DMKSocial

The Feed, page 130

Showing 2,581–2,600 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Social Justice & Reservation

இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்! உண்மையான...

இந்திய மண்ணில் மக்களைப் பிறப்பால் பிளவுபடுத்தி, சாதிப் பிரிவினையால் ஒடுக்கும் கொடுமைகளுக்கான மூலகாரணங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்! உண்மையான பிரிவினை எது என்பதை எடுத்துச்சொல்லி, சட்டத்தின் வழியாக மக்களைச் சமமாக்கப் போராடிய புத்துலக புத்தர்! அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்! எத்தகைய இடர்களும் சூழ்ச்சிகளும் வந்தாலும், சமத்துவத்தை நோக்கிச் சளைக்காமல் உழைக்கப் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2858
96
123,157 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Disaster Response & Relief

அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும்...

அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் #CycloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்!

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3270
282
236,700 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Disaster Response & Relief

அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில்...

அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம். #CycloneMichaung

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3517
189
167,773 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Disaster Response & Relief

அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக...

அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, '#CycloneMichaung' இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு குறைத்திருக்கிறோம்/ தடுத்திருக்கிறோம். மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. இன்னலி்ல் இருக்கும் மக்களுடன் நமது அரசு என்றும் துணை நிற்கும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் சக்தியின் துணைகொண்டு இயற்கைப் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம். இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணைகொண்டு வெல்வோம்! அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள கரம்கூப்பி அழைக்கிறேன். வெல்லட்டும் மானுடம்! #ChennaiRains #ChennaiFloods

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
5254
506
415,880 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Disaster Response & Relief

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும்...

வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த #CycloneMichuang பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம். #ChennaiRains #ChennaiFloods

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
5022
373
414,754 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Disaster Response & Relief

#CycloneMichaung-ஐ எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு...

#CycloneMichaung-ஐ எதிர்கொள்ள அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்தில் உள்ளனர். வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பீர்; புயலின் தாக்கம் குறையும் வரை அத்தியாவசியத் தேவைகளின்றிப் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
2773
150
191,216 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Party & Elections

Congratulations to the winning parties in the state legislative elections of #Telangana, #MadhyaPradesh, #Chhattisgarh, and #Rajasthan! Wishing...

Congratulations to the winning parties in the state legislative elections of #Telangana, #MadhyaPradesh, #Chhattisgarh, and #Rajasthan! Wishing them a term filled with positive change, progress, and prosperity for people from all sections. #ElectionResults

Party & Elections
𝕏 X
2 yr ago
4112
232
333,096 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Social Justice & Reservation

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் #WorldDifferentlyAbledDay வாழ்த்துகள்!...

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் #WorldDifferentlyAbledDay வாழ்த்துகள்! சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் #DravidianModel அரசு தொடர்ந்து பாடுபடும்! #IDPD #EveryoneIncluded

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1724
87
95,110 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Disaster Response & Relief

அடுத்த இரு நாட்களுக்கு மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

அடுத்த இரு நாட்களுக்கு மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். உதவிக்கு TN SDMA மாநில உதவி எண்: 1070 மாவட்ட உதவி எண்: 1077 வாட்சாப்: 9445869848 @ChennaiCorp: 1913 #ChennaiRains #CycloneMichaung

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1831
91
107,177 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Disaster Response & Relief

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 2-3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மாவட்ட ஆட்சித்...

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 2-3 நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி, உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். கனமழையால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்துப் பணிகளையும் அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து நிறைவேற்றிடத் தயார்நிலையில் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடுவீர்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
1824
74
67,609 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Social Justice & Reservation

🏛️தமிழன் - திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல்களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றிய 'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் திருவுருவச்...

🏛️தமிழன் - திராவிடன் ஆகிய இரண்டையும் அரசியல்களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றிய 'திராவிடப் பேரொளி' அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். 📚அயோத்திதாசரின் நூல்கள் நாட்டுடைமை. 💰ரூ.10 லட்சம் பரிவுத்தொகை வழங்கல். 📩அயோத்திதாசர் அஞ்சல் தலை வெளியீடு. 📰அவர் நடத்திய தமிழன் இதழுக்கு நூற்றாண்டு விழா. 🏥அவர் பெயரிலான சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு நிலம் ஆகியவற்றை நிறைவேற்றியது தி.மு.க ஆட்சியே! ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த "அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்" வரும் ஐந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் நமது திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. புத்தரை 'இரவு பகலற்ற ஒளி' எனப் போற்றிய பண்டிதரின் சிந்தனைகளும் அத்தகைய ஒளியாகத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படட்டும்! #PanditIyotheeThass

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2174
68
75,763 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Disaster Response & Relief

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில...

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் மழை காரணமாகத் தற்போது சில இடங்களில் தேங்கிய மழைநீரும் விரைந்து வடிந்து கொண்டிருக்கிறது. விரைவாகச் செயல்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை தொடர்பான புகார்களுக்குச் சென்னை மக்கள் 1913, 04425619204, 04425619206, 04425619207 ஆகிய எண்களிலும், 9445477205 எண் மூலம் வாட்சாப் வழியாகவும் உதவிகளைப் பெறலாம்.

Disaster Response & Relief
𝕏 X
2 yr ago
3122
200
152,346 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Education

தமிழ்நாட்டு மாணவ - மாணவிகள் படித்து முன்னேறி உலகம் முழுக்கப் போய்ச் சாதிப்பதைப் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி! #TheeranChinnamalaiCollege...

தமிழ்நாட்டு மாணவ - மாணவிகள் படித்து முன்னேறி உலகம் முழுக்கப் போய்ச் சாதிப்பதைப் பார்ப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி! #TheeranChinnamalaiCollege https://t.co/i9MjA15ckG

Education
𝕏 X
2 yr ago
1895
100
88,550 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Social Justice & Reservation

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ இரயில் பயணம் - விமானப் பயணம்...

சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன! மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ இரயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம். @ttdcofficial சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன். இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்!

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
3785
183
160,093 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Education

#Live: திருப்பூர் - தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/dC3wW51wxF

#Live: திருப்பூர் - தீரன் சின்னமலை மகளிர் கல்லூரி புதிய கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை https://t.co/dC3wW51wxF

Education
𝕏 X
2 yr ago
825
26
44,408 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Health

2008-ஆம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள்தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ்...

2008-ஆம் ஆண்டிலேயே 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே அதிகளவில் மக்கள்தொகைக்கேற்ப ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன. அதனைக் குறைக்க, 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டத்தைக் கடந்த 2021 டிசம்பரில் அறிமுகப்படுத்தினேன். இந்த இரண்டாண்டுகளில், இன்று 2 இலட்சமாவது பயனாளிக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் என்பதைவிட 2 இலட்சம் பேர்களின் உயிர்களும் உடலுறுப்புகளும் காக்கப்பட்டுள்ளன என்பதே சரி! சாலை விதிகளைப் பின்பற்றிப் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்! குடும்பங்களில் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்வோம்! #NammaiKakkum48 @Subramanian_ma

Health
𝕏 X
2 yr ago
2790
252
246,026 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Industry & Investment

'பரவலான தொழில்வளர்ச்சி' என்றோம்- பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில், JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தேன். 'விரைவில் அனுமதி'...

'பரவலான தொழில்வளர்ச்சி' என்றோம்- பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில், JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்கி வைத்தேன். 'விரைவில் அனுமதி' என்றோம்- அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் திறப்புவிழா நடத்தி வைத்திருக்கிறோம்! 'வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்' என்றோம்- 4000 வேலைவாய்ப்புகள்; அதில் 80% பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது! இதுதான் #DravidianModel!

Industry & Investment
𝕏 X
2 yr ago
2183
79
144,854 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Industry & Investment

#Live:பெரம்பலூர் பீனிக்ஸ் கோத்தாரி காலணிப்பூங்காவில் JR One தொழிற்சாலை திறந்துவைத்துச் சிறப்புரை https://t.co/Jl6cny2xkx

#Live:பெரம்பலூர் பீனிக்ஸ் கோத்தாரி காலணிப்பூங்காவில் JR One தொழிற்சாலை திறந்துவைத்துச் சிறப்புரை https://t.co/Jl6cny2xkx

Industry & Investment
𝕏 X
2 yr ago
862
41
42,869 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

#VPSingh #SocialJustice https://t.co/T95xJn4AOg

#VPSingh #SocialJustice https://t.co/T95xJn4AOg

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1329
58
47,883 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

#VPSingh #SocialJustice https://t.co/E9drRF1KLz

#VPSingh #SocialJustice https://t.co/E9drRF1KLz

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1404
61
55,782 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41