DMKSocial

The Feed, page 227

Showing 4,521–4,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Party & Elections

தி.மு.கழகத்தின் 72 ஆண்டுகால வரலாற்றுப் பெருமிதத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற #முப்பெரும்விழா-வில், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பெரியார்,...

தி.மு.கழகத்தின் 72 ஆண்டுகால வரலாற்றுப் பெருமிதத்தை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற #முப்பெரும்விழா-வில், கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகளை வழங்கி மகிழ்ந்தேன்! தமிழ்நாட்டின் காவல் அரணாக கழகம் என்றென்றும் நிமிர்ந்து நிற்கும்! https://t.co/6XM6mNx8o2

Party & Elections
𝕏 X
5 yr ago
3608
186
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Education

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்!...

மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்! #NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்! https://t.co/sE6530aZR7

Education
𝕏 X
5 yr ago
5535
560
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Culture & Heritage

அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி;...

அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்! https://t.co/vWk0X0jpmH

Culture & Heritage
𝕏 X
5 yr ago
7827
343
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Sept
Education

#NEET உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென...

#NEET உயிர்க்கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது. மாணவச் செல்வங்களின் உயிர்ப்பலிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கேட்டுக்கொள்கிறேன். சமரசமில்லாச் சட்டப்போராட்டத்தால் நீட்டை விரட்டுவோம். https://t.co/LrTocUP3he

Education
𝕏 X
5 yr ago
3577
285
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Sept
Health

உருமாறும் கொரோனா வைரசினை உடனே கண்டறிந்து தொடக்கநிலையிலேயே அதற்கேற்ப தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு, இந்தியாவில் மாநில அரசால் நிறுவப்பட்ட...

உருமாறும் கொரோனா வைரசினை உடனே கண்டறிந்து தொடக்கநிலையிலேயே அதற்கேற்ப தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு, இந்தியாவில் மாநில அரசால் நிறுவப்பட்ட முதல் மரபணு பகுப்பாய்வுக் கூடத்தைச் சென்னை DMS வளாகத்தில் திறந்து வைத்தேன். மேலும், பணிநியமன ஆணைகளையும் வழங்கினேன். வருமுன் காப்போம்! https://t.co/L6nQaEldjt

Health
𝕏 X
5 yr ago
4573
221
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Party & Elections

மக்கள் நலன்காக்கும் நமது அரசின் வெற்றிப் பயணம் - சாதனைப் பயணமாகத் தொடர்ந்திட, நாம் உறுதியேற்று - ஓய்வின்றித் தொடர்ந்து உழைத்திட ஊக்கம் தரும்...

மக்கள் நலன்காக்கும் நமது அரசின் வெற்றிப் பயணம் - சாதனைப் பயணமாகத் தொடர்ந்திட, நாம் உறுதியேற்று - ஓய்வின்றித் தொடர்ந்து உழைத்திட ஊக்கம் தரும் வகையில் #முப்பெரும்விழா சிறக்கட்டும்! அந்த ஊக்கமே, நமது உடலிலும் உள்ளத்திலும் நிறைந்து நம்மை இலட்சிய வழிநடத்தட்டும்! #LetterToBrethren https://t.co/N2npZWsPjp

Party & Elections
𝕏 X
5 yr ago
2261
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Law & Order / Justice

உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீது பதிலுரையாற்றி, தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்புடைய நமது...

உள்துறை மானியக் கோரிக்கை விவாதங்களின்மீது பதிலுரையாற்றி, தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துத் தரும் பொறுப்புடைய நமது காவல்துறை ஒளிபெறவும் வழிகாட்டவும் தேவையான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டேன். சட்டத்தின் ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம் என்பதே நம் இலக்கு! https://t.co/W8df7XhOBl

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
3319
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Welfare Schemes

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எதில் இருந்தும் பின்வாங்கும்...

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எதில் இருந்தும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. கலைஞர் வழியிலான கழக அரசு சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் காட்டும். https://t.co/jg2V2xjjDG

Welfare Schemes
𝕏 X
5 yr ago
2954
196
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Sept
Education

சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழ்நாட்டில் சமவாய்ப்பை மறுத்து மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக #NEET இருக்கிறது; மாநிலப் பொதுசுகாதாரக்...

சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழ்நாட்டில் சமவாய்ப்பை மறுத்து மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லியாக #NEET இருக்கிறது; மாநிலப் பொதுசுகாதாரக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது. இதற்கு முடிவுகட்டி, +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கையை மேற்கொள்ளும் சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தேன். https://t.co/ZrZKglWuk2

Education
𝕏 X
5 yr ago
4694
264
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Health

#COVID19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி...

#COVID19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!

Health
𝕏 X
5 yr ago
6234
252
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Health

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் @Subramanian_ma அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி!...

மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் @Subramanian_ma அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி! தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!

Health
𝕏 X
5 yr ago
3425
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Culture & Heritage

சென்னை, பாரதியார் நினைவில்லத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வில் பங்கேற்று, காலங்கள் கடந்து நிற்கும் மக்கள் கவிஞராம்...

சென்னை, பாரதியார் நினைவில்லத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வில் பங்கேற்று, காலங்கள் கடந்து நிற்கும் மக்கள் கவிஞராம் பாரதியின் சிந்தனைகள் ஏன் இன்றைக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் மானுட சமூகத்துக்கும் தேவை என உரையாற்றினேன். https://t.co/VdImj0D6Bm

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2337
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Sept
Education

நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! நாளை நீட் நிரந்தர...

நீட் எனும் பலிபீடத்தில் மற்றுமொரு மரணம்! கல்வியால் தகுதி வரட்டும்; தகுதி பெற்றால் மட்டுமே கல்வி எனும் அநீதி நீட் ஒழியட்டும்! நாளை நீட் நிரந்தர விலக்கு சட்ட மசோதா கொண்டு வருவோம்; #NEET-ஐ இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாகக் கொண்டு செல்வோம். https://t.co/iAI4zm9knA

Education
𝕏 X
5 yr ago
7142
562
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Culture & Heritage

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கூட்டத்தொடர் நிறைவடையும் முன்பே செயல்பாட்டுக்கு வந்துள்ளது....

அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, கூட்டத்தொடர் நிறைவடையும் முன்பே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் கண்காணித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவருவேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்! https://t.co/VjXvzXJFjd

Culture & Heritage
𝕏 X
5 yr ago
3236
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Sept
Social Justice & Reservation

நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது...

நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம். https://t.co/z89EfuYYnS

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
6895
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Sept
Culture & Heritage

பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில்...

பாட்டுக்கொரு புலவன் மறைந்த நூற்றாண்டில் அவரது நினைவு நாள் செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும்; அண்ணா, கலைஞர் நூலகங்களில் ‘பாரதியியல்’ தனிப்பிரிவு; பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்விருக்கை என 14 அறிவிப்புகளை வெளியிட்டேன்! மதங்கள் அண்டா நெருப்பவன் - புகழ் போற்றுவோம்! https://t.co/AhqsG6I95t

Culture & Heritage
𝕏 X
5 yr ago
3935
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Sept
Culture & Heritage

சிவகளைப் பறம்பு முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1155! 3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக்...

சிவகளைப் பறம்பு முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1155! 3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக் காட்சிப்படுத்த ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்! இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும். #அன்னைமடிபொருநை https://t.co/h8G90BplVm

Culture & Heritage
𝕏 X
5 yr ago
4317
185
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Social Justice & Reservation

பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகளைக் காக்க தன்னாட்சிபெற்ற மாநில ஆணையம், சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்குப் பரிசுத்தொகை...

பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகளைக் காக்க தன்னாட்சிபெற்ற மாநில ஆணையம், சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் உள்ள சிற்றூர்களுக்குப் பரிசுத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டேன். சதிகளாலும் சாதிகளாலும் பிரிந்த நிலையை மாற்றி, கழக அரசு தமிழ்நாட்டைச் சமத்துவத்தின் பாதையில் செலுத்தும். https://t.co/snQezcbsdE

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2426
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Sept
Federalism & Centre–State Relations

இன-மத-மொழி ஒடுக்குமுறைகளால் அல்லல்படும் மக்கள் அடைக்கலம் தேடிவரும் மதச்சார்பற்ற மக்களாட்சி நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தாய்த்திருநாடு!...

இன-மத-மொழி ஒடுக்குமுறைகளால் அல்லல்படும் மக்கள் அடைக்கலம் தேடிவரும் மதச்சார்பற்ற மக்களாட்சி நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் தாய்த்திருநாடு! நம்பிவரும் மக்களுக்குக் குடியுரிமை வழங்க மதமும் இனமும் தடையாக இருக்கலாமா? #CAA2019-ஐ இரத்து செய்யக்கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தேன். https://t.co/EcAL8TThqs

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
4021
305
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Urban Development

25 ஆண்டுகளுக்கு முன் மேயராக நுழைந்த ரிப்பன் மாளிகைக்குள் இன்று முதலமைச்சராக நுழைந்தேன். எண்ணற்ற நினைவுகள்! @chennaicorp பயன்பாட்டுக்கு 1684...

25 ஆண்டுகளுக்கு முன் மேயராக நுழைந்த ரிப்பன் மாளிகைக்குள் இன்று முதலமைச்சராக நுழைந்தேன். எண்ணற்ற நினைவுகள்! @chennaicorp பயன்பாட்டுக்கு 1684 பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்பாக்டர் வாகனங்களைத் தொடங்கி வைத்து; கருணை அடிப்படையில் 195 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினேன். https://t.co/w2pIohky5Y

Urban Development
𝕏 X
5 yr ago
5105
173
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41