DMKSocial

The Feed, page 30

Showing 581–600 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Governance & Administration

WATCH: சொல்லித் தீராத #DravidianModel சாதனைப் பட்டியல் தொடர்கின்றது! மக்கள் மனம் மகிழ்கின்றது! 🏣 நான் படித்த #PresidencyCollege...

WATCH: சொல்லித் தீராத #DravidianModel சாதனைப் பட்டியல் தொடர்கின்றது! மக்கள் மனம் மகிழ்கின்றது! 🏣 நான் படித்த #PresidencyCollege மாணவர்களுக்காக 2000 பேர் அமரக்கூடிய வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம், ⚽ @SportsTN_ சார்பில் 14 விளையாட்டுத் துறை கட்டடங்களைத் திறந்து வைத்து, 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். 👱🏾‍♀️ சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் & தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தேன். 🏞️ கிண்டி #EcoPark முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, #KalaignarCentenaryPark-இல் புதிதாகக் கட்டப்பட்டுள்ள Super Tree Tower திறந்து வைத்து, தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026 வெளியிட்டேன். 🚓 காவல் துறை சார்பில் 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 8 காவல்துறை பிற கட்டடங்கள், 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை திறந்து வைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறையினரின் பயன்பாட்டுக்கு வழங்கினேன். 💧 தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் ‘புனல் 1916’ தொடங்கி வைத்து, லூப் சாலைக்குச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் பெயர்சூட்டித் திறந்து வைத்து, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 229 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன். 🌆 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தேன். #வெல்வோம்_ஒன்றாக!

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
62
121,055 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Federalism & Centre–State Relations

அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று...

அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் - அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்! தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே #OutOfControl-தான்! #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
167
83,253 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Transport & Infrastructure

#MetroRail சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் “முதல் உயர்மட்டச் சாலை”! சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவாகிவரும் இந்த மிக நீண்ட...

#MetroRail சுரங்கப்பாதையின் மேல் அமைக்கப்படும் “முதல் உயர்மட்டச் சாலை”! சென்னையின் புதிய அடையாளமாக மிக வேகமாக உருவாகிவரும் இந்த மிக நீண்ட தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலத்தை #DravidianModel 2.0-வின் துவக்கத்திலேயே மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்! https://t.co/M2Ktu7meoQ

Transport & Infrastructure
𝕏 X
7 mo ago
0
64
86,510 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Industry & Investment

In a major boost to Tamil Nadu’s manufacturing strength, we signed an MoU with @MRFworldwide to establish a new tyre manufacturing facility...

In a major boost to Tamil Nadu’s manufacturing strength, we signed an MoU with @MRFworldwide to establish a new tyre manufacturing facility at #SIPCOT Iluppaikudi in #Sivagangai district with an investment of Rs. 5300 crore, creating around 1000 jobs and further strengthening our industrial ecosystem. We have also unveiled the 'Tamil Nadu Shipbuilding Policy 2026' to build a robust maritime ecosystem covering shipbuilding, ship repair, marine engineering and allied sectors, positioning Tamil Nadu as a leading hub in the global blue economy. #MRF @TNIndMin @TRBRajaa #DravidianModel #வெல்வோம்_ஒன்றாக!

Industry & Investment
𝕏 X
7 mo ago
0
51
38,260 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Federalism & Centre–State Relations

பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது...

பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்! இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.! 'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! 🚫 திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். 🚫 வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர். 🚫 குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். 🚫 ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது. 🚫 மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள். 👉 கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்! 📢 தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். #StopHindiImposition

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
285
240,028 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Mar
Culture & Heritage

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்! "கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும்...

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்! "கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்" எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர். 'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது #DravidianModel அரசும் செயல்படுகிறது. அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! #AiyyaVaikundar #AiyyaVazhi

Culture & Heritage
𝕏 X
7 mo ago
0
96
96,257 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Urban Development

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில், #SingaraChennai2Point0 திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கம், சென்னை நடுநிலைப்...

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில், #SingaraChennai2Point0 திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள முதல்வர் விளையாட்டரங்கம், சென்னை நடுநிலைப் பள்ளிக்கான புத்தம் புதிய கட்டடம் மற்றும் அம்பேத்கர் கூட்டுறவுப் பண்டகசாலை நியாயவிலைக் கடைகள்! #DravidianModel #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/B4B6lPboEm

Urban Development
𝕏 X
7 mo ago
0
60
23,474 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Welfare Schemes

கொளத்தூர் இராஜாஜி நகரில் @TNHRCEDept சார்பில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான உறைவிடம்! 60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க...

கொளத்தூர் இராஜாஜி நகரில் @TNHRCEDept சார்பில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான உறைவிடம்! 60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க வசதி வாய்ப்பில்லாத முதியோர்களுக்கான அன்புச்சோலையாக இதனைக் கட்டியுள்ள மாண்புமிகு @PKSekarbabu அவர்களுக்குப் பாராட்டுகள். இந்த உறைவிடத்தின் முழுப் பராமரிப்பிற்கான நிதியுதவியை வழங்கிட முன்வந்த TVS Motors நிறுவனத்தாருக்கு என் நன்றிகள். அன்பினால் #வெல்வோம்_ஒன்றாக! #KolathurVisit #DravidianModel

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
79
29,305 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Federalism & Centre–State Relations

Thank you, Hon'ble Thiru. @Siddaramaiah avare, for your warm response to Part I of the Report of the High Level Committee on Union - State...

Thank you, Hon'ble Thiru. @Siddaramaiah avare, for your warm response to Part I of the Report of the High Level Committee on Union - State Relations constituted by the Government of Tamil Nadu. I deeply appreciate your thoughtful endorsement of our initiative and your recognition that federal renewal must be a collective effort. As you rightly observed, “Unity in a diverse republic like India is sustained not through uniformity, but through constitutional trust.”

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
38
86,350 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Urban Development

கனவுகள் மெய்ப்படக் கைகொடுக்கும் #முதல்வர்_படைப்பகம்! 🔷 அசோக் நகர் 🔷 ஓட்டேரி, சுப்புராயன் தெரு 🔷 ஜமாலியா, மங்களபுரம் 🔷 புளியந்தோப்பு,...

கனவுகள் மெய்ப்படக் கைகொடுக்கும் #முதல்வர்_படைப்பகம்! 🔷 அசோக் நகர் 🔷 ஓட்டேரி, சுப்புராயன் தெரு 🔷 ஜமாலியா, மங்களபுரம் 🔷 புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் 🔷 பட்டாளம், பக்தவச்சலம் பூங்கா 🔷 ஆர். கே. நகர், மேயர் பாசுதேவ் தெரு 🔷 சூளை, இராட்லர் தெரு 🔷 பெரம்பூர், எருக்கஞ்சேரி (மேம்பாடு) 🔷 இராயபுரம் , சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடம் (மேம்பாடு) 🔷 மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம் 🔷 கொண்டித்தோப்பு, சென்னை நடுநிலைப் பள்ளி -ஆகிய 11 இடங்களில் முதல்வர் படைப்பகம் Co-working space & நவீன நூலகங்களைச் சென்னை மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்திருக்கிறேன்; அடுத்து, தமிழ்நாடு முழுக்க விரிவாக்கம் காணும். இதுதான் #DravidianModel-இன் திறம்!

Urban Development
𝕏 X
7 mo ago
0
69
32,644 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Environment & Climate

#WorldWildlifeDay: Tamil Nadu under #DravidianModel Leads with Purpose in Wildlife Conservation. 🐐 #ProjectNilgiriTahr and strengthening...

#WorldWildlifeDay: Tamil Nadu under #DravidianModel Leads with Purpose in Wildlife Conservation. 🐐 #ProjectNilgiriTahr and strengthening elephant and tiger conservation through the TN Wildlife Crime Control Bureau using AI 🦅 Reviving vultures and conserving lion-tailed macaques, otters, hyenas, slender loris and hornbills through the first-of-its-kind TN Endangered Species Conservation Fund 🐢 Sea Turtle Conservation Centre, Chennai 🐬 Dugong Conservation Centre, Thanjavur 🕊 International Centre for Migratory Birds, Villupuram 🌊 Expanded dugong protection and restoration efforts with large-scale seagrass and coral restoration in the Gulf of Mannar 🌳 8 new sanctuaries / protected areas 💧 19 Ramsar sites 🌲 100 Reserve Forests 🚶 #TrekTN linking conservation with livelihoods Driven by our Rangers, Forest Guards, Watchers and Officers, researchers, Mahouts, Cavadies, Veterinarians, local communities and tribal youth, Tamil Nadu will continue to lead from the front. @TThenarasu @RRajakannappan @Supriyasahuias @tnforestdept

Environment & Climate
𝕏 X
7 mo ago
0
61
62,957 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Mar
Welfare Schemes

விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம்...

விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி! கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்! இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் - தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்! #வெல்வோம்_ஒன்றாக!

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
489
123,952 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Culture & Heritage

Let Keeladi speak. Let history rise. Tamil Nadu has sought immediate approval from the Union BJP Government for 8 archaeological...

Let Keeladi speak. Let history rise. Tamil Nadu has sought immediate approval from the Union BJP Government for 8 archaeological excavations including #Keeladi, Adichanur and Nagapattinam. The proposals were submitted in July 2025 and taken up in a meeting under the Director General, ASI in November, yet permission remains pending for 8 months. Time and again we have raised this demand, and time and again it is being ignored. The excavation season in Tamil Nadu runs only from January to July. If this window is missed, monsoon conditions will stall fieldwork, delay vital research and waste funds already allocated for 2025-2026. I want to ask, why this hesitation? The antiquity of Tamil civilisation does not diminish India. It adds to India’s civilisational pride. What is the BJP Government afraid of? Approve the excavations and let history speak.

Culture & Heritage
𝕏 X
7 mo ago
0
157
160,449 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Urban Development

சென்னையில் #FinTechCity அமைவதற்கான முதற்கட்டமாக #FinTech Tower! மேலும் UHDB சார்பில், ஒரே நாளில் 5,367 குடியிருப்புகளுக்கான ஆணைகளைப்...

சென்னையில் #FinTechCity அமைவதற்கான முதற்கட்டமாக #FinTech Tower! மேலும் UHDB சார்பில், ஒரே நாளில் 5,367 குடியிருப்புகளுக்கான ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கி, மேலும் 1,984 குடியிருப்புகளைக் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இத்துடன், கடந்த 5 ஆண்டு #DravidianModel ஆட்சியில், 209 திட்டங்களில் 74,126 குடியிருப்புகளை எளிய மக்களுக்கு வழங்கி, பாதுகாப்பான சொந்த வீடு எனும் கண்ணியமிகு வாழ்வை உறுதிசெய்துள்ளோம் என்பதைப் பெருமிதம் பொங்கத் தெரிவிக்கிறேன்.

Urban Development
𝕏 X
7 mo ago
0
78
47,942 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Governance & Administration

#TheWeekLeadershipSummit 2026: Realising the Dravidian Dream In my inaugural address, I reaffirmed the 10 year vision with which I sought...

#TheWeekLeadershipSummit 2026: Realising the Dravidian Dream In my inaugural address, I reaffirmed the 10 year vision with which I sought the people’s mandate in 2021 and detailed how Tamil Nadu is steadily advancing towards that goal. No other State has implemented as many transformative flagship schemes at this scale as our #DravidianModel government. Tamil Nadu today delivers all round performance across sectors, with development reaching every region in a balanced and equitable manner. At a time when BJP ruled States are distracted by communal polarisation, hate speech and regressive politics, Tamil Nadu stands as a rational, inclusive and development driven State where #SocialJustice fuels growth, fraternity strengthens progress, and harmony powers prosperity. My sincere thanks to @TheWeekLive and the #MalayalaManorama Group for the opportunity to present our vision for Tamil Nadu and spark meaningful national conversations around it.

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
69
34,280 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Mar
Urban Development

இன்று நான் திறந்து வைக்கவுள்ள - 🏙️ ரூ.249 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள #FintechTower (நிதிநுட்ப கோபுரம்) மற்றும் 🌇 தமிழ்நாடு நகர்ப்புற...

இன்று நான் திறந்து வைக்கவுள்ள - 🏙️ ரூ.249 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள #FintechTower (நிதிநுட்ப கோபுரம்) மற்றும் 🌇 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 குடியிருப்புகளின் படங்கள்! அனைத்து sector-களையும் வளர்த்தெடுக்கும் All-rounderதான் #DravidianModel! தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம்! #வெல்வோம்_ஒன்றாக!

Urban Development
𝕏 X
7 mo ago
0
151
133,049 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Education

நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு...

நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது #DravidianModel அரசு இருக்கிறது. #AllTheBest 👍

Education
𝕏 X
7 mo ago
0
78
122,593 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை! உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும்...

தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை! உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன். தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்! தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது! நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது! சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
7 mo ago
0
482
143,370 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
International & Diaspora

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE),...

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் – இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக, வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நம் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு, அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையைக் கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் தயார் நிலையில் உள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்களையோ அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினையோ தொடர்புகொள்ளலாம். மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள் 011-24193300 (Land line) 92895 16712 (Mobile Number with Whatsapp) அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்: இந்தியாவிற்குள் – 1800 309 3793 வெளிநாடு – +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு – +91 80 6900 9901

International & Diaspora
𝕏 X
7 mo ago
0
149
310,369 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Culture & Heritage

கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு: #DravidianModel-இல் @TNHRCEDept-இன் சாதனைகளுக்குச் சான்று! 🔷 கோயில்களைக் காத்தோம், 🔷 நிலங்களை மீட்டோம், 🔷...

கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு: #DravidianModel-இல் @TNHRCEDept-இன் சாதனைகளுக்குச் சான்று! 🔷 கோயில்களைக் காத்தோம், 🔷 நிலங்களை மீட்டோம், 🔷 பூசாரிகளின் நலன்களைப் பேணுகிறோம், 🔷 பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துகிறோம், 🔷 ஒவ்வொரு திருவிழாவும் சிறப்பாக அமைதியாக நடந்தேறுகிறது ஆன்மீக அன்பர்கள் மனமகிழ்ந்து போற்றும் பொற்காலம் #DravidianModel 2.0-விலும் தொடரும்! #எல்லாருக்கும்_எல்லாம் #வெல்வோம்_ஒன்றாக!

Culture & Heritage
𝕏 X
7 mo ago
0
64
33,215 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41