DMKSocial

The Feed, page 27

Showing 521–540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Education

இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல இலட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது #தமிழ்ப்புதல்வன்! இவர்களின் கல்வி தொடர,...

இந்தத் தம்பி மட்டுமல்ல, இதுபோல இலட்சக்கணக்கான தம்பிகளின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது #தமிழ்ப்புதல்வன்! இவர்களின் கல்வி தொடர, எளிய குடும்பங்களின் அடுத்த தலைமுறைகள் செழிக்க #VoteForDMK! 🌄 #DravidianModel #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/WMMFzCEK99

Education
𝕏 X
6 mo ago
0
143
110,296 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Women & Child Welfare

#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து #DravidianModel-இல், 🚍 விடியல் பேருந்துகள் - 7,712 மார்ச் 1 வரையில், 2021-22...

#விடியல்_பயணம்: புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து #DravidianModel-இல், 🚍 விடியல் பேருந்துகள் - 7,712 மார்ச் 1 வரையில், 2021-22 - 95.86 கோடி 2022-23 - 166.53 கோடி 2023-24 - 186.35 கோடி 2024-25 - 213.94 கோடி 2025-26 - 235.14 கோடி என மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள விடியல் பயணங்கள் - 897.82 கோடி பாதுகாப்பான, சுதந்திரமான பயணங்களால் மகளிர் முன்னேற்றத்தில் புதிய உயரங்களை எட்டியிருப்பதோடு, ஆண்டுக்கு ஆண்டு விடியல் பயணங்கள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவது இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பறைசாற்றுகிறது. மகளிர் மட்டுமல்ல, திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். 🚍 இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் நாம் செயல்படுத்திய இந்தத் திட்டம், அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது. 🚍 #DravidianModel 2.0-வில் இந்தத் திட்டம் இன்னும் மேன்மையடையும். இது #StalinStatement!

Women & Child Welfare
𝕏 X
6 mo ago
0
267
109,095 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Party & Elections

தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்! அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள...

தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்! அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK! https://t.co/weXnkYs7kR

Party & Elections
𝕏 X
6 mo ago
0
450
108,380 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Health

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள...

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன். மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் #DravidianModel நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி!

Health
𝕏 X
6 mo ago
0
153
150,404 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

தமிழ்நாடு vs டெல்லி என்பது நிரூபணம்! எதிர்க்கட்சியினர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா? தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான...

தமிழ்நாடு vs டெல்லி என்பது நிரூபணம்! எதிர்க்கட்சியினர் டெல்லியில் முகாமிட்டிருப்பது மக்கள் நலனுக்காகவா? தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான முடிவுகளைக்கூட டெல்லியே எடுக்கும் நிலை. இனி, டெல்லியின் முடிவே அவர்களது முடிவு! #LetterToBrethren https://t.co/TjxTBcDyYX

Party & Elections
𝕏 X
6 mo ago
0
213
49,715 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Party & Elections

ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது. நமது...

ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது. நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர். நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!

Party & Elections
𝕏 X
6 mo ago
0
96
35,723 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Industry & Investment

“சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு… நீங்கள் காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும்!...

“சென்னையில் மட்டும்தான் முதல்வர் படைப்பகங்களா?” என்று கேட்பவர்களுக்கு… நீங்கள் காணும் இந்த உலகத்தர வசதி தமிழ்நாடு முழுக்க கிடைக்கும்! Stay tuned for #DravidianModel 2.0! https://t.co/FHz4zhon4g

Industry & Investment
𝕏 X
6 mo ago
0
99
88,685 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Industry & Investment

ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி! 👕 குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்! 👕...

ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி! 👕 குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்! 👕 2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, #DravidianModel அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 👕 இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%! 👕 இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசு! சாதனைகளைச் சொல்லி #வெல்வோம்_ஒன்றாக!

Industry & Investment
𝕏 X
6 mo ago
0
129
47,498 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Federalism & Centre–State Relations

தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்! மொழித்திணிப்பு, பண்பாட்டுப்...

தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்! மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக! இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! #DravidianModel 2.0 அமையட்டும்! అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು! #HappyUgadi

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
326
146,083 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Federalism & Centre–State Relations

இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன்...

இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். #StopHindiImposition #SaveTamilLives

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
293
192,560 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Party & Elections

இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? 🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும்,...

இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? 🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்! மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்! தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்☀️ #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
211
57,526 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Mar
Party & Elections

ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று...

ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று! நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்! #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
395
233,345 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Culture & Heritage

Relentless pressure. Repeated letters. And finally, approval. After months of delay, the Union Government has cleared archaeological...

Relentless pressure. Repeated letters. And finally, approval. After months of delay, the Union Government has cleared archaeological excavations at 8 sites including #Keeladi. This is a win earned through DMK’s persistent efforts. But we are not done. The Union BJP Government is still sitting on the Keeladi excavation report. We will not stop until that too is out. தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் #கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! https://t.co/HfW30oGUsp

Culture & Heritage
𝕏 X
6 mo ago
0
106
107,445 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Party & Elections

உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! ☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்! 🌟 இந்தியாவிலேயே முதன்மை...

உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! ☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்! 🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்! 💪 அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்! இதுதான் தி.மு.க.🖤♥️ ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை! #VoteForDMK

Party & Elections
𝕏 X
6 mo ago
0
466
98,719 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Employment & Skill Development

"I am a product of #நான்_முதல்வன்" - சுப்பிரமணிய பாரதி 🔷 கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். 🔷...

"I am a product of #நான்_முதல்வன்" - சுப்பிரமணிய பாரதி 🔷 கடந்த 5 ஆண்டுகளில் 1,55,131 அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். 🔷 ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். 🎓 #நான்_முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் #UPSC குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் young sensation ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி அவர்கள். 🌟 இதுதான் நான் காண விரும்பும் தமிழ்நாடு! வளமான இளைய தமிழ்நாடு! 🌟 நமது #DravidianModel அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும்! வெற்றிக் கதைகள் மேலும் உயரும்!

Employment & Skill Development
𝕏 X
6 mo ago
0
103
48,129 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Federalism & Centre–State Relations

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு...

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை. இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும். #ModijiWhereIsLPG #LPGCylinderCrisis

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
343
98,643 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Welfare Schemes

மூன்று இலட்சம் கலைஞர் கனவு இல்லங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம் ! #DravidianModel 2.0-வில் ஐந்து இலட்சம் வீடுகள் இலக்கு!

மூன்று இலட்சம் கலைஞர் கனவு இல்லங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம் ! #DravidianModel 2.0-வில் ஐந்து இலட்சம் வீடுகள் இலக்கு!

Welfare Schemes
𝕏 X
6 mo ago
0
86
30,876 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Culture & Heritage

தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும் நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச்...

தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும் நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்' என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன். அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம்.

Culture & Heritage
𝕏 X
6 mo ago
0
129
162,953 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Urban Development

#KolathurVisit: @ChennaiCorp, @CMDA_Official & வருவாய்த் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, 551 பயனாளிகளுக்கு...

#KolathurVisit: @ChennaiCorp, @CMDA_Official & வருவாய்த் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, 551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி மகிழ்ந்தேன்... https://t.co/5JmMomOUKh

Urban Development
𝕏 X
6 mo ago
0
92
29,133 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Federalism & Centre–State Relations

#WestAsiaWar காரணமாகப் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். மக்கள்...

#WestAsiaWar காரணமாகப் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? #LPGCylinder https://t.co/gxiHrdnhHs

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
86
38,922 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41