DMKSocial

The Feed, page 126

Showing 2,501–2,520 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Social Justice & Reservation

சிறுபான்மையின மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்பை வழங்கியும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிசெய்தும் அவர்களின் நலனுக்காகப்...

சிறுபான்மையின மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்பை வழங்கியும், அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிசெய்தும் அவர்களின் நலனுக்காகப் பெரும்பங்காற்றி வரும் நமது அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, அவர்கள் வைத்த கோரிக்கைகளைக் கேட்டு, 17 அறிவிப்புகளைச் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிட்டேன்.

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1852
90
61,806 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Welfare Schemes

அடித்தட்டு மக்களின் ஏற்றம், எல்லோருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் நமது #DravidianModel அரசு, கல்வியும் சுகாதாரமும்...

அடித்தட்டு மக்களின் ஏற்றம், எல்லோருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் நமது #DravidianModel அரசு, கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் எனப் போற்றி முன்னுரிமை அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு குழந்தைகூட பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடக்கூடாது, போதிக்கும் வேளையில் ஊன்றிப் பாடங்களைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாட்டுக்கே முன்னோடியாக, கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும் செயல்படுத்தி வரும் #TNCMBreakfastScheme நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அன்றாடப் பணிச்சுமையைக் குறைத்து இருக்கிறது. இன்று தினத்தந்தி குழுமத்தின் சார்பில் வெளியாகும் @dt_next நாளேட்டில் வந்த செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது! மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் சமுதாயத்தில் பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை; மாறாக, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர் என்ற செய்தி அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். காலையில் வேலைக்குச் செல்லும் தனது தாயால் சமைக்க முடியவில்லை என்பதால் பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளியில் பகிர்ந்தளிக்கப்படும் சிற்றுண்டியை உண்பதாகக் கூறியதைப் படிக்கும்போது நெகிழ்ந்தேன். அவரைப் போல, பசியோடு வரும் பல மாணவர்களும் உணவருந்திய பின் வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம், மேலும் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத் தருகிறது. உணவை வீணாக்காமல், பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். எத்தனைக் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்!

Welfare Schemes
𝕏 X
2 yr ago
1959
95
77,168 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Law & Order / Justice

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக...

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. “நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன. நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள். #BilkisBano

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
3590
228
259,296 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jan
Industry & Investment

#TNGIM2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட...

#TNGIM2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது. நமது #DravidianModel அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த #TNGIM2024! 'எல்லோருக்கும் எல்லாம்', 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!

Industry & Investment
𝕏 X
2 yr ago
2561
113
142,035 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Industry & Investment

#TNGIM2024, that caught India's attention, has received a remarkable influx of investments. https://t.co/325iTxE2EG

#TNGIM2024, that caught India's attention, has received a remarkable influx of investments. https://t.co/325iTxE2EG

Industry & Investment
𝕏 X
2 yr ago
5428
248
254,452 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Industry & Investment

#Live: #TNGIM2024-இல் நிறைவுரை https://t.co/HweZvPHwfJ

#Live: #TNGIM2024-இல் நிறைவுரை https://t.co/HweZvPHwfJ

Industry & Investment
𝕏 X
2 yr ago
1002
46
50,564 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jan
Industry & Investment

The first day of #TNGIM2024 has been marked by a series of successful and noteworthy events. Later today, in my valedictory address, I will...

The first day of #TNGIM2024 has been marked by a series of successful and noteworthy events. Later today, in my valedictory address, I will announce the total investments secured by Tamil Nadu at this Global Investors Meet. It's been our enduring message that Tamil Nadu is overseas investors' first port of call, striving to ascend as the premier state in South Asia. @TRBRajaa @Guidance_TN

Industry & Investment
𝕏 X
2 yr ago
2504
84
94,838 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Industry & Investment

Honoured to share the dais with Hon'ble Union Minister of Commerce & Industry Thiru @PiyushGoyal and esteemed industry leaders, TVS Chairman, JSW...

Honoured to share the dais with Hon'ble Union Minister of Commerce & Industry Thiru @PiyushGoyal and esteemed industry leaders, TVS Chairman, JSW MD, Tata Electronics CEO, Hyundai MD, Ashok Leyland Chairman, Godrej Chairperson, Qualcomm President, First Solar CEO, A.P. Moller Singapore MD, VinFast Dy CEO, Ola Electric CEO, Mitsubishi MD, Pegatron MD, CII National President at #TNGIM2024 inauguration! Positive vibes and global acclaim for Tamil Nadu's One Trillion Dollar Dreams are fuelling our journey to success. Let's aim high, attract game-changing investments, and position Tamil Nadu as the economic powerhouse of India! Anticipating a tremendously successful event and eagerly awaiting the investment numbers that will shape Tamil Nadu's thriving future. @TRBRajaa #TNIsReady #InvestInTN #ThriveInTN @Guidance_TN

Industry & Investment
𝕏 X
2 yr ago
4740
190
187,703 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jan
Industry & Investment

#Live: #TNGIM2024 தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/u22eaHOisf

#Live: #TNGIM2024 தொடங்கி வைத்து விழாப் பேருரை https://t.co/u22eaHOisf

Industry & Investment
𝕏 X
2 yr ago
1381
91
62,010 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Culture & Heritage

அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய...

அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்! 'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று. "Art should comfort the disturbed and disturb the comfortable" என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த #கலைஞர்100 மாபெரும் கலைவிழா கண்டு - அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதலமைச்சராக அகமகிழ்கிறேன். அவரது மகனாக நன்றி நவில்கிறேன். 65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி! நன்றி! கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை! @rajinikanth @ikamalhaasan #Kalaignar100

Culture & Heritage
𝕏 X
2 yr ago
3834
175
183,976 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jan
Industry & Investment

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும்...

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான @VinFastofficial தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்! தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் @VinFastofficial நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்! #TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்! #EVCapitalofIndiaTN

Industry & Investment
𝕏 X
2 yr ago
4079
190
600,066 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Industry & Investment

As the Tamil Nadu Global Investors Meet 2024 approaches, the air is thick with anticipation! With over 30,000 participants, our campaigns,...

As the Tamil Nadu Global Investors Meet 2024 approaches, the air is thick with anticipation! With over 30,000 participants, our campaigns, #TitansofTamilNadu and #OneTrillionDreams, have sparked widespread excitement. #GIM2024 will feature 450+ international delegates, 170 globally acclaimed speakers, and representation from 50 countries, underscoring Tamil Nadu's industrial prowess. We have lined up 26 thought leadership sessions. We also have an MSME pavilion, Tamil Nadu ecosystem pavilion, several country pavilions and the StartupTN pavilion – providing a fantastic opportunity for delegates to witness the industrial marvel of the state and foster business collaborations. Join us in celebrating the industrial legacy of Tamil Nadu and leveraging the immense potential our state offers! #InvestInTN #ThriveInTN #DravidianModel #TNGIM2024

Industry & Investment
𝕏 X
2 yr ago
2668
99
114,266 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jan
Federalism & Centre–State Relations

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #DravidianModel...

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது நமது #DravidianModel அரசு. ஆட்சி அமைந்தது முதல், 🚌 மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், 🍛காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, 👩‍🎓 புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், 💪 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் - எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது #திராவிடமாடல் அரசு. இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன? ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் @TThenarasu!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3112
194
116,358 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jan
Women & Child Welfare

👸பெண்களின் பொருளாதார விடுதலையைப் பரவலாக்கும் நமது திராவிட மாடல் அரசின் பல்வேறு திட்டங்களில் மற்றுமொன்றாகத் தாம்பரத்தில் தமிழ்நாடு பணிபுரியும்...

👸பெண்களின் பொருளாதார விடுதலையைப் பரவலாக்கும் நமது திராவிட மாடல் அரசின் பல்வேறு திட்டங்களில் மற்றுமொன்றாகத் தாம்பரத்தில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனத்தால் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள #தோழிவிடுதி. 🏢 காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட நிர்வாகக் கட்டடங்கள், 🐟 மீனவர் செழித்திட மீன்வளத் துறை சார்பில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், 🐠 தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ரூ11.65 கோடியில் புதிய மாணவர் விடுதிக் கட்டடம், ஆகியவற்றைத் திறந்து வைத்து, 🌴 MSME துறை சார்பில் தென்னை நார் சார்ந்த தொழில்களின் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான #TamilNaduCoirPolicy2024-ஐ வெளியிட்டேன்.

Women & Child Welfare
𝕏 X
2 yr ago
2274
89
72,823 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Transport & Infrastructure

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு...

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன். அவற்றை நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறேன்.

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
2749
174
218,852 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Education

இந்தியாவிலேயே உயர்கல்வியில் 'நம்பர் ஒன்' மாநிலமாகத் #தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! நமது #DravidianModel அரசின், 🧑‍🎓#NaanMudhalvan 👩‍🎓...

இந்தியாவிலேயே உயர்கல்வியில் 'நம்பர் ஒன்' மாநிலமாகத் #தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது! நமது #DravidianModel அரசின், 🧑‍🎓#NaanMudhalvan 👩‍🎓 #PudhumaiPenn 👨‍💼#TNCMFellowshipProgramme 🧑‍💼#TNCMResearchGrant 💪அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - போன்ற தொலைநோக்குத் திட்டங்களால் எதிர்காலத்துக்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறோம். பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடன், தாய்த் தமிழ்நாட்டுக்கும் இந்தியத் திருநாட்டுக்கும் ஏற்றம் தரும் வகையில் உழைத்திட வேண்டும்.

Education
𝕏 X
2 yr ago
3610
121
121,119 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Transport & Infrastructure

#Live: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத் தொடக்க விழாவில் சிறப்புரை https://t.co/ZZ92tkhOpX

#Live: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத் தொடக்க விழாவில் சிறப்புரை https://t.co/ZZ92tkhOpX

Transport & Infrastructure
𝕏 X
2 yr ago
1043
33
50,542 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jan
Education

#Live: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/1XGQol4Kcv

#Live: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரை https://t.co/1XGQol4Kcv

Education
𝕏 X
2 yr ago
966
49
47,760 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jan
Environment & Climate

புத்தாண்டின் முதல் நாள்! இரண்டரை மணி நேரத்திற்கு மேல், செந்தமிழை நேசிக்கும் உள்ளங்களால் நிறைந்தன! தேமதுரத் தமிழும் - தமிழ் அருளிய கவித்திறனும்...

புத்தாண்டின் முதல் நாள்! இரண்டரை மணி நேரத்திற்கு மேல், செந்தமிழை நேசிக்கும் உள்ளங்களால் நிறைந்தன! தேமதுரத் தமிழும் - தமிழ் அருளிய கவித்திறனும் கொண்டு, 5 பூதம் 4 திசை 3 காலம் 2 திணை 1 பூமி என கவிப்பேரரசு @Vairamuthu அவர்கள் படைத்துள்ள #மகாகவிதை நூலை வெளியிட்டேன். #NewYear-இன் தொடக்கமே எதிர்காலத்துக்குத் தேவையான #ClimateChange குறித்த விழிப்புணர்வாக மாற்றியது! இயற்கையை நேசிப்போம் - போற்றுவோம் - காப்போம்! #ClimateChange #GlobalWarming #ClimateAction #SaveOurPlanet #GreenEnergy

Environment & Climate
𝕏 X
2 yr ago
3975
141
147,309 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jan
Culture & Heritage

#Live: கவிப்பேரரசு @Vairamuthu அவர்களின் 'மகா கவிதை' நூலினை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/2MVhlqjQkC

#Live: கவிப்பேரரசு @Vairamuthu அவர்களின் 'மகா கவிதை' நூலினை வெளியிட்டுத் தலைமையுரை https://t.co/2MVhlqjQkC

Culture & Heritage
𝕏 X
2 yr ago
934
41
51,327 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41