
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! #SaveTNRights https://t.co/lBhlHByVrH
உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! #SaveTNRights https://t.co/lBhlHByVrH


All
Showing 1,561–1,580 of 9,209 posts

உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! #SaveTNRights https://t.co/lBhlHByVrH



மீனவத் தோழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்போம்! உங்களின் பாதுகாப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் என்றும் துணைநிற்போம்! https://t.co/Vnhh3AYxvw

பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நமது #DravidianModel-இல் மதுரை & திருச்சியில் #TidelPark-களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம் காவிரிக் கரையிலும் வைகைக் கரையிலும் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பையும் - வளர்ச்சியையும் ஏற்படுத்தி வளம் பெருக்குவோம்! @TRBRajaa https://t.co/2m8F6GULLq

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி #சிங்காரவேலர் பிறந்தநாள்! தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்! "போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!” எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்! தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்!


🌟இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 7 திருக்கோயில்களில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு 🌟வணிகவரி & பதிவுத்துறை சார்பில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு! @PKSekarbabu @tnhrcedept @pmoorthy21

தமிழ்நாட்டிலிருந்து இராணுவத்தில் பணியாற்றியவர்களின் நலனுக்கான நம்முடைய முன்னெடுப்பு! ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும் - பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! #காக்கும்_கரங்கள் https://t.co/1JHRZw0DFN


"They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... #StopHindiImposition

ஒன்றிய அரசின் பெயரிலான திட்டங்களுக்கும் நமது மாநில அரசு தனது பங்கு நிதியை உரிய காலத்தில் விடுவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. கடைக்கோடி மக்களின் நலன்கருதி ஒன்றிய அரசு நிதியை முறையாக விடுவிக்க வேண்டும் என இன்றைய #DISHA கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்! https://t.co/UR87NrWUTF



#உங்களில்_ஒருவன் பதில்களில்: ♥️ “அப்பா” எனும் பொறுப்பு 💵 அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? 📚 கல்விக்காக நிறைய செய்ய வேண்டும்! 🤝 கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா? 🎭 டப்பிங் வாய்ஸ் பழனிசாமி! 👮 பாலியல் குற்றங்கள் 🍛 Food and Fitness 👟 🚐 வெளிமாவட்டப் பயணங்கள் 🔹 பற்றி எரிந்த மணிப்பூர் #UngalilOruvanAnswers

களையெடுப்பல்ல… கட்டுமானச் சீரமைப்பு! #LetterToBrethren https://t.co/llsE87M4qf


🏢 சென்னையின் மற்றுமொரு அடையாளச் சின்னமாக 27 அடுக்குமாடிகளுடன் உயர்ந்து எழ இருக்கும் #CentralTower கட்டடத்திற்கு அடிக்கல் 🏫 மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், நூலகக் கட்டடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு 🎓 தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள் திறப்பு என இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு…

#CREDAIfairpro2025 https://t.co/MRWYQS4pYR

The Chennai Metro Rail Project, initiated during Thalaivar Kalaignar's tenure as Chief Minister, with me serving as Deputy Chief Minister, is now advancing rapidly under our #DravidianModel Government. After delays in the previous administration, we took the lead in implementing Phase II, making Tamil Nadu the first state to continue metro expansion through its own funding. With the recently approved Union contribution, we are expediting the works further. By the end of 2025, the Poonamallee – Porur stretch will be operational. I've directed @cmrlofficial to accelerate the completion of the remaining sections. Once finished, Chennai will set new standards in connectivity, urban mobility and public transportation. Today, as I inspected the ongoing works, I was elated to witness our vision taking shape and expanding. At this moment, I once again urge the Union Government to swiftly approve metro rail projects for Coimbatore and Madurai.



தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும் - நான் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ இரயில் பணிகள், தற்போதைய நமது திராவிட மாடல் அரசில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதன்மையாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று, ஒப்புதல் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம். 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, @cmrlofficial நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்! நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

The unconstitutional excesses of the Tamil Nadu Governor and their despicable endorsement by the BJP-led Union government have been rightly accentuated by @the_hindu today. The strongly worded editorial encapsulates the Governor's arbitrary undermining of the Legislative Assembly and reiterates that he lacks the moral authority to continue in office. It is appalling that neither the Governor, the titular head of the State, has learnt anything from the repeated censuring by leading newspapers across India and constitutional experts, nor have his BJP masters in Delhi, who continue to shield and foster his actions. Disturbingly, instead of disciplining the abhorrent and unconstitutional actions of Governors in Opposition-ruled states, the Union government only rewards such excesses to settle political scores. India's federalism is in peril under BJP rule.


ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு! சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய #CabinetMeeting-இல் ஒப்புதல் வழங்கியுள்ளோம்! 6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்! உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன! #எல்லாருக்கும்_எல்லாம் #DravidianModel



நெல்லை தந்த இனிமையும், ஈரோடு கிழக்கு அளித்த எழுச்சியும் இணைந்து புதுத் தெம்போடு கடலூர் வருகிறேன்... #LetterToBrethren https://t.co/BL86F2nY5U


தமிழ்நாடு என்று சொன்னாலே தீட்டாகிவிடுமா? தி.மு.க. எனும் மாநில உரிமைப் போராளி இன்று முன்மொழிவதை, நாளை இந்தியாவே வழிமொழியும்! #BJPCheatsTN https://t.co/JdN9xSMDy1

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அமைதியைச் சீர்குலைக்க நினைப்பவர்கள் நிச்சயம் ஏமாந்துதான் போவார்கள்! #BJPCheatsTN https://t.co/7hat2APiXz

ஆளுநர் அவர்கள் தன் கடமையை உணர்ந்து திருந்த வேண்டும்! #BJPCheatsTN https://t.co/Itz5Iq29iA