DMKSocial

The Feed, page 106

Showing 2,101–2,120 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jun
Law & Order / Justice

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை...

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதலமைச்சர் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு… எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும்…

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
4115
549
202,529 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jun
Governance & Administration

#Live: சட்டமன்ற உரை https://t.co/Vmq2ZH8otl

#Live: சட்டமன்ற உரை https://t.co/Vmq2ZH8otl

Governance & Administration
𝕏 X
2 yr ago
868
67
42,942 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jun
Law & Order / Justice

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும்...

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன். மாண்புமிகு அமைச்சர்கள் - உள்துறைச் செயலாளர் - காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
3944
813
301,475 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jun
Law & Order / Justice

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில்...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

Law & Order / Justice
𝕏 X
2 yr ago
3728
916
412,629 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jun
Culture & Heritage

இந்தியாவிலேயே தொல்லியல் ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்வது நமது #DravidianModel அரசுதான். தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அறிவியல் முறையில்...

இந்தியாவிலேயே தொல்லியல் ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்வது நமது #DravidianModel அரசுதான். தமிழர் நாகரிகத்தின் தொன்மையை அறிவியல் முறையில் அறிவுலகம் ஏற்றுக்கொள்ளும்படி கீழடி ஆய்வுகளைக் கொண்டு நிறுவியுள்ளோம். இப்பணிகளின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை - கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை (10-ஆம் கட்டம்), விருதுநகர் - வெம்பக்கோட்டை (3-ஆம் கட்டம்), திருவண்ணாமலை - கீழ்நமண்டி (2-ஆம் கட்டம்), புதுக்கோட்டை - பொற்பனைக்கோட்டை (2-ஆம் கட்டம்); புதிதாகப் தென்காசி - திருமலாபுரம், கிருஷ்ணகிரி - சென்னானூர், திருப்பூர் - கொங்கல்நகரம் மற்றும் கடலூர் - மருங்கூர் என எட்டு இடங்களில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தேன். @TThenarasu

Culture & Heritage
𝕏 X
2 yr ago
1586
92
86,582 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Jun
Culture & Heritage

அடித்தட்டு மக்களுக்கு மாண்புப் பெயர்கள் சூட்டிச் சுயமரியாதையைக் காத்த இராமானுஜரின் காவியத்தை "மதத்தில் புரட்சி செய்த மகான்" எனத் தனது நிறைவுக்கால...

அடித்தட்டு மக்களுக்கு மாண்புப் பெயர்கள் சூட்டிச் சுயமரியாதையைக் காத்த இராமானுஜரின் காவியத்தை "மதத்தில் புரட்சி செய்த மகான்" எனத் தனது நிறைவுக்கால படைப்பாக வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்! சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்துக் கோயில் நுழைவு செய்து - கோயிலினுள் தமிழ் மந்திரங்களை ஓங்கி ஒலிக்கச் செய்த இராமானுஜரின் வாழ்வுதன்னை, முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்துகளில் உங்கள் கைகளுக்குப் புத்தகமாக வழங்குகிறோம். சமயங்களும் சமய நெறிகளும் மானுடத்தை மேம்படுத்த, ஒற்றுமையை வளர்க்க, ஏற்றத்தாழ்வுகளை நீக்க வழிகாட்டட்டும்! பொலிக! பொலிக! @PKSekarbabu @tnhrcedept

Culture & Heritage
𝕏 X
2 yr ago
2205
81
80,357 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Jun
Employment & Skill Development

#நான்_முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தின்கீழ்...

#நான்_முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி! நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்! கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்! கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!

Employment & Skill Development
𝕏 X
2 yr ago
2650
126
79,181 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Social Justice & Reservation

Thank you, dear @yadavakhilesh, for echoing the social justice voice of Tamil Nadu loud and clear.

Thank you, dear @yadavakhilesh, for echoing the social justice voice of Tamil Nadu loud and clear.

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
23067
161
479,073 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jun
Education

The ongoing controversies around #NEET highlight its fundamentally inequitable nature. In a society where education has been denied for thousands...

The ongoing controversies around #NEET highlight its fundamentally inequitable nature. In a society where education has been denied for thousands of years, we should offer more opportunities for advancement of the oppressed. On the contrary, NEET hinders the opportunities of such students. Despite the Union Education Minister's defense of the National Testing Agency (NTA), recent events paint a different picture. The Gujarat Police have registered an FIR over allegations of invigilators tampering with OMR sheets in exchange for monetary benefits, involving cheques worth several crore rupees and eight blank cheques. This conspiracy, implicating a school principal, a physics teacher, and several NEET coaching centres, underscores the urgent need for systemic change. From martyr Anitha to the countless students who have tragically taken their own lives, we have witnessed enough. NEET, an examination masquerading as a measure of merit, has repeatedly revealed itself as a pervasive scam affecting all levels of society. The Union government must stop defending this anti-student, anti-social justice, and anti-poor NEET system.

Education
𝕏 X
2 yr ago
4709
118
144,572 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Party & Elections

"அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" என்று நாற்பதுக்கு நாற்பது...

"அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை" என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் "தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை" என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள்! நன்றி! 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு… மெஜாரிட்டி பா.ஜ.க. இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பா.ஜ.க.விடமா அடங்கிப் போவார்கள்! Wait and See... #DMKMuperumVizha

Party & Elections
𝕏 X
2 yr ago
8100
551
394,116 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jun
Party & Elections

#Live: கோவை முப்பெரும் விழாப் பேருரை https://t.co/LuA17I00f1

#Live: கோவை முப்பெரும் விழாப் பேருரை https://t.co/LuA17I00f1

Party & Elections
𝕏 X
2 yr ago
912
76
53,699 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Agriculture & Farmer Welfare

பருவமழை தாமதமாகி வருவதால் #Delta மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாதென டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம்....

பருவமழை தாமதமாகி வருவதால் #Delta மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாதென டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம். இத்திட்டத்தின் பயன் முறையாகச் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1086
48
39,676 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Education

மாணவச் செல்வங்களே... உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு! எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், எங்கேயும் தேங்கி...

மாணவச் செல்வங்களே... உங்கள் கல்விக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு! எதிலும் கவனத்தைச் சிதறவிடாமல், எங்கேயும் தேங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதைத்தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்! நமது #DravidianModel அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயரப் பறக்க வேண்டும்! இது தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும்! @Anbil_Mahesh

Education
𝕏 X
2 yr ago
3965
170
86,846 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Jun
Education

#Live: பள்ளிக்கல்வித் துறை - ஐம்பெரும் விழாப் பேருரை https://t.co/MwCG6MfCTO

#Live: பள்ளிக்கல்வித் துறை - ஐம்பெரும் விழாப் பேருரை https://t.co/MwCG6MfCTO

Education
𝕏 X
2 yr ago
759
40
27,149 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Federalism & Centre–State Relations

குவைத் தீவிபத்தில் ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி மிகுந்த வேதனை தருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டு...

குவைத் தீவிபத்தில் ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி மிகுந்த வேதனை தருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து, குடும்பத்தினரிடம் விரைவில் ஒப்படைப்பதற்கான ஒருங்கிணைப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து, தமிழ்நாடு அரசு துணைநின்றிடும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
1258
52
50,109 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Party & Elections

The Union Government’s attempt to wriggle out of the recent #NEET Scam by agreeing to cancellation of grace marks is another admission of their...

The Union Government’s attempt to wriggle out of the recent #NEET Scam by agreeing to cancellation of grace marks is another admission of their own ineptitude. It should not be allowed to divert the attention away from the core problems of irregularities and unprofessional conduct of exams, after taking away the right of States. While condemning their incompetence as well apathy towards the agony of lakhs of students, we reiterate that the only solution for this issue is to restore the role of state governments in deciding the method of selection for MBBS courses.

Party & Elections
𝕏 X
2 yr ago
4622
162
161,652 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Party & Elections

பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்!...

பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்! சொல்லாற்றலில் தலைவர் கலைஞருக்கு அவரே நேர். #கலைஞர்100-இல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காணவும் – தமிழ்ச்சமூகத்துக்கு அடையாளம் காட்டவும் தம்பி @Udhaystalin முன்னெடுப்பில் @dmk_youthwing @Kalaignarnews இணைந்து நடத்தவுள்ள ”என் உயிரினும் மேலான – கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி” வெற்றி பெற வாழ்த்துகிறேன்! எத்தனையோ தலைவர்களை அடையாளம் காட்டிய மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக!

Party & Elections
𝕏 X
2 yr ago
1738
70
43,852 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Federalism & Centre–State Relations

Transcending religious boundaries, the contributions of the Jains to Tamil literature and society are of immense importance. The influence of...

Transcending religious boundaries, the contributions of the Jains to Tamil literature and society are of immense importance. The influence of Jainism permeates various aspects of Tamil culture. The Jains were pioneers in introducing an early form of dictionary (thesaurus) to the Tamil language. Furthermore, they were the authors of many books on Tamil grammar. This book 'Ancient Jain Legacy of Tamil Nadu' by Ruchi Pritam delves into the enduring legacy of the Jains, exploring their profound contribution to Tamil literature and society. I am sure that this book will be helpful to both general readers and researchers.

Federalism & Centre–State Relations
𝕏 X
2 yr ago
2639
69
77,626 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Social Justice & Reservation

நமது #DravidianModel அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆய்வுக்கூட்டங்களையும் கருத்துக்கேட்புக் கூட்டங்களையும் முறையாக நடத்தி அனைத்துத் தரப்பினரது...

நமது #DravidianModel அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆய்வுக்கூட்டங்களையும் கருத்துக்கேட்புக் கூட்டங்களையும் முறையாக நடத்தி அனைத்துத் தரப்பினரது கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறோம். சிறுபான்மைச் சகோதரர்கள் தங்களது கோரிக்கைகள் தற்போது செயலாக்கம் பெற்று வருவதற்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர். அன்பும் சகோதரத்துவமுமே அமைதியான சமூகத்துக்கு அடிப்படை என்ற உணர்வோடு கடமையாற்றுவோம்! @GingeeMasthan

Social Justice & Reservation
𝕏 X
2 yr ago
1703
79
42,688 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Agriculture & Farmer Welfare

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி.. நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும்...

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி.. நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம்! இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம். மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
2 yr ago
1527
58
41,351 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41