
Thank you dear brother Thiru. @yadavtejashwi for your wishes and sharing my vision of social justice.
Thank you dear brother Thiru. @yadavtejashwi for your wishes and sharing my vision of social justice.
All
Showing 4,081–4,100 of 9,209 posts

Thank you dear brother Thiru. @yadavtejashwi for your wishes and sharing my vision of social justice.

ஆற்றல்மிக்க இளைஞர் வளத்தைத் தொழில்நுட்பக் காலத்திற்கேற்ப திறன்மிக்கதாக மாற்ற #நான்_முதல்வன் என்ற திட்டத்தை துவங்கி வைத்துள்ளேன். Coding, Robotics என எதிர்காலத்தில் பயனளிக்கக் கூடிய படிப்புகளை பள்ளி மாணவர்கள் கற்கவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது! இந்நாள் என் வாழ்வின் பொன்னாள்! https://t.co/dovCAh3BIy

என்னை வார்ப்பித்த தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கலைஞர் ஆகியோரது நினைவிடங்களிலும், கலைஞரின் கோபாலபுரம் & சிஐடி காலனி இல்லங்களிலும், பேராசிரியர் இல்லத்திலும் மரியாதை செலுத்தினேன். இளைஞர்கள் எதிர்காலம் சிறக்க இந்தப் பிறந்தநாளில் #நான்_முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன். https://t.co/AXBQAlH1Gu



முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகப் பிறந்த நாள் முதல், திராவிட முன்னேற்றக் கழகமே என் உயிர்மூச்செனச் செயல்பட்டு வருகிறேன். 13 வயதில் கழகக் கொடி பிடித்தது முதல் இன்றுவரையில் என்னை முழுவதுமாக மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். (1/3) https://t.co/DQJMHlgTmd


23 வயதுவரையிலான என் அனுபவங்களை - நான் சந்தித்த போராட்டங்களை - எதிர்கொண்ட அடக்குமுறைகளை - என்னைச் செதுக்கிய தோல்விகளை - ஊக்கம் தந்த வெற்றிகளை - பொறுப்புணர்ந்து ஆற்றிய கடமைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள இந்தத் தன்வரலாற்று நூலை எழுதி, முதல் பாகத்தை இன்று வெளியிட்டிருக்கிறேன். (2/3) https://t.co/0As2PcGYDU


தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்துத் தந்த கொள்கைத் தடத்தில் என் பயணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து உங்களுக்காகப் பயணிப்பேன். தோழனாக - உடன்பிறப்பாக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டு பாச மழை பொழிவதால் என்றும் நான் #உங்களில்_ஒருவன்! (3/3) https://t.co/zx75TvCH9Q



All along my life, I have been treading on the path shown by Thanthai Periyar, Perarignar Anna and Muthamizharignar Kalaignar, the triumvirate of Dravidian Movement who shaped Modern Tamil Nadu and will continue to do so. (2/3) https://t.co/uxUSGNYCHR


On this occasion, I make an earnest appeal to each one of you to come together to protect the secular fabric of our nation. (3/3) https://t.co/SHup0lWoon



"உங்களில் ஒருவன் - 1" நூல் வெளியீட்டு விழா நேரலை: https://t.co/nvzFrdlCYv

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் - து.தலைவர் தேர்தலில் நீங்கள் கட்டுக்கோப்புடன் செயல்படுவதே நான் உங்களிடம் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு! #உங்களில்_ஒருவன் நூலைப் பிறந்தநாள் பரிசாக நாளை நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் வாழ்த்துகளே என் உழைப்புக்கு ஊக்கம்! #LetterToBrethren https://t.co/HBlZycPE76

தேனாம்பேட்டையில் குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமைத் திறந்து வைத்தேன். போலியோ இல்லாத உலகை அமைப்போம்! அறிவியலின் துணைக் கொண்டு நோய்களை எதிர்த்து வெற்றி காண்போம்! https://t.co/IfAfkjv9wD

'சமூக மேம்பாட்டுக்கான புத்தாக்கம் திட்டம்' என மாணவர்களின் மனிதநேயச் சிந்தனையால் விளைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கண்டுபிடிப்புகளை, சென்னை மீனாட்சி கல்லூரியில் அறிமுகம் செய்தேன்! அனைத்து மாணவர்களும் சமூகச் சிந்தனையோடு வளர்ந்து நாட்டையும் வளர்க்க வேண்டும்! https://t.co/cm8Bnq8xo8

#Ukraine நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் உரையாடினேன். அவர்களைத் தாயகம் மீட்டுவர இந்திய அரசுடன் இணைந்து அன்னைத் தமிழ்நாடு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. https://t.co/PsmCVT5O0H

தமிழும் திராவிடமும் வெவ்வேறு எனச் சில கைக்கூலிகள் பரப்பும் அவதூறுகளுக்குப் பதிலடியாய்த் திருமாவேலன் அவர்கள் "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" நூலைத் தந்திருக்கிறார். ஆழமான வாசிப்பும் நுண்ணோக்குப் பார்வையும் கொண்ட அவரது இந்நூல் இளைஞர்கள் படிக்க வேண்டிய திராவிட வரலாறு! https://t.co/HeEOUULALb



'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' நூல் வெளியீட்டு விழா உரை நேரலை: https://t.co/fhbzsiRJTu

வெற்றி பெற்ற பின்னர் நமது பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது! மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு என்றும் உண்மையுள்ளவர்களாக நாம் பணியாற்றிட வேண்டும்! பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன பாடங்களை வெற்றி பெற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்கிறேன். https://t.co/h48hizFV0M



வெற்றி வாகை சூடிப் புன்னைகையோடு வந்த உடன்பிறப்புகளுடன், இரண்டாம் நாளாக இன்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். நம்மிடையே ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி நம் மக்களிடையே பரவி எப்போதும் கழக அரசின் புகழ் பெருகிடும் வகையில் அவர்களது பணி அமைய வேண்டும் என அறிவுறுத்தினேன். https://t.co/iUN0PzkVQH



In the light of the serious conflict between Russia and Ukraine, I've requested Hon'ble @DrSJaishankar to intervene immediately to evacuate thousands of students from Tamil Nadu who are stranded in Ukraine and to nominate a nodal officer for better coordination with Govt of TN. https://t.co/oIeB51cXSZ



தந்தை பெரியார் பெயரல்ல; கருத்தியல்! தலைமுறைகள் கடந்து மானுடச் சமுதாயம் பகுத்தறிவோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கான வழிகாட்டி! கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன். இது #பெரியார்மண்! கலைக்கு இடமுண்டு; களைகளுக்கு அல்ல. https://t.co/on24VDLBoS

யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன். சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர். https://t.co/foXzlA1UeE
