
திண்டிவனம் தொகுதி-மரக்காணம் பேரூராட்சியில் #WeRejectADMK மக்கள் வார்டு சபைக் கூட்டம். https://t.co/KCN5h2hhIq
திண்டிவனம் தொகுதி-மரக்காணம் பேரூராட்சியில் #WeRejectADMK மக்கள் வார்டு சபைக் கூட்டம். https://t.co/KCN5h2hhIq
All
Showing 5,341–5,360 of 9,209 posts

திண்டிவனம் தொகுதி-மரக்காணம் பேரூராட்சியில் #WeRejectADMK மக்கள் வார்டு சபைக் கூட்டம். https://t.co/KCN5h2hhIq

#WeRejectAdmk கிராம/வார்டுசபைக் கூட்டங்களுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டுவிட்டது @CMOTamilNadu அரசு! கிராமசபை என்ற பெயரில் கூட்டம் நடத்தக் கூடாதாம்! இனி, 'மக்கள் கிராம சபைக் கூட்டம்' என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும்! எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. https://t.co/GlhHqrrKf2


முதல்நாள் #WeRejectADMK கிராமசபை கூட்டத்திற்கு இருந்த எழுச்சிமிகு வரவேற்பு, 10 ஆண்டுகளாக தமிழகத்தை இருளில் தள்ளிய அதிமுக ஆட்சியை தூக்கியெறிய குண்ணம் முதல் குமரிவரை மக்கள் உறுதியுடன் தயாராகிவிட்டதையே உணர்த்துகிறது! முதல் நாள் வெற்றி! முழுமையான வெற்றியும் நமதே! #LetterToBrethren https://t.co/mBj9evV44Z


மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் @PThangamanioffl 'குப்பை கொட்டவும் வரி' அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் @SPVelumanicbe அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? எண்ணித்துணிக கருமம்! https://t.co/8WKdQwepqY


சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்! சமூக அடிமைத்தனம் - ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை - பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்! #Periyar ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்! https://t.co/nXysrVmV4W



கிராமசபைக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த குண்ணம் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள். அதன் பிறகு எதுவுமில்லை! தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யார் பதில் சொல்வார்கள்? #WeRejectADMK https://t.co/hHDkohd1Pm


அதிமுக ஆட்சியில் குப்பை கொட்டவும் கட்டணமா? கொரோனா கொள்ளையில் இது அடுத்த கொள்ளை; மக்களையும் வணிக நிறுவனங்களையும் பேரிடரில் தள்ளும் முயற்சி! அறிவிப்பைத் திரும்பப் பெற @CMOTamilNadu உத்தரவிட வேண்டும்; அவருக்கு @SPVelumanicbe கட்டுப்படாவிட்டால் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்படும்! https://t.co/nL4HIqYqSr


#தமிழகம்_மீட்போம்: சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் உரை.#WeRejectADMK https://t.co/wjFYtD0ga8

#தமிழகம்_மீட்போம்: வீரம் விளைந்த சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டம் நேரலை. https://t.co/T83yNwsEWg

பத்து நாட்களில் 16,500 கிராமங்களில் கிராமசபை/வார்டு கூட்டங்களை திமுக நடத்துகிறது. இன்று, திருப்பெரும்புதூர் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் கலந்து கொண்டேன்! #WeRejectADMK என தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தமிழகம் மீளும்! https://t.co/GROdNNzNha

இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், குறைந்தபட்ச ஆதார விலை என சாதித்த திமுக என்றுமே விவசாயிகளின் உற்ற துணையாக நிற்கும். விவசாயிகள் அனைவருக்கும் #NationalFarmersDay வாழ்த்துகள்! மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக இன்று @PMOIndia வேண்டும். https://t.co/GjzvbZxim5


#WeRejectADMK: திருப்பெரும்புதூர் - குன்னம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் - நேரலை. https://t.co/RgcVc8hkSn

இன்றைய #KolathurVisit-ன் போது, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்! எளிய மக்கள் பயன்பெற 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற நடமாடும் மருத்துவ சேவையைத் தொடங்கி வைத்தேன்! கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு 1000 பேருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினேன்! https://t.co/CKOSaIkVeQ



அதிமுக ஆட்சியின் பத்தாண்டுகால அவலங்களை, டிச.23-ல் தொடங்கும் கழகத்தின் கிராமசபை/வார்டு கூட்டங்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைப்போம்! #WeRejectADMK என்ற உணர்வை மக்கள் மனதில் ஆழமாய் பதியவைப்போம்! ஆட்சி மாற்றம் நிச்சயம்; 200 தொகுதிகள் இலட்சியம்! தமிழகம் மீட்போம்! #LetterToBrethren https://t.co/QXj4Zwh2aH


ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று சந்தித்து @CMOTamilNadu மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள், சொத்துக்குவிப்பு குறித்த 97 பக்கங்கள் கொண்ட விரிவான புகார் மனுவினை அளித்திருக்கிறோம். இது முதற்கட்டம்தான்! ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்படும். https://t.co/69W2DO5oCk


முதல் 24 மணி நேரத்திலேயே இணையத்தில் #WeRejectADMK என்று பதிந்தவர்களின் எண்ணிக்கை,1 லட்சத்தைக் கடந்துள்ளது. கிராம சபைகள் தோறும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமான அதிமுக-விற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறட்டும்; புதிய விடியலுக்கு உதயசூரியன் உதயமாகட்டும்! https://t.co/flJV7onrkQ


#TNEB-ஐ பகுதிபகுதியாக தனியாருக்கு தாரைவார்க்கும் @CMOTamilNadu அரசு புதிய துணைமின் நிலையங்கள் - உபகோட்ட பணிகளையும் தனியாருக்கு வழங்குகிறது! தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இச்செயலைக் கண்டிக்கும் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவளிக்கிறது! TNEB தனியார்மயத்தை கைவிடுக! https://t.co/qdo2T1fvGC


கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் - சரிவுகள் - தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் பிரச்சாரத்தை டிசம்பர் 23-இல் கிராமம் தோறும் தொடங்குகிறது திமுக. #Mission200 என்னும் இலக்கினை அடைய #WeRejectADMK என்ற விதையை மக்கள் மனதில் விதைப்பது முதல்படி! https://t.co/NObnBKgoxq



வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்- கிறிஸ்துமஸ் விழா உரை. https://t.co/pLyvEQCQ51

2021 சட்டமன்றத் தேர்தல்: சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் எனது உரை.#WeRejectADMK https://t.co/HO3bIth108