
#LIVE: கழகப் பொதுக்குழுவில் உரை https://t.co/PMCaGV09eR
#LIVE: கழகப் பொதுக்குழுவில் உரை https://t.co/PMCaGV09eR
All
Showing 3,461–3,480 of 9,209 posts

#LIVE: கழகப் பொதுக்குழுவில் உரை https://t.co/PMCaGV09eR

கடந்த ஆண்டுகளைப் போல் மழைவெள்ளப் பாதிப்பு இல்லாத நிலையை உறுதிசெய்ய மழைநீர் வடிகால் - தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன. வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்து, பணிகளை விரைந்தும், தரத்தில் குறைவின்றியும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன். https://t.co/ws4DWLmpHQ


நீர்வளம் - நீர்மேலாண்மை - அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினர் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக் -7 இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்! திட்டத்தை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூர்வோம்! https://t.co/67hFc45CZ9



கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்ற வழியே திராவிட இயக்கத்துக்கு மிக நெருக்கமானவர் வள்ளலார்! வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள், ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா, வடலூரில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் என அவர் புகழ் பாடி மகிழ்கிறது கழக அரசு! https://t.co/dzKt5Ph9AC

#LIVE: வள்ளலார் முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை https://t.co/A1PCeFvoin

கழகத்தின் மீதான காழ்ப்பால் சிலர் ஈரைப் பேனாக்குவதையும், ஏடுகள் சில அதற்குத் துணைபோவதையும் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இயங்குவோம்! பிற்போக்கு சக்திகளிடம் இருந்து தமிழகத்தைக் காப்பதற்கான ஊக்கம் பெற்றிடப் பொதுக்குழுவில் சந்திப்போம்! https://t.co/YNWujrHCGg #LetterToBrethren https://t.co/VLqavzgR0C


As a result of recent efforts undertaken by our govt & various sports associations, TN has sent its largest ever contingent(380) to #NationalGames2022. TN is placed No.4 among Indian states by winning 12 🥇. I wish them to win more medals, as I await to receive our sport stars!

பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம்! https://t.co/Y2aFbhPqBK



Amid excessive centralisation of powers by Union BJP Govt, the demand for a review & reappraisal of our constitution in order to make it truly federal becomes more important. Our lofty goals can be achieved only if the progressive forces stand united & become an All India Force. https://t.co/fWLjQvW39y



#LIVE: திருவனந்தபுரம் | #CPI 24-ஆவது மாநில மாநாட்டில் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து சிறப்புரை https://t.co/ATKjTKeuIu

வளர்ந்து வரும் புதிய துறைகள், தமிழ்நாட்டின் இளம் ஆற்றலுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறைகளில் நமது அரசு கவனம் செலுத்தி வருகிறது! இன்று தொடங்கி வைத்திருக்கும் பெகாடிரான் இந்தியா தொழிற்சாலை 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளித்து மின்னணுவியல் துறையின் மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும்! https://t.co/dGubGv8n24

#LIVE: Pegatron Technology India நிறுவனத்தின் தொழிற்சாலையைத் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/eMOEdnqIsW

தென்சென்னைப் பகுதிகளில் நடைபெற்று வரும் ரூ.174 கோடி மதிப்பீட்டிலான வெள்ளத் தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டு, அக்டோபர் மாதம் #NEMonsoon-க்கு முன்பே பணிகளை முடிக்க உத்தரவிட்டேன். முழுவீச்சில் நடக்கும் பணிகளால் இவ்வாண்டு வெள்ளப் பாதிப்பு பெருமளவில் குறையும் நிலையை உறுதிசெய்துள்ளோம்! https://t.co/ABDpnI3fhg


பலரது சிந்தனைகள் - கனவுகளின் கூட்டுச் சேர்க்கையாக #DravidianModel அரசு திகழ, இளைஞர்களது புதிய சிந்தனைகள் அரசுடன் கைகோக்க #CMFellowship ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தில் இளைய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது. https://t.co/dIjZLkpcgE https://t.co/vvma5Ycg1y



#LIVE: CSI திருச்சபையின் பவளவிழா நிகழ்வில் சிறப்புரை https://t.co/tJhPUkdK2e

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள @dinathanthi @timesofindia @deccanchronicle நாளிதழ்களுக்கு எனது நன்றி! #TNBreakfast திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன்; எவ்விதக் குறைபாடுமின்றி, சரியாக நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறேன். (1/2) https://t.co/2E64q7ghfW



#TNBreakfast திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது! (2/2)

The #DravidianModel has led India's development & is shaping its future. I expect the fourth estate to play a crucial role in taking the success story of TN's inclusive policies to the rest of India, for them to emulate. I view the #CNNNews18TownHall Chennai as one such effort. https://t.co/vYPnasamor



#LIVE: "Lessons from the South in the India Story" - @CNNnews18 Town Hall நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்புரை: https://t.co/7S9rqn8utZ

உண்மை என்று வாய் திறந்து சொல்வதற்குள்ளாகவே பொய் உலகை வலம் வந்துவிடும்! 'வெட்டி - ஒட்டி - திரித்து' பொய்யில் திளைக்கும் நச்சு சக்திகளின் தீயநோக்கத்திற்கு இடம்தராமல், கழகத்தினர் சொற்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். மக்கள் நலன் எனும் பொறுப்பை உணர்ந்து பயணத்தைத் தொடர்ந்திடுவோம்! https://t.co/DZMkEVkitQ
