#OdishaTrainAccident-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் நிலையை அறிந்து, அவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தவும், அவர்களுக்கு உரிய...
#OdishaTrainAccident-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் நிலையை அறிந்து, அவர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்தவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதைக் கண்காணிக்கவும் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @Udhaystalin மற்றும் திரு. @sivasankar1ss ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினை ஒடிசா செல்ல உத்தரவிட்டிருந்தேன்.
அவர்கள் இரு நாட்களாக அங்குத் தங்கியிருந்து, விபத்துக்குள்ளானோர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை, பலியானோர் உடல்கள் வைக்கப்பட்டிருந்த வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஒடிசா மாநில முதலமைச்சர் அவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளின் நிலையை அறிந்தனர்.
இதனிடையே, மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கும், "தங்கள் உறவினரையோ நண்பரையோ தொடர்பு கொள்ள முடியவில்லை" என யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய அவர்கள் என்னைச் சந்தித்து, மீட்புப் பணிகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்ததோடு, இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் உயிரிழந்ததாக இதுவரை செய்திகள் வரவில்லை என்று தெரிவித்தனர்.