
#Live: சேலம் அண்ணா பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தல் https://t.co/BzwUdpjc6Q
#Live: சேலம் அண்ணா பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தல் https://t.co/BzwUdpjc6Q
All
Showing 2,961–2,980 of 9,209 posts

#Live: சேலம் அண்ணா பூங்காவில் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தல் https://t.co/BzwUdpjc6Q

Hearty congratulations to Tmt @supriya_sule and Thiru @praful_patel on being appointed as the Working Presidents of @NCPspeaks. Your assiduous efforts for your party's growth and rich parliamentary interventions make it a well-deserved promotion.

Birthday Greetings to veteran political leader and @RJDforIndia National President Thiru @laluprasadrjd ji. The emphasis he gave for 'dignity' (izzat), makes his politics very close to that of our Self-Respect movement helmed by Thanthai Periyar. Be it the reservation for the backward classes or raising voice for caste census or upholding secularism, the consistent stands of Thiru. Lalu Prasad avargal make him an unflinching warrior of Social Justice. On his 76th birthday, I wish him many more active years in service of people to strengthen the Mandal Politics in North India. @aifsoj

தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah அவர்களே, ஒன்றிய அரசில் தி.மு.க. பங்கேற்றிருந்தபோது தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த திட்டங்களை இன்று நான் சேலத்தில் பட்டியலிட்டேன். இதுபோல், 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த சிறப்புத் திட்டங்களை உங்களால் பட்டியலிட முடியுமா? தெற்கிலிருந்து எழுந்து, தேசிய அளவில் எதிரொலிக்கும் #DravidianModel குரலைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், வடக்கில் இருந்து அனுப்பப்படும் ஏவல் அமைப்புகளைக் கண்டெல்லாம் இந்த ஸ்டாலினும் அஞ்ச மாட்டான். தி.மு.க.வைச் சேர்ந்த யாரும் அஞ்ச மாட்டார்கள். வீரபாண்டியார் போல் நெஞ்சுரம் கொண்ட படைவீரர்களைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!

#Live: ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைமையுரை https://t.co/KwBw0ajURe

இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட https://t.co/HmrJVPgQCG கழக வலைத்தளத்தைக் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன். கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட பயணத்தைத் தலைமுறைகள் தாண்டியும் அறியச் செய்வோம்!

உழவர் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மாரி பொழிய, உரிய காலத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணையின் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாரும் பணிகளை விரைந்து செய்து முடிக்கிறோம். கடந்த ஆண்டுகளில் நாம் படைத்த சாதனைகளை விடவும் வேளாண் விளைச்சல் அதிகமாக இருக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடைமடை வரை நீர் சென்று சேர்வதை உறுதிசெய்யும் விதமாக, மேட்டூர் அணைத் திறப்புக்கு முன்பாக இன்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்தேன். காவிரித்தாய் ஈன்றெடுத்த புதல்வராம் கலைஞரின் நூற்றாண்டில் வேளாண் உற்பத்தியில் சாதனை படைப்போம்!

#Live: செய்தியாளர் சந்திப்பு https://t.co/NShJkD4g2s

எங்கும் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அவர் அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எண்ணற்ற ஏழை எளியோர் உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளனர். அத்தகைய தாயுமான தலைவரது நூற்றாண்டில் தனது குடும்பத்துடன் உடலுறுப்புத் தானம் செய்ய முடிவெடுத்த சேலத்தைச் சேர்ந்த இந்தக் கழக உடன்பிறப்பின் செயலால் நெகிழ்கிறேன். கடந்த 2009-ஆம் ஆண்டே எனது துணைவியாரும் நானும் உடலுறுப்புகளைத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துக் கையொப்பமிட்டு, அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்ததை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்! மண்ணும் நெருப்பும் தின்னும் உடலைத் தேவையுள்ளோர்க்குத் தந்து மனிதம் காப்போம்! #கலைஞர்100

தமிழ்நாட்டில் மனிதவளத்தைத் திறன்மிக்கதாக்க, ஐ.டி.ஐ.களை @TataTech_News நிறுவனத்துடன் இணைந்து தரம் உயர்த்துகிறது நமது #DravidianModel அரசு! ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களும் இளைஞர்களும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெற்று, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் கொண்டவர்களாக வளர இந்த முயற்சி வழிவகுக்கும். 71 ஐ.டி.ஐ.களில் ரூ.2877.43 கோடி மதிப்பில் Industry 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் இந்த முயற்சியில், இன்று முதற்கட்டமாக ரூ.762.30 கோடி செலவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களைத் தொடங்கி வைத்தேன்.

#Live: 22 அரசு I.T.I.களில் அமைக்கப்பட்டுள்ள Industry 4.0 தொழில்நுட்ப மையங்களைத் திறந்து வைத்து உரை https://t.co/qw1e4uoOEZ

முத்துவேலரும் அஞ்சுகத்தாயும் பெற்றெடுத்த பேறு! திருக்குவளையில் உதித்த உன்னத சூரியன்! உலகத் தமிழரெல்லாம் உயர்வடைய உழைத்த தலைவர்! ஏழைப் பங்காளர்களின் பாசத் தலைவர்! சொற்கழனியில் பகுத்தறிவுப் பயிர் செய்த புரட்சியாளர்! தந்தை பெரியார் ஆளாக்கிய மானமிகு சுயமரியாதைக்காரர்! பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் நடந்த பெருந்தொண்டர்! கோடிக்கணக்கான உடன்பிறப்புகளை வழிநடத்திய மாபெரும் தலைவர்! நம் தமிழினத் தலைவர் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கப் பொதுக்கூட்டத்தில், நானும் நமது கொள்கை உறவுகளான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலைஞரின் புகழைப் போற்றிப் பேசினோம். அவர் புகழ் பாட, தேனாகத் தமிழ் ஊறும்! இனி நாளெல்லாம் அதனைப் பாடும் அத்தனை ஊரும்! ஓராண்டு முழுவதும் அவர் பெயரில் நடந்திடும் மக்கள் பணி! அதில் அவரது சாதனைகளைக் கொண்டு சேர்ப்பது உடன்பிறப்புகளாகிய நமது பணி! #கலைஞர்100



#Live: கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை https://t.co/0n7yEuDUjT

#Live: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் https://t.co/jzJYwNEISS

"மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!" தமிழினத் தலைவர் கலைஞர் சொன்னது. அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நாம் சென்றால், இந்தப் பொன்மொழியே நம்மை வரவேற்கும்! தலைவர் கலைஞரின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் திறந்து வைத்தேன்.



#Live: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் https://t.co/n6wceqnbQw

தமிழ்நாட்டின் வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு அடித்தளம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள். அத்தகைய கட்டமைப்பை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி, நகரத்தில் வாழும் எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து வைத்தேன். கல்வியிலும் மக்கள் நலன் பேணுவதிலும் மிகச்சிறந்த மாநிலமாக விளங்கி, தலைநிமிர்ந்து நிற்கும் நமது தமிழ்நாட்டின் பெருமையை உணராதவர்களுக்கு உணர்த்தி, அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம்!

#Live: 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து வைத்து உரை https://t.co/GqZ1rsjmrE

இராமநாதபுரம் மாவட்ட வன அலுவலரும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளகக் காப்பகத்தின் இயக்குநருமான திரு. @jagdishbakanIFS அவர்கள் @UNESCO அமைப்பால் வழங்கப்படும் உயிர்க்கோளகக் காப்பக மேலாண்மைக்கான (#BiosphereReserveManagement) #MichelBatisseAward-க்குத் தேர்வாகி, தமிழ்நாடு வனத்துறைக்கும் அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். நமது அரசு அமைத்த Marine Elite படையால்தான் இது சாத்தியமானது என அவர் கூறியதைக் கண்டு பெருமையடைந்தேன். ஜூன்-14 அன்று பாரிஸ் நகரத்தில் நடைபெறும் நிகழ்வில் விருதைப் பெறவுள்ளதோடு, மன்னார் வளைகுடாப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்த அறிக்கையையும் உலக அரங்கில் விளக்கிக் காட்டவுள்ள திரு. ஜகதீஷ் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரிப் படிப்பைக் கைவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். ஆட்சிமொழிப் பிரச்சினையில், தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என அரசியல் நிர்ணய அவையில் ஆணித்தரமாக வாதாடிய மொழிக்காவலர். தொகுதிக்குச் செல்லாமலேயே போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெறக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு கொண்டிருந்த தனிப்பெரும் தலைவர். அரசியல் நிர்ணய அவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழர்களுக்காகவும் சிறுபான்மைச் சமுதாயத்தினரின் உரிமைகளுக்காகவும் உரக்கக் குரல் எழுப்பிய அரிமா. "இவ்வளவு பெரிய முஸ்லிம் சமுதாயத்திற்கு இம்மாதிரி ஒரு தலைவர் மீண்டும் கிடைப்பது அரிது" என்று அவரது மறைவின்போது தந்தை பெரியாரால் உருக்கத்துடன் பாராட்டப்பட்ட மாசற்ற மாணிக்கம் - கண்ணியமிகு 'காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயில் அவர்களின் பிறந்தநாளில் இந்நாட்டுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

