DMKSocial

The Feed, page 38

Showing 741–760 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
International & Diaspora

கனவுகளைச் சுமந்து கடல்களையும் - நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை #அயலகத்தமிழர்நாள்-இல் தாய்நிலத்தில் வாழ்த்தினேன்! கல்வியும்...

கனவுகளைச் சுமந்து கடல்களையும் - நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை #அயலகத்தமிழர்நாள்-இல் தாய்நிலத்தில் வாழ்த்தினேன்! கல்வியும் உழைப்பும் கொண்டு பெயரும் புகழும் அடைந்து அயலகங்களில் தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் அவர்களுக்கு அன்பை வழங்கி அரவணைப்போம்! மாபெரும் தமிழ்க்கனவுகளைச் சாத்தியப்படுத்திடும் நமது #DravidianModel-இல் #உங்க_கனவ_சொல்லுங்க என்று கேட்டதும் அவர்களது எண்ணங்களை - கனவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றையும் நனவாக்கப் பயணிப்போம்! தமிழால் இணைவோம்! தரணியில் வெல்வோம்!

International & Diaspora
𝕏 X
8 mo ago
0
87
37,372 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jan
Environment & Climate

Thank you, Thiru. @AnandMahindra. The @ChennaiCorp has cleared nearly 50 lakh metric tonnes of legacy waste out of a total of 90 lakh...

Thank you, Thiru. @AnandMahindra. The @ChennaiCorp has cleared nearly 50 lakh metric tonnes of legacy waste out of a total of 90 lakh metric tonnes through the bio mining process. The remaining waste is targeted to be cleared by February 2027. We are currently implementing scientific and environment friendly solid waste management solutions, with a strong focus on eliminating landfilling and ensuring efficient waste processing. #DravidianModel #KottunaValikkum #IdhuKuppaMatterIlla #CorrectaKottunaValikkaathu #ThooimaiMission #WasteSegregation

Environment & Climate
𝕏 X
8 mo ago
0
185
588,056 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
International & Diaspora

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்! இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின்...

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்! இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின் தமிழ்ப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து, தங்கள் அச்சங்களையும் கவலையையும் தெரிவித்தனர். அதனடிப்படையில், நம் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் பாதிக்கப்படாமல், அவர்களின் சமவுரிமையைக் காக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு பிரதமர் திரு. @NarendraModi அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

International & Diaspora
𝕏 X
8 mo ago
0
64
93,973 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jan
Culture & Heritage

காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின்...

காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு உயிர்துறந்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் நினைவுநாள்! இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களின் பெருமையைப் போற்றும் நாம், கொடி காத்த குமரன் அவர்களின் திருவுருவச்சிலையை ஈரோட்டில் நிறுவியதோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சாலைக்குத் 'தியாகி குமரன் சாலை' என்றும் பெயர் சூட்டியுள்ளோம். இன்னுயிரைவிடவும் தன்மானமும் தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த #திருப்பூர்_குமரன் அவர்களின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம்!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
60
26,579 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Social Justice & Reservation

The inclusion of caste enumeration in the #Census is welcome and aligns with Tamil Nadu’s long-standing demand for reliable data for...

The inclusion of caste enumeration in the #Census is welcome and aligns with Tamil Nadu’s long-standing demand for reliable data for evidence-based #SocialJustice. Given its sensitivity and its impact on State-level policies, it is imperative that the Union Government consults all States and Union Territories before finalising the guidelines and questionnaire, to ensure accuracy. @NarendraModi @PMOIndia #CasteCensus

Social Justice & Reservation
𝕏 X
8 mo ago
0
80
54,524 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jan
Culture & Heritage

குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய #StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும்...

குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய #StatueOfWisdom-இன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் #குறள்_வார_விழா கொண்டாட்டங்கள்! 38 மாவட்டங்களிலும் குறள் ஓவியம், குறள் ஒப்பித்தல், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள், தமிழோசை, அரசு ஊழியர் - ஆசிரியர் பங்குபெறும் குறளாசிரியர் மாநாடு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இவற்றைத் 'திருக்குறள் திருவிழா - தமிழர்களுக்குத் தெவிட்டாத பெருவிழா' என்ற பெருமிதத்துடன் தொடங்கி வைத்தேன். வள்ளுவம் போற்றுதும்! @mp_saminathan @jeyaseelan_vp

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
92
48,191 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Federalism & Centre–State Relations

#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்! #CBFC

#CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்! #CBFC

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
1372
2,427,321 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Party & Elections

மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனைத் திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் உண்மையான நோக்கம்; அதனை நிறைவேற்றுவதே #DravidianModel! ...

மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனைத் திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் உண்மையான நோக்கம்; அதனை நிறைவேற்றுவதே #DravidianModel! “#உங்க_கனவ_சொல்லுங்க” என்று உங்கள் வீடு தேடி வரவுள்ள எங்களது Team-இடம் உங்கள் கனவைப் பகிர்ந்துகொள்ளுங்கள். 2030-க்குள் அவற்றை நனவாக்க நான் பாடுபடுவேன்! இதுவே என் வாக்குறுதி! உங்கள் கனவு நனவானால்; தமிழ்நாட்டின் கனவுகள் நனவாகும்!

Party & Elections
𝕏 X
8 mo ago
0
158
68,322 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Culture & Heritage

#ChennaiBookFair2026 தொடங்கிவிட்டது! நமது சமூகத்தையே முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஆற்றல்கொண்ட அறிவாயுதங்களான புத்தகங்களை இந்த...

#ChennaiBookFair2026 தொடங்கிவிட்டது! நமது சமூகத்தையே முன்னோக்கி அழைத்துச் செல்லும் ஆற்றல்கொண்ட அறிவாயுதங்களான புத்தகங்களை இந்த அறிவுத்திருவிழாவில் கைக்கொள்ளுங்கள்! வாய்ப்புள்ள அனைவரும் சென்று புத்தகங்களை வாங்குங்கள்; குழந்தைகளுக்குப் புத்தகங்களை அறிமுகம் செய்யுங்கள்! https://t.co/E59jXH7GZ1

Culture & Heritage
𝕏 X
9 mo ago
0
81
38,635 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Industry & Investment

#UmagineTN2026: Shaping Tamil Nadu’s Digital Future Inaugurated the 4th edition of @umaginechennai, Tamil Nadu’s flagship technology and...

#UmagineTN2026: Shaping Tamil Nadu’s Digital Future Inaugurated the 4th edition of @umaginechennai, Tamil Nadu’s flagship technology and innovation summit that brings together startups, industry leaders, innovators, students and policymakers. #Umagine stands as an expression of the #DravidianModel governance, where the State leads digital transformation, invests in people and institutions, and builds technology as a public asset. By strengthening innovation, skills and startup scale, Tamil Nadu is charting a confident path towards a #TrillionDollarEconomy driven by equity, inclusion and growth. @ptrmadurai

Industry & Investment
𝕏 X
9 mo ago
0
72
65,164 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Employment & Skill Development

வடசென்னையில் நாம் தொடங்கிய #முதல்வர்_படைப்பகம்-களை விரைவில் தமிழ்நாடெங்கும் திறக்கப் போகிறோம்! #வெல்வோம்_ஒன்றாக

வடசென்னையில் நாம் தொடங்கிய #முதல்வர்_படைப்பகம்-களை விரைவில் தமிழ்நாடெங்கும் திறக்கப் போகிறோம்! #வெல்வோம்_ஒன்றாக

Employment & Skill Development
𝕏 X
9 mo ago
0
80
73,810 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Party & Elections

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக! வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம்...

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக! வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/amR45Lbqgf

Party & Elections
𝕏 X
9 mo ago
0
631
154,820 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Employment & Skill Development

நம் மண்ணின் கைவினைக் கலைஞர்களை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றியுள்ள #கலைஞர்_கைவினைத்_திட்டம் குலத்தொழிலை நிலைநிறுத்தும் சதியான ஒன்றிய...

நம் மண்ணின் கைவினைக் கலைஞர்களை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றியுள்ள #கலைஞர்_கைவினைத்_திட்டம் குலத்தொழிலை நிலைநிறுத்தும் சதியான ஒன்றிய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, சாதிவேறுபாடில்லாமல் எவரும் அவர் விரும்பிய தொழிலை மேற்கொள்ளும் வகையிலான நமது #DravidianModel அரசின் கலைஞர் கைவினைத் திட்டம், 8,000+ கைவினைக் கலைஞர்கள், 145 கோடி ரூபாய் கடனுதவி, 31 கோடி ரூபாய் மானியம் என மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. இன்றைய திண்டுக்கல் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில், மண்டல அளவிலான கைவினைக் கலைஞர்களுக்கு எனது கையால் கடனுதவிகளை வழங்கி மகிழ்ச்சி கொண்டேன்!

Employment & Skill Development
𝕏 X
9 mo ago
0
74
32,901 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Federalism & Centre–State Relations

#DravidianModel 2.0 ஆட்சிக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ள மாண்புமிகு அமித் ஷா அவர்கள்… தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து control...

#DravidianModel 2.0 ஆட்சிக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ள மாண்புமிகு அமித் ஷா அவர்கள்… தமிழ்நாட்டை டெல்லியில் இருந்து control செய்வார்களாம்… அதையும் பார்த்துவிடுவோம்! https://t.co/eSqerKj4q7

Federalism & Centre–State Relations
𝕏 X
9 mo ago
0
157
30,796 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Welfare Schemes

மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்! தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற...

மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்! தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன். நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் #DravidianModel அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்... Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது! தமிழ்நாட்டின் reality-யும் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, "பக்தர்கள் போற்றும் ஆட்சி இது" என மக்கள் தீர்ப்பில் தெரியவரும்!

Welfare Schemes
𝕏 X
9 mo ago
0
100
26,934 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Education

படிங்க... படிங்க... படிங்க... #DravidianModel #UlagamUngalKaiyil

படிங்க... படிங்க... படிங்க... #DravidianModel #UlagamUngalKaiyil https://t.co/9IGuWtnFYQ

Education
𝕏 X
9 mo ago
0
138
201,592 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Education

எதற்காக #UlagamUngalKaiyil நிகழ்ச்சி என்பதை ஒரே நிமிடத்தில் சுருங்கச் சொல்லி விளக்கிவிட்டார் இந்த மாணவி! மகிழ்ச்சி !

எதற்காக #UlagamUngalKaiyil நிகழ்ச்சி என்பதை ஒரே நிமிடத்தில் சுருங்கச் சொல்லி விளக்கிவிட்டார் இந்த மாணவி! மகிழ்ச்சி !

Education
𝕏 X
9 mo ago
0
120
32,878 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Welfare Schemes

Through #Thayumanavar programme, Tamil Nadu integrates housing, healthcare, education, nutrition, livelihood support and social security...

Through #Thayumanavar programme, Tamil Nadu integrates housing, healthcare, education, nutrition, livelihood support and social security into a single, people centred framework, ensuring every identified family receives what it needs. This is #DravidianModel Government's assault on poverty, guided by dignity, driven by data, and delivered with purpose. @timesofindia @TOIChennai

Welfare Schemes
𝕏 X
9 mo ago
0
77
29,830 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Education

நமது அரசின் ஒற்றைத் திட்டம், முதலமைச்சராக இடும் ஒற்றைக் கையெழுத்து ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் மகள்...

நமது அரசின் ஒற்றைத் திட்டம், முதலமைச்சராக இடும் ஒற்றைக் கையெழுத்து ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுதான் மகள் பார்வதியின் success story! #UlagamUngalKaiyil #DravidianModel https://t.co/GtAMG8oH1i

Education
𝕏 X
9 mo ago
0
106
46,891 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Education

#உலகம்_உங்கள்_கையில்: Access is the key to Success! 💻 கற்கும் மாணவர்களுக்கு எது தேவையென்றாலும் அதைச் செய்துதரும் ஆட்சி இது! அதன்...

#உலகம்_உங்கள்_கையில்: Access is the key to Success! 💻 கற்கும் மாணவர்களுக்கு எது தேவையென்றாலும் அதைச் செய்துதரும் ஆட்சி இது! அதன் அடையாளம்தான் இன்று வழங்கப்பட்டிருக்கும் மடிக்கணினிகள்! 💻 நமது #DravidianModel அரசு உங்கள் கையில் ஒப்படைத்திருப்பது வெறும் கருவியல்ல, உலகத்துடன் நீங்கள் தொடர்பு கொள்வதற்கான சாவி! 💻 அரசு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் வென்று வாருங்கள்! நாங்களும் வென்று வருவோம்! தமிழ்நாடு வெல்லட்டும்! #UlagamUngalKaiyil #LaptopScheme

Education
𝕏 X
9 mo ago
0
107
27,499 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41