DMKSocial

The Feed, page 36

Showing 701–720 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Health

கிண்டியில் குழந்தைகளுக்கான மாபெரும் உயர்சிறப்பு மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிக்கல்! 417.07 கோடி ரூபாயில் கிண்டி கிங்...

கிண்டியில் குழந்தைகளுக்கான மாபெரும் உயர்சிறப்பு மருத்துவமனை & ஆராய்ச்சி நிலையத்துக்கு அடிக்கல்! 417.07 கோடி ரூபாயில் கிண்டி கிங் நோய்த்தடுப்பு & ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமையவுள்ள இந்த மருத்துவமனை குழந்தை மருத்துவச் சிறப்புப் பிரிவு சேவைகளில் ஒரு ‘centre of excellence’-ஆகத் திகழும்! ஆசியாவின் மருத்துவத் தலைநகர் சென்னைதான் என்பதற்கான மற்றுமோர் அடையாளம் #GuindyChildrensHospital! #DravidianModel #வெல்வோம்_ஒன்றாக!

Health
𝕏 X
8 mo ago
0
64
32,058 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Women & Child Welfare

#GlobalWomenSummit2026: தமிழ்நாட்டின் #OneTrillionDollar பொருளாதாரம் எனும் பெருங்கனவில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கவுள்ளார்கள்! ...

#GlobalWomenSummit2026: தமிழ்நாட்டின் #OneTrillionDollar பொருளாதாரம் எனும் பெருங்கனவில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கவுள்ளார்கள்! வளர்ந்து வரும் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான ஆதரவுச் சேவைகளை உலக வங்கியின் உதவியுடன் வழங்கிடும் #TNWESAFE திட்டத்தினைத் தொடங்கி வைத்தேன். மேலும், தமிழ்நாட்டிலுள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன். சமூகத்தில் சரிபாதியான பெண்களின் முன்னேற்றத்துக்காக #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்!

Women & Child Welfare
𝕏 X
8 mo ago
0
176
62,314 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

BJP எந்த Get-up-இல் வந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு Get Out-தான்! #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக! @DMKWomensWing

BJP எந்த Get-up-இல் வந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு Get Out-தான்! #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக! @DMKWomensWing https://t.co/UfIE3ryRzc

Party & Elections
𝕏 X
8 mo ago
0
140
34,193 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

#வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-தான் எப்பவும் Powerhouse! #வெல்வோம்_ஒன்றாக! @DMKWomensWing

#வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-தான் எப்பவும் Powerhouse! #வெல்வோம்_ஒன்றாக! @DMKWomensWing https://t.co/L2L56WHMvU

Party & Elections
𝕏 X
8 mo ago
0
97
37,796 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA! மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை...

#களம்2026: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி vs NDA அல்ல; தமிழ்நாடு vs NDA! மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட கூட்டணியை, உடைந்து போனதை எல்லாம் ஒட்ட வைத்துக் கொண்டு வந்திருக்கிறது NDA. எந்த get-up-இல் வந்தாலும் அவர்களுக்கு Get Out-தான்! அடுத்து, வாராவாரம் பிரமாண்ட மாநாடுகளைத் தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களிலும் நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 28 வரை தொகுதிகள்தோறும் #தமிழ்நாட்டை_தலைகுனிய_விடமாட்டோம் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன். #InternationalWomensDay வரை @DMKWomensWing பரப்புரை உள்ளது. #வெல்லும்_தமிழ்ப்பெண்கள்-ஏ புறப்படுங்கள்! #DravidianModel ஆட்சி தொடர உழைத்திடுங்கள்! #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
8 mo ago
0
164
42,773 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

Black and Red Delta Force! மகளிர்தான் எப்பவும் Powerhouse! #வெல்லும்_தமிழ்பெண்கள்! #வெல்வோம்_ஒன்றாக!

Black and Red Delta Force! மகளிர்தான் எப்பவும் Powerhouse! #வெல்லும்_தமிழ்பெண்கள்! #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/Zg2DmKK74v

Party & Elections
𝕏 X
8 mo ago
0
268
63,792 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

#DravidianModel ஆட்சி தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் சிறக்க, தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து,...

#DravidianModel ஆட்சி தொடர்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் சிறக்க, தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, முன்னாள் அமைச்சர் திரு. வைத்திலிங்கம் அவர்களது ஏற்பாட்டில், தஞ்சைத் தரணியில் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்ட 10 ஆயிரம் பேரை வாழ்த்தி வரவேற்றேன்! #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
8 mo ago
0
73
23,740 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Party & Elections

திராவிட இயக்கத் தீரர்களை வாரி வழங்கிய தஞ்சை மண்ணில் மாலை சந்திப்போம்! #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்! #வெல்வோம்_ஒன்றாக!

திராவிட இயக்கத் தீரர்களை வாரி வழங்கிய தஞ்சை மண்ணில் மாலை சந்திப்போம்! #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்! #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/cl0J59qT1Z

Party & Elections
𝕏 X
8 mo ago
0
111
41,719 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Federalism & Centre–State Relations

Happy #RepublicDay! Let's celebrate a unified India. Not a uniform India. பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! அனைவருக்கும் எனது...

Happy #RepublicDay! Let's celebrate a unified India. Not a uniform India. பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! அனைவருக்கும் எனது #குடியரசு_நாள் வாழ்த்துகள்! #வெல்வோம்_ஒன்றாக!

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
93
61,837 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Federalism & Centre–State Relations

2026 தேர்தலும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்! தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் நம் எதிரிகளையும், அவர்களின்...

2026 தேர்தலும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்! தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் நம் எதிரிகளையும், அவர்களின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் வீழ்த்திட மொழிப்போர்த் தியாகிகள் மீது உறுதியெடுப்போம். CBI, ED போன்ற பெயர்களைக் கேட்டாலே பணிந்துவிடும் கோழைகளா நாம்? எதையும் துணிந்து எதிர்கொள்ளும் திராவிடப் பரம்பரை உங்கள் மிரட்டலுக்கு அஞ்சாது. பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் நின்று சொல்கிறேன்: டெல்லியின் ஆதிக்கத்துக்குத் தமிழ்நாடு என்றும் அடிபணியாது! #தீ_பரவட்டும் #வெல்வோம்_ஒன்றாக #LanguageMartyrsDay

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
143
42,949 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த...

வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்! 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன். எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன். மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன். #StopHindiImposition #LanguageMartyrsDay #வெல்வோம்_ஒன்றாக #தீ_பரவட்டும்!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
209
75,368 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Federalism & Centre–State Relations

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித்...

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! #LanguageMartyrsDay #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
187
63,599 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Federalism & Centre–State Relations

யாரும் எங்களுக்குத் தேசபக்திப் பாடம் எடுக்க வேண்டாம்! #வெல்வோம்_ஒன்றாக!

யாரும் எங்களுக்குத் தேசபக்திப் பாடம் எடுக்க வேண்டாம்! #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/ACLOhTTRIw

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
117
30,339 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Governance & Administration

இது, தமிழ்நாடு! இந்தியாவின் #SuperstarState! #வெல்வோம்_ஒன்றாக

இது, தமிழ்நாடு! இந்தியாவின் #SuperstarState! #வெல்வோம்_ஒன்றாக https://t.co/Dou4RofwLl

Governance & Administration
𝕏 X
8 mo ago
0
110
37,138 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Federalism & Centre–State Relations

ஆளுநர் கேட்க வேண்டியது ஒன்றிய அரசைத்தான்! #வெல்வோம்_ஒன்றாக

ஆளுநர் கேட்க வேண்டியது ஒன்றிய அரசைத்தான்! #வெல்வோம்_ஒன்றாக https://t.co/SWeB8b7LLA

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
62
24,124 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Federalism & Centre–State Relations

#DravidianModel: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான...

#DravidianModel: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது! தமிழ்நாடு 'நம்பர் 1' என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி அவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால் அவர் ஒன்றிய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும். ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் ஒன்றிய அரசு அளித்த தரவுகள்தான். 2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் #வெல்வோம்_ஒன்றாக!

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
233
83,709 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Federalism & Centre–State Relations

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி...

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது! மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது!

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
894
499,060 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Rural Development

TNLA_Resolution: #Withdraw_VBGRAMG #Restore_MGNREGA! மக்களின் தேவையின் அடிப்படையில் அமைந்த #MGNREGA திட்டத்துக்குப் பதிலாக ஒன்றிய பா.ஜ.க....

TNLA_Resolution: #Withdraw_VBGRAMG #Restore_MGNREGA! மக்களின் தேவையின் அடிப்படையில் அமைந்த #MGNREGA திட்டத்துக்குப் பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள #VBGRAMG வேலை உறுதித் திட்டமே அல்ல, அது அழிவுத்திட்டம்! கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்டும் சதி! இதன் பெயர்மாற்றமும் சரியில்லை, நோக்கத்திலும் நன்மை இல்லை. இதுவரை விடுவிக்க வேண்டிய நிதியையே தராமல் இழுத்தடித்து வந்த இவர்கள், இனி 40% நிதிச்சுமையை மாநில அரசின் தலையில் ஏற்றவே இப்புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். மொத்தப் பணியாளர்களில் 85% பெண்கள் பயன்பெற்று வந்த மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதித் திட்டம் தேசத் தந்தையின் பெயரிலேயே, பழைய முறையிலேயே தொடர வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். "பிரதமரை வரவேற்கச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், மக்கள்மேல் சிறிதேனும் அக்கறையோடு இதுகுறித்து வலியுறுத்துவாரா?" என்றும் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினேன்.

Rural Development
𝕏 X
8 mo ago
0
125
35,275 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Federalism & Centre–State Relations

Tamil Nadu counts the betrayals of NDA. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... ...

Tamil Nadu counts the betrayals of NDA. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? "#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! #NDABetraysTN

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
1218
1,061,570 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Governance & Administration

நாளும் புதுமை, துறைதோறும் சாதனை எனப் பரபரக்கும் நமது #DravidianModel அரசின் இன்றைய நிகழ்வுகளில், சென்னை இராஜீவ் காந்தி சாலை (OMR) ஒக்கியம்...

நாளும் புதுமை, துறைதோறும் சாதனை எனப் பரபரக்கும் நமது #DravidianModel அரசின் இன்றைய நிகழ்வுகளில், சென்னை இராஜீவ் காந்தி சாலை (OMR) ஒக்கியம் மடுவில் @CMRLOfficial சார்பில் கட்டப்பட்டுள்ள 4-வழிச் சாலைப் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தல் - தற்போதைய மந்தைவெளி பேருந்துப் பணிமனை & முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து & வணிக வளாகம் கட்ட அடிக்கல் - பதிவுத்துறையின் STAR 3.0 திட்டத்தின்கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் முதலிய 18 சேவைகள் அடங்கிய செயல் திட்டம் தொடக்கம் - தூத்துக்குடி #SIPCOT & சுற்றுப்பகுதிகளின் தண்ணீர்த் தேவைக்காக முள்ளக்காட்டில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் - BC, MBC & சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குதல் - தொன்மை வாய்ந்த, பழமையான தேவாலயங்களைப் புனரமைப்பதற்கான மானியத் தொகைக் காசோலைகளை வழங்குதல் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையில் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தல், #TNPSC மூலம் தேர்வானவர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.

Governance & Administration
𝕏 X
8 mo ago
0
92
27,826 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41