
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/4ZKpMw3zEv
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/4ZKpMw3zEv
All
Showing 3,981–4,000 of 9,209 posts

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு https://t.co/4ZKpMw3zEv

இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகைதான் அறிவாலயம். அத்தகைய திராவிடக் கோட்டையாகத் தலைநகர் டெல்லியில் 'அண்ணா-கலைஞர் அறிவாலயம்' தலைநிமிர்கிறது! தெற்கின் வரலாறு டெல்லியில் எழுதப்படுகிறது! #LetterToBrethren https://t.co/QFRwDdnTgQ

சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போக்குவரத்து ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தேன். எழில்மிகு சென்னையில் காணும் இடமெல்லாம் கண்கவர் இடங்களாக்குவோம்! https://t.co/hECDCef5KA

Tamil Nadu’s investment promotion agency, Guidance, has won the ‘Best Investment Promotion Agency Award’ in Asia Oceania Region at the Annual Investment Meeting (AIM) 2022, an initiative of the Ministry of Economy of the United Arab Emirates. (1/2) https://t.co/KH3wx1K3m5


These highly acclaimed Investment Awards are a crucial chapter of AIM Congress and were launched for the first time at AIM 2013. This coveted recognition gives Guidance the honour of showcasing the Tamil Nadu growth story at a Global Forum. (2/2)

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையாறு மண்டலத்தில் 5.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்தேன். வரும் பருவமழைக்கு முன்பே, சென்னை முழுவதும் வடிகால்கள் சீரமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். https://t.co/Siauc5jiUs

I am very happy to inaugurate @amazon's largest office facility in TN and the second largest in India. Another milestone in TN’s journey towards being a One Trillion Dollar economy! Look forward to @amazonIN’s continued efforts towards job creation and infra expansion in TN! https://t.co/ZGBFv8F29n

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு வாய்ப்பையும் விடக்கூடாது என #DubaiExpo2020-ல் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதை எடுத்துக்கூறி முதலீடுகளைத் திரட்டியுள்ளோம். 'நம்பர் 1- தமிழ்நாடு' இலக்கை நோக்கிய இந்தப் பயணம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது! https://t.co/geMrueb8TX

அபுதாபியில் நடைபெறும் 'நம்மில் ஒருவர்' நிகழ்ச்சி நேரலை https://t.co/N2X184mpuQ

துபாயைத் தொடர்ந்து அபுதாபியிலும் அமீரகத்தின் முன்னணி நிறுவனங்களின் உயர் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் எத்தகைய முதலீடுகளை மேற்கொள்ளலாம் என எடுத்துரைத்தேன். பின்னர், லுலு குழுமத் தலைவரைச் சந்தித்தபோது 3,500 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு #MoU கையெழுத்தானது. https://t.co/ybd5iuyITS

திரைகடலோடித் திரவியம் தேடும் பண்பாட்டின் வழியே அமீரகம் சென்று நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், முதலீடுகளையும் பெற்றேன். எனக்குக் கிடைத்த வரவேற்பும் அன்பும் தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை! https://t.co/wjymd0UlU1

Hearty congrats to @DrPramodPSawant on swearing in as the Chief Minister of Goa for a straight second term. I wish him all the best to fulfill the expectations of the people of Goa.

துபாய் மற்றும் அபுதாபி பயணம் பல்வேறு அனுபவங்களைத் தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான நம்பிக்கையை அளித்துவரும் இப்பயணம், அறிவியல் பார்வையிலும் புதுமையை அள்ளித் தந்துள்ளது. (1/3) https://t.co/77FpzWFT0G



பழங்காலத்தை நினைவூட்டுவது மட்டுமே அருங்காட்சியகங்களின் பணி அல்ல; புதுமையையும் எதிர்காலத்தையும் நோக்கி நம்மை விரைவுப்படுத்துவதும் கூட அதன் பணி என #MuseumOfTheFuture காட்டியது. (2/3) https://t.co/2ljS8e8908


போலியான பழம்பெருமைகளைப் பேசி மூடத்தனங்களுக்குள் புகுந்துகொள்ளாமல் அறிவியல் வழியில் புதுமையை நாடும் இதுபோன்ற அருங்காட்சியகங்கள் காலத்தின் தேவையாகிறது! (3/3) https://t.co/VBZ3u9trWZ


#UAE முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் & முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நிகழ்த்திய சந்திப்பையடுத்து 9,700 பேர்களுக்கு வேலைவாய்ப்பளித்திடும் வகையில் 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நமது இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! https://t.co/j6rwYKfdTm



#Covid19 காலத்திலும் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற நிலையை எட்டத் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலீட்டாளர்களிடம் தெரிவித்து அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். https://t.co/nP3EFB45h8



Live: துபாயில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு - புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல் https://t.co/uNtivxwA0j

3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான #BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்! https://t.co/Thu2C7kPB2

#DubaiExpo2020 கண்டு, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு அரங்கினைத் திறந்து வைக்கச் சென்றேன். திரளாகக் குழுமியிருந்த அயலகத் தமிழ் உறவுகள் அளித்த உற்சாக வரவேற்பில் ஒரு நொடி வெளிநாட்டில் இருப்பதே மறந்து போனது! https://t.co/7KfQh6L10S