
நம்மைச் சுற்றி நாள்தோறும் பலர், தங்களது பணியை வெறும் கடமையாகக் கருதாமல் சமூகத் தொண்டாக, உள்ளார்ந்த அன்புடனும் அக்கறையோடும் ஆற்றுகின்றனர்....
நம்மைச் சுற்றி நாள்தோறும் பலர், தங்களது பணியை வெறும் கடமையாகக் கருதாமல் சமூகத் தொண்டாக, உள்ளார்ந்த அன்புடனும் அக்கறையோடும் ஆற்றுகின்றனர். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் வெளியில் தெரியும் மலர் என்றால், அடிமட்டத்தில் பணியாற்றும் இத்தகைய நல்லுள்ளங்கள்தான் நமது வளர்ச்சியின் வேர்! இன்றைய #களஆய்வில்_முதலமைச்சர் பயணத்தில், விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, ரா.பாண்டியன் பெ.சிவக்குமார் கத்தீஜா பா.வளவன் ந.ஆறுமுகம் ஆனந்தன் பாபு முருகேசன் நாகேஸ்வரன் வேளாங்கண்ணி பத்மஸ்ரீ ராமச்சந்திரன் மணிகண்டன் நடராஜன் ஆகிய 14 பேரைப் பாராட்டி ஊக்கமளித்தேன். இது இவர்களுக்கான ஊக்கம் மட்டுமல்ல; இவர்களைப் போல் இன்னும் பலர் உருவாவதற்கான உரம்!








