பாடும் அதனை மெய்ப்பித்துள்ளது.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
224
81,784 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jan
Urban Development

#KICC: where global standards converge to fulfil the expectations of a global city. தெற்காசியாவின் தொழில் மையமாகவும், இந்தியாவின்...

#KICC: where global standards converge to fulfil the expectations of a global city. தெற்காசியாவின் தொழில் மையமாகவும், இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகராகவும் விளங்கும் நம் சென்னையில், உலகத் தரத்தில் ஒரு மாநாட்டு மையம் தேவை எனத் தொழில் அமைப்புகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் வைத்த கோரிக்கையினை ஏற்று #KalaignarInternationalConventionCentre அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டோம். உலக விருந்தினர் வியக்கும் வண்ணம், அனைத்து வசதிகளோடு விறுவிறுவென உருப்பெற்று வரும் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையப் பணிகளைப் பார்வையிட்டேன்.

Urban Development
𝕏 X
8 mo ago
0
82
34,220 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jan
Water Resources

மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய்...

மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள #மாமல்லன்_நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். நீர்ப் பாதுகாப்புக்காகப் பாடுபடும் 15 NGO-களின் அக்கறையை அங்கீகரித்து சிறப்பு விருதுகளையும் இவ்விழாவில் வழங்கிப் பாராட்டினேன். வான் பெய்து, நிலம் நனைத்து, கடல் சேரும் நீரைக் கரை கட்டி, நெடுவயல் நிறையவும் - மக்களின் தாகம் தணியவும் செயலாற்றுவோம்! #MamallanReservoir

Water Resources
𝕏 X
8 mo ago
0
75
30,098 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jan
Culture & Heritage

மேற்கு மண்டலம் வளம்பெற பவானியையும் நொய்யலையும் இணைத்த நதிநீர் இணைப்பின் முன்னோடியான காலிங்கராயர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து...

மேற்கு மண்டலம் வளம்பெற பவானியையும் நொய்யலையும் இணைத்த நதிநீர் இணைப்பின் முன்னோடியான காலிங்கராயர் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன். https://t.co/g3nIA1VFK6

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
68
25,450 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jan
Culture & Heritage

தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான விருதுகள்! இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் என எடுத்துக்காட்டும் சென்னை...

தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான விருதுகள்! இலக்கியங்களுக்கு எல்லை இல்லை; அவை நம்மை இணைக்கும் பாலங்கள் என எடுத்துக்காட்டும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டேன். ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான #SahityaAkademi விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும்! திராவிடத்துக்கே உரிய முற்போக்கு விமர்சனப் பார்வையை முன்னிறுத்திப் பேசியதோடு, வாசிப்பினைக் கொள்கைச் செயல்பாடாக முன்னெடுக்கும் நமது #DravidianModel அரசின் முயற்சிகளையும் பாராட்டிய #InternationalBookerPrize வென்ற எழுத்தாளர் திருமிகு பானு முஷ்டாக் அவர்களுக்கு எனது நன்றிகள்! @Anbil_Mahesh #CIBF2026

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
61
25,434 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jan
Culture & Heritage

நமது #DravidianModel அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது...

நமது #DravidianModel அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தோம்! அதன் தொடர்ச்சியாக, பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
81
34,061 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jan
Sports

“மகிழ்ச்சி… மகிழ்ச்சி” என்று அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரிக்க இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டேன்! ...

“மகிழ்ச்சி… மகிழ்ச்சி” என்று அலங்காநல்லூரில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரிக்க இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு ஜல்லிக்கட்டைப் பார்வையிட்டேன்! #வெல்வோம்_ஒன்றாக #Jallikattu #DravidaPongal https://t.co/hN58RjVCLq

Sports
𝕏 X
8 mo ago
0
115
41,648 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jan
Culture & Heritage

நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆன்றோருக்கு, #திருவள்ளுவர்_நாள்-இல் விருதுகள் வழங்கிப் பெருமை கொண்டோம். வாழிய இவர்களது சமூக - அறிவுத் தொண்டு! ...

நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆன்றோருக்கு, #திருவள்ளுவர்_நாள்-இல் விருதுகள் வழங்கிப் பெருமை கொண்டோம். வாழிய இவர்களது சமூக - அறிவுத் தொண்டு! #ThiruvalluvarDay #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/LoYkIzqpYt

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
51
21,305 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jan
Party & Elections

வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் #திருவள்ளுவர்_நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்! ...

வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் #திருவள்ளுவர்_நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்! #வெல்வோம்_ஒன்றாக! #ThiruvalluvarDay https://t.co/AuPZ4ceNoc

Party & Elections
𝕏 X
8 mo ago
0
102
55,380 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Welfare Schemes

அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற...

அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்! செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன்! #வெல்வோம்_ஒன்றாக #DravidaPongal #DravidianModel

Welfare Schemes
𝕏 X
8 mo ago
0
88
69,352 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jan
Culture & Heritage

#ChennaiSangamam2026 கலைவிழா ஜனவரி 18 வரை சென்னையில் 20 இடங்களிலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. நமது மண்ணின்...

#ChennaiSangamam2026 கலைவிழா ஜனவரி 18 வரை சென்னையில் 20 இடங்களிலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. நமது மண்ணின் கலைகளை மக்கள் அனைவரும் திரளாகக் கண்டு களித்து ஆதரித்திடுங்கள்! ததும்பி வழியட்டும் தமிழ்ப் பெருமிதம்! @KanimozhiDMK #வெல்வோம்_ஒன்றாக #சென்னை_சங்கமம்

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
60
28,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Culture & Heritage

பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026 நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன்...

பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026 நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன் இந்தப் பொங்கலைக் கொண்டாடுவோம்! உண்மையான அக்கறையோடும் உயர்வான நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் இதனை மேலும் மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தங்கை @KanimozhiDMK அவர்களுக்குப் பாராட்டுகள்! இந்த ஆண்டு பாடலாசிரியராகவும் களமிறங்கியதற்காக இந்த அண்ணனின் special வாழ்த்துகள்... #DravidaPongal #Pongal2026 #வெல்வோம்_ஒன்றாக

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
75
37,167 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jan
Culture & Heritage

Bringing the world to Tamil; Taking Tamil to the World. @Anbil_Mahesh #CIBF #CIBF2026 #DravidianModel

Bringing the world to Tamil; Taking Tamil to the World. @Anbil_Mahesh #CIBF #CIBF2026 #DravidianModel https://t.co/5sSZVgv6xe

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
39
29,997 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Law & Order / Justice

அன்பின் வழியது உயிர்நிலை சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, "காவலர் பணி...

அன்பின் வழியது உயிர்நிலை சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோது, "காவலர் பணி மனிதநேயத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும். வீரத்தின் அடித்தளம் அன்புதான்" என அறிவுறுத்தி இருந்தேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ள தலைமைக் காவலர் சரவணன் அவர்களுக்குப் பாராட்டுகள்! @tnpoliceoffl

Law & Order / Justice
𝕏 X
8 mo ago
0
60
81,928 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jan
Culture & Heritage

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை...

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள். நாளை #ChennaiSangamam2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்! #LetterToBrethren #Pongal2026

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
107
29,749 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Culture & Heritage

நாளை மறுநாள் முதல் களை கட்டுகிறது #சென்னை_சங்கமம்_2026! நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான எழுச்சி மேடையாகத் திகழும் சென்னை சங்கமத்திற்கு...

நாளை மறுநாள் முதல் களை கட்டுகிறது #சென்னை_சங்கமம்_2026! நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான எழுச்சி மேடையாகத் திகழும் சென்னை சங்கமத்திற்கு மீண்டும் நமது #DravidianModel அரசில் புத்துயிர் கொடுத்துள்ளோம். அதனைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறார் தங்கை @KanimozhiDMK எம்.பி.,! #தமிழர்_திருநாள் கொண்டாட்டங்கள் களிப்புடன் சிறக்க, சென்னையிலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளை அனைவரும் காண வேண்டும்! வருக… வருக… #ChennaiSangamam2026 #DravidaPongal #வெல்வோம்_ஒன்றாக!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
84
45,213 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41