DMKSocial

The Feed, page 31

Showing 601–620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் கேள்விகளுக்குப் பிரதமரின் பதில் என்ன? #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்நாட்டின் கேள்விகளுக்குப் பிரதமரின் பதில் என்ன? #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/cI0C6QVDY6

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
118
37,888 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

NDA Circus Ringmaster BJP; டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி! “தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA...

NDA Circus Ringmaster BJP; டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி! “தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA கூட்டணியில் இருந்து எல்லோரும் சிதறிவிடுவோம்“ எனத் தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்! இப்படி அடிக்கடி செய்த அனுபவம் கொண்டவரென்பதால் இதில் அவரை நம்பலாம். மேற்கு மண்டலத்துக்கு நமது #DravidianModel அரசு செய்து தந்திருக்கும் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்! மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற Flash News-ஐத்தான் தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். கொள்கையால் இணைந்து பயணிக்கும் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமையடைந்துகொண்டே போகிறது. பாசிச பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட கட்சியாக இந்திய அளவில் நமக்குள்ள stature உயர்கிறது! அடிமைகள், ஆதிக்கவாதிகள், அவர்களின் ஏவல் அமைப்புகள் என எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
7 mo ago
0
130
47,586 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Culture & Heritage

மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுலகம்' கட்டுமானப் பணிகளைப்...

மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுலகம்' கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். தங்கள் ஊருக்கு யார் வந்தாலும் கோவை மக்கள் பெருமிதத்தோடு அழைத்துச் சென்று காண்பிக்கும் சிறப்புக்குரிய அறிவுக்கோயிலாக இதனைக் கூடிய விரைவில் திறந்து வைப்பேன்! மேலும், "என் வாழ்வே எனது செய்தி" என வாழ்ந்து இந்தியர்களின் இதயங்களில் நிறைந்த அண்ணல் காந்தி அவர்களின் நினைவகத்தையும் பார்வையிட்டேன்.

Culture & Heritage
𝕏 X
7 mo ago
0
58
34,700 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Health

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் ♥️ பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த...

உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள் ♥️ பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் திரு. சோமு மற்றும் திருமிகு. சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்! திரு. சோமு அவர்கள் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும்! இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்! #OrganDonation

Health
𝕏 X
7 mo ago
0
82
74,127 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Federalism & Centre–State Relations

The Union BJP government must not mortgage the integrity of investigating agencies for short-term politics. Have some shame. Well done, my...

The Union BJP government must not mortgage the integrity of investigating agencies for short-term politics. Have some shame. Well done, my respected friend Thiru. @ArvindKejriwal, and Thiru. @msisodia, for standing firm through it all and letting the truth speak for itself. #ArvindKejriwal #CBI @AamAadmiParty

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
138
372,920 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை...

முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக! @OfficeOfOPS

Party & Elections
𝕏 X
7 mo ago
0
638
512,271 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Governance & Administration

#DravidianModel: தொடரும் வளர்ச்சிப் பணிகள், பெருகும் திட்டங்கள், குறையாத வேகம்! 🔷 ECR-இல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2,100 கோடி...

#DravidianModel: தொடரும் வளர்ச்சிப் பணிகள், பெருகும் திட்டங்கள், குறையாத வேகம்! 🔷 ECR-இல் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சாலை மேம்பாலப் பணிகளுக்கு அடிக்கல், 🔷 கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடத்திற்கு அடிக்கல், 🔷 பிரிக்ளின் சாலைக்கு ’திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுத் திறந்துவைத்தல், 🔷 @TNIndMin சார்பிலான நிகழ்ச்சியில், EROS GEN AI நிறுவனம் - @IITMadras ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள Large Cultural Voice Models (LCVM) திட்டம் வெளியீடு, 🔷 திருநெல்வேலி - ரெட்டியார்பட்டி, விருதுநகர் - கூரைக்குண்டு மற்றும் ஈரோடு - கங்காபுரம் என மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைக்க அடிக்கல், 🔷 தைவான் ADATA டெக்னாலஜி துணை நிறுவனமான ADATA செமிகண்டக்டர் நிறுவனம், ரூ. 931 கோடி உறுதிசெய்யப்பட்ட முதலீட்டில் #SIPCOT திருப்பெரும்புதூரில், DRAM memory modules and Flash drives உற்பத்தி ஆலை அமைக்க அடிக்கல், 🔷 வேலூர் மாவட்டம், பெருமுகை கிராமத்தில் 250 படுக்கைகள் வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதிக் கட்டடம் மற்றும் சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசுப் பணியாளர்களுக்கான “C” வகை குடியிருப்புக் கட்டடம் திறப்பு, 🔷 @tnschoolsedu சார்பில் 35 மாவட்டங்களில், 217 அரசுப் பள்ளிகளில் 296.62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,232 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் பிற வசதிகள் திறப்பு, 🔷 இராணிப்பேட்டை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி கொள்ளளவினை உயர்த்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள மறுகட்டுமானங்கள் திறப்பு, 🔷 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கோயில்மலையாற்றின் குறுக்கே சிறிய அணை அமைக்கும் பணிக்கு அடிக்கல், 🔷 @tnhrcedept சார்பில் திருக்கோயில்களில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல், 🔷 குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தச் சிறப்பாகச் செயலாற்றிய தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகங்களின் சாதனைகளைப் பாராட்டி விருதுகள் உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
90
33,291 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Welfare Schemes

வள்ளுவ முனையில் வரலாறு படைத்திட்ட பிரமாண்ட அரசு விழா! இதுவரையில் இல்லாத அளவிற்கு 3,12,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குமரி...

வள்ளுவ முனையில் வரலாறு படைத்திட்ட பிரமாண்ட அரசு விழா! இதுவரையில் இல்லாத அளவிற்கு 3,12,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குமரி மாவட்ட மீனவர்களுக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி, பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன். இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் வள்ளுவ முனையில் #DravidianModel 2.0-இன் தொடக்கத்துக்கான அடித்தளம் அமைந்தது!

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
88
26,257 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Culture & Heritage

குமரியில் இருந்து நாகர்கோயில் செல்ல 2 மணி நேரம் ஆகுமளவுக்கு வழியெங்கும் காத்திருந்து நாஞ்சில் மக்கள் பொழிந்த அன்போடு தொடரும் குமரி மாவட்ட...

குமரியில் இருந்து நாகர்கோயில் செல்ல 2 மணி நேரம் ஆகுமளவுக்கு வழியெங்கும் காத்திருந்து நாஞ்சில் மக்கள் பொழிந்த அன்போடு தொடரும் குமரி மாவட்ட நிகழ்ச்சிகள் 'விடுதலைப் போராட்ட வீரர் - மார்ஷல் நேசமணி அவர்களின் தளபதி' திரு. ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு நமது #DravidianModel அரசு அமைத்துள்ள திருவுருவச் சிலையினையும், முப்பால் தந்த வள்ளுவருக்கு வானுயர் பேரறிவுச் சிலை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குக் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினையும், எனது பெயரில் அமைக்கப்பட்டுள்ள படைப்பகத்தையும் திறந்து வைத்து மகிழ்ச்சி கொண்டேன்!

Culture & Heritage
𝕏 X
7 mo ago
0
87
27,856 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Culture & Heritage

தென்குமரியின் வரவேற்பில், முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய #பேரறிவுச்சிலை-யின் வெள்ளிவிழா வளைவைத் திறந்து வைத்தேன்! #வள்ளுவம்_போற்றுதும்!...

தென்குமரியின் வரவேற்பில், முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய #பேரறிவுச்சிலை-யின் வெள்ளிவிழா வளைவைத் திறந்து வைத்தேன்! #வள்ளுவம்_போற்றுதும்! #StatueOfWisdom https://t.co/rUGbWTXIIy

Culture & Heritage
𝕏 X
7 mo ago
0
81
134,453 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
International & Diaspora

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்! 🏡 இலங்கைத்...

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்! 🏡 இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், 💷 அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை, 🤝 சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது #DravidianModel அரசு! நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்!

International & Diaspora
𝕏 X
7 mo ago
0
114
66,182 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Education

#TamilNaduModelSchools: #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! ♥️ கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி...

#TamilNaduModelSchools: #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்! ♥️ கல்வியால் சிறக்கும் நமது அரசுப் பள்ளி மாணவர்களைச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற வைத்துப் பூரிப்படைகிறோம் ♥️ 2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாடல் பள்ளிகள், இன்று 38 மாவட்டங்களிலும், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் 800 மாணவர்களுக்கான உறைவிட, உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான், கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37) மற்றும் பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும், 93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில், 50 துறைகளில் மேற்படிப்பு பயிலுகின்றனர். அதில் 41 பேர் #IIT-களிலும், 22 பேர் முழு உதவித்தொகையுடன் வெளிநாடுகளிலும் பயில்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு ஐஐடி-யில் நுழைவதற்கான முதற்படியை அரசு மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும் - ஆதி திராவிடர் (13) மற்றும் பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த 68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர். பெரும்பாலும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த இந்த மாணவர்களின் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்கின்ற பெருமையோடு, இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் பலர் கல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, உன்னதமான உயரங்களை வாழ்வில் அடைந்திட வாழ்த்துகிறோம்! @Anbil_Mahesh @tnschoolsedu #DravidianModel

Education
𝕏 X
7 mo ago
0
127
79,354 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Education

கல்விதான் உங்களுக்கு அனைத்தையும் வழங்கும் கடவுள் High-speed internet இணைப்புடன் கூடிய #முதல்வர்_படைப்பகம் வசதியுடன் கொளத்தூர் அருள்மிகு...

கல்விதான் உங்களுக்கு அனைத்தையும் வழங்கும் கடவுள் High-speed internet இணைப்புடன் கூடிய #முதல்வர்_படைப்பகம் வசதியுடன் கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை & அறிவியல் கல்லூரிக்குப் புதிய கட்டடங்கள்! #KolathurVisit @PKSekarbabu @tnhrcedept

Education
𝕏 X
7 mo ago
0
97
29,575 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Welfare Schemes

#WATCH: இன்றைய #KolathurVisit-இல், 👶🏾 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடம், 🚏 குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தம்...

#WATCH: இன்றைய #KolathurVisit-இல், 👶🏾 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடம், 🚏 குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தம் மற்றும் பயணியர் நிழற்குடை, 🍚 அமுதம் நியாய விலைக்கடைகள் திறப்பு மற்றும் 📜 2007 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல்! https://t.co/kC35GhiAjx

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
55
14,015 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Party & Elections

#News18NetworkTownHall Chennai Edition While the BJP attempts to destabilise elected governments, our #DravidianModel has delivered...

#News18NetworkTownHall Chennai Edition While the BJP attempts to destabilise elected governments, our #DravidianModel has delivered inclusive growth and record progress in Tamil Nadu. The 2026 election in Tamil Nadu will be a straight fight between a State that stands for social justice, state autonomy, secularism and democratic values, and the NDA, which thrives on intimidation, coercing defections through raids, and the misuse of institutions. Tamil Nadu has defeated such forces before, and it will do so again.

Party & Elections
𝕏 X
7 mo ago
0
85
23,580 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Women & Child Welfare

திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்! ...

திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள்; அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்! அ.தி.மு.க.வின் அழுத்தமே நாம் 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகையாக வழங்கக் காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர். பழனிசாமி அவர்களே, உங்கள் அழுத்தம் காரணமல்ல. "உங்கள் டெல்லி ஓனர்கள் தேர்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையைத் தடுத்து நிறுத்துவார்கள் என்ற சூழ்ச்சிதான் காரணம்!" இதனைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை அட்வான்சாக வரவு வைத்திருக்கிறேன். பரவாயில்லை, நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள் என்பதில் இருந்தே #DravidianModel சத்தமில்லாமல் நடத்திய surgical strike உங்கள் உறக்கத்தைக் கெடுத்து, இப்படி புலம்பும் அளவுக்கு பெரிய HIT அடித்துள்ளது எனப் புரிந்துகொள்கிறேன். Copy, paste அரசியல் என்பது காலங்காலமாக அ.தி.மு.க.வின் வாடிக்கை என்பதைத் தமிழ்நாட்டில் அனைவரும் அறிவார்கள். அதனால், புதுசா ஏதாவது சொல்லுங்க! விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என #DravidianModel அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிர் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் #DMKWomenPowerEngine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது!

Women & Child Welfare
𝕏 X
7 mo ago
0
154
42,586 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

மார்ச் 9 - திருச்சியில் “மெயின் பிக்சர்”! #வெல்வோம்_ஒன்றாக

மார்ச் 9 - திருச்சியில் “மெயின் பிக்சர்”! #வெல்வோம்_ஒன்றாக https://t.co/10aQ7g3kNN

Party & Elections
𝕏 X
7 mo ago
0
148
45,595 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

தேர்தல் காலம் என்பதால் இனி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் பிரதமர். மதுரைக்கு வரவுள்ள பிரதமர் இதற்கெல்லாம் பதில் சொல்வாரா?

தேர்தல் காலம் என்பதால் இனி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் பிரதமர். மதுரைக்கு வரவுள்ள பிரதமர் இதற்கெல்லாம் பதில் சொல்வாரா? https://t.co/RFrASwY3Ad

Party & Elections
𝕏 X
7 mo ago
0
115
27,806 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

#DravidianModel அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்! #வெல்வோம்_ஒன்றாக

#DravidianModel அரசுக்கும், தமிழ்நாட்டில் டப்பா எஞ்சினை ஓட்ட நினைக்கும் பா.ஜ.க. அரசுக்குமான வேறுபாடு இதுதான்! #வெல்வோம்_ஒன்றாக https://t.co/Tdbuu0w53F

Party & Elections
𝕏 X
7 mo ago
0
77
19,073 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Party & Elections

காந்தியடிகளை மறவோம்! தமிழ்நாட்டுக்குள் மதவாத சக்திகளை அனுமதியோம்! மேலாடை துறந்து, அரையாடைக்கு மாறும் காந்தியடிகளின் மனமாற்றத்திற்கு...

காந்தியடிகளை மறவோம்! தமிழ்நாட்டுக்குள் மதவாத சக்திகளை அனுமதியோம்! மேலாடை துறந்து, அரையாடைக்கு மாறும் காந்தியடிகளின் மனமாற்றத்திற்கு வித்திட்ட மதுரை மண்ணில் இருந்து 'காந்தியை மறவோம்' என மதச்சார்பற்ற சக்திகளைத் திரட்டி முழங்கியுள்ள சகோதரர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் பாராட்டுகள்! மகாத்மாவை மதவெறிக்கு இழந்துவிட்டோம். மறதி எனும் தேசிய வியாதியால் அவரது மதநல்லிணக்கக் கொள்கைகளையும் மக்கள் இழந்துவிடக் கூடாது என்ற அவரது உயர்ந்த நோக்கம் நிச்சயம் வெற்றி பெறும். பாசிசம் வீழும்; காந்தியப் பாதைக்கு இந்தியா திரும்பும்! @kamalpanpattu @maiamofficial #மறவோம்_காந்தி

Party & Elections
𝕏 X
7 mo ago
0
76
23,361 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41