
#Live: திருக்குவளையில் #TNBreakfastScheme தொடக்க விழா https://t.co/Et6Z1StrCF
#Live: திருக்குவளையில் #TNBreakfastScheme தொடக்க விழா https://t.co/Et6Z1StrCF
All
Showing 2,781–2,800 of 9,209 posts

#Live: திருக்குவளையில் #TNBreakfastScheme தொடக்க விழா https://t.co/Et6Z1StrCF

'சாதனைத் தம்பி’ @rpragchess - பெரிதுவக்கும் அவரது தாய் நாகலட்சுமி ஆகியோரை வாழ்த்தியபோது… @M_Sridharan https://t.co/TEy4n2CbzW

இந்து சமய அறநிலையத் துறையில் நமது அரசின் செயல்பாடுகளை நீதிபதிகளே பாராட்டுகிறார்கள்! திருக்கோயில்களின் விடியலுக்கு வழிகாட்டியாக இந்த ஆட்சி உள்ளதை மடாதிபதிகளே அங்கீகரிக்கிறார்கள்! நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் ஆன்மீகப் பெரியோர்களும் தமிழ் மக்களும் நம்மை ஆதரிக்கிறார்கள் என்பதே எனக்குப் போதுமானது! சமத்துவத்துக்கு எதிரான கூட்டத்தின் பரப்புரை பற்றிக் கவலை இல்லை! இனம் - மொழி - நாட்டு உரிமை காக்க, ஆன்மீக ஆளுமைகள் தங்கள் பங்களிப்பைக் கடந்த நூறாண்டுகளாகச் செலுத்தியதைப் போல, இன்றைய ஆன்மீக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும்! #TNHRCE #தருமை_ஆதீனம் @PKSekarbabu @tnhrcedept



#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி மேலும், #இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghoshal, #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள #சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது. #NationalFilmAwards2023 #NationalFilmAwards


#Live: தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முப்பெரும் விழாவில் விழாப் பேருரை https://t.co/G8SOdNfmDV

நாளை மறுநாள் முதல் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, இன்னும் பல லட்சம் மாணவர்களின் பசியாற்ற உள்ளது! #முதலமைச்சரின்_காலை_உணவுத்_திட்டம் #DravidianModel

Compulsory Hindi test by @NTA_Exams for non-teaching positions in NITs and other institutions under @EduMinOfIndia undermines linguistic equality and is a blatant disregard for diversity. Imposing Hindi deprives the opportunities for youth from Tamil Nadu and other non-hindi speaking states. Scrap the unjust Hindi language requirement now and make it a test for all! #StopHindiImposition @dpradhanbjp

The successful lunar landing of #Chandrayaan3 brings an immense sense of accomplishment to Tamil Nadu. The three #Chandrayaan missions have been led by exceptional minds from Tamil Nadu - Mayilsamy Annadurai, M Vanitha, and now P Veeramuthuvel. Their dedication and expertise inspire us all. I encourage the young talents of #TamilNadu to follow in their footsteps and contribute to our #India's journey of progress! #ISRO #TamilConnect


சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (குறள் 647) கொண்ட கொள்கையை உறுதியோடும், உண்மையை அஞ்சாதும் எடுத்துரைத்த பெருந்தலைவர்கள் வாழ்ந்த நம் தமிழ் மண்ணில் சொல்வன்மை கொண்ட இளைஞர்கள் பெருகட்டும்! நீங்கள் சொல்லும் சொல் பயனுள்ளதாக, மக்களை நன்னெறிப்படுத்துவதாக, பகுத்தறிவூட்டுவதாக அமையட்டும்! #கலைஞர்100 #Oratory #Eloquence #TheArtOfPublicSpeaking

#Live: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையப் பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில் உரை https://t.co/TaWiRxfK1o

1,545 பள்ளிகளில் முதற்கட்டமாகத் தொடங்கி வைத்த #முதலமைச்சரின்_காலைஉணவுத்_திட்டம் எதிர்பார்ப்புகளை மீறிய பயனை அளித்தது! 15.75 லட்சம் மாணவர்களின் பசியாற்றிடும் வகையில், 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தை வரும் 25-ஆம் நாள் நாகையில் நான் தொடங்கி வைக்கிறேன். தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கத்தக்க இந்தத் திட்டத்தைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த #MLA, #MP அனைவரும் கட்சி வேறுபாடின்றித் தங்கள் தொகுதிகளில் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க வேண்டும். #TNChiefMinistersBreakfastScheme #TamilNaduShowstheWay



அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அமைக்கப்படும் என விடுதலை நாள் உரையில் அறிவித்தமைக்குப் பல தரப்பினரும் உளமாரப் பாராட்டி நவிலும் நன்றியால் நெகிழ்கிறேன். கைரிக்ஷா தொழிலாளர்கள், குடிசைவாழ் மக்கள் எனக் கோட்டையில் இருந்தாலும் எளிய மக்களின் நலனையே எண்ணித் திட்டங்கள் தீட்டிய கலைஞரின் நூற்றாண்டில் இத்தகைய அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு கிட்டியது நான் பெற்ற பேறு! #உழைப்போரை_உயர்த்துவோம்!



Tamil Nadu stands with Himachal Pradesh during these challenging times of devastation caused by heavy rains and landslides. In the spirit of unity and humanity, we are contributing 10 crore INR towards relief efforts to aid the recovery. Together, we can rebuild and overcome. #HimachalFloods #TNStandsWithHP @SukhuSukhvinder



Sharing some glimpses from the meeting of my Economic Advisory Council. https://t.co/k7x4Dx8Oa4

Honoured to unveil three remarkable works by @The_Hindu on this #ChennaiDay. 'Epic Saga of the Cholas' captures the grandeur of the Chola dynasty, 'Tamil Nadu In Focus' provides a fascinating insight into the world of Tamil history and culture; politics and governance, over the centuries, while 'Pioneers – Stars in the Madras Galaxy' honours our resilient achievers. Thank you Thiru @NRamind, Thiru N. Murali, Thiru N. Ravi and everyone part of the @The_Hindu group for celebrating the heritage and heroes of our Dravidian heartland.



பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார்! கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா - ஊர் என்பதா - உயிர் என்பதா சென்னையை? சென்னை - ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன 'தருமமிகு சென்னை'! #ChennaiDay #Chennai384


Delighted to announce #Chennai's monumental step towards water security! Laid the foundation stone for South Asia's biggest desalination plant at Perur, being established in collaboration with #JICA. This 400 MLD capacity plant at a cost of Rs.4,276.4 crore is to be completed by December 2026. Confident that this will fulfill the longfelt water supply needs of OMR, ECR and other newly added GCC areas in South Chennai. Together, we are shaping a greener, more sustainable future! 💧 @KN_NEHRU @vatechwabag #CMWSSB #WABAG

Congratulations to Sara Wakita and Tenshi Iwami for their impressive victories at the International Surf Open, Tamil Nadu! 🏄♀️🌊 Great effort from @SportsTN_ for hosting the first-ever @WSL event in India. This is another feather in your cap adding to the success of #44thChessOlympiad, #WTAChennaiOpen, and #AsianChampionsTrophy Hockey tournament. A proud moment for our state and a step forward in putting Tamil Nadu on the global #surfing map. @UdhayStalin

#BanNEET போராட்டம் என்பது தி.மு.க.வின் போராட்டமோ, அரசியல் கோரிக்கையோ அல்ல! சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை! ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை! தமிழ்நாடு முழுவதும் உண்ணாநிலை அறப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துகள்! #INDIA கூட்டணி வெற்றி பெற்றால், #NEET நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது. இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம். @Udhaystalin @Dr_Ezhilan @EzhilarasanCvmp @DrKanimozhiSomu @rajiv_dmk


ஒவ்வொரு மாவட்டத்துக்குச் செல்லும்போதும், தங்களது பணியைச் சிறப்பாகச் செய்பவர்களையும் - சமூகத்துக்குச் சேவையாற்றுபவர்களையும் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். நேற்று இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 அரசுத் துறைப் பணியாளர்களுக்கும், 5 தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினேன்.