
மாவட்ட ஆட்சியர்களுடனான மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில், “மக்களின் நண்பனாக” திகழ்ந்து காவல்துறை அதிகாரிகள் எப்படி பணியாற்ற...
மாவட்ட ஆட்சியர்களுடனான மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில், “மக்களின் நண்பனாக” திகழ்ந்து காவல்துறை அதிகாரிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆக்கபூர்வமான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன். வெளிப்படையான விவாதத்தின் வழியே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதையும், மக்களின் குறைகளைக் காவல்துறை அதிகாரிகள் உடனுக்குடன் தீர்த்து வைப்பதையும் தெரிந்து கொண்டு, அப்படிப்பட்ட சிறப்புமிக்க பணி தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் அமைதி, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி அனைத்திற்கும் காவல்துறை முக்கியப் பங்காற்றி வருவதைப் பாராட்டி, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நேரத்தில் மக்களின் பாதுகாப்புப் பணிகளை மேலும் கவனமாகத் தொடர்ந்திடுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்.









