DMKSocial

The Feed, page 218

Showing 4,341–4,360 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Party & Elections

The suspension of 12 Opposition MPs on the very first day of the winter session is highly condemnable. Such acts diminish the democratic spirit...

The suspension of 12 Opposition MPs on the very first day of the winter session is highly condemnable. Such acts diminish the democratic spirit of the Parliament. I demand, on behalf of the DMK to revoke the suspension immediately. https://t.co/vKRfh0fFID

Party & Elections
𝕏 X
4 yr ago
3734
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Disaster Response & Relief

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை...

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைத் தொடர்ந்து, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்தேன். திரண்டிருந்த மக்களிடம் உரையாடி, அவர்கள் நம்பிக்கையோடு வழங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டேன்; நிவாரண உதவிகளை வழங்கினேன். https://t.co/E1smrAUsOQ

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2445
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Governance & Administration

புகழ்பெற்ற @IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது....

புகழ்பெற்ற @IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது நன்றி. #No1TamilNadu என்ற பெருமையைத் தக்கவைக்கவும்; பெரும் கடன்சுமையில் உள்ள தமிழ்நாட்டை மீட்கவும் இன்னும் கூடுதலாக உழைப்போம்! https://t.co/bezC4eS8zn

Governance & Administration
𝕏 X
4 yr ago
5834
402
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Party & Elections

இப்பெருமழையிலும் கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள...

இப்பெருமழையிலும் கடைக்கோடியில் உள்ள ஒருவர் கூட உணவுக்குச் சிரமப்படவில்லை என்று வரும் செய்திதான், நம் கழகச் செயல்வீரர்கள் மக்களுக்கு ஆற்றியுள்ள மனிதநேயக் கடமைக்கான அங்கீகாரம் ஆகும். கழகத்தினர் அக்கடமையை ஆற்றி மக்களைக் காத்திட வேண்டுகிறேன். https://t.co/LCnknYQ3Qb https://t.co/uxYEyXpi5x

Party & Elections
𝕏 X
4 yr ago
4517
256
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Disaster Response & Relief

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டு; கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி,...

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டு; கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கி, பாதுகாப்போடு இருக்குமாறு வேண்டினேன். வரலாற்றில் அரிதான பெருமழையின் பாதிப்புகளிலிருந்து விரைவில் உறுதியோடு மீள்வோம்; மீட்டெடுப்போம்! https://t.co/v1rrVbbJL7

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3203
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Health

சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராகத் தன்னை நிரூபித்த @Subramanian_ma அவர்கள், தற்போது மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சராகவும்...

சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, மாரத்தான் வீரராகத் தன்னை நிரூபித்த @Subramanian_ma அவர்கள், தற்போது மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சராகவும் தன் ஆற்றலை நிரூபித்துப் பெற்றிருக்கும் Outstanding Response To Covid19 எனும் உலகளாவிய அங்கீகாரத்துக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

Health
𝕏 X
4 yr ago
3933
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Disaster Response & Relief

சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும்...

சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; https://t.co/0BF7Hauzdp

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
5960
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Disaster Response & Relief

நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி,...

நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2188
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Disaster Response & Relief

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது...

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2712
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Disaster Response & Relief

சென்னையில் வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக அளவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெலோஸ்...

சென்னையில் வழக்கத்தைக் காட்டிலும் மிக அதிக அளவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டாளம், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிமெலோஸ் சாலை பகுதிகளில் நேரில் ஆய்வுசெய்து, தேங்கியுள்ள நீரை விரைவாக வெளியேற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினேன். https://t.co/AODcjYHzw0

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2606
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Federalism & Centre–State Relations

தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக்...

தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து அனுப்புமாறு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். https://t.co/VBJWcb5ha1

Federalism & Centre–State Relations
𝕏 X
4 yr ago
2966
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Disaster Response & Relief

மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அயராத முயற்சியால் சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டதுடன்; தேங்கிய...

மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அயராத முயற்சியால் சென்னையின் பல முக்கியப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டதுடன்; தேங்கிய பகுதிகளிலும் உடனே சரிசெய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பகுதிகளில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தினேன். https://t.co/tCYt1cBIi6

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
3552
189
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Industry & Investment

#Connect2021 கருத்தரங்கில் கலந்துகொண்டு #1TrillionUSD எனும் தமிழ்நாடு அரசின் கனவுமெய்ப்பட, தகவல் தொழில்நுட்பத் துறை ஆற்றவேண்டிய பங்களிப்புகள்...

#Connect2021 கருத்தரங்கில் கலந்துகொண்டு #1TrillionUSD எனும் தமிழ்நாடு அரசின் கனவுமெய்ப்பட, தகவல் தொழில்நுட்பத் துறை ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்துப் பேசினேன். தமிழ்நாடு தரவு மையக் கொள்கையினை வெளியிட்டு, உலக அளவில் IT துறையின் முக்கிய மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற உறுதியளித்தேன். https://t.co/YCMcpeizp4

Industry & Investment
𝕏 X
4 yr ago
2229
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Social Justice & Reservation

சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் முதலிய உயரிய கோட்பாடுகள் பக்கத்துக்குப் பக்கம் மிளிர்வதாக வடிக்கப்பட்டதுதான் நமது...

சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் முதலிய உயரிய கோட்பாடுகள் பக்கத்துக்குப் பக்கம் மிளிர்வதாக வடிக்கப்பட்டதுதான் நமது இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டம் ஆகும். அதன் முகவுரையை குடிமக்களும் ஆட்சியாளர்களும் பொன்போல் போற்றிப் பாதுகாப்போம்! #ConstitutionDay https://t.co/uVD5kqgW4B

Social Justice & Reservation
𝕏 X
4 yr ago
2107
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Women & Child Welfare

முதல்வராக அல்ல... தந்தையாக! #InternationalDayForEliminationOfViolenceAgainstWomen https://t.co/PwU5wKNQQU

முதல்வராக அல்ல... தந்தையாக! #InternationalDayForEliminationOfViolenceAgainstWomen https://t.co/PwU5wKNQQU

Women & Child Welfare
𝕏 X
4 yr ago
6852
322
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Welfare Schemes

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஒரு...

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பல்வேறு சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ஒரு இலட்சம் பேர் புதிதாகக் கண்டறியப்பட்டு; அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான அடையாளமாக 10 பயனாளிகளுக்கு இன்று ஆணைகளை வழங்கினேன். https://t.co/cxT8cIkURs

Welfare Schemes
𝕏 X
4 yr ago
2798
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
International & Diaspora

Wrote to Hon'ble @JM_Scindia on the hardship faced by the Permanent Residents of Singapore, Malaysia and other travellers from TN due to...

Wrote to Hon'ble @JM_Scindia on the hardship faced by the Permanent Residents of Singapore, Malaysia and other travellers from TN due to non-availability of direct flight services and requested him to make temporary 'Air Transport Bubbles' agreement with Singapore and Malaysia. https://t.co/rkfhEPnA2Y

International & Diaspora
𝕏 X
4 yr ago
1724
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Disaster Response & Relief

#NorthEastMonsoon வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை...

#NorthEastMonsoon வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்ய எடுக்கப்பட்டுவரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், இனி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமையேற்று வழிகாட்டுதல்களை வழங்கினேன். https://t.co/gjRiThkkvt

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
2377
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Disaster Response & Relief

பாதிப்புகளை ஆய்வுசெய்த ஒன்றிய அரசுக் குழுவினரிடம் மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிதி வழங்கக்...

பாதிப்புகளை ஆய்வுசெய்த ஒன்றிய அரசுக் குழுவினரிடம் மாநிலத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடைக்கால நிதி வழங்கக் கோரிக்கைகளை முன்வைத்தேன். https://t.co/q46LoJz9OD

Disaster Response & Relief
𝕏 X
4 yr ago
913
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
Energy

தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20...

தடையில்லா - சீரான மின்சாரம் வழங்கவும்; மின் இழப்பு மற்றும் பராமரிப்புச் செலவினங்களையும் குறைக்கவும் ரூ.517 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள் மற்றும் ரூ.141 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 40 திறன் மின்மாற்றிகளின் செயல்பாட்டினைத் தொடங்கிவைத்தேன். https://t.co/L4aOLCfWG3

Energy
𝕏 X
4 yr ago
2708
97
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41