DMKSocial

The Feed, page 35

Showing 681–700 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Party & Elections

பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா...

பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு! அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு. மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்! ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்! #AnnaForever #AnnaLivesOn #PerarignarAnna

Party & Elections
𝕏 X
8 mo ago
0
166
112,132 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Environment & Climate

மீட்டெடுத்தபின் அழகுறக் காட்சியளிக்கும் நாவலூர் ஏரி! நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு தூய்மையாகவும் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! ...

மீட்டெடுத்தபின் அழகுறக் காட்சியளிக்கும் நாவலூர் ஏரி! நீர்நிலைகளைப் பாதுகாப்பதோடு தூய்மையாகவும் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! #NavalurEcoPark #NavalurLake https://t.co/e61LqKghTA

Environment & Climate
𝕏 X
8 mo ago
0
243
154,977 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Industry & Investment

#TamilNaduGlobalTourismSummit2026: உலக மக்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! முதன்முதலாக நடைபெற்றுள்ள இந்த தமிழ்நாடு உலகளாவிய...

#TamilNaduGlobalTourismSummit2026: உலக மக்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! முதன்முதலாக நடைபெற்றுள்ள இந்த தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில், 📑 MoUs - 127 💪 வேலைவாய்ப்பு - 65,937 💸 முதலீடுகள் - ரூ.22,794.78 கோடி! இயற்கை எழிலும் - நெடிய பண்பாடும் கொண்ட தமிழ்நாட்டில், சுற்றுலாப் பயணியரை வரவேற்க - அன்பால் அரவணைக்க, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனப் பாடிச் சிறந்த தமிழர்கள் இருக்கிறோம்!

Industry & Investment
𝕏 X
8 mo ago
0
62
23,371 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Feb
Party & Elections

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! மக்களிடம் செல்வோம்! #களம்2026-இல் உறுதியாக வெல்வோம்! அதற்கு உறுதியேற்கும் வகையில், நாளை - பேரறிஞர் அண்ணா...

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! மக்களிடம் செல்வோம்! #களம்2026-இல் உறுதியாக வெல்வோம்! அதற்கு உறுதியேற்கும் வகையில், நாளை - பேரறிஞர் அண்ணா நினைவு நாளில், அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணி சென்றும்; கழகக் கிளைகள்தோறும் அவரது படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்றும், தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம்! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
8 mo ago
0
175
23,184 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Party & Elections

#CPI100: பாசிசம் வீழ்ந்து - சமத்துவச் சமுதாயம் எழுச்சி பெற, பொதுவுடைமைக் கருத்தியல்கள் நிலைபெற வேண்டும்! உலகம் கண்ட உன்னதத் தத்துவமான...

#CPI100: பாசிசம் வீழ்ந்து - சமத்துவச் சமுதாயம் எழுச்சி பெற, பொதுவுடைமைக் கருத்தியல்கள் நிலைபெற வேண்டும்! உலகம் கண்ட உன்னதத் தத்துவமான சிவப்புச் சிந்தனையை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் போராடிப் போராடித் தியாகத் தழும்பேறிய தோழர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் செவ்வணக்கம் செலுத்தினேன்! நமது இந்திய நாட்டின் மீது வேகமாகப் படிந்து வரும் பா.ஜ.க.வின் பாசிச நிழலை விரட்டிட, கருப்பு - சிவப்பு - நீலம் ஆகிய மூன்று சிந்தனைகளும் முன்னின்று போராடி, சமத்துவச் சூரியனின் ஒளியை மக்களிடம் கொண்டு செல்வோம்! #வெல்வோம்_ஒன்றாக! @CPItnOfficial #CPICentenary

Party & Elections
𝕏 X
8 mo ago
0
95
20,443 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Federalism & Centre–State Relations

#Budget2026: எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய பா.ஜ.க. அரசு! தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களும்...

#Budget2026: எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய பா.ஜ.க. அரசு! தமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களும் இல்லை; ஏற்கெனவே வரவேண்டிய #JalJeevan & கல்வி நிதியும் இல்லை; அட, வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் கூட இம்முறை இல்லை! அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கேட்டால், 5 ஆண்டுத்திட்டம் போல வாசித்திருக்கிறார்கள். மொத்தத்தில், #UnionBudget2026 ஏமாற்ற பட்ஜெட்! #NDABetraysTN

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
209
89,015 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Culture & Heritage

🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥 நமது #DravidianModel-இல், 🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை...

🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥 நமது #DravidianModel-இல், 🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள் 🔹ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா 🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும், மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்! @TNHRCEDept @PKSekarbabu

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
104
67,560 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Federalism & Centre–State Relations

#UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?...

#UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா? 📚 விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி 🚉 கோவை, மதுரை மெட்ரோ இரயில், 💧 தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, 🛤️ புதிய இரயில்வே திட்டங்கள், 💼 நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு. இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம். #Budget2026 @NarendraModi @nsitharaman

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
184
268,657 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Feb
Culture & Heritage

எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு...

எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்ட தலைசிறந்த காந்தியவாதியும், இந்தியா விடுதலையடைந்தபோது நம் மாநில முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவருமான ஓமந்தூர் ராமசாமி ஐயா அவர்களின் பிறந்தநாள். சமூகநீதிச் சாதனையாளராகத் தந்தை பெரியாராலும் பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட அவருக்குச் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
50
24,753 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jan
Governance & Administration

சீர்மிகு திட்டங்களால் நிறைந்த சிவகங்கை மாவட்ட அரசு விழா 100.45 கோடி ரூபாய் செலவில் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடம், 61.79...

சீர்மிகு திட்டங்களால் நிறைந்த சிவகங்கை மாவட்ட அரசு விழா 100.45 கோடி ரூபாய் செலவில் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடம், 61.79 கோடி ரூபாயில் சிவகங்கை செட்டிநாட்டில் உள்ள வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம், காரைக்குடி - கழனிவாசலில் #NeoTIDEL பூங்கா ஆகியவற்றைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். மரியாதைக்குரிய @PChidambaram_IN அவர்கள் சொன்னதைப் போல, அடுத்தும் வருவேன், அடிக்கல் நாட்டிய பணிகளைக் குறித்த காலத்தில் திறந்து வைப்பேன்! #வெல்வோம்_ஒன்றாக!

Governance & Administration
𝕏 X
8 mo ago
0
80
30,100 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Culture & Heritage

சிலிர்ப்பூட்டும் சிவகங்கைச் சீமையில் நாட்டுக்குழைத்த நல்லவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் சிராவயல் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் - தோழர்...

சிலிர்ப்பூட்டும் சிவகங்கைச் சீமையில் நாட்டுக்குழைத்த நல்லவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் சிராவயல் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் - தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அவர்தம் திருவுருவச் சிலைகளுடன் கூடிய அரங்கம்! பேரறிஞர் அண்ணாவால் 'தமிழ்நாட்டு வானம்பாடி' எனவும் - பாவேந்தர் அவர்களால் 'எனக்குப் பின் கவிஞன்' எனவும் - முத்தமிழறிஞரால் 'திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர்' எனவும் போற்றப்பட்ட வீறுகவியரசர் முடியரசன் அவர்களுக்குக் காரைக்குடி - கழனிவாசலில் திருவுருவச் சிலை!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
90
23,952 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jan
Federalism & Centre–State Relations

At the #NDTVTNSummit, I once again placed before the nation the just questions of Tamil Nadu. Drawing on the achievements of the...

At the #NDTVTNSummit, I once again placed before the nation the just questions of Tamil Nadu. Drawing on the achievements of the #DravidianModel, I explained why not only India’s history, but also its journey of development, must be written beginning with Tamil Nadu. Yet the Union BJP government, for whom betraying Tamil Nadu has become routine, continues to remain silent. This so-called NDA, stitched together by threatening the corrupt and running them through the BJP’s political washing machine, will be rejected by Tamil Nadu. The sun will continue to shine in the South. @NDTV

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
121
49,020 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Urban Development

திரு.வி.க. நகர் தொகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளைக் குறைந்த செலவில் நடத்திக்கொள்ள ஏதுவாக, @CMDA_Official சார்பில் கட்டப்பட்டுள்ள...

திரு.வி.க. நகர் தொகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளைக் குறைந்த செலவில் நடத்திக்கொள்ள ஏதுவாக, @CMDA_Official சார்பில் கட்டப்பட்டுள்ள 'அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை'யைத் திறந்து வைத்து, 10 இணைகளுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்து மகிழ்ந்தேன். https://t.co/QxuVgnvpuH

Urban Development
𝕏 X
8 mo ago
0
94
58,093 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Education

#IndiaGlobalEducationSummit: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் #தமிழ்நாடு_அறிவுசார்_நகரம் அமைக்க அடிக்கல்! உயர்கல்வி, R&D,...

#IndiaGlobalEducationSummit: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் #தமிழ்நாடு_அறிவுசார்_நகரம் அமைக்க அடிக்கல்! உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக #TamilNaduKnowledgeCity அமையும். நம் #DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது! மேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம், @Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின. இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்! #வெல்வோம்_ஒன்றாக! @TNIndMin @TRBRajaa

Education
𝕏 X
8 mo ago
0
46
33,855 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Transport & Infrastructure

பிராட்வே #DravidianModel-இல் எப்படி உருமாறப் போகிறது? நீங்களே பாருங்கள்! #Broadway #BroadwayIntegratedMultiModalFacilityComplex...

பிராட்வே #DravidianModel-இல் எப்படி உருமாறப் போகிறது? நீங்களே பாருங்கள்! #Broadway #BroadwayIntegratedMultiModalFacilityComplex @CMDA_Official https://t.co/X7xijtHcRG

Transport & Infrastructure
𝕏 X
8 mo ago
0
89
71,922 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Industry & Investment

#InternationalTextileSummit360: ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் முதலிடம் தொடர ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-26’ வெளியீடு ...

#InternationalTextileSummit360: ஜவுளித் துறையில் தமிழ்நாட்டின் முதலிடம் தொடர ‘ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை 2025-26’ வெளியீடு #USTarrif, #IndiaEUTradeDeal என முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு ஜவுளித்துறையின் எழுச்சிக்காக, கோவை மாநகரத்தில் நடைபெறும் சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360-ஐத் தொடங்கி வைத்தேன். 915 கோடி ரூபாய் மதிப்பிலான 55 MoU-கள் கையெழுத்தாகும் இந்தச் சிறப்புமிகு மாநாட்டில், அதிநவீன நெசவு & பின்னலாடை இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிமிகு புதிய அறிவிப்பையும் வெளியிட்டேன்!

Industry & Investment
𝕏 X
8 mo ago
0
68
28,436 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Social Justice & Reservation

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின்...

UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் - காஷ்மீர் - சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் சம்பவங்களும் தொல்லைக்குள்ளாக்குவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், சமத்துவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவை தவிர்க்க முடியாத கட்டாயமாகும். அதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்க முடியாது. யுஜிசி புதிய விதிகளில் சாதியப் பாகுபாட்டை ஒழிப்பதும், அச்சட்டக்கத்துக்குள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதும் ஆதரிக்கத்தக்கது. மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியபோது போராட்டம் நடத்திய அதே பிற்போக்கு மனநிலையுடன்தான் யுஜிசி விதிகளுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களும் அமைந்துள்ளன. இத்தகைய அழுத்தங்களுக்கு ஆட்பட்டு, ஒன்றிய அரசு இந்தப் புதிய விதிகளையோ அல்லது அவற்றின் மைய நோக்கங்களையோ நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. ரோகித் வெமுலா அவர்களின் தற்கொலை போன்ற வழக்குகளில், துணைவேந்தர்கள் மீதே குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், யுஜிசி புதிய விதிகளின்படி உயர்கல்வி நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தலைமையிலேயே சமத்துவக் குழுக்களை அமைத்தால் அவை எப்படி சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பல உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது இக்கேள்வி மேலும் வலுவடைகிறது. மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பது, பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் இடைநிற்றலைக் குறைப்பது ஆகியவற்றில் ஒன்றிய பா.ஜ.க. அரசு உண்மையாகவே தீவிரமாக இருந்தால், இந்த விதிகளை மேலும் வலுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதில் உள்ள அமைப்புரீதியான குறைகளைக் களையும் வகையில் திருத்தியமைக்க வேண்டும். முறையாக நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயல்படுத்திட வேண்டும். #UGCRegulations #UGCRegulations2026

Social Justice & Reservation
𝕏 X
8 mo ago
0
73
70,793 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Social Justice & Reservation

The #UGC (Promotion of Equity in Higher Education Institutions) Regulations, 2026 is a delayed but welcome step in reforming a higher...

The #UGC (Promotion of Equity in Higher Education Institutions) Regulations, 2026 is a delayed but welcome step in reforming a higher education system scarred by deep rooted discrimination and institutional apathy. Since the BJP came to power at the Union level, there has been a visible rise in student suicides within Indian HEIs particularly among SC and ST students. This has been accompanied by repeated attacks and harassment targeting students from South India, Kashmir, and minority communities. In this context, equity safeguards are not a matter of choice but an unavoidable necessity. The stated goals of dismantling caste discrimination and the inclusion of #OBCs within this framework, deserve support. As seen during the implementation of reservations based on the #MandalCommission recommendations, the present #UGC_Rollback backlash is driven by the same regressive mindset. The Union Government must not allow such pressure to dilute these regulations or their core objectives. Cases like the suicide of #RohithVemula, where VCs themselves faced allegations, make it difficult to see how Equity Committees chaired by institutional heads can function independently, especially when many higher education institutions are led by RSS supporters. If the Union BJP Government is serious about preventing student deaths, ending discrimination, and reducing dropout rates among students from backward communities, these regulations must not only be strengthened but also revised to address their structural gaps, and enforced with real accountability. #UGCRegulations #UGCRegulations2026

Social Justice & Reservation
𝕏 X
8 mo ago
0
584
727,446 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Party & Elections

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும் #CAA, முத்தலாக்...

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும் #CAA, முத்தலாக் தடைச் சட்டம், #WaqfAmendmentBill, #SIR எனச் சிறுபான்மையினருக்கு எதிரான துரோகப் பட்டியல் நிறைந்ததுதான் NDA கூட்டணி. ஒன்றிய அரசின் சதித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் எனத் துணிச்சலாக அறிவித்து, சிறுபான்மையினர் நலத்திட்டங்களின் பட்டியல் நிறைந்தது #DravidianModel அரசு. பா.ஜ.க.வின் பிரிவினைவாத வன்முறை அரசியலுக்குத் துணைபோகும் அ.தி.மு.க.வை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும். எனதருமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழர்கள் இதற்காக உறுதியேற்க வேண்டும்! @IUMLTNOfficial #IUML_Mahalla_Jamaat_State_Conference

Party & Elections
𝕏 X
8 mo ago
0
104
28,507 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Culture & Heritage

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில்...

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு - மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் (2023) 2 ஆயிரமாவது குடமுழுக்கு - மயிலாடுதுறை - கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (2024) 3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை - திருப்புகலூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் (2025) 4 ஆயிரமாவது குடமுழுக்கு - இன்று, பெரம்பூர் சேமாத்தம்மன் திருக்கோயிலில்... இதுவரை இப்படி ஒரு சாதனை தமிழ்நாட்டின் வரலாற்றில் இல்லை! மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை! #DravidianModel = எல்லாருக்கும் எல்லாம்!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
193
50,630 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41