WATCH: எல்லார்க்கும் எல்லாம் எனத் தமிழ்நாடெங்கும் அடுக்கடுக்காக அனைத்துத் துறை வளர்ச்சி, சரவெடி போல் நாளும் தொடரும் #DravidianModel...
WATCH: எல்லார்க்கும் எல்லாம் எனத் தமிழ்நாடெங்கும் அடுக்கடுக்காக அனைத்துத் துறை வளர்ச்சி, சரவெடி போல் நாளும் தொடரும் #DravidianModel திட்டங்கள்
🎞️ பழம்பெரும் திரைக்கலைஞர் திருமதி எம்.என். ராஜம், மூத்த திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்குக் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது!
🌾 வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 16 உழவர் அங்காடிகள், 23 புதிய கட்டடங்கள் திறந்து, மதிப்பு கூட்டும் மையங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கி, 672 வேளாண் இயந்திரங்கள் & கருவிகளின் சேவைகள் தொடக்கம்!
⚖️ மாநில உரிமைகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு!
🎓 உயர்கல்வித்துறை சார்பில் 542.02 கோடி ரூபாய் செலவிலான கல்விசார் கட்டடங்கள் திறப்பு!
✈️ #SIPCOT சூளகிரியில் ஏக்வஸ் (Aequs) குழுமம் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வான்வெளி & பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் @TNIndMin சார்பில் MoU.
⚡ ஜப்பான் MinebeaMitsumi துணை நிறுவனமான NMB Minebea India Pvt Ltd 1,980 கோடி ரூபாய் முதலீட்டில், 1,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர், மின் உபகரணங்கள், மோட்டார்கள் உற்பத்தி திட்டத்திற்கான Mou!