
#Live: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (#KMUT) தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/r0O1rOWw96
#Live: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (#KMUT) தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/r0O1rOWw96
All
Showing 2,741–2,760 of 9,209 posts

#Live: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (#KMUT) தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/r0O1rOWw96

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்! தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்! எண்ணித்துணிவோம்! இந்தியாவை மீட்கும் வேட்கைத் #தீ_பரவட்டும் நாடெங்கும்! #PerarignarAnna #AGrandTamilDream #HBDArignarAnna



பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்... Despite women's achievements as pilots and astronauts, they were barred from the sacred role of temple priests, deemed impure, even in the temples for female deities. But change is finally here! In Tamil Nadu, as our #DravidianModel Government has removed the thorn from Thanthai Periyar's heart by appointing people of all castes as priests, women are also now stepping into the sanctums, bringing a new era of inclusivity and equality. @PKSekarbabu @tnhrcedept

Tamil Nadu takes a historic leap with the Kalaignar Magalir Urimai Scheme, offering ₹1000 monthly assistance to 1,06,50,000 women family heads. A groundbreaking initiative reshaping women's welfare in India, which is set to inspire many other states. The visionary Finance Minister of TN, @TThenarasu, sheds light on the pioneering #KMUT scheme and our government's commitment to improving the finances of the state in today's @the_hindu. எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கில் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக, தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நாளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட்டு, ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் இனி மாதம்தோறும் பயன்பெற உள்ளனர். மகளிர் நலத் திட்டங்களில் புது அத்தியாயமான இத்திட்டம் குறித்தும், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதில் நமது அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்தியும் மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்றைய 'தி இந்து' நாளேட்டில்...


#கலைஞர்100-ஐ முன்னிட்டு, @dmkengineerwing சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தங்களது பேச்சுத்திறனை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி உங்களது திறமைகளை வெளிக்கொணருங்கள்! இந்த முன்னெடுப்பை எடுத்துள்ள @skpkaruna உள்ளிட்ட பொறியாளர் அணியினர் அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்! மேலும் விவரங்களுக்கு: https://t.co/Pho4d4eNij #Kalaignar100 #DMKEnggWing #Kalaignar100PechuPotti

While the Prime Minister remains silent on everyday issues impacting the common man, his cabinet focuses on #SanatanaDharma by spreading false narratives and fuelling it with support from a few media outlets. I urge our DMK leaders and cadre not to react to such diversion tactics and to continue posing questions to the BJP on #ManipurViolence, #AdaniHindenburg, a whopping 7.50 lakh crore rupees flagged in the #CAGreport, and other pressing issues, along with highlighting 9-year failures of the BJP. We will keep on posing questions, and so will #INDIA.


#Live: அனிதா அச்சீவர்ஸ் அகாடெமியில் பயின்ற மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்புரை https://t.co/3Mn6c5nN4B

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன். பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.



"எல்லார்க்கும் எல்லாம்" என்ற #DravidianModel ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக @tnhrcedept-இன் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு. இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணமான அமைச்சர் @PKSekarbabu அவர்களையும் - அதிகாரிகளையும் - அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்!

.@KMA_tweet - ചെന്നൈയിലെ വിവിധ മലയാളി സംഘടനകളുമായി സഹകരിച്ച് നടത്തിയ #MediaMeet2023 ഉദ്ഘാടനം ചെയ്തു. മാധ്യമ പ്രവര്ത്തകന് തിരു BRP ഭാസ്കര് രചിച്ച 'The Changing Mediascape' എന്ന പുസ്തകത്തിന്റെ പ്രകാശനവും; തിരു ശശികുമാറിനെ ആസ്പദമാക്കി മീഡിയ അക്കാദമി നിർമ്മിച്ച 'Unmediated' എന്ന ഡോക്യുഫിക്ഷന്റെ പ്രകാശനവും നിര്വ്വഹിച്ചു. ചടങ്ങില് ഇന്ത്യയുടെ വൈവിധ്യം, സാമൂഹ്യ നീതി, മതേതരത്വം എന്നിവ അപകടത്തിലാണെന്ന് ഞാന് സൂചിപ്പിച്ചു. ഞങ്ങൾ രാഷ്ട്രീയ പാര്ട്ടികള് ഇതിനെ തിരഞ്ഞെടുപ്പിലൂടെ എതിർക്കുന്നു. യഥാര്ത്ഥ പ്രശ്നങ്ങളിൽ നിന്ന് ജനശ്രദ്ധ മാറ്റി വ്യാജ വാര്ത്തകള് പ്രചരിപ്പിക്കാതിരിക്കാൻ മാധ്യമങ്ങളും മുൻകൈ എടുക്കണം. കേരളവും തമിഴ്നാടും ഒരു ഇരട്ടക്കുഴൽ തോക്ക് പോലെ ഇന്ത്യയെ സംരക്ഷിച്ച് പുതിയൊരു പുലരിയുണ്ടാക്കണം.

#Live: @KMA_tweet - சென்னை மலையாளி சங்கம் இணைந்து நடத்தும் #MediaMeet2023 தொடங்கிவைத்துச் சிறப்புரை https://t.co/oLZ0Eizu5D

Hon'ble Minister @UdhayStalin didn't call for 'genocide' as distorted by BJP, but only spoke against discrimination. Disheartening to see the 'responsible' Hon'ble Prime Minister, Union Ministers and BJP Chief Ministers ignore facts and driven on fake narratives despite having all access and resources to verify the facts.



After Non-BJP forces united to dethrone the fascist BJP regime and aptly named their alliance #INDIA, now the BJP wants to change 'India' for 'Bharat.' BJP promised to TRANSFORM India, but all we got is a name change after 9 years! Seems like the BJP is rattled by a single term called India because they recognise the strength of unity within the opposition. During the elections, 'India' will chase BJP out of power! பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்! #IndiaStaysIndia

ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு! இந்த இணையற்ற தியாகங்களோடு - வழக்கறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியராகவும் இருந்தவர் அவர். தொழிற்சங்க முன்னோடியாக விளங்கியவர். தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழறிஞர். அத்தகைய பேராளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில்தான் நமது #திராவிட_மாடல் ஆட்சியில் 'வ.உ.சி. பன்னூல் திரட்டு', 'வ.உ.சி. திருக்குறள் உரை' உள்ளிட்ட நூல்களை அவரது 150-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி வெளியிட்டோம்! தொடர்ந்து மேலும் பல முயற்சிகளின் வழியே இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம்! #VOC152



To watch/listen to all episodes of 'Speaking for India' Podcast series in Tamil, Telugu, Malayalam, Kannada, Hindi languages visit the official website: https://t.co/jUg9TQSjWY #Speaking4India வலையொலித் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் காண/கேட்க பார்வையிடவும்: https://t.co/jUg9TQSjWY Spotify Page https://t.co/8bF4Fyen2d Tamil: https://t.co/RTWs19g5mz Hindi: https://t.co/GQT0ARHcce Malayalam: https://t.co/ArS7WNDiNi Kannada: https://t.co/MGLLytFpoy Telugu: https://t.co/zAUtV7MoOy YouTube Tamil: https://t.co/9nBNZ6fEyF Hindi: https://t.co/C4dA2eE6VJ Malayalam: https://t.co/yaiHnbMzLh Kannada: https://t.co/3hsnKZqryr Telugu: https://t.co/970mok2m6Y Soundcloud Tamil: https://t.co/Ju7lHGpyN5 Hindi: https://t.co/UwHR3dHDmP Malayalam - https://t.co/hOGtvVKZUY Kannada: https://t.co/7yhBSVLCbq Telugu: https://t.co/AaqXRnqGlK Amazon Music Tamil: https://t.co/Bp5PXBZPvx Hindi: https://t.co/3PDBJK76tX Malayalam: https://t.co/aR6NNkl18I Kannada: https://t.co/Q3e17FHvZw Telugu: https://t.co/4AwGU35JVa

வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்! #Speaking4India https://t.co/C60TrlPTOG

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியால் அந்த மாநிலத்தில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய நம் கழகம், கலைஞரின் நூற்றாண்டில் 75-ஆம் ஆண்டில் பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது! வீரம் செறிந்த வேலூர் முப்பெரும் விழாவுக்கு கொள்கைப் படையாகத் திரண்டு வருக! கழகம் காப்போம்! மொழியைக் காப்போம்! மாநில உரிமை காப்போம்! மக்கள் வாழும் வகையில் #INDIA-வைக் காப்போம்! #LetterToBrethren https://t.co/s1xmIOLDBo



The Union BJP Government's push for 'One Nation - One Election' is a blatant attempt to undermine our federal structure. It's a move towards centralised power that goes against the essence of #INDIA, a union of states. This abrupt announcement and the subsequent high-level committee formation only fuel suspicions. #OneNationOneElection is a recipe for #dictatorship, not #democracy.

தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான #AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி #NigarShaji அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து #Chandrayaan முதல் #Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். @Isro-வின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்! #ISRO #AdityaL1Launch #Sriharikota #PSLVC57

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை @KanimozhiDMK முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள #Kalaignar100quiz வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்!