DMKSocial

The Feed, page 109

Showing 2,161–2,180 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Culture & Heritage

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்" என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான...

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்" என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு! இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் 'நடுகல் விழா' தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், மாண்புமிகு @sivasankar1ss மற்றும் @pudugaiabdulla எம்.பி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்! போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்! அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் இந்த நடுகல் முயற்சி! #வீரவணக்கம் @ThaiTamilSangam

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2054
70
71,721 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Party & Elections

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்....

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

Party & Elections
𝕏 X
2 yr ago
1478
67
81,035 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Employment & Skill Development

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும்...

குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம்! மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க - ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம்! #MayDay https://t.co/uAXRvBBCs9

Employment & Skill Development
𝕏 X
2 yr ago
3379
195
155,092 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Party & Elections

"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!...

"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!" எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! #பாரதிதாசன்

Party & Elections
𝕏 X
2 yr ago
2673
160
85,385 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Sports

மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh...

மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும். @SportsTN_

Sports
𝕏 X
2 yr ago
2931
84
117,585 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Apr
Water Resources

வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பது, குடிநீர் விநியோகப் பணிகளில் எவ்விதச் சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது!...

வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பது, குடிநீர் விநியோகப் பணிகளில் எவ்விதச் சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது! கோடைக்காலம் என்பதால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சந்தித்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் இருப்போம்! கோடையைப் பொறுப்புடன் கடப்போம்! #Summer #Heatwave

Water Resources
𝕏 X
2 yr ago
2865
104
98,744 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Apr
Federalism & Centre–State Relations

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும்,...

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
3207
279
241,282 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Health

தகிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்பாடுகளால் வெல்வோம்! #Heatwave #Summer https://t.co/764OUvZhoF

தகிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்பாடுகளால் வெல்வோம்! #Heatwave #Summer https://t.co/764OUvZhoF

Health
𝕏 X
2 yr ago
2429
145
96,709 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Social Justice & Reservation

Empowering the marginalised has been Tamil Nadu's legacy since the times of Justice Party. Delighted to have my message on #SocialJustice shared...

Empowering the marginalised has been Tamil Nadu's legacy since the times of Justice Party. Delighted to have my message on #SocialJustice shared by our MP @PWilsonDMK at the Samruddha Bharat Foundation's conference. Let's continue our journey towards a more inclusive #INDIA! https://t.co/vyABUDdwPM

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
2080
81
67,122 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Culture & Heritage

புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப்...

புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை! புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்! புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்! #WorldBookDay

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2003
149
110,907 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Federalism & Centre–State Relations

Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip...

Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip up religious sentiments and resorted to hate speech to avoid what seems to be an imminent defeat. Hate and discrimination are the real guarantees of Modi. In turning a deaf ear to the PM’s blatant hate speech, the ECI has shamelessly abandoned even a semblance of neutrality. The socio-economic caste census promised by the INDIA bloc is a remedy long overdue to create an egalitarian society. It is sad that the PM is twisting it and depriving socially disadvantaged communities of their due share in education, jobs, and seats of power. Leaders of the INDIA bloc should be wary of the BJP's devious diversionary tactics. We must firm up our commitment to exposing the miserable failures of Modi. #StopHate #WakeUpECI @RahulGandhi @kharge @laluprasadrjd @PawarSpeaks @SitaramYechury @ComradeDRaja @ArvindKejriwal @MamataOfficial @yadavakhilesh @HemantSorenJMM @uddhavthackeray @OmarAbdullah @pinarayivijayan

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
5410
657
300,583 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Culture & Heritage

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;...

உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
6280
871
603,632 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்! அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம்...

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்! அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024 https://t.co/bDgIHTmjpN

Party & Elections
𝕏 X
2 yr ago
8045
335
170,338 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19! கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச்...

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19! கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை கவனத்துடன் பின்பற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம்! #LetterToBrethren https://t.co/qUMN06oXpZ

Party & Elections
𝕏 X
2 yr ago
3066
221
107,945 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில்...

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்" என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு! இம்முறை #INDIA-வின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம்! இந்தியாவின் வரலாற்றை - வருங்காலத்தைத் தமிழ்நாடுதான் தீர்க்கமாக எழுதப் போகிறது. மோடி ஆட்சிக்கான முடிவுரையைத் தமிழ்நாட்டு மக்கள் எழுத தொடங்கும் நாள் ஏப்ரல் 19! தமிழ்நாட்டில் தொடங்கி, நாடெங்கும் இந்த உணர்வுத் #தீ_பரவட்டும்! #Vote4INDIA

Party & Elections
𝕏 X
2 yr ago
5219
363
155,124 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

#Vote4INDIA #CentralChennai #SouthChennai https://t.co/t0a8qPzFQb

#Vote4INDIA #CentralChennai #SouthChennai https://t.co/t0a8qPzFQb

Party & Elections
𝕏 X
2 yr ago
3385
86
75,988 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

#Live: மத்திய சென்னை, தென் சென்னை #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/bdBkMvtV4u

#Live: மத்திய சென்னை, தென் சென்னை #Elections2024 பரப்புரைப் பொதுக்கூட்டம் https://t.co/bdBkMvtV4u

Party & Elections
𝕏 X
2 yr ago
552
39
27,230 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன்! நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித்...

உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமையோடு கேட்கிறேன்! நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள்! #Vote4INDIA #LetterToBrethren https://t.co/BC8hLDVN8e https://t.co/SZKdw6n7rE

Party & Elections
𝕏 X
2 yr ago
548
36
19,450 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Party & Elections

"BJP is DMK's ideological nemesis, but they are electorally irrelevant in Tamil Nadu. Our battle is with AIADMK." "People’s decision would be...

"BJP is DMK's ideological nemesis, but they are electorally irrelevant in Tamil Nadu. Our battle is with AIADMK." "People’s decision would be clear that #INDIA should continue as a democratic nation." Read my #Elections2024 special interview to @thenewsminute: https://t.co/Ppg6IDKRYS @Ahmedshabbir20

Party & Elections
𝕏 X
2 yr ago
2023
173
58,213 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Culture & Heritage

ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்! ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற...

ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய இணையற்ற போராளி! சமூக ஒற்றுமையின் சின்னம்! ஆங்கிலேயர்களுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நம் மண்ணின் ஒப்பற்ற உரிமை வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாள்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, அநியாய வரியைப் பறித்து மக்களுக்கு அளித்த சின்னமலை அவர்களின் பிறந்தநாளில், #INDIA-வைக் காக்க உறுதியேற்போம்!

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1641
50
54,287 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41