DMKSocial

The Feed, page 232

Showing 4,621–4,640 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jul
Party & Elections

தமிழினத்தைத் தலைநிமிர வைத்த தி.மு.க.வின் ரத்தநாளமாம் @dmk_youthwing தொடங்கப்பட்ட நாள் இன்று! பீடுநடைபோடும் பெருமிதத்தின் அடையாளம்! நவீன டிஜிட்டல்...

தமிழினத்தைத் தலைநிமிர வைத்த தி.மு.க.வின் ரத்தநாளமாம் @dmk_youthwing தொடங்கப்பட்ட நாள் இன்று! பீடுநடைபோடும் பெருமிதத்தின் அடையாளம்! நவீன டிஜிட்டல் யுகத்தின் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு கழக வளர்ச்சிக்கு இளைஞரணியினர் மேலும் ஊக்கத்துடன் பாடுபட வாழ்த்துகிறேன்! https://t.co/8hFDRCvtK6

Party & Elections
𝕏 X
5 yr ago
6042
325
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Jul
Governance & Administration

மாண்புமிகு @rashtrapatibhvn அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து...

மாண்புமிகு @rashtrapatibhvn அவர்களை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தேன். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைந்து நூறாண்டு நிறைவுபெற்றதற்கான விழாவுக்குத் தலைமைதாங்கி, முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத்தைத் திறந்துவைக்க அழைப்புவிடுத்தேன். https://t.co/V0v6x2AmfR

Governance & Administration
𝕏 X
5 yr ago
8567
401
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Jul
Sports

#Tokyo2020-ல் இந்தியா சார்பாகக் களம் கண்டு நமக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் இன்று உரையாடினேன். வெற்றி நமதாகட்டும் என்று...

#Tokyo2020-ல் இந்தியா சார்பாகக் களம் கண்டு நமக்குப் பெருமை சேர்க்கவிருக்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் இன்று உரையாடினேன். வெற்றி நமதாகட்டும் என்று வீரர்கள் வெற்றிவாகை சூடி, பதக்கங்களுடன் தாயகம் திரும்ப வாழ்த்தி மகிழ்ந்தேன். தேவைப்படும் உதவிகளுக்கும் உத்தரவாதம் அளித்தேன். https://t.co/aZvNcaBW27

Sports
𝕏 X
5 yr ago
5788
288
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Employment & Skill Development

இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர்...

இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான வித்துக்கள்! தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் அதிகரிக்க அரசின் திட்டங்கள் அமையும் என்பதால்தான் தொழிலாளர் நலத்துறையுடன் 'திறன் மேம்பாட்டுத் துறை' புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நம் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் ஒளிரட்டும்! #WorldYouthSkillsDay https://t.co/xDy2mtkyhr

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
3813
326
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Jul
Education

எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை...

எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்! https://t.co/6XguRV7DS5

Education
𝕏 X
5 yr ago
7399
273
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Education

நீட் விலக்கு பெறுவதில் திமுக அரசு சரியான திசையில் செல்கிறது என்பதை இன்றைய #MadrasHighCourt தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. நாடகமாடியதைத் தவிர...

நீட் விலக்கு பெறுவதில் திமுக அரசு சரியான திசையில் செல்கிறது என்பதை இன்றைய #MadrasHighCourt தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. நாடகமாடியதைத் தவிர #NEET-ல் சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத பழனிசாமிக்கும் தமிழ்நாட்டுக்குப் பச்சைத் துரோகம் இழைக்கும் பாஜகவுக்கும் கிடைத்த நெத்தியடி இது. https://t.co/VOJXrvmKbN

Education
𝕏 X
5 yr ago
7627
538
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Health

சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படும் இந்நோயால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90-100 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அல்லற்படக்...

சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படும் இந்நோயால் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 90-100 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அல்லற்படக் கூடாது. மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்க - கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு நிதியமைச்சர் @nsitharaman-க்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/gJauh6FEYi

Health
𝕏 X
5 yr ago
3243
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Health

#SpinalMuscularAtrophy என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி - விலை காரணமாக...

#SpinalMuscularAtrophy என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தை மித்ராவுக்கு அதற்கான மருந்துகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரி - விலை காரணமாக சிகிச்சையில் ஏற்பட்டுள்ள இடர்களை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

Health
𝕏 X
5 yr ago
5920
139
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Health

குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 1000 பேருக்கு 533, 493, 446 #CovidVaccine என்ற நிலையில் தமிழ்நாட்டில் 302 பேருக்குத்தான்...

குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 1000 பேருக்கு 533, 493, 446 #CovidVaccine என்ற நிலையில் தமிழ்நாட்டில் 302 பேருக்குத்தான் ஒதுக்கீடு! மாண்புமிகு @PMOIndia உடனடியாக தலையிட்டு மற்ற மாநிலங்களுக்கு இணையாக 1 கோடி தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு அளித்திட வேண்டும். https://t.co/ZL4KKqej6V

Health
𝕏 X
5 yr ago
4020
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jul
Governance & Administration

நாட்டைக் காக்கும் அரும்பணியில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கினேன்! நம்மையும்,...

நாட்டைக் காக்கும் அரும்பணியில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கினேன்! நம்மையும், இம்மண்ணையும் காத்திட தம் இன்னுயிரையும் ஈந்த வீரர்களின் தியாகம் வணக்கத்திற்குரியது! அவர்தம் குடும்பங்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும். https://t.co/3W2Hr8SxCz

Governance & Administration
𝕏 X
5 yr ago
4801
285
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Water Resources

காவிரி தமிழ்நாட்டின் வாழ்வுரிமை! காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே சிந்தனையுடன் இருக்கிறோம்....

காவிரி தமிழ்நாட்டின் வாழ்வுரிமை! காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் - தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே சிந்தனையுடன் இருக்கிறோம். அதனை கர்நாடகாவுக்கும் ஒன்றிய அரசுக்கும் உணர்த்தும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #MekedatuDam https://t.co/aw7GaJlqGR

Water Resources
𝕏 X
5 yr ago
4511
212
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jul
Water Resources

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்! #MekedatuDam விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு...

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்! #MekedatuDam விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உரிமை மீட்போம்! மாநில நலன் காப்போம்! https://t.co/hdknXCVd1d

Water Resources
𝕏 X
5 yr ago
4984
248
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Governance & Administration

தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தி.மு.க. அரசின் #DravidianModel. தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறப்புற அமைய, பொருளாதார...

தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே தி.மு.க. அரசின் #DravidianModel. தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறப்புற அமைய, பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் கலந்துரையாடினேன். கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்! கனவுகளை - இலக்குகளை அடைவோம்! https://t.co/1GMECepxgk

Governance & Administration
𝕏 X
5 yr ago
10117
748
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Party & Elections

நம்மையெல்லாம் வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நாம் சூளுரைத்தபடி, உங்கள் பேராதரவுடன் பெற்ற வெற்றியை, அவர் பிறந்த திருக்குவளையில்...

நம்மையெல்லாம் வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நாம் சூளுரைத்தபடி, உங்கள் பேராதரவுடன் பெற்ற வெற்றியை, அவர் பிறந்த திருக்குவளையில் பெருமிதத்துடன் காணிக்கையாக்கினேன். வழியெங்கும் திரண்டு மக்கள் பொழிந்த அன்பை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன் உடன்பிறப்புகளே...! #LetterToBrethren https://t.co/IcNPFhgpg4

Party & Elections
𝕏 X
5 yr ago
5085
288
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Culture & Heritage

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடியை இன்று விடுவித்தேன்....

ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடியை இன்று விடுவித்தேன். முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் நடக்கும் அரசு இது. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ தொடர்ந்து பாடுபடும்! https://t.co/4vMJNbLdOC

Culture & Heritage
𝕏 X
5 yr ago
5665
351
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jul
Health

திருவாரூரில் கட்டப்பட்டுள்ள '#CEmONC - ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சைப் பராமரிப்பு மைய'த்தினைத் திறந்து வைத்து...

திருவாரூரில் கட்டப்பட்டுள்ள '#CEmONC - ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சைப் பராமரிப்பு மைய'த்தினைத் திறந்து வைத்து பார்வையிட்டேன். தொலைநோக்குப் பார்வையோடு மருத்துவக் கட்டமைப்புகள் விரைந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. https://t.co/WNbZXyqGa3

Health
𝕏 X
5 yr ago
4219
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Agriculture & Farmer Welfare

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண் நோக்கிய பயணத்தின்போது, செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல்...

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மண் நோக்கிய பயணத்தின்போது, செருமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகள் - நெல் சுமக்கும் தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். https://t.co/ApYI3074y4

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
6964
353
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Federalism & Centre–State Relations

கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்; அது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது! #CinematographBill2021-ஐ திரும்பப்...

கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்; அது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது! #CinematographBill2021-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய சட்ட அமைச்சர் @rsprasad & தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் @PrakashJavdekar-க்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/aDaV9ehtbX

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
3935
170
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Water Resources

4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது;...

4.75 டி.எம்.சி தண்ணீர் தேவைக்காக கர்நாடக அரசு 67.16 டி.எம்.சி கொள்ளளவுள்ள அணையை மேகதாதுவில் கட்ட முயல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது; தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் #MekedatuDam திட்டத்தைக் கைவிட வேண்டுமென கர்நாடக முதலமைச்சர் @BSYBJP அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.. https://t.co/lr9K1CTshk

Water Resources
𝕏 X
5 yr ago
4340
195
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Health

இன்றைய தேவை சுயகட்டுப்பாடுதான்! #Covid19 https://t.co/qbO9kmQLnN

இன்றைய தேவை சுயகட்டுப்பாடுதான்! #Covid19 https://t.co/qbO9kmQLnN

Health
𝕏 X
5 yr ago
7129
405
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41