DMKSocial

The Feed, page 152

Showing 3,021–3,040 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Party & Elections

தமிழினத்தின் மேன்மைக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை...

தமிழினத்தின் மேன்மைக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடி அவரது சாதனைச் சரித்திரத்தை இல்லம்தோறும் எடுத்துச் செல்வோம்! கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை அவர் புகழ் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தி, புத்துணர்வு பெற்று, கழகத்தின் 75-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்!

Party & Elections
𝕏 X
3 yr ago
2490
266
147,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Party & Elections

Hearty congratulations to Hon'ble @siddaramaiah avaru and Hon'ble @DKShivakumar avaru on taking oath as the Chief Minister and Deputy Chief...

Hearty congratulations to Hon'ble @siddaramaiah avaru and Hon'ble @DKShivakumar avaru on taking oath as the Chief Minister and Deputy Chief Minister of Karnataka respectively. I sincerely believe that the secular duo will take the state of #Karnataka to newer heights with their able administration. The dawn heralded in the south should spread to the rest of India and today's swearing-in ceremony in Bengaluru is a bellwether of such change.

Party & Elections
𝕏 X
3 yr ago
8645
230
305,166 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Culture & Heritage

திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத...

திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாள்! அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது. பண்டிதரின் கருத்துகளை ஊன்றிப் படிப்போம், அவரது பல்துறைப் பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க!

Culture & Heritage
𝕏 X
3 yr ago
2472
86
143,896 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Governance & Administration

500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள் 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! #2000Note #Demonetisation

500 சந்தேகங்கள் 1000 மர்மங்கள் 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! #2000Note #Demonetisation

Governance & Administration
𝕏 X
3 yr ago
11215
1213
717,685 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Education

இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள்...

இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள்! அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன். அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும்.

Education
𝕏 X
3 yr ago
3232
116
233,252 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Women & Child Welfare

2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத...

2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தேன். தொடர்ந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் எனக்கு மனவேதனை அளித்தது. தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வயதுக்கேற்ற எடை, உயரமில்லாமல் மெலிந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் குழந்தைகளைத் திடமானவர்களாக ஆக்கவேண்டும் என்ற உறுதியுடன் சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தைக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் அறிவித்தேன். சில வாரங்களில், ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாமினை நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் மே 21 அன்று தொடங்கி வைத்தேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று #ஏற்றமிகு7திட்டங்கள்-இல் ஒன்றாக, #ஊட்டச்சத்தை_உறுதிசெய் திட்டத்தின்கீழ், 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1 லட்சத்து 11 ஆயிரத்து 216 குழந்தைகளுக்குச் சிறப்பு உணவாக RUTF உணவு அளிப்பதையும், 6 மாதத்துக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 11 ஆயிரத்து 917 குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதிசெய்யத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்குவதையும் தொடங்கிவைத்தேன். இதன்படி ஊட்டச்சத்து உணவு, மருத்துவ உதவி வழங்கி இத்தகைய குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் சரவணன் சந்திரனின் இந்தப் பதிவு படம்பிடித்துக் காட்டுகிறது. இதற்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக - திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம்!

Women & Child Welfare
𝕏 X
3 yr ago
2210
127
182,031 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Employment & Skill Development

தொழிலாளர்களே தொழிலாளர்களை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்து சீரிய முறையில் செயல்படும் கழகத்தின் வலிமையான துணை அமைப்பான தொ.மு.ச. பேரவையின் பொன்விழா...

தொழிலாளர்களே தொழிலாளர்களை நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுத்து சீரிய முறையில் செயல்படும் கழகத்தின் வலிமையான துணை அமைப்பான தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாட்டில் கலந்துகொண்டு தொழிலாளத் தோழர்களுக்காக திராவிட இயக்கம் செய்த சாதனைகளை நினைவுகூர்ந்தேன். 36 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் கழக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன. போக்குவரத்துத் தொழிலாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் உரிமைகளுக்காகவும் முன்னிற்கும் இயக்கம் தி.மு.க. அத்தகைய இயக்கத்தின் துணை அமைப்பான தொ.மு.ச சமதர்மச் சிந்தனைக்குப் போராடும் அரசியல் கூர்மை பெற்றவர்களாகத் தொழிலாளர்களை வளர்த்தெடுக்க வேண்டும்! சிங்காரவேலர், திரு.வி.க, பேராசிரியர் போன்ற தலைவர்களை உருவாக்கப் பாடுபட வேண்டும்!

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
1881
82
81,479 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Employment & Skill Development

#Live: தொ.மு.ச.பேரவையின் பொன்விழா மாநாட்டில் மாநாட்டுப் பேருரை https://t.co/Q3PoUYWseP

#Live: தொ.மு.ச.பேரவையின் பொன்விழா மாநாட்டில் மாநாட்டுப் பேருரை https://t.co/Q3PoUYWseP

Employment & Skill Development
𝕏 X
3 yr ago
773
37
65,282 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Culture & Heritage

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு...

தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம். #Jallikattu

Culture & Heritage
𝕏 X
3 yr ago
5303
453
314,205 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 May
Transport & Infrastructure

மக்கள் திரளால் நிரம்பி வழியும் சென்னையின் வணிக மையமான தியாகராய நகரின் பேருந்து நிலையத்தை மாம்பலம் இரயில் நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதையினை...

மக்கள் திரளால் நிரம்பி வழியும் சென்னையின் வணிக மையமான தியாகராய நகரின் பேருந்து நிலையத்தை மாம்பலம் இரயில் நிலையத்துடன் இணைக்கும் ஆகாய நடைபாதையினை (Skywalk) திறந்து வைத்தேன். நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதை நெரிசலைக் குறைப்பதோடு தியாகராய நகரின் வணிகம் மென்மேலும் பெருகவும் வழிவகுக்கும்! தியாகராய நகரின் புதிய அடையாளமாகத் திகழும்!

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
3249
220
176,326 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Law & Order / Justice

கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது...

கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்!

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
3454
674
387,920 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Law & Order / Justice

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/eF8QnjxV3V

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/eF8QnjxV3V

Law & Order / Justice
𝕏 X
3 yr ago
814
64
119,639 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Transport & Infrastructure

நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சிறைவாசத்தின்போது என் மீது விழ வேண்டிய அடிகளைத் தான் தாங்கி, தன்னுயிர் கொடுத்து என்னுயிர் காத்த 'தியாக மறவர்'...

நெருக்கடி நிலைக்காலத்தில் மிசா சிறைவாசத்தின்போது என் மீது விழ வேண்டிய அடிகளைத் தான் தாங்கி, தன்னுயிர் கொடுத்து என்னுயிர் காத்த 'தியாக மறவர்' சிட்டிபாபு அவர்களது பெயரை கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதி மக்களின் பல ஆண்டு கனவான மேம்பாலத்துக்குச் சூட்டி, இன்றைய #KolathurVisit-இல் திறந்து வைத்தேன். சென்னை மாநகரத் தந்தையாக இருந்து பணியாற்றிய அவரது பங்களிப்பை இந்தப் பாலம் காலத்துக்கும் எதிரொலிக்கும்! இந்தப் பாலம் மட்டுமல்ல, 111 கோடி ரூபாய் மதிப்பிலான துணை மின்நிலையம் உள்ளிட்ட பல புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினேன். பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படாமல் இருந்த பல்வேறு திட்டங்களை, மூன்றாவது முறையாகக் கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராகச் செயல்படுத்தி கொளத்தூரை மாடல் தொகுதியாக மாற்றி வருகிறேன். என் மேல் அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ள கொளத்தூர் மக்களின் முகங்களில் ஏற்படும் மகிழ்ச்சியே எனக்கு உற்சாகமளிக்கும் அருமருந்து!

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
2531
90
120,174 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Transport & Infrastructure

#Live: கொளத்தூரில் மேயர் சி. சிட்டிபாபு மேம்பாலம் திறந்து வைத்து & புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரை https://t.co/K5SbpJDfam

#Live: கொளத்தூரில் மேயர் சி. சிட்டிபாபு மேம்பாலம் திறந்து வைத்து & புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரை https://t.co/K5SbpJDfam

Transport & Infrastructure
𝕏 X
3 yr ago
1004
34
80,800 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
Party & Elections

Congrats @INCIndia on spectacular winning of Karnataka. The unjustifiable disqualification of brother @RahulGandhi as MP, misusing premier...

Congrats @INCIndia on spectacular winning of Karnataka. The unjustifiable disqualification of brother @RahulGandhi as MP, misusing premier investigative agencies against political opponents, imposing Hindi, rampant corruption have all echoed in the minds of Karnataka people while voting and they have upheld the #KannadigaPride by teaching a befitting lesson to BJP's vindictive politics. The landmass of Dravidian family stands clear of BJP. Now let us all work together to win 2024 to restore democracy and constitutional values in India. கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர். திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்! #KarnatakaElectionResults #KarnatakaElectionResults2023

Party & Elections
𝕏 X
3 yr ago
28973
815
1,305,474 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Health

அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay...

அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்!

Health
𝕏 X
3 yr ago
1852
109
120,263 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 May
Industry & Investment

இனி வரும் காலத்தில் கோலோச்சப் போகும் துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் உயரங்களுக்கு மற்றுமொரு...

இனி வரும் காலத்தில் கோலோச்சப் போகும் துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு அடைந்து வரும் உயரங்களுக்கு மற்றுமொரு மகத்தான சான்றாக, ஹூண்டாய் நிறுவனம் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தங்கள் உற்பத்திகளை விரிவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கால்நூற்றாண்டுக்கு முன் தலைவர் கலைஞர் அவர்கள் ஹூண்டாய் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்து விதைத்த விதை, இன்று ஆல் போல் தழைத்துள்ளது. ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற ஒவ்வொரு நாளும் உழைப்போம்!

Industry & Investment
𝕏 X
3 yr ago
1970
119
182,497 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 May
Industry & Investment

#Live: @HyundaiIndia நிறுவனம் ₹20,000 கோடி முதலீடு மேற்கொள்ள MoU கையெழுத்திடும் நிகழ்வில் சிறப்புரை https://t.co/tM4eXRquQv

#Live: @HyundaiIndia நிறுவனம் ₹20,000 கோடி முதலீடு மேற்கொள்ள MoU கையெழுத்திடும் நிகழ்வில் சிறப்புரை https://t.co/tM4eXRquQv

Industry & Investment
𝕏 X
3 yr ago
1247
71
115,286 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Industry & Investment

தெற்காசியாவின் உற்பத்தி மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நமது முயற்சிகளின் முக்கிய நகர்வாக, உலகின் முன்னணி மின்னணுவியல் நிறுவனமான மிட்சுபிஷியின்...

தெற்காசியாவின் உற்பத்தி மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நமது முயற்சிகளின் முக்கிய நகர்வாக, உலகின் முன்னணி மின்னணுவியல் நிறுவனமான மிட்சுபிஷியின் Air Conditioners மற்றும் Compressors ஆலையைத் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினேன். 1891 கோடி ரூபாய் முதலீட்டில் ஈராயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவுள்ள இத்தொழிற்சாலையால் கும்மிடிப்பூண்டி பகுதியின் வளர்ச்சி வேகம் பெறும்

Industry & Investment
𝕏 X
3 yr ago
2154
116
113,263 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Education

"கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச்...

"கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து" என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறி வருகிறேன். நேற்று வெளியான +2 பொதுத்தேர்வு முடிவில் 600/600 பெற்றுச் சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும் "படிப்புதான் சொத்து என்று நினைத்துப் படித்தேன்" எனப் பேட்டியில் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். அவரை இன்று நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்து தரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன். எளிய குடும்பப் பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம்! "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்"

Education
𝕏 X
3 yr ago
7182
279
332,819 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41